திருஸ்வாதித்திருநாள் மஹாராஜாவிற்கு ஒரு சமயம் உடல் நோய் வந்தது அது
என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி பிறர்
வாடப் பல செயல்கள் செய்து மனம்
வாடித் துன்பமிக உழன்று நரை
கூடிக் கிழப் பருவமெய்திக் கொடுங்
கூற்றுக் கிரையென பின்மாயும் சில
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ !
சாவில் தமிழ் படித்து சாகவேண்டும்!
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்!
_ _ _ _ _ _ _- _ _ _ _ _
"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"
- - - - - _ _ _ _ _- - - - -_ _ _ _ _
பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை.
"வேண்டியதை பேசி........
வேண்டாததை வேலெடுத்து வெட்டி வீழ்த்துவோம்.....
வேகம் கொள்ளும் வயதிலும் விவேகமாய் .......
வேரூன்றி நிற்ப்போம் நண்பர்களாய்........
இப்பாரினிலே!"
சரித்திரம் என்னும் ஊரில்
சாதனை என்னும்
முகவரியை தேடும்....
லட்சகணக்கானவர்களில்
நானும் ஒருவன்!!!!!
நான் நேசிப்பதை யாருக்கு வேண்டுமானாலும் விட்டு கொடுப்பேன்.......
ஆனால்...
என்னை நேசிப்பவரை யாருக்காவும் விட்டுக்கொடுக்கமாட்டேன்........!!!!
உனக்கு மட்டுமே உரிமை...
என் மரணத்திற்கு முன்பே என்னை புதைப்பதற்கு......
“உன் இதயத்தில்....”
இலக்கியத்தில் இடம் வேண்டாம் எனக்கு..... .
- சிலர்
இதயத்தில் வாழ்ந்திட வாய்பளித்தால்..........
நன்றி சொல்வேன் உமக்கு........
எனக்கு
இணையத்தை கையாளவும் தெரியும்...
நண்பர்களின்
இதயத்தைக் களவாடவும் தெரியும்...
எவரோடும் சண்டைபோடத்
தயங்காதவன் யான்...
ஆனால் என்னை அடக்கும் ஆயுதம்
அன்பென்பதை ஒரு சிலரே அறிவர்...!
மதம் மொழி இனம் நட்பு காதல் ஆண் பெண்
இவற்றுக்கு அப்பாற்பட்டது
"அன்பு"
அன்புக்கு ஈடுஇணை எதுவும் இல்லை இந்த பிரபஞ்சத்தில்
வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே
ஜாதி மதம் இனவெறி இவற்றால் மாசுபடிந்துருக்கும்
இந்த உலகத்தை அன்பால் துய்மை படுத்துவோம்
நான் நீ என்று இல்லாமல் "நாம்" ஆக இருப்போம்
முன் சிரித்து
உள்ளத்தில் ஒன்றை வைத்து
உண்மையில்லா வார்த்தைகளை
பேசுகின்ற மனிதர்களோ
மனிதரில் இத்தனை நிறங்களா?
அவர் மனதில் இத்தனை தோற்றங்களா?
> மகப்பேறு மருத்துவமனை > அவசரச் சிகிச்சைப் பிரிவு > அறுவை மருத்துவப் பகுதி > > கண்கள் உறக்கம்கேட்டு கெஞ்சிநிற்க > உடல் சோர்ந்துபோய் ஓய்வுகேட்க > உள்ளம் ஏங்கிப்போய் செய்திக்காக > அரங்கவாசலில் வாசலில் தவமிருக்கிறது > > பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர் > படபடப்போடு அதிர அழைத்து > அவசரமாய் ஏதோ பெயரெழுதி > அவன் கையில் திணிக்கிறார் > > ** > *"காலம் கடந்து விட்டது; ஆனாலும் > கடைசியாய் ஒரு முயற்சி .. > கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் > கருணை அவன் வைத்துவிட்டால் > இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்" * > > மருத்துவமனையில் இல்லாத > மிக முக்கியமான மருந்தாம் ! > தொலைவில் தான் கிடைக்குமாம் !! > தலை தெறிக்க ஓடுகிறான் .... > > இருச்சக்கர வாகனம் எடுத்து > நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான் > நினைவுகள் அவனைப் புறம் தள்ளி > நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது > > பத்து வருடக் கனவு > பாதியிலேயே கலைந்து விடுமா? > கூடும் இடத்தில் ஏளனம்... > குடும்பத்திற்குள்ளும் அவமானம்... > *மலடி* என்ற மறைமுகப் பேச்சையும்; > *முடியாதவன்* என்ற மனம் வேகும் ஏச்சையும்; > மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...* > முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா? > > திடீர் குறுக்கீட்டால் > தொடர்பு தடைபட்டு > தடாலென நிறுத்துகிறான்.. > நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க > நடுங்கிப்போய் நிற்கிறான்.. > > மிரண்ட பார்வையோடு > மேலும் தொடர வழி தெரியாமல் > குட்டிப் பூனை ஒன்று > குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது > > ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல் > இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது.. > > *"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!" > "சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!" > "உன் அப்பன் ஊட்டு ரோடா இது !" > "பெரிய கடவுள்னுதான் நெனப்பு!" * > > ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும் > எதுவும் அவன் காதில் விழவில்லை > ** > *'அங்கீகரிக்க அவசியமில்லை > ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும் > அவமானப்படுத்தாமல் இருக்கலாமே' * > > வேதனையைத் தாங்கிக்கொண்டு > பூனையையும் தூக்கிக்கொண்டு > மன வருத்தத்தோடு அங்கிருந்து > மருந்து வாங்கக் கிளம்புகிறான் > > அதே நேரம் *அங்கீகாரம் * > அவனுக்கு *அங்கே* கிடைத்துவிட்டது ! > ** > *தலை தப்பிய சுகப்பிரசவம் .. > தாயும் சேயும் நலம்....* >
முகவரியில்லாத அநாதி இறைவன் படைத்த அனாதைக் குழந்தை இந்த உலகம் ...... முதலும் முடிவும் இல்லாதவன் எனினும் எங்கும் முழுமையாய் நிறைந்திருப்பவன்
வெறும்பையன் (nothingness) படைத்ததினால் கிடைத்த பெரும் பயன் உலகில் உயிர்கள் .... அவனே ஒன்றுமில்லாதபோது மனிதன் எம்மாத்திரம் ..... இதை அறியாத சில மனிதர்கள் பணம், பதவ,ி அதிகார ஆணவத்தால் தன்னை உயர்வாக (somebody) எண்ணிக்கொள்கிறான் ...
எல்லா உயிர்களுக்கும் பிரதானமாயிருக்கும் பிராண வாயு தன்னை விளம்பரம் செய்வதில்லை ... நீர் நிலைகள் நிறைந்திருக்க நிலைத்திருக்கும் உலகம், இருந்தாலும் இது தனக்கு வீதிக்கொரு விளம்பரப் பலகை வைப்பதில்லை ... பெரும் நெருப்பில் பிறந்த உலகம் சிறு நெருப்பாய் இருக்கும் உயிர்களுக்குள் இருந்தாலும் இவை தனைக்கொரு கட்சி அமைப்பதில்லை ... நிலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க வாடகை வசூலிப்பதில்லை பூமி ... விரிந்து பரந்த ஆகாயம் தன்னை பெரிதாக எண்ணுவதில்லை ....
ஒன்றுமில்லாமல் வெடித்துப் பிறந்த உலகம் ஓர் நாள் வெடித்து மறையும் ஒன்றுமில்லாமல் ....
உணர்வாய் மனிதா உண்மையை - உணர்ந்து உயர்வாய் வாழ்ந்திடு ........
TO READ *"புத்திகெட்ட மனுசனுக்கு எத்தனை சொன்னாலும் புரியாது" * CLICK HERE..
ப்ரலம்பன் இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கம்சன் இந்த மூன்று நாட்களும் தூங்கவே இல்லை. பகலும், இரவும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றாகவே இருந்தது. தன்னந்தனியாகத் தன் அறையில் அமர்ந்து யாருடனும் பேசாமல் யோசித்தவண்ணமே பொழுதைக் கழித்தான். யோசனை என்றால் சாமானியமான யோசனையா அது? வசுதேவனின் மகன் அதுவும் எட்டாவது மகன் உயிருடன் இருக்கின்றானா? அதுவும் அப்படியா? அவனைச் சும்மாவிடுவதா? விடுவதா?? ஹாஹ்ஹாஹா! வாசுதேவ கிருஷ்ணா, நீ எனக்கு எமனா? நான் உனக்கு எமனா? பார்த்துவிடுவோம். அவன் அழிந்தே ஆகவேண்டும். இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்றாராமே வேத வியாசமுனி?? யார் உய்விக்கப் போகின்றார்கள் பார்க்கலாம். உயிருடன் இருந்தால் தானே உலகை உய்விக்க முடியும்? என்னால் இறக்கப் போகின்றான், அவனை மட்டுமின்றி அவனுடன் சேர்த்து இந்த யாதவத் தலைவர்கள் அனைவரையும் கூட அழித்தால் நல்லதுதான். அனைவருக்கும் பனிரண்டு ஆண்டுகள் நான் இல்லாமல் துளிர்த்துவிட்டது. கம்சன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.
இதோ சன்னல் வழியே உன் முகம் . புன் சிரிப்புடன் எட்டிப்பார்க்கிறாய். . கலகலவென்று சிரிக்கிறாய். அச்சிரிப்பில் நான் மயங்கிப்போகிறேன். வெளிவேலையும் மறக்கிறேன் . இதயத்தில் ஒரு துடிதுடிப்பு உன்னை அள்ளத் தவிக்கிறேன் . உன் வீடு வரத்துடிக்கிறேன்
நடுவில் பாதி முகம் காட்டுவது ஏன் ? சன்னல்திரையில் மறைவது ஏன் ? ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பது ஏன் ? தெருவில் போகும் கார்கள் மட்டும் உன்னை மிகவும் கவர்வது ஏன் ? திடீரென்று நிலவு போல் முகம் மலர்ந்து கைக்கொட்டுவதேன்? உன் தந்தை வருவதைப்பார்த்துத்தானோ...... இந்தக்குதி குதிப்பது ஏனோ?
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார் பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம் பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்
என்றார் மஹாகவி பாரதி.
சொர்க்கம், நரகம் என்று தனியாக ஏதும் கிடையாது. இவ்வுலகே சொர்க்கமும் நரகமும் ஆகும் என்பது கண்கூடு. வெயிலில் வாடும் உயிர்களுக்கு நிழல் தந்து, காற்றில் மிகுந்திருக்கும் கரியமில வாயுவை உண்டு பிராண வாயுவை உமிழ்ந்து, உயிர்கள் அனைத்தும் வாழ வழி செய்து, வான் மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைத்து, பூமியைக் குளிரச் செய்து, பயிர்கள் வளர ஏதுவாகி உலகிலுள்ளோர்க்கெல்லாம் உணவளித்துக் காக்கும் மரங்களையும் மரங்கள் மிகுந்த வனங்களையும் அழித்து, கல்லும் மண்ணும் கலந்து கட்டடங்கள் எனும் பெயரில் தம்மைத் தாமே உயிரோடு சமாதி வைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.
மரங்களின் அழிவினால் அதிகமாகும் உஷ்ணத்தைக் குளிர்விக்கவென்று ரெஃப்ரிஜிரேடர், ஏர் கண்டிஷனர் எனும் பெயர்களில் கண்டறிந்து பயன்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளில் பயன்படும் ரெஃப்ரிஜிரண்ட் எனும் திரவம் ஆவியாகி மேலே சென்று ஆகாயத்தில் படர்ந்து நின்று உலகை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் காத்து ரக்ஷிக்கும் ஓசோன் படலத்தை அழிப்பதனால் உலகின் வெப்பம் மேலும் அதிகரித்து, துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் அதிகரித்து, ஜல சமாதியாகும் வழியையும் தேடிக்கொண்ட மனிதனுக்கு இவ்வுலகம் நரகமே.
ஆறுகளில் ஆலைக்கழிவுகளை அபரிமிதமாகக் கலப்பதால் ஆற்று நீரை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் கொடும் விஷமாக மாற்றுவதோடு, குடிநீர் வடிகால் வாரியங்களின் மூலம் பூமிக்கடியில் நிறுவப்படும் குழாய்கள் ஓட்டையாவதால் சாக்கடை நீர் குடி நீருடன் கலந்து வர எமனை வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.
மானுடா, உனக்கு இவ்வுலகமே சொர்க்கமாக அமைய வழி தேடு, இயற்கையை அழிக்காமல் காப்பாற்று, இயற்கை உன்னை என்றென்றும் காப்பாற்றும்.
ஆனந்தவடிவே பகவானே உன் அவதாரத்திற்கு உரிய காலம் நெருங்கியது பெரிய மேகங்களின் கூட்டங்கள் உன் திரு மேனியினின்றும் வெளிக்கிளம்பிய கதிர்களின் படலங்களைப்போலத் தோன்றின அவை வான வெளியைமறைத்துக்கொண்டிருந்தன
மேகங்களின் நீரினால் திசைகள் எல்லாம் நன்றாகக் குளிர்ச்சியை அடைந்தன நல்லோர் விரும்பியது கைகூடியதால் பெரு மகிழ்ச்சியில் தம் வயம் இழந்தனர் அப்போது நள்ளிரவில் சந்திரன் தோன்றுவதற்கு உரிய வேளையில் மூவுலகத்தின் துன்பங்களை அழைப்பவனாகிய நீ இவ்வுலகில் தோன்றினாய்
இளம் பருவத்தின் நிலையை அடைந்திருந்தாலும் உன் திருமேனி மிகுந்த வல்லமை வாய்ந்தது கிரீடம் கைவளை தோள்:வங்கி முத்துமாலை முதலியவற்றின் ஒளியோடு திகழந்தது, சங்கு சக்கரம் தாமரைமலர் கதாயுதம் ஆகியவற்றால் பெரிதும் விளங்கியது கருமேகம் போல் நீல நிறத்தோடுதோன்றியது அத்தகைய அழகுடன் நீ பிறந்தாய் ,,,,,,,,
உன் கிரீடம் ஒளியில் சூரியனோடு போட்டியிடுகின்றது நெற்றிமேல் நோக்கி இடப்பட்ட திலகத்தால் அழகு கூடுகிறது கண்கள் அருள் நிறைந்து நிற்கின்றன வாயில் புன்னகை கனிந்து தவிழ்கின்றது மூக்கு வெகு தீர்க்கமாக அழகாக உள்ளது மகர குண்டலங்கள் காதுகளில் பிரகாசிக்கின்றன கௌஸ்துப,மணி கழுத்தில் ஒளி வீசுகிறது வனமாலை முத்துமாலை ஸ்ரீவதஸம் மார்பில் விளங்குகின்றன இவற்றுடன் கூடிய உன் உருவத்தை நான் தியானிக்கிறேன் ஜயஸ்ரீ ராதே கிருஷணா ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்
பொருளாதரத்தில் நலிவுற்றவனை உற்றார் உறவினர் யாரும் மதிக்க மாட்டார்கள், அவனை ஒரு சுமையாகவே கருதுவது உலக இயல்பு. பெற்ற மகனைத் தனக்குப்பின் பேணிக்காக்கத் தக்கதொரு உற்ற துணைவியைத் தேடித்தரும் கடமையுள்ள தாயே வரும் மருமகள் தன் மகனிடமும் தன்னிடமும் பிற குடும்ப உறுப்பினரிடமும் அன்புடன் பழகும் பாங்குள்ளவளா? கடமையைச் செய்யும் பொறுப்பு மிக்கவளா? என்று ஆராய்ந்தறிவதைக் காட்டிலும் அவள் எவ்வளவு நகைகள் அணிந்து வருகிறாள்? எத்தனை பணம் சீதனமாகக் கொண்டு வருகிறாள்? என்றறிவதிலேயே அதிக அக்கரை காட்டுவதும் உலக இயல்பு.
ஒருவன் வாழ்க்கைத் துன்பங்களால் துயருற்று வருந்துகையில் அவன் எத்தகைய இழிநிலையை அடைந்தாலும், அது பொருளாதாரப் பிரச்சினையாயினும், உடல் ஊனம், நோய் முதலான பிரச்சினையாயினும் அதிலிருந்து அவனை மீட்க முன்வந்து தன்னலம் கருதாது அவனைக் கைதூக்கிக் கரையேற்றி உண்மையான அன்பு செலுத்தும் உன்னத உறவு இவ்வுலகில் நட்பு ஒன்றேயாகும். இத்தகைய நட்பு பெரும்பலும் மலர்வது ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் கல்வி கற்று வாழ்வில் உயர வழி தேடும் மாணவப் பருவத்திலேயே ஆகும்.
கல்லூரியில் சில பல ஆண்டுகள் ஒன்றாகக் கல்வி பயின்ற நண்பர்கள் தம் கல்வி பயிலும் காலம் முடிந்து ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சூழ்நிலை அனைவர் மனதிலும் வினோதமான உணர்வுகளை விதைப்பதாகும். இதுநாள் வரை நம்முடன் மனமொப்பி, ஆடிப் பாடி ஒன்றுகூடி மகிழ்ந்து, கல்வியில் ஒருவருக்கொருவர் உதவியிருந்த நண்பர்களைப் பிரிகிறோம் எனும் உணர்வு நண்பர்கள் ஒவ்வொருவரது மனதிலும் நீங்காததொரு ஏக்கத்தை உண்டாக்க வல்லது.
அவ்வாறு கல்வியில் தேர்ச்சிபெற்று வாழ்க்கைப் போராட்டத்தில் குதிக்க வேண்டிப் பிரியும் நண்பர்களில் பலர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாய்க் கூடி மகிழும் வாய்ப்புக் கிட்டினால் அதனை விட ஒருவர்க்கு சொர்க்கம் வேறில்லை.
நம்முடைய வாழ்க்கை என்பது நாம் அனுபவித்து சந்தோஷமாக வாழ்வதற்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள கொடை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். எனவே நமக்காகவே நாம் வாழ்வதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் நமது வாழ்க்கையால் யாருக்கும் பயனில்லாமல் போனால், அந்த வாழ்க்கையால் மறுமையில் மேன்மை ஏதும் இல்லை.
நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள் நாட்டின் நலனுக்காக தங்களை தியாகமாக தந்தனர், அவர்கள் தியாகத்தால் இன்று நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் அப்படி இன்னொருவரின் உதவியால்தான் நாம் நன்றாக வாழும் போது, நாமும் முடிந்த அளவு பிறர் வாழ்வுக்காக பிறர் நன்மைக்காக எதையாவது நிச்சயம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
சுய நலனே கருத்தில் கொண்டு வாழ்ந்து முடித்த சுதந்திரத்துக்காக படுபடாதவர்களை உலகம் சபிப்பது இல்லை. ஆனால் தியாகிகள் அடையும் மேன்மை அவர்களுக்கு நிச்சயம் இல்லை! .
ஓட்டபந்தயத்தில் ஓடுபவர்கள் எல்லோரும் ஓடுவார்கள் ஆனால் பதக்கம் பெற்றவனே மேன்மையானவன் நான்காவது ஐந்தாவது வந்தவனை யாரும் பிடித்து தண்டிக்கபோவது இல்லை அனால் அவனுக்கு மேன்மை இல்லை. கடைசியில் வந்தவனுக்கு அது ஒரு அவமானமாக கூட இருக்கும் அதுபோல் நாளை இறைவன் முன் நியாய தீர்ப்புக்கு நிற்கும்போது சுயநலத்தோடு வாழ்ந்தவர்கள் அவமானத்தால் தலைகுனிய நேரிடும்.
உலகில் என்றும் மேன்மயானதேயே நாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன் ஏனெனில் நற்செயல்களுக்கும் ஏற்ற பிரதிபலன் யாருக்கும் கிடைக்காமல் போவது இல்லை. "ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவன் கூட அதற்கான பலனை அனுபவிக்காமல் போவதில்லை"
பொது நலனுக்காக வாழ வேண்டுமென்றால் நமது தாய் தகப்பனை தவிக்கவிட்ட்விட்டு ஊருக்கு உதவி செய்வது நிச்சயம் ஏற்றதல்ல! நம்மை வளர்த்து ஆளாக்கியவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை. ஆகினும் அவர்களின் விருப்பத்தின் நிலை ஏற்ப்புடயதாக இருக்கிறதா என்று ஆராய வேண்டும். வாழ்க்கைக்கு வழியில்லாமல் இருக்கும் தாய் தகப்பனுக்கு உணவு/ உடை/இருப்பிடம் போன்ற அடிப்படை தேவையானவைகளை நிச்சயம் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அனால் அதற்க்கு மீறி ஆசையினால் ஏற்ப்படும் தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இங்கு நாம் நம்முடைய செய்கையால் பயனடைபவர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு செயல்களை செய்வது மிக்க நல்லது.
நாம் வாழும் வாழ்க்கை என்பது கீழ்க்கண்ட இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் அடங்கலாம்
இந்த உலகில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவே நாம் இறைவனால் படைக்கப்பட்டேன் எனவே யாருக்காவது உதவி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தவற விடாமல் உதவுவது என்பது முதல் மேன்மையான நிலை
அது முடியவில்லையா
நீங்கள் பிறகுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உங்கள் செய்கையால் பிறருக்கு எவ்விதத்திலாவது தீங்கு நேராமலாவது பார்த்துக்கொளுங்கள் என்பது இரண்டாம் நிலை.
இந்த இரண்டாம் நிலைக்கு தண்டனை எதுவும் கிடையாது! என்றாலும் அதற்க்கு மேன்மையில்லை. அதாவது எப்படி சாரமற்ற உப்பு பிறருக்கு பயன்படாதோ அதுபோல் சுயநலமே கருத்தாக கொண்டு வாழும் வாழ்க்கை அற்பகாலம் வாழப்போகும் இந்த உலகோடு முடிந்துவிடும் அதனால் நித்யமாக இருக்கபோகும் மறுமைக்கு பயனேதும் இல்லை!
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். இதனால் சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும். பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும். உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும். பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே. அதே போல விமான நிலையங்கள் மற்றும் விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை. மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும். # #
மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.
``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.
மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.
ஓடும் வண்டியில் ஓடி ஏறியபின் உள்ளே செல்ல மனமில்லையே பொக்கை வாய்க் கிழவ னங்கே போதித்தாலும் பேதையின் பார்வையில் போதை யேறி பேதளித்ததே மனம் உள்ளே செல்ல ஆங்கே வந்த மேக நீர் வேகமாக எனை உள்ளே செல்லத் தூண்டியதே பொக்கையும் கெகேவென எனைக் கண்டு சிரித்ததே என் சிரம் புறம் சாய்ந்ததே
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜாவிற்கு ஒரு சமயம் உடல் நோய் வந்தது அது என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும் தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் , மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும் பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம் கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி" இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின் இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை. இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம் ஆதிகாலத்திலிருந்தே தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும் செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை மோதுகிறது வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும் பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,