Showing posts with label சுமங்கலிப் பிரார்த்தனை. Show all posts
Showing posts with label சுமங்கலிப் பிரார்த்தனை. Show all posts
Monday, July 22, 2013
சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது சுமங்கலி பூஜை
சுமங்கலி இறந்த திதியன்று செய்யப்படும் சிராத்தத்தின் மறுநாள் யாரேனும் ஒரு
சுமங்கலியையோ அல்லது வீட்டில் கல்யாணம் ஆன பெண் இருந்தாலோ அழைத்துச் சாப்பாடு
போட்டுப் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.
இந்த சுமங்கலிப் பிரார்த்தனையில் சாப்பிட்டவர்கள் அன்றிரவு விரதமாக இருக்க
வேண்டும் என்பார்கள். பெரும்பாலானவர்கள் இதை இப்போது கடைப்பிடிப்பதில்லை.
கல்யாணப் பெண்டுகளில் அப்படி ஒன்று இல்லை. ஆனால் திருமணங்கள் நடப்பதற்கு
முன்னால் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குறிப்பிட்ட வம்சத்தில்
உள்ள முன்னோர்களில் சுமங்கலியாக இறந்த பெண்கள் மட்டுமில்லாமல், திருமணமே
நடைபெறாமல் இறந்த கன்னிப் பெண்கள், சிறு பெண் குழந்தைகள் என அனைவரின்
பெயர்களையும் தலைமுறை வாரியாக எழுதி வைத்துக் கொண்டு அன்று அவர்கள் அனைவரையும்
நினைவு கூர்ந்து வழிபாடுகள் செய்வது வழக்கம்.
இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும்.
அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச்
சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.
இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். இரண்டு புடைவைகள்
வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான். இதெல்லாம் அவரவர்
குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின்
எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது. இந்தப் பூவாடைப்
பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. என்றாலும்
எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்து வந்தது. எண்பதுகள் வரையிலும் நடந்ததை
அறிவேன். இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச்
சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம்
முழங்கால் வரை எரியாது இருக்குமாம். இது எல்லா சுமங்கலியாக இறந்த
பெண்களுக்கும் நடப்பது இல்லை. மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை
எரியாமல் இருக்குமாம். அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால்
அந்த பாகம் எரியாமல் இருக்குமாம். அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின்
பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில்
போட்டுக் கொண்டு வருவார்களாம்.
அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில
குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர். இவர்கள்
இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற
ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை
வைத்துக் கொடுப்பார்களாம். அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம்
கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும்
மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம். இது என் சிநேகிதி
சொல்லிக் கேட்டது. அவரின் மாமியார் கர்ப்பப் பை கான்சரில் இறந்தவரின் மடிசார்
எரியவில்லையாம். இது அறுபதுகளின் கடைசியில் நடந்திருக்கிறது. தோழி எனக்குச்
சொன்னது எண்பதுகளில். ஆனால் அவர்கள் அண்ணன், தம்பி மூவர் சேர்ந்து இருக்கையில்
தான் நடத்த வேண்டும் என்பதால் எப்படி நடத்துவார்கள் என்பதை நேரில்
பார்த்ததில்லை. வேறொரு குடும்பம், இவங்க அம்பத்தூரிலேயே இருந்தார்கள். இவங்க
குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனையில் ஒன்பது பேர் கட்டாயம் இருக்கணும்.
அதில் ஏழு சுமங்கலிகள், ஒரு விதவை, ஒரு பிரமசாரிப் பையர். இதை அதிசயப்
பொண்டுகள் என்று சொல்கின்றனர். ஆனால் சாப்பாடு விஷயத்தில் சமரசம் செய்து
கொள்கின்றனர்.
நான் பார்த்த திருமணத்தில் திருமணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் இவர்கள்
ஒன்பது பேரையும் முதலில் வரிசையாக உட்கார்த்தி வைத்து சமையல்காரர்கள் சமைத்த
சாப்ப்பாடையே போட்டுச் சாப்பிடச் சொல்லிப் பின்னர் அனைவருக்கும் தாம்பூலம்
கொடுத்தார்கள். இதே போல் குஜராத்தியர் ஒருத்தரின் சதாபிஷேஹத்திலும் நடந்தது.
இதற்கு அவர்கள் கூறிய கர்ணபரம்பரைக் கதை. ஏழு பிள்ளைகளைப் பெற்ற தாய்
ஒருத்தி தன் ஏழு மருமகள்களையும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடாமல்
கண்டிப்பாக இருந்தாளாம். அவள் ஒருநாள் வெளியே சென்றிருக்கையில் மருமகள்
அனைவரும் கூடி மாமியாருக்குத் தெரியாமல் நல்ல சாப்பாடு சமைத்துச் சாப்பிடும்
வேளையில் மாமியார் வந்துவிட என்ன செய்வது எனப் புரியாமல் மருமகள்கள் பூஜை
அறையில் அம்பிகையைப் பிரார்த்திக்க மாமியார் கண்ணெதிரே ஏழு பேரும் அம்மனோடு
ஐக்கியம் அடைந்ததார்கள் எனச் சொல்லப் படுகிறது. ஆகவே இதற்கு ஆசாரம் பார்க்க
வேண்டாம் என்றும் நல்ல சாப்பாடு சாப்பிட நினைத்த மருமகள்களை நினைத்துக்
கல்யாணச் சாப்பாடைப் போடுகிறார்கள் என்றும் கூறினார்கள். மேலும் அவர்களில்
எவரும் சாஸ்திரோக்தமாக அல்லது சம்பிரதாயமாக மடிசார் வைத்துக் கட்டிக்
கொள்ளவில்லை. விதவையை அழைப்பது அந்த மாமியாரை நினைத்து என நினைக்கிறேன்.
பிரமசாரி எதற்கு என்பது அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.
ஆனால் பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை என்றால் சாமான்கள் கூட வீட்டில்
ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பதைப் பயன்படுத்த மாட்டார்கள். தனியாகத் தான்
வாங்குவது வழக்கம். சிராத்தம் அன்று எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்களோ
அதற்குச் சற்றும் குறையாமல் நடக்கும். ஆனால் சமையல் மட்டும் சிராத்த சமையலாக
இல்லாமல் தேங்காய், துவரம் பருப்பு, மிளகாய், தனியா சேர்த்துச் செய்வார்கள்.
ஆனால் பொடியெல்லாம் வீட்டில் இருக்கும் பொடிவகைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.
சில வீடுகளில் காய்களைக் கூட முதல் நாளே நறுக்கி வைக்கக் கூடாது. சுமங்கலிப்
பிரார்த்தனை அன்றுதான் நறுக்க வேண்டும். அதோடு பாயசம் இனிப்புப் போன்றவற்றில்
வெல்லமே சேர்ப்பார்கள். சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். காய்களும்
முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு
போன்ற காய்களைத் தவிர்த்துவிடுவார்கள். கத்தரிக்காய், வாழைக்காய்,
அவரைக்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு,
கொத்தவரை, பறங்கி, பூஷணி போன்ற நாட்டுக்காய்களே சேர்க்கப்படும். பாகற்காய்
கசப்புச் சுவை என்பதால் சுமங்கலிப் பிரார்த்தனையில் சேர்ப்பதில்லை. வாழை, மா,
பலா போன்ற முக்கனிகளும் அந்த அந்தப் பருவத்தை ஒட்டிச் சேர்ப்பதுண்டு.
Sunday, July 21, 2013
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு!
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு. அடுத்து இதுக்குப் புடைவை
எடுக்க வேண்டும். இதற்கும் நாள் பார்த்துத் தான் எடுப்பார்கள். அநேகமாய்க்
கல்யாண ஜவுளி எடுக்கும் நல்ல நாளிலேயே நல்ல நேரத்தில் சுமங்கலிப்
பிரார்த்தனைப் புடைவயும் எடுத்து விடுவார்கள். பிராமணர்களில் ஒன்பது கஜம்
புடைவை தான் எடுக்க வேண்டும். இதற்கு அரக்கு, மஞ்சள், பச்சை,சிவப்பு, மெஜந்தா,
ரோஜா நிறம் போன்ற கறுப்புக் கலக்காத வண்ணங்களிலேயே எடுப்பார்கள். கூடவே
ரவிக்கைத் துணி எடுத்தாலும், புடைவையோடு சேர்த்து ரவிக்கைத் துணியை நனைத்து
வைப்பதில்லை. ரவிக்கைத் துணியைத் தனியாகத் தான் கொடுப்பார்கள். பொதுவாக
வீட்டில் பிறந்த பெண்களில் வயது முதிர்ந்த சுமங்கலியான அத்தைக்குத் தான் இது
போய்ச் சேரும். கல்யாணப் பிள்ளையின் அல்லது கல்யாணப் பெண்ணின் இந்த அத்தையைத்
தவிர வேறு மூத்த சகோதரிகள் திருமணம் ஆகி இருந்தாலும் அவர்கள் மணையில்
சுமங்கலிகளுள் ஒருவராக அழைக்கப்படுவார். புடைவைக்கு எதிரே போடும் இலையைத்
தவிர்த்த முதலாம் இலையில் அத்தையை உட்கார வைப்பார்கள். இரண்டாம் இலையில் வயது
வாரியாக வீட்டில் பிறந்த மற்றப் பெண்களை உட்கார வைப்பார்கள். வீட்டில்
பெண்கள் இல்லை எனில் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள பெண்மணிகளை அழைப்பது
உண்டு. ஆனால் புடைவை கொடுப்பது வீட்டுப் பெண்ணுக்கே அநேகமாய் கொடுப்பார்கள்.
அப்படி இல்லாமல் சிலர் அந்நியப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுப்பதாய்ப்
பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அந்நியப் பெண்ணுக்குக்
கொடுக்கலாம்.
இதில் தஞ்சைப் பக்கம் ஒரே ஒரு புடைவை தான். புடைவை இலையும் ஒன்றே. ஆனால்
மதுரைப் பக்கம் இரண்டு இலை போடுவார்கள். அத்தைக்குப் புடைவை எடுத்திருக்கிற
மாதிரி வீட்டில் பிறந்த அடுத்த தலைமுறைப் பெண்ணும் கல்யாணமாகி இருந்தால்
அவளுக்கும் புடைவை எடுத்திருப்பார்கள். பெரியப்பா பெண், சித்தப்பா பெண்
போன்றோருக்கும் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. கல்யாணம் ஆகாமல் இறந்த
பெண்ணை நினைத்து ஆறு கஜம் புடைவையும், கன்யாக் குழந்தைக்குப் பாவாடை,
சட்டையும் எடுப்பதும் உண்டு. திருநெல்வேலிக்காரர்கள் வீட்டில் பிறந்த
பெண்களுக்குப் புடைவை வைத்துக் கொடுப்பதில்லை. வீட்டின் மூத்த மாட்டுப்
பெண்ணிற்கே அந்தப் புடைவை போய்ச் சேரும். 2, 3 மருமகள்கள் இருந்தால்
அவர்களுக்கும் புடைவை வாங்கி நனைக்காமல் வழிபாட்டில் வைத்து எடுத்துக்
கொள்வார்கள். புதிய மருமகள் கல்யாணம் ஆகி வந்திருந்தால் அவளுக்கு அந்தப்
புடைவையைக் கொடுப்பதும் உண்டு. மேலும் திருநெல்வேலிக்காரர்களில் சிலர்
பெண்ணின் கல்யாணம் என்றால் பெண் கல்யாணத்திற்கு முன்னாலும், பிள்ளையின்
கல்யாணம் என்றால் மருமகள் வந்த பின்னரும் சுமங்கலிப் பிரார்த்தனை
நடத்துவார்கள். மதுரை, தஞ்சைப் பக்கங்களில் இரண்டு கல்யாணங்களிலும்
முன்னாடியே நடத்திவிடுவார்கள். தவிர்க்க முடியவில்லை எனில் தான் பின்னால்
நடக்கும். அப்போது சுமங்கலிப் பிரார்த்தனைக்காக ஒரு ரூபாய்க் காசை முடிந்து
வைப்பது வழக்கம்.
காலை எழுந்து குளித்துவிட்டு, கால்படி அரிசி, ஒரு ரூபாய்க் காசு, ஒரு சின்ன
உருண்டை வெல்லம், மட்டைத் தேங்காய் எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துவிட்டு, ஒரு
வெள்ளைத் துணியை மஞ்சள் கலந்த நீரில் நனைத்துப் பிழிந்து சற்றே, உலர்த்தி
அதில் ஒரு ரூபாய்க் காசை முடிந்து கட்டி அம்மன் படத்தருகே வைப்பார்கள். இது
சுமங்கலிப் பிரார்த்தனை இன்னும் நடக்கவில்லை; நிறைவேற்ற வேண்டும் என்பதை
நினைவு கூர வைக்கும். சுமங்கலிப் பிரார்த்தனையின் போது அந்தக் காசை
எடுத்துபுடைவைக் கலத்தோடு வைப்பார்கள். பிள்ளையாருக்கு வைப்பது எதற்கு எனில்
எந்தக் காரியம் செய்தாலும் முதல் வழிபாடு அவருக்கே என்பது தான். அரிசி,
வெல்லம் வைக்காமல் வெறும் ஒரு ரூபாய்க் காசைப் பிள்ளையாரிடம் வைத்துவிட்டும்
முடிந்து வைப்பது உண்டு. அவரவர் செளகரியம்.
நேற்றைய பதிவில் பாலக்காட்டுத் தமிழர்களிடையே சுமங்கலிப் பிரார்த்தனை அவ்வளவு
வழக்கம் இல்லை என்று சொன்னதைத் திட்டவட்டமாக மறுக்கிறார் நண்பர் திரு
எஸ்.நீலகண்டன். குமரி மாவட்டத்துக்காரரான இவர் பாலக்காட்டுத் தமிழர்கள்
தஞ்சை, திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்
தான். ஆகவே அவர்களிலும் சுமங்கலிப் பிரார்த்தனை நிச்சயம் உண்டு என்றும் அவர்
வீட்டிலேயே அவர் பாட்டி இருந்த காலத்தில் பூவாடைப் பொண்டுகள் எனப் பூவாடைப்
பானை, "பாவுள்ளில்" வைத்திருந்ததாகவும் அதில் ஆறு பெண்களின் பெயர்கள்
இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். அதை யாரும் சாதாரணமாகத் தொடக்கூடாது என்ற
ஆசாரக் கட்டுப்பாடுகள் இருந்ததையும் நினைவு கூர்கிறார். அதிசயப்பொண்டுகள்
பற்றியும் கேள்விப் பட்டிருப்பதாயும் நேரில் பார்த்ததாகவும் கூறுகிறார்.
மேலும் பொண்டுகள் இலையில் உட்கார்ந்து சாப்பிடுவதும் நான் ஏற்கெனவே இந்தப்
பதிவில் கூறி இருப்பது போல் சில வீடுகளில் வீட்டுப் பெண்கள் தான்
உட்காருவார்கள் எனவும் சில வீடுகளில் அது இல்லை என்பதையும் தெரிவிக்கிறார்.
புடைவை எடுத்தாச்சு. மற்றப் பெண்களுக்குக் கொடுக்க ரவிக்கைத்துணி, வளையல்கள்,
சீப்பு, கண்ணாடி, (முகம் பார்க்குமாறு இருத்தல் நலம்)மருதாணி, மஞ்சள் கிழங்கு
அல்லது மஞ்சள் பொடி பாக்கெட்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், இயன்றால்
தேங்காய் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் இதை ஓலைப்
பெட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். ரவிக்கைத் துணியோடு ஓலைப்பெட்டியை
வைத்துக் கொடுப்பார்கள். சிலர் முறத்தில் வைத்துக்கொடுப்பார்கள். இப்போதைய
ப்ளாஸ்டிக் யுகத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் தான். எல்லாம் தயாராக முன் கூட்டியே
வாங்கி வைத்து இருக்கணும். அடுத்து எண்ணெய் கொடுப்பது. சுமங்கலிகளை
வீட்டுக்கு அழைத்து சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை எண்ணெய் கொடுப்பதே
வழக்கம். ஒரு சிலர் இப்போதெல்லாம் அவரவர் வீட்டிலேயே குளித்துவிட்டு
வருவதாய்ச் சொல்வதால் வீடுகளுக்குச் சென்று எண்ணெய் கொடுப்பார்கள். எண்ணெய்,
சீயக்காய், மஞ்சள் தூள் கொடுப்பார்கள். எல்லாம் கொடுத்துவிட்டுக் குங்குமம்
கொடுத்து அழைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நடக்கும் வீட்டிலேயே
இருந்தால் பெண்களை அமர வைத்து மஞ்சள், குங்குமம் கொடுத்து எண்ணெய்
கொடுப்பார்கள்.ஆனால் அதற்கு முன்னால் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.
இவ்வளவு தேவையா என்பவர்களுக்கு! இந்தக் காலத்தில் யாருக்கும் தாம்பூலம்
கொடுக்கையில் என்ன வைப்பது என்றே தெரியவில்லை. மேலும் ப்ளாஸ்டிக் பொருட்களைத்
தவிர்ப்பது நலம் என்பதற்காகவும் சொல்லி இருக்கேன். அதற்கு ஓலைப் பெட்டி
கொடுக்கலாம். எவர்சில்வருக்குப் பித்தளை பரவாயில்லை. முன்பெல்லாம் எவர்சில்வரை
இரும்போடு சேர்த்தி எனச் சொல்வார்கள். இப்போது ப்ளாஸ்டிக்கும், எவர்சில்வரும்
தான்! அதோடு பலருக்கும் அவரவர் குடும்ப வழக்கம் தெரியறதில்லை. எந்த ஊரைச்
சேர்ந்தவங்கனு தெரிஞ்சால் அந்த வழக்கத்தையும் பின்பற்றலாம். என்ன செய்யணும்,
எப்படிச் சமைக்கணும் என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்டிருக்கின்றனர்.
எல்லாருக்காகவுமே
பொண்டுகள் எல்லாம் வந்தாச்சு! இலையைப் போடுங்க!
சாப்பாடு மெனு ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஸ்ரீராம் கவனிக்கவில்லை
போலிருக்கு. அதோடு எல்லார் வீட்டிலும் திரட்டுப் பால், போளி பண்ண
மாட்டார்கள். திரு வைகோ அவர்கள் போளியும், திரட்டுப் பாலும் கேட்கிறார்.
இன்னும் கல்யாணத்துக்கே திரட்டுப்பால் பண்ணியாகவில்லை. :)))))
சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கொடுக்கவென
வாங்கிய புடைவையை நனைக்க வேண்டும். அதுக்கு முன்னாடி புடைவையைக் கட்டிக்
கொண்டு ஒரு பெண் அமர்ந்திருப்பது போல வைக்க வேண்டும். இதோ இப்படி. ஒன்பது
கஜம் புடைவையை அதை எப்படிக் கட்டிப்பாங்களோ அப்படிக் கொசுவித் தலைப்பைச்
சுத்திக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மற்றப் புடவைகள் அநேகமாய்ப் புதிதாகவே
கொடுப்பார்கள். ஆகவே அவற்றை வைக்க வேண்டாம். என் பிறந்த வீட்டில் ஆறு கஜம்
புடைவையும் , அதே போல் பாவாடை, சட்டையும் நனைக்க வைப்பதுண்டு என்பதால், அவற்றை
இங்கே காணலாம்.
எண்ணெய் கொடுக்கும் முன்னர் முதலில் அந்தப் புடைவையில் சந்தனம், குங்குமம்
இட்டு, மூன்று சொட்டு எண்ணெய் தெளித்து, சீயக்காய் கரைத்துத் தெளித்து,
மஞ்சளும் அதே போல் தெளிக்க வேண்டும். இது நம் வீட்டில் மறைந்த சுமங்கலியே
நேரில் வந்து வாங்கிக் கொண்டதாக ஐதீகம். அதன் பின்னரே அந்தப் புடவையை நனைத்து
உலர்த்துவார்கள். அதே போல் ஆறு கஜம் புடைவை, பாவாடை, சட்டைக்கும் செய்து
நனைக்க வேண்டும். இன்றைய தினம் முதலில் சாப்பிடுவது பெண்களே. :)) பெண்களுக்கே
முன்னுரிமை. கிழக்கு, மேற்காகக் கோலங்கள் போட்டு இலை போட வேண்டும். புடைவைக்
கலத்தின் முன்னர் அவரவர் வீட்டு வழக்கம்போல் ஒரு இலையோ அல்லது இரண்டு இலைகளோ
போடவேண்டும். மற்றப் பெண்களுக்கும் வரிசைக்கிரமமாக இலை போட்டுவிட்டுப்
பெண்களுக்கு மஞ்சள் கொடுத்துக் கால் அலம்பி வரச் சொல்ல வேண்டும். வரும்
பெண்களுக்குப் பூ, சந்தனம், குங்குமம் கொடுப்பார்கள். சில வீடுகளில் பொண்டுகள்
இலை போட்டுப் பரிமாறும்வரையிலும் பெண்கள் ஒரு தனி அறையில் இருப்பார்கள்.
பின்னர் அவரவர் குடும்பத்தில் மறைந்த சுமங்கலிகளின் பெயரை வருடம், வயது
வாரியாக எழுதி வைத்து வாசித்துவிட்டு அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு
ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டு கையைத் தட்டி அழைப்பார்கள்.
ஆனால் பொதுவாக இலை போட்டுப் பரிமாறிவிட்டே பெயர்களைச் சொல்லும் வழக்கம்
இருந்து வருகிறது. பரிமாறுகையில் முதலில் புடைவைக்கலத்தில் பரிமாற வேண்டும்.
பின்னர் வரிசையாக வரும் எந்த உணவாக இருந்தாலும் புடைவைக் கலத்துக்குப்
பரிமாறியே பின்னர் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். அதோடு முடிக்கையில்
வடக்குப் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபரிடம் முடிக்க வேண்டும். தெற்குப்
பக்கம் முடிப்பது ஏற்றுக் கொள்வதில்லை. பின்னர் வீட்டின் மூத்த மருமகள் கையில்
நீரை எடுத்துக் கொண்டு புடைவைக் கலத்தில் ஆரம்பித்துச் சுற்றிக் கொண்டு வந்து
பின்னர் புடைவைக் கலத்திலேயே முடிக்க வேண்டும். வீட்டின் ஆண்கள், கல்யாணப்
பிள்ளை ஆகியோர் நமஸ்கரிப்பார்கள். கல்யாணப் பெண் வீட்டில் நடக்கையில் அந்தப்
பெண்ணும் ஒரு கன்யாப் பெண்ணாக அமர்ந்திருப்பாள். அதன் பின்னரே சாப்பிட
ஆரம்பிக்க வேண்டும். புடைவைக் கலத்தில் இடப்படும் உணவைப் பின்னர் சுமங்கலிப்
பிரார்த்தனை செய்யும் வீட்டின் மருமகள்கள் பிரசாதமாக எடுத்துக் கொண்டு
பகிர்ந்து உண்பார்கள். சாப்பிட்டு முடிந்ததும், வித விதமான உணவுகளைச்
சாப்பிட்டதற்கு செரிமானத்துக்காகச் சுக்கு, வெல்லம் சேர்த்துப் பொடி செய்து
வைத்திருப்பார்கள் அதைக் கொடுப்பார்கள். பின்னர் பானகம், நீர் மோர்
கொடுப்பார்கள். நேரம் நல்ல நேரமாக இருந்தால் அப்போதே வெற்றிலை, பாக்கு
வைத்துக் கொடுத்துவிடுவார்கள். இல்லை எனில் நல்ல நேரம் வரும் மட்டும்
தாமதித்துப் பின்னர் கொடுப்பார்கள்.
புடைவை கொடுத்ததும் அதைக் கட்டிக் கொண்டு வந்த பின்னர் அனைவருமே அந்தப்
பெண்மணியை வயது வித்தியாசம் இல்லாமல் நமஸ்கரிப்பார்கள். அன்றைய தினம் அந்தப்
பெண்மணி தான் அந்த வீட்டின் வயதான சுமங்கலியாகக் கருதப்படுவாள். மற்றப்
பெண்களுக்கும் வாங்கிய ரவிக்கைத்துணியோடு மஞ்சள், வெற்றிலை, பாக்கு,
குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, மருதாணி போன்றவற்றோடு அவர்களால் இயன்ற
பணமும் வைப்பார்கள். அது ஒரு ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை இருக்கும்.
அன்றிரவு பொண்டுகளில் சாப்பிட்ட அனைவரும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளத் தடை
இல்லை. (வெங்காயம், பூண்டு சேர்க்காமல்) ஒரு சில கல்யாண வீடுகளில் மறுநாளே
சமாராதனை செய்வார்கள். சிலர் சனிக்கிழமை, வியாழக்கிழமை என நாள் பார்த்துச்
செய்வார்கள். பொதுவாகக் கல்யாணத்துக்கு நாள் நெருங்கி வந்தால் சுமங்கலிப்
பிரார்த்தனைக்கு மறுநாளே செய்துவிடலாம்.
Subscribe to:
Posts (Atom)
Labels
tamil kavithaikal
(19)
online tamil kavithai
(18)
online tamil stories
(18)
tamil stories
(17)
tamil kavithai
(15)
tamil story
(13)
vinayagar chadurthi
(2)
vinayagar pooja
(2)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு
(2)
கடப்பாரையா ? ஊசியா
(2)
கணவா... - எல்லாமே கனவா
(2)
சிந்தனைகள்
(2)
சுமங்கலிப் பிரார்த்தனை
(2)
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா
(2)
பெண்கள் நாட்டின் கண்கள்
(2)
மகளிர் தின வாழ்த்துக்கள்
(2)
மாடக் கொடி மதில் தென்குளந்தை
(2)
*விதை தராத விருட்சம் .*
(1)
Beauty of Tamil
(1)
Child Birth by Month
(1)
Kural 1000
(1)
LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL
(1)
Unmayana anbu sir ithu
(1)
White Lake Celebrations
(1)
White Lake anniversary
(1)
WhiteLake Celebrations
(1)
WhiteLake anniversary
(1)
devotee vinayagar
(1)
kural tamil translation
(1)
kuttalam kavithai
(1)
kuttalam tamil
(1)
pillaiyaar
(1)
tamil god vinayagar
(1)
tamil kavithai collection
(1)
tamil kavithai online
(1)
tamil kavithi templates
(1)
tamil kural
(1)
tamil kural blog
(1)
tamil திருக்குறள்
(1)
thirikooda rasappa kaviraayar
(1)
thirukkuruvoor
(1)
thirukkuruvur
(1)
thirukuruvoor
(1)
thirukuruvur
(1)
vinayagar chathurthi
(1)
vinayahar sathurthi
(1)
அண்ணாமலை சிவனேயன்றோ?
(1)
அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?
(1)
அனுதினமும் ஆனந்தமாய்
(1)
அப்படியே ஒரு ஷாக்
(1)
அமரர்கள் தொழுதெழ அலைகடல்
(1)
அம்பிகாபதி கதை
(1)
அருட்பெரும் ஜோதியே
(1)
அலர்மேல் மங்கை மகிழும் மணாளா
(1)
அழுவதும்... அணைப்பதும்
(1)
அவரைச் சுற்றி நிற்பவர்களே
(1)
அவர்கள் அறிவதில்லை
(1)
ஆசையிலும்
(1)
ஆசையும் ஞானமும்
(1)
ஆச்சிரியப்படும் வண்ணம்
(1)
ஆதியின் நிழல்
(1)
ஆனித் திருமஞ்சனம்
(1)
ஆன்மாவின் மூன்று நிலைகள்
(1)
ஆன்மீகப் புனிதம் காப்போம்
(1)
ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர்
(1)
இப்படிக்கு கொசு
(1)
இரண்டு
(1)
இருட்டில் கண்விழித்து
(1)
இளைஞ்ர்களும்..யுவதிகளும்
(1)
உங்க கல்யாணமாம் கல்யாணம்
(1)
உங்கள் மொபைல்
(1)
உடலின் இயக்கம்
(1)
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது
(1)
உடல் செயல்படும் விதம்
(1)
உண்மையின் நெருடல்
(1)
உமாபதி சிவாசாரியார்
(1)
உயிரும் மனமும்
(1)
உலகக் குடும்பம்
(1)
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
(1)
ஊர்த்துவ தாண்டவம்
(1)
எங்க வீட்டு “மொட்டைக்காளி”
(1)
எங்கள் அண்ணன் பிரபாகரனே
(1)
எங்கேயும் நான் தமிழனாக இல்லை
(1)
எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க
(1)
எதையும் சாதிக்கலாம்
(1)
என் சொத்து
(1)
என்ன கல்யாணமடி கல்யாணம்
(1)
எமன் வாகன அழைப்பு மணி
(1)
எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்
(1)
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
(1)
ஏனிந்தப் பாரபட்சம்
(1)
ஏன் உன் முகம் வாடியிருக்கு
(1)
ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது
(1)
ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல்
(1)
ஒண்ணும் ரகசியமே இல்லை
(1)
ஒரு அழகிய இளம்பெண்
(1)
ஒருநாள் நானாவேன்
(1)
ஓடி வரச்சொல்கிறாயா?....
(1)
கட்டாயத் திருமணங்கள்
(1)
கணக்கதிகாரம்
(1)
கண் திறந்து பார்த்தாள் ராதை
(1)
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
(1)
கனவு மெய்ப்பட வேண்டும்
(1)
கப்பல் பயணம்
(1)
கரடி
(1)
கருணை இல்லம்
(1)
கருமையச் சிறப்பு
(1)
கருமையப் பதிவுகள்
(1)
கரைந்து போனேன் நான்
(1)
கர்ப்பகாலப் பொறுப்புகள்
(1)
கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி
(1)
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
(1)
கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும்
(1)
கல்விச் சேவை
(1)
களைத்திருந்தாள் ராதை
(1)
கவிதை குற்றாலம்
(1)
காடவர்கோன் சிம்மவர்மன்
(1)
காதலர் தினமா? கலாசார சீரழிவா?
(1)
காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை
(1)
காளை கன்னியை சந்தித்தானா
(1)
கிரகங்களின் உச்ச வீடுகள்
(1)
குமுதமும் என் இலக்கு
(1)
கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில்
(1)
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே
(1)
குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?
(1)
குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி
(1)
கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்
(1)
சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன்
(1)
சன்னல் நடுவே உன் முகம்
(1)
சிங்கப்பூர் ராணுவம்
(1)
சிதம்பர ரகசியம்
(1)
சித்தர் சிவவாக்கியர் பாடல்
(1)
சிரம் புறம் சாய்ந்ததே
(1)
சிறகுவிரி பிறகுசிரி
(1)
சில்லு'ன்னு ஒரு பொண்ணு
(1)
சிவானந்த பரமஹம்சர்
(1)
சுக முனிவர்
(1)
சுமங்கலி பூஜை
(1)
சுவையான கட்டை விரல் சூப்
(1)
சுவையான சீனி புட்டு
(1)
சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்
(1)
செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்
(1)
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
(1)
சே.... என்ன வாழ்க்கை இது
(1)
சௌரம் என்றால் நான்கு
(1)
ஜப்பானிய தேசீய கீதம்
(1)
ஜயஸ்ரீ ராதே கிருஷணா
(1)
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்
(1)
ஜோதிடக்கலை ஒரு கடல்
(1)
ஜோரான சேனி லட்டு
(1)
தங்க ரதம் வந்தது வீதியிலே
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தத்துவஞானியிடம் வேடிக்கை
(1)
தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது
(1)
தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல்
(1)
தமிழ் தன்மானத்தின் மிச்சம்
(1)
தமிழ் வருடங்களின் பெய்ர்கள்
(1)
தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
(1)
தலை சாய்த்த காக்காய்
(1)
திருக்கண்ணபுரத்து திருவருள்
(1)
திருக்குறள் 1000
(1)
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
(1)
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா
(1)
துகாராம் தான் என் வாழ்க்கை
(1)
தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை
(1)
துர்வாச முனிவர் நடு இரவில்
(1)
தேவியின் பொன் மேனி தள்ளாட
(1)
தொல்காப்பிய சூத்திரம்
(1)
நட்பு உயிரை விட மேலானது
(1)
நட்புக்கு கூட கற்ப்பு உண்டு
(1)
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
(1)
நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது
(1)
நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில்
(1)
நாட்டுக் கோட்டை நகரத்தார்
(1)
நான் தேசபக்தன் அல்ல பாமரன்
(1)
நாமாய் பேசிய நாட்களை
(1)
நிலவை நின்று தொடும் காதல் கோபுரம்
(1)
நிழல் கிரகங்கள் இரண்டு
(1)
நீ ராதையை மணக்கவே முடியாது
(1)
நெருங்கிப் பழகாதே நெஞ்சமே
(1)
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம்
(1)
படித்ததில் பிடித்த தத்துவங்கள்
(1)
பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை
(1)
பதினெண் சித்தர் யார் யார்?
(1)
பயன் தரும் பதிவு
(1)
பயம் கண்டு ஓடுபவர்க்கோ
(1)
பாரத நாட்டிற்கு இது அவசியமா?
(1)
பார் மகளே பார்
(1)
பால் - பழச் சடங்கு
(1)
பாவம் ராகம் தாளம்
(1)
பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12
(1)
பிரிவின் கதை சொல்லி
(1)
பிறவியை அறுப்போம்
(1)
பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன்
(1)
பூம் பூம் மாட்டுக்காரர்கள்
(1)
பூவின் இதழ் தொட்டு
(1)
பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு
(1)
பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா
(1)
பென்மையை என்றும் போற்றுவோம்
(1)
பொங்கி வரும் பெரு நிலவு
(1)
பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
(1)
மணவாழ்க்கைச் சட்டம்
(1)
மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள்
(1)
மனதின் மூன்று நிலைகள்
(1)
மனித உடல் மனம் உயிர்
(1)
மறுமைக்கு பயனேதும் இல்லை
(1)
மாதா பிதா குரு தெய்வம்
(1)
மாமியாருக்கும் சாமியாருக்கும்
(1)
முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி
(1)
முதல் நாளிலேயே ஞானோதயம்?
(1)
முன்பின் பிறவிகள்
(1)
முயற்சித் திருவினையாக்கும்
(1)
முழுப்பார்வை வீச்சு
(1)
யமராஜ் சும்பக் ஜர்னா
(1)
யார் அந்த மஹாபெரிய ரிஷி
(1)
ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா
(1)
ராகுவும் கேதுவும்
(1)
ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்
(1)
வன விலங்குகளிலேயே மிக அழகானது
(1)
வரலாறு மறந்து விட்டோம்
(1)
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
(1)
வாக்கினால் பிறந்த வேதவதி
(1)
வானம் வசப்படும்
(1)
வால் நட்சத்திரம்
(1)
வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு
(1)
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
(1)
விகடனும்
(1)
விஜி அக்கா எழுதினாங்க
(1)
விநாயகர் பிறந்தநாள்
(1)
விலங்கினப் பதிவு
(1)
விழித்துவிடு கனவா விழித்து விடு
(1)
வெஸ்டர்ன் கல்சர்
(1)
வேதாந்தமும் சித்தாந்தமும்
(1)
வேர்களைத் தேடி
(1)
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை
(1)
ஸால்மன் மீன்
(1)
ஸ்கந்த புஷ்கரணி
(1)
ஸ்டெரிலைஸேஷன்
(1)
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம்
(1)