எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு
தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே
என்பார் சிவானந்த பரமஹம்சர்.
வெறுமனே தெய்வங்களை தொழுவதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு
மறுஆய்வுக்கு உட்படுத்தி மெய்பொருள் காண வேண்டி இருக்கிறது.
"அன்பே சிவம்"
அன்பு என்பது ஓர் உணர்வு.உயிர்கள் மட்டுமே உணர்வை அனுபவிக்ககூடியவை.
அன்பெனும் உணர்வு அகத்தில் பொங்க உடல் அதை செயல்படுத்துகிறது.
வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை ஆன்மா அனுபவிக்கிறது.
ஆக அன்போ அல்லது அதற்கு மாறான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
தோன்றி உடல் வழியாக செயல்பட் வேண்டிய்கட்டாயம் . இவை அனைத்துக்கும்
சாட்சியாக உயிர் தேமே என்று இருக்கிறது.
அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை நிறுவமுடியுமா..?
சிவனையும் பார்வதியையும் விட்டு விட்டு சிவன் சதா சர்வ காலமும் தூக்கி
பிடித்த திரிசூலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.
சூலத்தை ஆயுதமாக பயன்படுத்தி தன்னை எதிரிகளிடமிருந்து
காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் சிவபெருமானுக்கு இல்லை. அதே போல்
தன் சூலத்தால் சிவன் யாரையும் கொன்றதாக எந்த கதைகளும் இருப்பதாக
தெரியவில்லை.
அப்படி என்றால் சூலத்தை பற்றிய மெய்பொருளை நாம் காணவேண்டி உள்ளது.
மனிதனின் ஆற்றறிவும் உடலில் ஒவ்வொரு புலனை ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.
நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையை கேட்டல்)
ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.
ஆறாவது அறிவு எது- பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர
அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்
செயல்படவில்லை.
இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
பெருந்தகையாளன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
இது தொல்காப்பிய சூத்திரம்.
ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
மனதின் ஊடகம் மூளை. மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான
மேடைகளிலிருந்து செயல்படுத்துகிறது.
வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூட சொல்லாம்
வடகலை-பிங்கலை-சுழுமுனை
இந்த மூன்று முனைகளை குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.
இரண்டு முனைகள் வலதிடதாய் நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது
என்ன செய்கிறோம்..?
phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?
இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும். இடது
பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை
எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.
திரிசூலத்தின் தலை பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்
எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் அனுபவம் இன்பம்
அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.
எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்
உறுப்புகளுக்கு ஆணையாய் சொல்ல- அங்கங்கள் அதை செய்ய்யும்.
இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருப்பது மூன்று மூளையையும் உடலின் அனைத்து
உறுப்புகளோடும் இணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம்.
அந்த நரம்பு மண்டலம்தான் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.
தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசார
பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.
அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி
நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.
சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?
இதுவும் உடல் தத்துவமே.
உடுக்கையை பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள்.
தோலை வைத்து இறுக்க கட்டப்பட்டிருக்கும்விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல.
வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்க்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும்,
இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது
பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.
இடது பக்கம் முழுதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.
உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்
அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை
எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.
அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு
நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.
நம் ஒவொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.
நமக்குள் இருக்கும் நம்க்கு சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.