இதைக் கூற வேண்டும் ஜோதிடம் கைரேகை
ந்யூமராலஜி என்ற மூன்றுக்கும் தொடர்ப்பு இருக்கிறது நம் உள்ளங்கையிலும்
குரு மேடு ,சனி மேடு சூரிய மேடு புதன் மேடு என்று எல்லா கிரகங்களும்
வந்துவிடுகின்றன ,அதுவும் நம் ஜாதகமும் அநேகமாக சரியாகத்தான் இருக்கும்
அதேபோல் நம்பர்களிலும் கிரகங்கள் வருகின்றன
ஒன்று சூரியனைப்பிரதிபலிக்கிறது 2 சந்திரனையும் மூன்று குருவையும்
நாலு ராகுவையும் ஐந்து புதனையும் ஆறு சுக்கிரனையும் ஏழு கேதுவையும்
எட்டு சனியையும் ஒன்பது செவ்வாயையும் குறிக்கின்றன ,
ஜோசியம் என்ற கடலில் முழுவதும் தேர்ச்சி பெறுவது என்பது லட்சத்தில்
ஒருவர்தான் எனினும் முயற்சியும் தனனம்பிக்கையும் பலன் எதிர்ப்பாராது
பிறர் நலனுக்காகவும் படிக்க அங்கு கடவுள் அருளும் சேர்ந்து உதவுகிறது
ஆனால் மிகவும் அதிக உழைப்பு வேண்டும்
அந்தக்கலையைப்படிப்பதற்கு சில கிரகங்களின் ஒத்துழைப்பும் வேண்டும்
ஜோசியத்தில் மிகச்சிறந்த திரு பி வி ராமன் வித்துவான் இலட்ச்மணன்
போன்றவர்களின் ஜாதகங்களில் ஜோசியக்கலையில் திறமையாக விளங்கும்
கிரகங்களின் அமைப்பும் இருக்கிறது..
Follow me on Twitter
Add to: