எங்களது ஒரு மகளின் குடும்பத்துடன் கழித்தோம். எங்களது பேரன்களில்
ஒருவன், பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன், அதிக நண்பர்களுட்ன் பழகாமல்
ஒரு சன்யாசி போல் இருப்பதைப் பார்த்து அவன் இப்படி இருக்கிறானே என்று
சற்று வருத்தப் பட்டோம். அவனிடம் இது பற்றிக் கேட்ட போது, "நான் அவர்களை
முற்றிலும் வெறுக்கிறேன். காரணம் அவர்கள் எப்போதும் சத்தற்ற விஷயங்களைப்
பேசி போதைக் கழிக்கிறார்கள். அதிலும் பெண்கள் பேசும் வெட்டிப்
பேச்சிற்கு அளவே இல்லை", என்றான்.
தினமும் காலையிலும் மாலையிலும் நாங்கள் காலார ஒரு சுற்று நடந்து விட்டு
வருவது வழக்கம்.
என்று நாங்கள் பேரன் குறித்து வருத்தப் பட்டோமோ அன்று மாலை நடந்து விட்டு
வீடு திரும்புகையில் ஒரு பலத்தின் அடியில் ஒரு பள்ளி மாணவனும் மாணவியும்
செய்து கொண்டிருந்தவையை வாயால் சொல்ல முடியாது. அருகில் இருந்த
மைதானத்தில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை
அங்கிருந்து விரட்டி விட்டனர்.
மறு நாள் மாலை நாங்கள் வீட்டை நெருங்கும் போது எதோ சத்தம் வரவே
அண்ணார்ந்து பார்த்தோம். மரத்தின் மீது அதே இருவர். எங்கள் பேரனுக்கு
மேல் நாட்டு மோகம் வரவில்லையே
என்று சந்தோஷப் பட்டோம்.
On Feb 13, 3:00 pm, Jagadish Radhakrishnan
wrote:
> பாரத நாட்டிற்கு இது அவசியமா?
>
> அண்டை நாடுகளின் கலாசார படையெடுப்பே இந்த வாலண்டைன் தினம். இதற்கு முன்னர் நாம்
> காதலித்ததுஇல்லையா? அன்புடன் செயல்படும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே. இந்த
> உண்மை புரியாத அந்நியசக்திகளின் விஷக்கலாசாரம் இன்று நம் இளம் சமுதாயத்தினரை
> வெகுவாக பாதித்துள்ளது.
>
> இந்தியர்களுக்கு வெளியில் எங்கும் எதிரிகள் இல்லை. அவர்கள் இங்கே நமக்குள்ளேயே
> போலி கலாசாரபோர்வையில் ஒளிந்திருக்கிறார்கள். காதலுக்கு புது இலக்கணம்
> வகுத்தவர்கள் நாம். நமக்கு எவரும் அதைகற்ப்பிக்க வேண்டியது இல்லை.
>
> ஆண்கள் மது அருந்துவதே தவறு என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் மது
> அருந்தி விட்டுஆபாச நடனம் ஆடுவதை நவீன கலாசாரம் என்று தவறாக புரிந்து கொள்ள
> பட்டிருக்கிறது. இந்த இழி செயலைஆதரித்து நாடெங்கும் மதவாதம் என்று கூக்குரல்கள்
> வேறு.
>
> தாய்மையின் புனிதத்தை அழிக்கும் மேலை நாட்டு கலாசாரம் நமக்கு தேவையா?
>
> நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் அதை இரு கரம் கூப்பி நம் நாடு வரவேற்கும்.
> திரைப்படங்களும், பத்திரிகைகளும் தம் பங்கிற்கு கலாசார நாசம் செய்து
> கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம்கொண்டாடுவது எரியும் நெருப்பில் எண்ணை
> இடுவதற்கு சமம்.
>
> அந்நியர்களின் கலாசார படையெடுப்பால் நம்
> ~ இசை இரைச்சலாகி விட்டது
> ~ எதிர்காலம் ஏமாற்றமாகி விட்டது
> ~ மனிதாபிமானம் மட்கிப்போய் விட்டது
> ~ பாரம்பரியம் பகல் கனவாகி விட்டது
> ~ காதல் காமமாகி விட்டது
> ~ கலாசாரம் கண்றாவி ஆகி விட்டது
>
> புறக்கணிப்போம் ! காதலர் தினத்தை புறக்கணிப்போம் !
>
> இந்தியர்களே, யோசித்து பாருங்கள். நம் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்பை
> விடுத்து முன் பின் தெரியாதஒருவருடன் காமக்களியாட்டம் செய்ய முன்னோட்டம்
> பார்ப்பதை காதலர் தினம் என்ற பெயரிட்டுஅனுமதிப்பீர்களா?
>
> உங்கள் குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள்.
> அவர்களை பாரம்பரிய கரு கொண்டு உருவாக்க வேண்டியது உங்கள் கடமை.
>
> ஜெய்ஹிந்த்