கன்யாகுமாரி வரைச்சென்றது ரயில் பிரயாணத்தின் போது டைம்
பாஸ் என்று அவரவர் கலைகளைக்காட்ட ஆரம்பித்தார்கள் சிலர் பாடினார்கள்
அதற்குள் ஒருவர் என் ஜோசியக்கலையின் திறமையைக்கூற பலர் என்னைப் பலர்
மெய்த்துக்கொள்ள் ஆரம்பித்துவிட்டனர் .அதில் சிலருக்குப்பார்த்தேன்
அப்போது மேலே படுத்திருந்த ஒரு உ பி பெண்மணி கீழே இறங்கினாள்
உடல் நல்ல காத்திரமாக இருந்தது. பின் தனக்கும்
சொல்லும்படிக்கேட்டுக்கொண்டாள் ஆனால் அவளுக்கு ராசி லக்னம் என்ன்வென்று
சொல்லத்தெரியவில்லை சரி என்று கையைப்பார்த்தேன் கை
ரேகையைப்பார்த்துக்கொண்டிருகையில்
"மேடம் எனக்கு எத்தனைகுழந்தைகள் என்று சொல்லமுடியுமா என்றாள்.
நான் அதற்கு "தவறாக நினைக்கவேண்டாம் நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள்
கல்யாணம் நடந்திருக்காது அல்லது டைவர்சி யாக இருக்கலாம் என்றேன் எனக்கே
நான் அதை எப்படிச்சொன்னேன்
என்று தெரியவில்லை அவள் கண்கள் மலர அப்படியே மலைத்துப்போய் " என்னை
மன்னித்துவிடுங்கள் தங்களைப்
பரீட்சை செய்துப்பார்க்கவே அப்படிக்கேட்டேன் என்றாள்,
சரி பரவாயில்லை ,,இரவு நான் கீழே படுக்கும் போது என் மேலே
விழுந்துவிடாதீர்கள் என்றேன் ,என் சீட்டில் ஒரு சிறுபெண்
ஒண்டியதால் நான் கீழே சிலசமயம் படுத்தேன் , எல்லோரும்
படுத்துகொண்டனர் ஜுக்ஜுக் என்ற ரயிலின் சத்தம் தான் கேட்டது அப்போது
டமார் என்ற சத்தம் கேட்டது நான் சொன்னது போல் அந்த உபி பெண்மணி கீழே
விழுந்தாள் ..என் மேலும் தான் ,அப்பாடி அந்த ஷாக் இன்னும் எனக்கு
இருக்கிறது .
நேரம் கிடைக்கும் போது நானும் ஜோசியம் பற்றி எழுதுகிறேன்
கிரஹங்களில் சந்திரன் மட்டும் 12 ராசிகளை முப்பது நாட்களில் சுற்றி
வருகிறான் அவன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் இருப்பான்
சந்திரனுக்குப்பிறகு சூரியன் 12 ராசிகளை ஒரு வருடத்தில் சுற்றி
வருகிறான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மதம் இருப்பான்
சுக்கிரன் புதன் செவ்வாய் மூன்றும் ஒன்ற்ரை ஆண்டில் 12
ரசிகளைக்கடக்கின்றன சுமார் ஒரு ராசியில் 45 நாட்கள் இருக்கின்றன
செவ்வாய் சிலசம்யம் ஒரு ராசியில் 6 மாதங்கள் கூட தங்க வாய்ப்பு உண்டு
,அந்த நேரத்தில் தான் அதிக இழப்புக்கள்
நெருப்பில் சேதங்கள் சுனாமி போன்றவைகள் பெரிய தீமைகள்
நிகழுகின்றன செவ்வாய் எந்த ராசியில் நிற்கிறது என்பதைப்பொருத்து இது
தீர்மானிக்கப்படும்
கன்னிராசியில் செவ்வாய் பலமாதங்கள் தங்க மழையே பொழியாது பஞ்சம் வரும்
குரு 12 ராசிகளை 12 மாதங்களில் கடக்கிறார் .ராகு கேது இருவரும் 18
ஆண்டுகளில் 12 ராசிகளைக் கடக்கின்றனர் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு
தங்குவார்கள்
மிகவும் மெல்லக்கடப்பவர் சனிதான் அதனால் தான் மந்தன் என்று
சொல்கிறோம் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருக்கிறார்
12 ராசிகள் கடக்க 30 ஆண்டுகள்
ஆகையால் 30 ஆண்டுகள் ஒருமுறைதான் ஏழரைச்சனி வருகிறது
முதல் சனி மங்குசனி என்றும் பின் பொங்க் சனி என்றும்
பின் மரண சனி என்றும் கூறுகிறர்கள்
ராகு கேது அப்பிரதட்சிணமாகச் சுற்றுகிறது அதேபோல் ஒரே நேரத்தில் மறு
ராசிக்கு மாறுகின்றன,மற்ற கிரஹங்கள்
அப்படிச் செல்வதில்லை ராகுவும் கேதுவும் ஏழாவது இடத்தைப்
ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொண்டிருப்பார்கள்
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.