காமிகா எகாதசி மற்றொன்று புத்ரதா ஏகாதசி
தேய்ப்பிறை ஏகாதசிகாமிகா ஏகாதசி எனப்படும் காமனா என்றால் விருப்பம்
அல்லது ஆசை இந்த ஏகாதசியில் நாம் விரும்புவதை அடைய துளசியினால்
எம்பெருமானை அர்ச்சனை செய்ய வேண்டும் இந்த ஏகாதசியில் கோயிலில்
வெங்கடேசருக்கு நெய்விளக்கு ஏற்ற ,பின் தீபதானம் செய்யவும் மிகவும் நல்ல
பலன் கிடைக்கும்
வளர்ப்பிறையில் வருவது புத்ரதா ஏகாதசி
இதற்கு ஒரு புராணக்கதை அறிய வேண்டும் மஹீஜித் என்ற அரசன் மாஹிஷ்மதி
என்ற தேசத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை ஆகையால்
எல்லாம் இருந்தும் மன நிமதி இழந்து தவித்தான் பின் ஒரு நாள் பல
ஜோசியர்களை வேதவித்துகளை அழைத்து தன் மனகுறையை
முறையிட்டான் மன்னர் கேட்டுபின் தவறாக ஏதாவது சொல்லக்கூடாது என்ற
காரணத்தினால் அவர்கள் தாங்கள்
தம் செய்யும் முனிவர்களைக்கேட்டுச்சொல்வதாகச்சொல்லிக் காடு குஹை என்று
போனார்கள் அங்கு அவர்கள் லோமச முனிவரைக்கண்டு வணங்கினார்கள். பின் விவரம்
சொல்லிக் காரணத்தையும் கேட்டார்கள் லோமசர் முனிவர் சிறிது தியானத்தில்
இருந்து பின் சொன்னார் "உங்கள் அரசனை புத்ரதா
ஏகாதசி விரதம் இருக்கச்சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக
பிறக்கும் இவருக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாத காரணம் போனஜன்மத்தில் ஒரு
வியாபாரியாக இருந்தான் வியாபார விஷயமாக வெகு தூரம் நடந்துச்செல்ல தாகம்
எடுத்தது அங்கு ஒரு குளம் கண்டான் .அங்கு ஒரு பசு அதில் தண்ணீர்
குடித்துக்கொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னன் நாம் குடிக்கும்
தண்ணீர் கலங்கிப்போய் விடுமே என்று அதை விரட்டினான் தாகத்தால் அந்தப்பசு
நீர் குடிக்கமுடியாமல் ஓடியது அந்தபாபத்தினால் தான் குழந்தை இல்லை
"என்றார்
வந்தவர்களும் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரம் சொல்ல
அரசன் "ஆவணியில் வரும் புத்ரதாஏகாதசி விரதம் மேற்கொண்டான்
ஆண்குழந்தையும் பிறந்தது
எந்தவிதமானத்தடையும் நீக்கி குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது இந்த ஏகாதசி...
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.