எல்லா இடங்களிலும் சகஜமாகிவிட்டது!. எந்தெந்தவழிகளிலெல்லாம் மனிதன்
ஏமாற்றி/ இரங்கவைத்து சம்பாதிக்க முடியுமோ அதற்க்காக உடகார்ந்து
யோசித்து புது புது வழிகளையெல்லாம் கண்டுபிடித்து ஏமாற்றி பணம் பறித்து
வருகிறார்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த
உண்மை!
உடுக்க துணியில்லை என்று பழைய துணிவாங்கி அதை பணமாக்கி வாழும் கூட்டம்
ஒருபுறம் .
பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை என்று பணம்பறித்து வாழ்க்கை
நடத்தும் கூட்டம் ஒருபுறம்
மகனுக்கு மருந்து வாங்கவேண்டும் என்று மற்றாடி பணம்கேட்டு வாழும் கூட்டம்
ஒருபுறம்
பசிக்கு உணவில்லை என்று பாசாங்கு செய்து பணம்பெற்று வாழும் கூட்டம்
ஒருபுறம்.
மகளுக்கு திருமணம் என்று குங்குமத்தோடு வந்து கொள்ளையடிக்கும் கூட்டம்
ஒருபுறம்
படிப்புக்கு பணமில்லை என்று பாவலா கட்டி பணம் வாங்கி தண்ணியடிக்கும்
கூட்டம் ஒருபுறம்
சாமியைபோல வேடமிட்டு சாதாரணமாய் ஏமாற்றி வாழும் கூட்டம் ஒருபுறம்
இப்படி இரக்கமனம் கொண்ட எல்லோருமே அடிக்கடி வாழ்வில் சந்திக்கும்
மனிதர்கள்தான் எத்தனை எத்தனை. மேலும் ஒருவருக்கு உதவி என்று செய்யப்போய்
அதனால் அனேக பிரச்சினைக்குள்ளாகி பாடுகள் பட்டு. இனிமேல் யாருக்கும்
உதவியே செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருபர்களும் அநேகர் உண்டு! யார்
வந்து உதவி கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்யும் பலர்,
பலமுறை ஏமாற்றப்பட்டிருப்பதை நானும் அறிந்திருக்கிறேன்
அனாலும் எனது கருத்து இதோ:
ஒருமுறை நானும் என் நண்பனும் சாலையில் நடந்துகொண்டு இருக்கும்போது
மிகவும் எழ்மை நிலையில் வந்த ஒருவர் சாப்பிட பணம் வேண்டும் என்று
கேட்டார் அவர் நிலயை பார்த்து மனமிரங்கி சற்றும் யோசிக்காமல் பணம்
எடுத்து கொடுத்துவிட்டேன். என் நண்பனுக்கோ கடுமையான கோபம். நீ என்ன
இப்படி கொஞ்சமும் யோசிக்காமல் பணம் கொடுக்கிறாய் அவன் பின்னால் போய்
பார். நேரேபோய் மதுகடையில் போய் குடித்துவிட்டு ஆட்டம் போடபோகிறான் என்று
என்னை கடிந்துகொண்டான்.
அவனுக்கு என்னுடைய பதில் என்னவென்றால்
அவன் மது குடிக்கட்டும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும்
ஆனால் என்னிடம் வந்து கேட்டபோது பசி என்றுதான் கேட்டான் நானும் அவனுக்கு
இறங்கி அவன் பசியாரவேண்டும் என்ற நோக்கில்தான் பணம் கொடுத்தேன். எனது
நோக்கம் மற்றும் எண்ணம் எல்லாமே சரி ஒருவேளை அவன் நோக்கம் தவறாக
இருக்குமாயின் அதற்குரிய தண்டனையை அவன் பெறுவான். ஒரு வேளை அவன் உண்மையான
பசியோடு இருந்து நான் ஏமாற்றுகிறான் என்று நினைத்து அவனுக்கு பணம்
கொடுக்கவில்லை என்றால் அது எனக்கு பாவமாக ஆகிவிடுமல்லவா? பத்துபேரிடம்
ஏமாறலாம் அனால் ஒரே ஒரு உண்மை பசியாளியை துன்பபட விடகூடாது என்றேன்.
ஆம்
இந்த கலியுக காலங்களில் மனிதர்கள் எல்லோரையும் இரக்கமில்லாதவர்களாக,
அன்பில்லாதவர்களாக, கீழ்படியாதவர்களாக, கடன்காரர்களாக மாற்ற சக
மனிதர்களும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன என்பது
எல்லோரும் அறிந்ததே! ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிவிட்டு போகட்டும். ஓரளவுக்கு
ஆராய்ந்து
பார்த்துவிட்டு உதவுவது நல்லது என்றே நான் கருதுகிறேன்.
நான் ஏமாந்துபோன இடங்கள் கொஞ்சனம்ஜமல்ல ஆனால் அதற்க்காக நான் சிறிதும்
கவலைப்படவில்லை நன்மையே செய்து அழிந்தவர் ஒருவரும் இல்லை!
நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்! என்பதே எனது வேண்டுகோள்!
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.