"யாராயிருந்தாலும் அடித்துவிட்டு வா, அடி வாங்கி கொண்டு வராதே" -என் அப்பா எனக்கு சொன்ன வேதவாக்கு.
ஊர்ல எல்லாருமே எனக்கு பயப்படுவானுங்கடே எல்லாத்தையும் சமாளிச்சிருவேன். இந்த மம்பட்டியான் மட்டும் என்ன விட கொஞ்சம் "தாக்கான" ஆளு. அவன சமாளிக்க முடியாது- --பெரியப்பாவின் வீர கதைகள்.
சித்தப்பா கிடுக்குப்பிடி, கராத்தே குத்துகளின் நுணக்கங்கள்- கையில் கிடைத்தவைகளை வைத்து எப்படி சண்டையை சமாளிப்பது என்று அவ்வப்போது சொல்லி தந்து வியப்பூட்டுவார்.
ஆம்பிள புள்ள கையில கழுத்துல கயிறு கட்ட கூடாது. ஏன்னா எதிரி கையில வாட்டமா எதும் சிக்கிட கூடாது பாத்துக்க. கட்டிப்புடிச்சியெல்லாம் புரள கூடாது, சிண்ட புடிச்சி தூக்கி அடிக்கிற அளவு நெஞ்சுல தேட்டை வேணும். நல்லா சாப்ட்டு ஒடம்பு ஏத்துடா. நோஞ்சான் மாதிரி உடம்புல ஒட்டுச்சதை இல்லாம கெடக்க. - அப்பா சொல்றது.
----
ஒன்றிரண்டு இடங்கள்ல சமாளிக்க முடியாம என்னை விட உடம்புல பலசாலியான பயலுகக்கிட்ட அடி வாங்கிருக்கேன்.
அடிக்க முடியுதோ இல்லியோ அடிக்க தயங்க கூடாது- என்னோட பாலிசி. தளபதில தேவா ஆட்களோட மழை சந்திப்புல அந்த ஒரு வசனம்-எனக்கு ரொம் புடிச்சது.
பத்துப்பேர்ல ஒருத்தன கூடவா அடிக்க முடியாது. ......
இருந்தும் ஒரு இக்கட்டான நிலைல எகிறாம அடிவாங்கி பணிஞ்ச வந்த சம்பவமும் உண்டு.
நான் இப்டியெல்லாம் சண்டை போடனும்னு எனக்குள்ள அமைச்சு வச்சிருக்க வியூகங்களை ஒரு தடவை கூட உபயோகிச்சதில்லை.
ஊர்ல படிச்ச எட்டுவருசத்துல கிரிக்கெட் சார் கலவரம் அதிகம். எங்க ஊர் ரொம்ப ரொம்ப சின்ன ஊர். SC vs BC இரண்டு கிரிக்கெட் டீம்தான். அதில் பெரியவர் சிறியவர் என்ற பிரிவுகள் உண்டு. இந்ந சமூக வாரியிலான பிரிவு என்பது குடியிருக்கும் பகுதியை வைத்துதானே ஒழிய வேறொன்றுமில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் "ஏரியா" டீம்களை போல.
ஒருமுறை எங்கள் பெரிய டீமில் ஒரு மாமா ஃபோர் லைனிலிருந்து ஒடியாந்து கையை மடித்து முகத்தில் ஒரு ஏத்து ஏத்தினார். அடிவாங்கியவர் சுருண்டு விழுந்தார்.
சண்டையென்றால் சட்டையை கழட்டிவிட்டு ஓடுவோம். பயல்கள் தூண்டிவிட்டால் ஆர்கஸமடைந்து குதிக்கும் ஆர்வக்கோளாறு நான். அப்படியிருந்தும் அவ்வளவாய் எந்த ஒரு அடிதடி சம்பவமும் நடந்ததாய் நினைவிலில்லை.
அவ்வப்போது சிலபல தனிமனித சண்டைகள். அவன்களும் அவ்வளவாய் ஒர்த் பீஸ்கள் இல்லை.
பிறகு 9&10. பாட்டி ஊரில் படித்தேன். அங்கு என்னோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் எங்கள் ஊர் +க்ளாஸ்மெட் பயல்கள். அதில் ஒன்றிரண்டு கழண்ட கேஸ்களை விட்டு பார்த்தாலும் ஆறேழு பேர் தேறும். ஆனால் நான் பாட்டி வீட்டில் தங்கி படித்தேனென்பதால் பள்ளிக்கூடத்தினுள்தான் நண்பர்களை பார்க்க முடியும். தினமும் ஊருக்கு போய் வரும் மாணவர்கள் மற்ற எட்டு பேரும்.
எங்களிடம் வம்பிழுத்த அந்த ஊர்ப்பயல்கள் பிரச்சனை, பிரச்சனைக்கு முடிவாய் கபடி+கிரிக்கெட் -எதிலுமே எனக்கு வாய்ப்பமையவில்லை. ஒரே ஒருநாள் பேச்சு வார்த்தைக்கு அழைத்து போனார்கள்.
பிறகு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி சம்பவமில்லை.
+1&+2 அத்தை மகன் பெரியவன் எனக்கு சீனியர் (+2)&(நான் +1) ...அவனுக்கு அவனோட ஊர் நண்பர்கள் மூவர். என் பின்னணி பலம். ஆகையால் எனக்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லை. ஒருமுறை என் மாமன் அவனது வகுப்பு தலைவனை அடித்ததால் அவன் வாத்தியாரிடம் சொல்லி மாமனுக்கு அடி... அன்று இரவு விடிதிக்கு என் மாமன் வெகுநேரமாகியும் வரவில்லை.
பெரம்பலூரில் சங்குப்பேட்டை மற்றும் திருநகர் என்ற இரு ஏரியாக்களும் பரம எதிரிகளாம். என் பள்ளியிலேயே சீனியர் மாணவர்கள் ஒருமுறை பயங்கர "கேங்க் வார்" செய்தார்கள். கத்தியை பிடித்தோடியவனை கண்கூடாக பார்த்தேன்.
அப்படிப்பட்ட சங்குப்பேட்டை ஏரியாக்காரன்தான் என் மாமன் அடித்த ஆள்.
விடுதியில் மாமனுக்கு சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு , பேண்ட்ட் சட்டை போட்டு நான் நம்பும் என் மிகப்பெரிய ஆயுதமான பெல்ட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.
எப்படியெல்லாம் சண்டையிட வேண்டுமென வியூகங்களை மனதில் வகுத்துக்கொண்டு என் மாமனை தேடி அந்த முன்னிரவில் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தேன்.
ஒரு வெளிச்சத்தில் அமர்ந்து மும்முரமாக படித்து கொண்டிருந்தான்.ஏமாற்றத்தோடு அழைத்து வந்தேன்.
ஒரு தனிமனித சண்டையில் ஒருவனை எட்டி உதைத்து கட்டிப்புரண்டு எழுந்து அடிக்கும்போது "அட்றா பாஸ்ஸு அட்றா....." என்று என்னை உற்சாகப்படுத்தினான் என் உயிர் நண்பன் ஒருவன்.
பிறகு விடுதி கேங்க் பிரிவினையில் பொதுத்தேர்வொன்றின் முந்தைய நாளிரவு ஒருவன் குடித்துவிட்டு சண்டைக்கு வந்தான். அவனை முன்னமே அடிக்கவேண்டுமென சொல்லியிருந்தேன் அது அவன் காதுக்கு எப்படியோ போக "அடிப்பேன்னு சொன்னியாமே அடி" என்று வந்தான் என் முன்னாலும் அவன் முன்னாலும் தடுக்க பத்து பேர்.தீவிர சமாதானத்தில் என் மச்சான் என்னை திட்டி அனுப்பிவிட்டான். வந்த வாய்ப்பை ஒருமனதாக நழுவ விட்டேன். பிறகு TC வாங்க பள்ளிக்கூடம் போன ஒருநாள் அந்த வீரனை பார்த்து லேசாய் ஒரு புன்னகை.
கல்லூரியில் மறக்க முடியாத சம்பவமென்றால் இந்த சம்பவம்தான். அந்த பெண் தன் தெருவில் ஒருவனை காதலித்திருக்கிறாள்(டவுட்) எங்கள் விடுதியில்(My batch) ஒருவன் அந்த பெண்ணிடம் பேசி ஓரளவு கொண்டு வந்திருக்கிறான். இந்த விசயம் அந்த பெண்ணின் தெரு(காதல்) பையனுக்கு தெரியவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறான். நாங்கள் ஒரு பத்து பேர் டெம்போவில் ஏறி பன்ருட்டிக்கு போனோம். அங்கு பஸ் ஸ்டாண்டிலிருந்து அந்த தெருவுக்கு திரும்புகையில் போலிஸ் கும்பல் ஒன்று நின்றது. பீதியில் எங்களுள் கழல ஆரம்பித்தனர்.களத்தை நோக்கி அழைக்க வந்த லோக்கல் பயல்களை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு டீக்கடையிலும் முக்கிலிருமிருந்து பல்க் பல்க்காக ஜிம் பாடிகள் வெளியேறி ஒவ்வொருவராய் எங்களுக்கு அரணமைத்து பின் தொடர்ந்தார்கள். முழு பீதியடைந்த, நான் எதிர்பார்க்காத சில நபர்கள் பின் வாங்கி ஓடினார்கள்.
கடைசியில் சம்பவக்காரனோடு நாங்கள் மூவர்தான் நேருக்கு நேர் நின்று பேச்சுவார்த்தையை நடத்துகிறோம். அதில் என் பங்காளியின் நண்பனுக்கு தெரிந்த லோக்கல் ஆட்கள் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். உண்மையிலேயே அந்த சமாதானம் நிகழவில்லையென்றால் அன்று எங்களால் அவர்களை சமாளித்திருக்க முடியாது என்பதே உண்மை.
பிறகு எப்படியோ கிளம்பி காட்டுவழியே நுழைந்து வந்து அடுத்த நாள் செமஸ்டர் தேர்வுக்கு படித்தோம்.
90% கல்லூரி கேங்க் வார் என்பது பெண்ணை பிரதான படுத்திதான் நிகழும். அப்படி என் நண்பன் ஒருவனுக்கு லோக்கல் பையனுடன் ஏற்பட்ட பங்காளி தகராறு என் கண்முன் நடந்த வன்முறை. பேச அவனை தனித்து அழைத்து சென்றவர்கள் பொத் பொத்தென அடித்தார்கள். பின் தொடர்ந்து போன நான் ஓடி நெருங்குவதற்குள் நண்பனுக்கு சிலபல அடிகள் வலுவாய் விழுந்தன. தடியெடுத்து வந்தவனை மடக்கி பிடித்து தடியை பிடுங்கி வெறுமனே நின்று விட்டேன் என்பது பலநாட்கள் என்னை உறுத்தியது. ஏனென்றால் என் கையிலிருந்தது நல்ல வலுவான தடி. எடுத்து சுழட்டினால் விரட்டியிருக்கலாம். அடிவாங்கும் நண்பனை மீட்பதிலேயே எண்ணமிருந்துவிட்டது. பிறகு அந்த பங்காளி தகராறு பலமுறை நான்கு வருடமும் நீடித்தது. மூன்றாம் வருடத்திலேயே அந்த நண்பனை விட்டு விலகிவிட்டேன்.
டிபார்ட்மெண்ட் தகராறில் சீனியர் அண்ணன்களோடு முன்வரிசையில் நின்றேன். அண்ணன்கள் வாக்குவாதமும் சமாதானமும் .... கைகலப்பு பெரிதாய் நிகழவில்லை. பெருமிதம் ஆனால்,
எனக்கும் வாய்ப்பு அமையவில்லை.
கல்லூரி "கல்ட்சுரல் திருவிழா" ஒரு யுத்தக்களம். பௌர்ணமிக்கு பாம் வைக்கிறோம் என்ற பழைய பட சீன்களை போல கல்ட்சுரல் அன்று யுத்தத்தை அமைக்க முன் வியூகங்கள் உண்டு. யுத்த காரணம் அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த விளையாட்டு போட்டிகள். என் இறுதியாண்டு கல்ட்சுரல் திருவிழாவில் பயங்கர சண்டை நடந்தது. ஓட ஓட விரட்டி அடித்தார்கள். சீனியர் ஜூனியர் -டிபார்ட்மெண்ட் என்று பல ரூப உட்பூசல் மற்றும் பிரதான காரணமாக ஒரு பெண் ..... இந்த தகராறில் எனக்கு உடன்பாடில்லை, மேலும் எங்கள் பயல்களுக்குள் விளையாட்டு தேர்வு துரோகமென கருதியதாலும் நான் ஓதுங்கிவிட்டேன். அடிக்க ஓடும்போது ஒருவன் "என்ன மச்சான் இப்டி சண்டை நடக்குது கண்டுக்கவே மாட்ற" என்று கேட்டேன். புன்னகைத்து கடந்தேன்.
இந்த தகராறு ஒருபுறம் நடக்க. இடையில் என் பங்காளி தன் பரம எதிரியை அடித்து விட்டதாய் சொல்லி ஆர்வமாக சிரித்துக்கொண்டே கிழிந்த சட்டையோடு வந்து என்னை கட்டிப்பிடித்து "இங்க பார் பங்காளி வாயிலயே ஏத்தினேன் என்று தன் புறங்கையை காட்டினான்" கட்டிப்பிடித்து பாராட்டினேன்.
சண்டை முடிந்தும் லோக்கல் ஆட்களை வரவழைத்து எங்கள் பயல்களின் ரூமுக்கே சென்று மிரட்டியுள்ளார்கள்.மிரட்டல் வாங்கியதில் என் மாப்பிள்ளை ஒருவன் இருந்தான். மிரட்ட சொன்னவன் என்னோட நன்கு பழகிய ஜூனியர் ஒருவன். பிறகு அந்த ஜூனியரோடு பேச்சு வார்த்தையை தவிர்த்தேன்.
கல்லூரியில் என் முதல் உயிர் நண்பன், பெரிய உறவு என்றால் அது என் பங்காளிதான். ஒரே ரத்தம்போல எங்கள் பழக்கம். கிட்டத்தட்ட எங்கள் கல்லூரியின் சண்டியன் அவன்தான். எங்கெங்கிருந்தோ வம்புகளை சம்பாரிப்பான் அதை அவனாகவே சமாதானமும் செய்து விடுவான். ஒருநாள் மதிய வேளையில் "பங்காளி என்னை அடிக்க ஆள் வரானுங்கடா என்று சொன்னான்" நிட்சயமாக எனக்கான களம் இதுதான் என்று நம்பினேன். கிரிக்கெட் ஸ்டம்புகள், ஹாக்கி ஸ்டிக், இரும்பு ராடுகள் என்று ஆளாலுக்கு ஆயுதத்தோடு ஒரு நான்கைந்து பேர் தயாரானோம். பங்காளியை இப்போது கால்செய்து ஆட்களை இறக்க சொல் என்றேன். வெகுநேரமாய் காத்திருந்து ஏமாந்தோம்.ஆனால் அதே நாளில் என் பங்காளியின் நண்பர்களை அடிக்க ஆள் வந்து வன்முறை நிகழ்ந்திருக்கிறது.
எனக்கு தனிமனித சண்டையென்றால் இரு வலுவான சம்பவம் உட்பட சில பூட்ட கேசுகளோட நடந்திருக்கின்றன.
அப்பா அடிக்கடி சொல்லுவார் சண்டையிட போலாமே ஒழிய சண்டையை விலக்க போக கூடாது. மத்திம தன்மையில் நிற்கவும் கூடாது அதேபோல தேவையின்றி ஒருவனுக்காக நின்று சமாதானமும் செய்யக்கூடாது.
இன்று வரையிலும் என் பெர்ஃபாமென்ஸ்களை இறக்க ஒரு நேர்த்தியான களம் கிடைக்கவே இல்லை.
என்போல பசங்களுக்கு ஒரு அறிவுரை.
இடுப்பு பெல்ட் என்பது நம்மிடமிருக்கும் மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம். அதை மிருதுவாக லேசான தோல்களால் ஸ்டைல் என்றெல்லாம் அணியாதிர்கள் நல்ல தரமான லெதர் பெல்ட்டுகளை அணியுங்கள். இடது கையில் நகம் வளர்க்கலாம்.
சண்டை போடுவதை விட சண்டைக்கு தயாராயிருத்தலே மிகப்பெரிய தைரியம். சண்டைக்கான காரணம் பெண்ணெறால் தீவிர ஆலோசனை வேண்டும் ஆர்வக்கோளாறில் இறங்கிவிடக்கூடாது. பெண்களை நம்பி மட்டும் கேங்க் வாரில் கலந்து கொள்ள கூடாது...!

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.