இன்னைக்கு வெளியே கடைக்குச் சென்றிருந்த போது செருப்பு பிய்ந்துவிட்டது. வீட்டுக்கு எடுத்துச் சென்று ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று கருதி, செருப்பை கையில் தூக்கிக் கொண்டு வீடு வரை நடந்து சென்றேன். அதிக பட்சம் 10 நிமிடம்தான் இருக்கும்.
ஆனால், அந்த செருப்பை கையில் வைத்துக் கொண்டு அந்த தெருவில் நடந்து சென்ற போது அடித்த வெயிலில் நடக்கக் கூட முடியவில்லை.... எனது மூதாதையர்கள் செருப்புக் கூட அணிய முடியாமல்...பட்ட பாட்டை அந்த வெயில் சூடு உணர்த்தியது.
இது குறித்து, என் தாத்தாவோடு முன்பொரு நாள் உரையாடிக் கொண்டிருந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
நான்: ஏன் தாத்தா, முதல்ல நீங்க செருப்பெல்லாம் போட்டதில்லையோ?
தாத்தா: அன்னைக்கு எவன் செருப்ப போட்டான்..?
நான்: ஏன்?
தாத்தா: யாருகிட்ட காசிருந்தது. கூலியா கிடைக்குற ஒன்னேகால் ரூபாய்ல செருப்பு வாங்குனா, எதை வச்சு திங்குறதாம்..
நான் : ஒரு வேளை செருப்பு வாங்கிட்டா, போட முடியுமாக்கும்?
தாத்தா : அதெல்லாம் போட முடியாது.
நான்: அப்ப யாருமே செருப்பு போட்டது கிடையாதா?
தாத்தா : ஐயருங்க, ஊர்த்தெருக்காரங்க போடுவாங்க...கூலிக்கு வேலைக்க் வர்ற அந்த ஊரு ஏழைங்க போட மாட்டாங்க...
நான் : ஆனா, அவங்க விரும்பினா போட்டுக்கலாம்தானே...
தாத்தா : ஆமா..
நான் : சரி, அவங்க போடுற செருப்பை அவங்களே தைச்சுப்பாங்களோ?
தாத்தா: அது எப்படி? பகடைதான் தச்சு கொடுப்பான்.
நான் : பகடை தச்சு கொடுக்கிற செருப்ப மட்டும் அவனுக போடாலாமா? அது மட்டும் தீட்டு கிடையாதா?
தாத்தா : அதையெல்லாம் நாங்க கேட்டதுல்ல...
நான் : துணி, மணியாவது உடுத்தலாமா?
தாத்தா : சொன்னா வெட்கம். இப்பல்லாம் துணியெல்லாம் போட முடியுது. அப்ப கோவணம் மாதிரிதான் துணி..
நான்: புது டிரெஸ்லாம் எடுக்க மாட்டீங்களா?
தாத்தா: இதப்பாரு......தீபாவளிக்கு அவங்கதான் எடுத்து தருவாங்க..அதுதான் துணி...
நான்: சரி தாத்தா, கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க எதுமே பண்ணதுல்லையா?
தாத்தா: அவங்கதான் கூட்டம் போட்டு, தண்ணி குடிக்க வச்சாங்க?
நான் : ஏன் அதுக்கு முன்னாடி தண்ணியே குடிச்சதில்லையாக்கும்...
தாத்தா: அதுக்கு முன்னாடி ஒன்னா தண்ணி குடிக்க முடியுமா? அவங்கதான் ஒன்னா தண்ணி குடிக்கலாம். எல்லோரும் மனுசங்கதான்னு சொன்னாரு...அன்னைக்கு எங்க ஊருக்கு வந்தவரு, தேவரு....ரொம்ப நல்ல மனுசன்...எல்லோரும் சமமா நடத்தணும்னு அவர்தான் பிரச்சாரம் பண்ணாரு...
நான்: வேற என்ன சொல்வாங்க?
தாத்தா : உழைக்கிறவனுக்குத்தான் நிலம் சொந்தம்னு சொல்வாங்க...
நான் : நிலம் கிடைச்சுதாக்கும்..
தாத்தா: அப்பல்லாம், மடத்துக்குதான் நிலம் இருந்தது. அந்த போராட்டத்துக்கு பிறகு கருணாநிதி எல்லோருக்கும் பட்டா போட்டு கொடுக்கிறேன்னு சொன்னாரு...இன்ன வரைக்கும் அந்த பட்டா செல்லுபடியாகலை....ஒரு தேவரு..அவர்தான்...இன்னைக்கு வரைக்கும் அந்த கேசு நடத்திட்டு இருக்காரு....அவரு செத்தாதான் தெரியப்போவுது..அந்த நிலத்த வச்சிருக்க விவசாயம் பண்ற நம்ம ஆளுகளுக்கு...
நான்: சரி, உங்களுக்காகவே நின்னாரே, அவரு என்ன ஆனார்?
தாத்தா: அவரு கல்யாணமே பண்ணிக்கலை, சிகப்பு துண்டோட வருவார்..கடைசில அவருக்கு ஏதோ நோய் வந்திடுச்சு. நம்ம மக்கள்தான் அவரோட கடைசி நாள்ல பாத்துகிட்டாங்க. ரொம்ப அருமையான மனுசன் அவரு...அதுக்குபிறகு காங்கிரஸ் அது, இதுன்னு வந்திடுச்சு...
நான்: இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போட்டீங்க?
தாத்தா: அம்மாக்குதான்..பென்சன் காசெல்லாம் கொடுக்கிறாங்களே, அதான்..ஓட்டுக்கு வேற காசு கொடுத்தாங்க....
நான் : ஓட்டு வாங்கிட்டு காசு போடுறது தப்பில்லையா?
தாத்தா: தப்புதான்...அது ஒரு மாதிரி நம்மலையே விக்குறது மாதிரி...என்ன பண்றது , மக்கள் எல்லோரும் அப்படியே பழகிட்டாங்களே...
இந்த உரையாடலில் அவருக்கிருந்த ஏக்கங்கள் வெளிப்படவில்லை யாயினும்...பட்ட துன்பங்களும்...மக்களோடு நின்ற கம்யூனிஸ்டுகளின் வரலாறும் தெரியவந்தது.. இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே, எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது...
எங்கள் வீட்டுக்கு என் நண்பனின் தாயார் வந்திருந்தார்...அவர் வந்து போகும் வரை, என் தாத்தா உள் அறையிலிருந்து வெளியேகூட வரவில்லை. அவர் சென்றபிறகுதான் தாத்தா வெளியே வந்தார்..
”ஏன் தாத்தா வெளியே வரலை”ன்னு நான் கேட்டேன்.
”அம்பாசமுத்திரங்கிற.... எந்த தெருன்னு கேட்டுட்டாங்கன்னா?”னு சொன்னார்...
=====================
எங்கள் முப்பாட்டனின் நிம்மதியில்லா சேரியின் இரவுகள்,
இன்றும் என்னை நிம்மதியாய் உறங்க விடுவதில்லை.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.