அம்மா, நீங்க அவளை என் கூட இருக்கவிடாம துரத்தி விடுறதுக்கு காரணமா இருந்தீங்க. ஆனால் இப்போ உங்களுக்கே பாஸ்போர்ட் கிடக்காம உங்களால இங்க துபாய்க்கு வர முடியாம போயிடுச்சு.
அவ நிச்சயமா உத்தம பத்தினி தான்மா... அது எப்போ தான் உங்களுக்கெல்லாம் புரிய போகுதேன்னு தெரியல...
அவளோட கேள்வியெல்லாம் நியாயமானவைகள்தானே...
அப்படி என்ன உங்கள கேட்டுட்டா???
அவளோட நகைகள் எல்லாமே அவகிட்டயோ இல்ல அவ அப்பாகிட்டயோ இருக்கணும்னு நெனச்சா... அதுல என்ன தப்பு... அவளோட அப்பா போட்ட நகை தானே...
அவளுக்குன்னு ஒரு லாக்கர் ஓபன் பண்ணி அதுல வைக்கலாம்னு தானே சொன்னா...
ஒன்னு நான் அவளுக்குன்னு லாக்கர் ஒன்னு ஓபன் பண்ணி தந்திருக்கணும்... என்னோட முட்டாள் தனம்... அப்போ கையில அவ்ளோ காசு இல்ல... அதனால உங்களோட லாக்கர்ல இருக்கட்டும்னு சொல்லிட்டோம்... அதுக்கு கூட முழு மனசோட ஒதுக்காம, தற்சமயத்துக்காக ஒத்துகிட்டா...
இல்ல, அவளுக்கு புரிஞ்சிருக்கணும், அவளோட நகைகள யாரும் ஒன்னும் பன்னமாட்டங்கன்னு...ஆனா அவளுக்கு அது அவளுக்கு புரியல... என்ன பன்றது , அவளோட மனசுல உங்கள பத்தி இருக்கிறதெல்லாம் “நகை, காசு மேல தான் உங்களுக்கு ஆசைன்னு...” அத மாத்த வேண்டியது உங்களோட வேலை... அதுக்கு அவளை குத்தம் சொன்னா என்ன அர்த்தம்...
பொண்ணு முடிவு பன்னுனப்போ, அவங்க இருக்குறப்போ கேட்காம, அவங்க போனதுக்கப்பறம் எதுக்கு ரெண்டு லட்சம் கேட்க சொன்னது??? எதுக்காக அந்த ரெண்டு லட்சம்??? கல்யாண செலவுக்குனு நீங்க சொன்னாலும்... அத என்னால ஏத்துக்க முடியாது... ஏன் அதை என்னால சரி கட்டிக்க முடியாதா??? என்கிட்டயும் கேட்கல... நீங்களா முடிவு பண்ணிகிறீங்க... இந்த விஷயத்துல மிகப்பெரிய நம்பிக்கையில்லா தீர்மானம் அவங்க குடும்பத்துல வந்துச்சு...
ஏதோ என்னால தான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு... திரும்பவும் கல்யாண பேச்சு தொடர்ந்துச்சு... இது ஒரு மிகபெரிய கருப்பு புள்ளி இந்த கல்யாண விஷயத்துல... அது உங்க யாருக்குமே புரியாது...
அவ ஆசைப்பட்டது, திருப்பதிக்கு போனும்னு... அதை கூட என்னால நிறைவேத்த முடியாத துரதிஷ்டசாலியாயிட்டேன்...
எங்கயும் "தேனிலவு"க்கு கூட போகல... எவ்ளோ கஷ்டமா இருக்கும்...
கல்யாணமான தம்பதிகள பிரிச்சு வைக்கிறது எவ்ளோ பெரிய குத்தம்னு உங்கள்ளுக்கெல்லாம் புரியவே புரியாதா???
எல்லா பொண்ணுகளும் ஒரே மாதிரி இல்லையே... ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு குணம்... எல்லாரும் நீங்க எதிர்பார்க்கிரமாதிரியே இருக்கமாட்டாங்களே...
நீங்களா பார்த்து தானே கல்யாணம் முடிச்சு வச்சீங்க... நீங்க சொன்னா நான் ஒரு பொண்ண கட்டிக்கணும்... நீங்க சொன்னா அந்த பொண்ண வேணாம்னு ஒதுக்கி வச்சிரனும்...
பிரச்சினைன்னு நான் உங்ககிட்ட வந்து நின்னா, பெரியவங்களா இருந்து நீங்க தான் பிரச்சினைய தீர்த்து வைக்கணும்... நீங்களே பிரச்சினைய ஊதி ஊதி பெரிசாக்கிட்டீங்களே...
பலே... பலே...
உங்களுக்குன்னு எவ்ளோ நகை எடுத்து வச்சிருக்கீங்க... ஏதாச்சும் கேட்டிருக்கேனா என்ன நகை எடுத்துருகீங்க, எவ்ளோனு... ஏன்? சரி எங்கப்பு தான் அதிகமா நகை ஏதும் எடுத்து போடல... இப்போவாச்சும் இஷ்டம் போல எடுத்து போட்டுக்கொங்கனு தானே எதபத்தியும் கேக்குறதில்ல...
மாசம் பொறந்தா முப்பதாயிரம் அக்கௌன்ட்கு அனுப்புறேன்ன்ல... என்னிக்காச்சும் கணக்கு கேட்டுருக்கேனா??? வீட்டு லோன் பத்தாயிரம். அது போக மிச்ச பணம் என்ன பன்னுறீங்கன்னு கேட்டுருக்கேனா???
அவளுக்குன்னு ஆசையா நான் ஒரு தோடு, அதுவும் வெறும் ஆயிரம் திர்ஹாம்க்கு (பன்னிரெண்டாயிரம் ரூபாய்) எடுத்து கொடுத்தத, உங்ககிட்ட சொன்னா, அவள என்னா திட்டு திட்டுறீங்க... ஏன், அவளுக்குன்னு ஆசையா வாங்கி தர கூடாதா... நீங்க சொன்ன ஞாயம் "இவ்ளோ கடன் இருக்குறப்போ, எதுக்கு தேவையில்லாத செலவெல்லாம் செய்யிற"... ஏன் நீங்க உங்களுக்குன்னு நகை எடுக்குறப்போ கடன் எல்லாம் கண்ணுக்கு தெரியலையா??? இவளுக்குனு நகை எடுக்குறப்போ தான் உங்களுக்கு கடன் எல்லாம் கண்ணுக்கு தெரியுமா???
பழமொழி ஒன்னு இருக்கு... அதை நிருபிச்சிடீங்கலேம்மா ...
“மாமியா உடைச்சா மண் பானை ...
மருமக உடைச்சா பொண் பானை...”
என்ன ஒரு ஞாயம்...
ஏன் அக்கா பசங்களுக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தேனே, அப்போ இந்த திட்டு அங்க திட்டிருக்கலாம்ல... ஒன்னுமே பண்ணலையே... சிரிச்சிகிட்டே விட்டுடீங்க...
ஏன், மாமா கூடவே இருந்து உங்கள கவனிச்சிக்கிறாரே... அதுக்காகவா???
இல்ல, வீடு கட்டுறதுக்கோ , மத்த வேலைய பர்க்குறதுக்கோ, அதுக்காகவா???
நெறைய செஞ்சாச்சேமா... இன்னும் செய்யுறதுக்கு கால கட்டம் இருக்கேம்மா...
இத பத்திலாம் இதுவரைக்கும் நான் நெனச்சு கூட பார்க்கலயே... ஏன், இது யாரு நம்ம அக்கா, நாம செய்யாம வேற யாரு செய்ய போறா... தம்பின்ற ஒரு பாசத்தால தானே... அம்மான்ற பாசத்துல தானே...
- வேற எதுக்காக?
உங்களுக்கோ, இல்ல அக்காவுக்கோ, மாமாவுக்கோ, செஞ்சா உங்களுக்கு பெருசா தெரியல... அவளுக்கு செஞ்சா மட்டும் உங்க எல்லாருக்கும் வித்யாசமா தெரியுது... அவ யாரு... என் பொண்டாட்டி... என்கூட கடைசி வரை என்னோட கஷ்ட நஷ்டங்கள பகிர்ந்து கொள்ள வந்தவ...
இன்னொரு பழமொழியும் இருக்கு...
“தாய்க்குப்பின் தாரம்”
இதுகூட உங்களுக்கு தெரியாதாமா???
நீங்க என்னை முப்பது வருஷம் பார்த்தவங்க... உங்களுக்கு என் மேல இருக்குற நம்பிக்கை போல அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும்... அவ இப்போ வந்தவ... நம்ம குடும்பத்த பத்தி அரசல் புரசலா தெரிஞ்சாலும்... உள்ள வந்தபிறகுதானே நல்லா புரிய வரும்... அதுக்கு முன்னாலே நீங்க அவள எப்படி எதிர்பார்க்க முடியும், நல்லா புரிஞ்சி எல்லாத்தையும் அனுசரிச்சு நடக்கனும்னு... எல்லாத்துக்கும் கொஞ்ச காலம் வேணுமில்ல புரியிறதுக்கு... அவளும் எங்கிட்ட இத தான் சொன்னா “உங்க குடும்பத்தோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாகுறதுக்கு கொஞ்ச நாள் எடுக்கும்... என்ன வற்புறுத்தாதீங்கனு...”
இன்னொரு பழமொழி கூட இருக்கு...
“வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானை உடஞ்ச மாதிரி” இது தான் என் வாழ்க்கைல நடந்திருச்சு...
உங்களுக்கெல்லாம் இது புரியுமோ புரியலையோ தெரியாது... கடைசில அல்லல் பட்டு அனாதையா நிக்குறது வேறயாருமில்ல... உங்க மகன் தான்... அதை முதல்ல புரிஞ்சிகோங்க...
நீங்க அங்க மக, மருமகன், பேரன், பேத்தினு இருக்கீங்க...
அங்க அவகூட, அம்மா, அப்பா, அண்ணன் கூடன்னு இருக்குறா...
நான் இங்க அனாதையா, உடம்பு சரியில்லாட்ட கூட கேக்குறதுக்கு ஆள் கிடையாது...
இங்ககூட நீங்க ஒரு பழமொழி சொல்லலாம்...
"யானைக்கு பயந்துகிட்டு சிங்கத்தோட குகைக்குள்ள நுழையிறதா"
அவகூட பழகுன எனக்குத்தாம்மா தெரியும் அவள பத்தி...
நல்ல பொண்ணு... என்ன கொஞ்சம் முன்கோபி, என்னை போலவே...
மனசுல ஏதும் வச்சுக்க மாட்டா... எதா இருந்தாலும் பட்டு பட்டுன்னு எங்கிட்ட போட்டு உடச்சிருவா...
அவ மனசில, நீங்க பணத்துக்கு ஆசைப்படுறவங்கன்னு ஏறிடுச்சு... அது மட்டும் அவ நெனப்பிலேருந்து போயிடுச்சுன்னா, அவள போல ஒரு நல்ல மகள் உங்களுக்கு கெடைக்க மாட்டாமா...
ஒன்னு தெரியுமாமா உங்களுக்கு... அவ எங்கிட்ட சொன்னதெல்லாம் ஒன்னே ஒன்னு... “நீங்க உங்கம்மாவுக்கு எவ்ளவும் பணம் அனுப்புங்க, எது வேணும்னாலும் பண்ணுங்க, உங்க அக்காவுக்கும் எது வேணும்னாலும் பண்ணுங்க, அதை பத்திலாம் ஒன்னும் கேக்கவே மாட்டேன்... அது உங்க ரெண்டு பேருக்குள்ளானது... ஆனா, எனக்கு நீங்க பன்றத பண்ணிதான் ஆகனும்... அதுல அவங்க எதுவும் சொல்ல கூடாது”
இதுல என்ன குத்தம் இருக்குன்னு நெனைக்கிறீங்க... அவ நினைக்கிறது சொல்றதெல்லாம் ஞாயமா தானே தெரியுது...
கொஞ்சம் அவள் பக்கம் இருந்தும் யோசிச்சு பாருங்க... உங்களுக்கே புரியும்...
----------------
இன்னொரு விஷயம் நம்ம வீட்டளுகள பத்தி தான்...
அவளோட ஜாதகம் வாங்கினீங்க... என்னோட ஜாதகம் எடுத்துட்டு போயி ரெண்டு மூணு ஜோசிய காரங்க கிட்ட பொருத்தம் பார்த்தீங்க... அப்பெல்லாம் பொருந்துன என் ஜாதகம், இப்போ மட்டும் பொருந்த மாட்டேங்குதா???
அப்பெல்லாம் சொல்லாத ஜோசியகரங்க, இப்போ மட்டும் எனக்கு ரெண்டு பொண்டாட்டின்னு சொல்றாங்களா??? ஒருவேளை இந்த பொண்டாட்டிய தீர்த்துட்டு, அடுத்த கல்யாணம் பண்ணுனா, அடுத்து வர்ற பொண்டாட்டி நெஜமாவே மோசமா இருந்திட்டா, என்ன பண்ணுவீங்க??? அவ உங்கள அடக்கி ஆளனும்னு நெனச்சு உள்ள காலடி வச்சா என்ன பண்ணுவீங்க???
அதெப்படி அடிக்கடி வருஷத்துகொரு தடவ ஜோசியம் அதுவும், கல்யாண விஷயத்துல மாத்தி சொல்வாங்களா???
உங்களுக்கு ஜோசியகரங்க அப்ப சொன்னது பொய்யுனா, எனக்கு ஜோசியங்க இப்ப சொல்றது பொய்யின்னு தோணுது...
பொருத்தமே இல்லாத ரெண்டு ஜாதகத்த கொண்டு போயி பொருத்தம் பார்த்து, பொருத்தம்லா நல்லா இருக்குன்னு சொல்லி, அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து, ஊர் சாதி சனம்லாம் பார்க்க பண்ணுன கல்யாணம், எப்படிமா பொய்யாகும்...
குடும்பம்னா சின்ன சின்ன பிரச்சினைலாம் வர்றது சகஜம் தான்... அதுக்காக பொன்னே பிரச்சினைன்னு சொல்றது எந்தவிதத்துல ஞாயம்???
“காலை கடிக்குதுன்னு செருப்ப வேணும்னா தூக்கி போடலாம்”... ஆனா பிரச்சினை இருக்குன்னு, யாரும் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதும் இல்ல... கல்யாணம் பண்ணுன எல்லாரும் பிரிஞ்சி போறதும் இல்ல... கோழைங்க தான் பிரச்சினைய கண்டு பயந்து ஓடுவாங்க...
அவகிட்ட வீம்பு, திமிறு எல்லாம் இருக்கு... இல்லேன்னு சொல்லலையே... சுத்தமான பாசமும் இருக்கு அவகிட்ட...
அவ அங்க ரெண்டு மாசம் உங்க கூட, கல்யாணத்துக்கப்றம் நம்ம வீட்ல இருந்தப்போ, நல்லா தானே இருந்தா... உங்ககிட்ட ஏதும் மரியாதை இல்லாம நடந்துகிட்டாளா, இல்லையே... ஆசைப்பட்டு அப்பா வீட்டுக்கு ரெண்டு நாலு போனும்னு கேட்டாளே, அதுக்கு கூட அவள அனுப்பி விடலையே... ஆனா நீங்க மட்டும் உங்க பொண்ணு வீட்ட பக்கத்துலயே வச்சுக்கிட்டு அடிக்கடி உங்க பொண்ணு இங்க வர்றதும், நீங்க உங்க பொண்ணு வீட்டுக்கு போறதும் மட்டும் ஞாயமா???
வேணாம்மா ... மத்த மாமியார் மாதிரி இருக்கவேண்டமே... ஒரு பொண்ணுக்கு நல்ல அம்மாவா இருங்களே...
நீங்களும் உங்க கணவரும் தான் பிரிஞ்சிருக்கீங்கன்னா, ஏன் உங்க பையனும், பையன் பொண்டாட்டியும் பிரிஞ்சிருக்கனும்னு ஆசைபடுறீங்க...
பையன் வாழ்க்கைல விளையாடாதீங்க... அவங்கள சந்தோஷமா இருக்க விடுங்க... அவங்களுக்கு தெரியும் உலகம் எப்படி, எப்படி வாழணும்னு... இன்னும் அந்த காலம் மாதிரி, “நாங்க சொல்றாப்ல தான் நீ நடந்துக்கணும்”னு கட்டாயப்படுத்தாதீங்க...
அவங்க உங்களுக்கு கொடுக்குற மரியாதைய எப்போதும் கொடுப்பாங்க... அதுல எந்த சந்தேகமும் கிடையாது...
அவகிட்ட கடைசியா பேசுனப்போ அவ சொல்றா "ஜோசியகாரங்க, நம்ம ரெண்டு ஜாதகமும் பொருந்தாத ஜாதகம்னு சொல்லிட்டாங்க..."னு.
நம்ம வீட்லருந்து என் ஜாதகம் கூட வாங்கலயாம், கேட்டதுக்கு நம்ம வீட்ல ஒருத்தவங்க கொடுக்கலயாம்... சரி, வீட்ல ஒரே ஒரு பையன், நல்லா பார்த்து தான் கல்யாணம் பண்ணுவாங்கன்னு யோசிச்சுட்டு, ஜாதகத்த பத்தி பெருசா எடுக்கலயாம்...
எங்க இடைவெளி வந்துசுன்னே தெரியல...
அவளுக்கு கூட என் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கை சுத்தமா இல்லாம போயிடுச்சு... அதை திரும்ப கொண்டுவர்றதுக்கு நான் ரொம்ப கஷ்ட பட வேண்டியிருக்கும்...
பார்க்கலாம்... ஆண்டவன் என்ன எழுதிருக்குறாருன்னு....
அன்பே சிவம்...
நடப்பதெல்லாம் நன்மைக்கே!!!

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.