பக்கத்து வீட்டுல காலேஜ் படிக்குற அண்ணன் இருந்தாங்க. நிறைய படங்களை ரிலீஸ் ஆன உடனே பாத்துட்டு வந்து எங்களை மாதிரி பொடியன்ஸ்க்கு கதை சொல்லுறதுதான் அவங்க மிக முக்கியமான கடமை. ஒரு மாசம் புதுபடம் எதுவுமே ரிலீஸ் ஆகலைன்னாலும் எங்க நச்சரிப்பு தாங்காம தெலுங்கு படம்ல்லாம் எங்களுக்காக பார்த்துட்டு வந்து கதை சொல்லுவார். அவரு ஒரு படம் சூப்பருன்னுட்டா எங்க வீட்ல அந்த படத்துக்கு கூப்டு போக சொல்லி நச்சரிக்க ஆரம்பிப்போம். துர்கா படம் பாம்புல்லாம் டைப் அடிக்கும்னு பல விஷயங்கள் ஸ்கூல்ல பையங்க பேச ஆரம்பிச்ச நேரம். இந்த அண்ணனை போய் படம் பாத்துட்டு வந்து கதை சொல்லுங்கன்னு சொல்லிருந்தோம். ஆனா அவரு அதை பிடிக்கலைன்னு சொல்லிட்டாரு.. எங்களுக்கெல்லாம் மிக வருத்தம்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தை பார்த்துட்டு வந்து செம காமெடி படம் சூப்பராருக்குன்னு சொன்னதும் அதி தீவிர ரஜினி ரசிகனா இருந்த நான் இந்த படம் ஓட கூடாதுன்னு பெருமாள்புரம் பிள்ளையார் கோவில்லல்லாம் போய் வேண்டிகிட்டு வந்திருக்கேன். அந்த வாரத்துல எங்க வீட்லயும் நாங்களே சொல்லாம அம்மா படத்துக்கு போகலாம் கிளம்புங்கன்னு சொன்னாங்க. சந்தோஷமா எந்த படத்துக்கும்மா கேட்டதுக்கு இந்த படத்தை சொன்னாங்க. அவ்வளவுதான் பெரிய ஏமாற்றமா ஆயிடுச்சு. பிடிக்காத நடிகரோட படம் அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டா ஓடிட்டு இருக்கற படம் நான் அதுக்கு போய் சூப்பர் ஸ்டாருக்கு துரோகம் பண்ணவனா ஆயிருவேனேங்கற சோகம்தான் அதிகமா ஆயிடுச்சு. ராயல் தியேட்டருக்கு போயாச்சு.. ஹவுஸ் புல் போர்டை பார்த்ததும் செம சந்தோஷம். வாங்கம்மா வேற படத்துக்கு போகலாம்னு கூப்பிட்டா எங்கண்ணன் வெயிட் பண்ணி அடுத்த ஷோ பார்த்திட்டு போலாம்னு சொன்னான். இறுதியில் பக்கத்துல இருக்குற சொந்தகாரங்க வீட்டுக்கு போய் பார்த்திட்டு திரும்ப வரலாம்னு ப்ளான் ஆயிடுச்சு. எனக்கா போயும் போயும் கமல் படத்தையா இப்பிடில்லாம் வெயிட் பண்ணி பார்க்கணும் என்ன சோதனை இது ஆண்டவான்னு நினைச்சுகிட்டேன். அம்மாட்ட சண்டை போட்டு நான் வைஜெயந்தி ஐ பி எஸ் பார்க்க போறேன் காச குடுன்னு வாங்கிட்டு அருணகிரி தியேட்டருக்கு போயிட்டேன். (இதுல மிக முக்கியமான குறிப்பு என்னான்னா வைஜெயந்தி ஐ பி எஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருந்தேன் )
படம் போரடிச்சாலும் நம்ம தலைவருக்கு துரோகம் பண்ணலைங்கற மனநிம்மதியோட படம் பார்த்துட்டு வெளில வந்தேன். ஆனா அண்ணனும் தங்கச்சியும் மைக்கேல் மதன காமராஜன் படம் பார்த்துட்டு வந்து அதை பத்தியே ரெண்டு நாளா பேசி பேசி என்னை வெறுப்பேத்திட்டு இருந்தாங்க. படம் வெளியாகி வெற்றிகரமான 25வது நாள் போஸ்டரும் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. பல பேரு இந்த படத்தை பத்தியே பேசி வெறுப்பேத்தினதாலும் என்னை விடவும் அதிதீவிர ரஜினி ரசிகனான என் க்ளாஸ்மேட்டும் இதை பார்த்திட்டு வந்து படம் சூப்பராயிருக்குன்னு பேச ஆரம்பிச்சுட்டான். சரி இதுக்கு மேலயும் பார்க்காம இருக்க கூடாதுன்னு இப்ப வீட்ல நான் மட்டும் போயிட்டு வர்றேன் காசை குடுங்கன்னேன்.. ஆச்சர்யமா அவங்களும் நாம எல்லாரும் போலாம்னாங்க. அதே ராயல் தியேட்டர் கவுண்டர்… அதே மாதிரி காலை ஷோவுக்கு டிக்கட் கிடைக்காம வெயிட் பண்ணி மதியம் ஷோ பார்த்தோம்.
இப்பவரைக்கும் எனக்கு பிடித்தமான கமலின் நகைச்சுவை படம்னா இதுக்குதான் முதலிடம். நாலு கமல் அந்த நாலு பேரையும் அறிமுகபடுத்தும் காட்சியிலேயே அசத்தியிருப்பார். முதலில் மைக்கேல் கமலை காண்பிச்சு போலிஸ் துரத்தும் போது மின்கம்பியில் மோதி தீவிபத்து ஏற்படவும் தீயணைப்பு வீரரா ராஜு கமலை அறிமுக படுத்துவார்கள். பிறகு ராஜு கமல் கடன் காரருக்கு மீன் தட்டை நீட்டும் போது அதை தட்டிவிடவும் காமேஸ்வரன் கமலை காட்டுவார்கள்.
பீம்பாயாக டிடி மஹாபாரத்தில் பீமனா நடிச்சுருந்தவரை தமிழுக்கு அறிமுக படுத்தியிருந்தார்கள். நாகேஷ், மனோரமா, டெல்லிகணேஷ், ஊர்வசி, ரூபிணி, குஷ்பு, அந்த பாட்டின்னு எல்லாரும் அசத்திருப்பாங்க. என்வரையில் அப்ப பார்த்து ரசிச்ச அதே மாதிரி இப்பவும் ரசிக்குறா மாதிரி இருக்கறதுதான் இந்த படத்தின் சிறப்பு அம்சம்.
அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்லாம் சிரிச்சி சிரிச்சு கண்ணீரே வந்துடுச்சு… தியேட்டரே சிரிப்பலையில் அதிருது. வழக்கமா கமல் படம்னா பெண்கள் கூட்டம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். ஆனா அதுக்கு மாறா இந்த படத்துக்கு பெண்கள் கூட்டம் அதிகமாவே இருந்திச்சு. சிவராத்தி்ரி….. தூக்கமேது… பாடல் வரும்போது…. சனியன் புடிச்சவன்….இவ்ளோ நேரம் ஒழுங்காத்தான படம் எடுத்திட்டு இருந்தான்னு கமலுக்கு திட்டு செமய்யா விழுந்திச்சு. அதன் பிறகு தியேட்டர் ஆப்பரேட்டரே அந்த பாடலை காலை ஷோவிலும், மதியம் ஷோவிலும் கட் பண்ணியதா சொன்னாங்க. உண்மையான்னு தெரியலை.
கமலை அதி தீவிர எதிரியாக மனசுக்குள் உருவகிச்சு வச்சுருந்த நான் ரஜினி ரசிகனாவே அதுக்கப்புறமும் தொடர்ந்தாலும் தீவிர கமல் எதிர்ப்பு கொறைஞ்சது இந்த படத்துக்கு அப்புறம்தான் மாற ஆரம்பிச்சுது.
சுந்தரன் நானும்…. சுந்தரி நீயும்… பாடல் இப்ப வரைக்கும் என் எல்லா ராஜா ப்ளே லிஸ்ட்டிலும் இடம்பிடிக்கும்...!

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.