கண்ணம்மா என் காதலி
சுட்டும் விழிச்சுடர் தான் –கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி – கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் –புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் –தெரியும்
நஷத்திரங் களடீ!
சோலை மலரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கடல்லையே – உனது
நெஞ்சில்லைகளடீ!
கோலக் குயிலோசை- உனது
குரலினிமை யடீ!
வாலைக் க்மரி யடீ- கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய்- கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் –வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடி!- இது பார்
கன்னத்து முத்த மொன்று!
22மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரங் கழிவதிலும் நினைப் பின்றியே
சாலப் பலபல நற்பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே
ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுக,அழ் தன்னி லறிந்தேன்.
ஓங்கி வரு முவகை யூற்றி லறிந்தேன்
“வாங்கி விட்டிகையை யேடி கண்ணம்மா.
மாய மெவரிட்த்தில்?” என்று மொழிந்தேன்.
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி “என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்ன குமிழிகளில் என்ன் கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன பேசுதி” என்றாள்.
“நெரித்த திரைகடலில் நின் முகங் கண்டேன்;
நீல் விசும்பினிடை நின் முகங் கண்டேன்;
திரித்த் நுரையினிடை நின் முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின் முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கை வில க்கியே,
திருமித் தழுவியதில் நின் முகங் கண்டேன்”
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி –பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் –இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும்- துணி
மறைத்த்தனாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை முக
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?
ஆரியர் முன்னெறிகள் மேன்மையென்கிறாய்-பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஒரிரு முறை கண்டு பழகிய பிந் வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடி
யாரிருந் தென்ன யிங்கு தடுத்திடுவார்-வலு
வாக முகத் திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே –கனி
கண்டவன் தோலுரிக்க்க் காத்திருப் பேனோ?
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன்
மருவ நிகழ்ந்த்தென்று நாண முற்றதோ?
சின்னஞ்சிறு குழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாத செய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத் திரையை கலைந்திடென்றேன் –நின்றன்
மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்- எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா!
கன்னி வயதிலுனைக் கண்ட்தில்லையோ கன்னங்!
கன்றிச் சிவக்க முத்தமிட்ட தில்லையோ
அன்னிய மாக நம்முள் எண்ணுவதில்லை-இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? –துகில்
பறித்தவன் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? –கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்- சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்
பன்ன உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர் களொடு நிலவு வந்தே- விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினைச் சோதி கவ்வுங்கால்-அவை
முன்னுப சராவகை மொழிந்திடுமோ?
சாத்திரக் கார்ரிடம் கேட்டு வந்திட்டேநவர்
சாத்திரஞ் சொல்லியதை நினைக்குரைப்பேன்
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ-மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்த்தாம்
போற்றுமி ராமனென முன்பு தித்தனை –அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்!
ஊற்றமு தென்ன்வொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினைக்கமையப் பார்த்தன் அங்கு நான்
முன்னை மிகப் பழமை இரணியனாம்- எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னையொர் புத்தனென் நான் வள்ர்ந்திட்டேன் ஒளிப்
பெண்மை அசோதரையென்றுன்னை யெய்தினேன்
சொன்னவர் சாத்திரத்தில் மிக் வல்லர்காண் –அவர்
சொல்லிற் பழுதிருக்க்க் காரணமில்லை;
இன்னுங் கடைசி வரை ஒட்டிருக்குமாம்;-இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண் புதைப்பதே?
தீர்த்தக் கரையினிலே –தெற்கு மூலையில்
செண்பகத் தோட்ட்த்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் –அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடி!
பார்த்த விட்த்திலெல்லாம் –உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
மேனி கொதிக்குதடீ! தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் –பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?
கடுமை யுடைய தடீ!- எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும்- எண்ணும் போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை- கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் –எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்
கூடிப் பிரியாமலே-ஒரி ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே- உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக் குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!
சுட்டும் விழிச்சுடர் தான் –கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி – கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் –புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் –தெரியும்
நஷத்திரங் களடீ!
சோலை மலரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கடல்லையே – உனது
நெஞ்சில்லைகளடீ!
கோலக் குயிலோசை- உனது
குரலினிமை யடீ!
வாலைக் க்மரி யடீ- கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய்- கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் –வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடி!- இது பார்
கன்னத்து முத்த மொன்று!
22மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரங் கழிவதிலும் நினைப் பின்றியே
சாலப் பலபல நற்பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே
ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுக,அழ் தன்னி லறிந்தேன்.
ஓங்கி வரு முவகை யூற்றி லறிந்தேன்
“வாங்கி விட்டிகையை யேடி கண்ணம்மா.
மாய மெவரிட்த்தில்?” என்று மொழிந்தேன்.
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி “என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்ன குமிழிகளில் என்ன் கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன பேசுதி” என்றாள்.
“நெரித்த திரைகடலில் நின் முகங் கண்டேன்;
நீல் விசும்பினிடை நின் முகங் கண்டேன்;
திரித்த் நுரையினிடை நின் முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின் முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கை வில க்கியே,
திருமித் தழுவியதில் நின் முகங் கண்டேன்”
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி –பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் –இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும்- துணி
மறைத்த்தனாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை முக
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?
ஆரியர் முன்னெறிகள் மேன்மையென்கிறாய்-பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஒரிரு முறை கண்டு பழகிய பிந் வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடி
யாரிருந் தென்ன யிங்கு தடுத்திடுவார்-வலு
வாக முகத் திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே –கனி
கண்டவன் தோலுரிக்க்க் காத்திருப் பேனோ?
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன்
மருவ நிகழ்ந்த்தென்று நாண முற்றதோ?
சின்னஞ்சிறு குழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாத செய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத் திரையை கலைந்திடென்றேன் –நின்றன்
மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்- எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா!
கன்னி வயதிலுனைக் கண்ட்தில்லையோ கன்னங்!
கன்றிச் சிவக்க முத்தமிட்ட தில்லையோ
அன்னிய மாக நம்முள் எண்ணுவதில்லை-இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? –துகில்
பறித்தவன் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? –கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்- சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்
பன்ன உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர் களொடு நிலவு வந்தே- விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினைச் சோதி கவ்வுங்கால்-அவை
முன்னுப சராவகை மொழிந்திடுமோ?
சாத்திரக் கார்ரிடம் கேட்டு வந்திட்டேநவர்
சாத்திரஞ் சொல்லியதை நினைக்குரைப்பேன்
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ-மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்த்தாம்
போற்றுமி ராமனென முன்பு தித்தனை –அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்!
ஊற்றமு தென்ன்வொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினைக்கமையப் பார்த்தன் அங்கு நான்
முன்னை மிகப் பழமை இரணியனாம்- எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னையொர் புத்தனென் நான் வள்ர்ந்திட்டேன் ஒளிப்
பெண்மை அசோதரையென்றுன்னை யெய்தினேன்
சொன்னவர் சாத்திரத்தில் மிக் வல்லர்காண் –அவர்
சொல்லிற் பழுதிருக்க்க் காரணமில்லை;
இன்னுங் கடைசி வரை ஒட்டிருக்குமாம்;-இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண் புதைப்பதே?
தீர்த்தக் கரையினிலே –தெற்கு மூலையில்
செண்பகத் தோட்ட்த்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் –அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடி!
பார்த்த விட்த்திலெல்லாம் –உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
மேனி கொதிக்குதடீ! தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் –பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?
கடுமை யுடைய தடீ!- எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும்- எண்ணும் போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை- கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் –எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்
கூடிப் பிரியாமலே-ஒரி ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே- உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக் குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.