"போடா/டி
ஐ டோன்(ட்) கேர்"
பெரியம்மா அதிக முறை இந்த வசனத்தை பேச்சுவாக்கில் சொல்லி கேட்டிருக்கிறேன்.
அந்த திமிரும் தைரியமும்தான் இன்று பலபேர் மூக்கில் கைவைத்து பார்க்குமளவு வளர்த்திருக்கிறது.
பத்து லட்சம் பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்யா என்று திமிராய் என்னிடம் மார்தட்டி சொல்கிறது.
தவறிய பிள்ளைகள் எத்தனையென சரியாக எனக்கு தெரியவில்லை. இரண்டு அக்காக்கள் பிறந்த சில மாதங்களிலேயே என்று கேள்விப்பட்னிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் ஒரு அக்கா. அது என்னைவிட இரண்டு வருடம் மூத்தது. எனக்கு விவரம் தெரிந்து அந்த அக்காவுக்கு எந்த குறையுமில்லாமல்தான் இருந்தது. திடீரென ஒரு மழைப்பருவத்தில் கண்கள் குருடாகி விட்டதென சொன்னார்கள். பிறகு பல வருடமாக வீட்டை காவல் காத்துக்கொண்டு இருந்தது. மஞ்சள் காமாலை வந்து, இன்னும் ஏதோ கோளாறுகளால் இறந்து விட்டது. சரியாய் ஞாபகம் இல்லை.
அந்த அக்காவுக்கு மூத்தது ஒரு அக்கா, இளையது ஒரு அக்கா(எனக்கு) , பிறகு இரண்டு தங்கைகள். ஆண் பிள்ளைக்கு ஏங்கிய பாரம்பரிய தம்பதிகள்தான் பெரியம்மாவும்(*என் அம்மாவின் பெரியம்மா மகள்)- பெரியப்பாவும்(*பாட்டிகளின் உடன் பிறப்பு, அம்மாவுக்கு தாய்மாமன்) .
இரண்டு அக்கா ஒரு தங்கை உட்பட மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமண மேடையில் மச்சினன் முறைகளை நான்தான் செய்தேன். இன்னும் ஒரு தங்கை இருக்கிறது அதற்கும் நான்தான் ....
அத்தனை பேரின் மொத்த சகோதர பாசமும் என் ஒருவனுக்கே. அவர்களின் ஒரே ஒரு ஹீரோ நான். அதிலும் பெரிய அக்கா எனக்கு ஷ்பெஷல்
அதுக்கும் நான் ......
அவர்கள் உறவின் நீட்சியே இங்கு அக்கா அம்மாவென எல்லோரையும் எளிதில் அழைத்து விடுகிறேன்.
என் பால்யத்தில் கூடு போல இருந்த கூரை வீடு அது. இப்போது ஒரு மெத்தைவீட்டை சுற்றியொட்டி தென் புறம் ஒரு சிமெண்ட் சீட்டு செங்கல் சுவர் கொட்டகை. முன்புறம் அதே போல சிமெண்ட் சீட், செங்கல் சுவர் கொண்ட ஹால்.... சமீபத்தில் ஒருநாள் "சிமிட்டி ஓட்ட பிரிச்சிட்டு தளம் போடனும்யா பணம் தரேன் போட்டுக் குடு" நீதான் இன்ஜினியர். என்று என்னிடம் பெரியம்மா சொன்னது.
அக்காக்களில் படிப்பு யாருக்கும் ஏறவில்லை. எவ்வளவோ திட்டியும் என் க்ளாஸ்மெட்டாய் இருந்த அக்கா பத்தாவதை தாண்ட மறுத்துவிட்டது. பெரிய அக்காவின் திருமணம் அது எட்டாவதோ ஒன்பதாவதோ படித்த போது நடந்தது. முதல் இரண்டு அக்காக்களும் எங்கள் தாய்மாமன்களையே கட்டிக்கொண்டார்கள். மூன்றாவதான தங்கை மட்டும் வெளி ஆள்... அடுத்த தங்கைக்கும் வெளி ஆள்தான் பார்க்க வேண்டும்.
பெரியம்மா அடிக்கடி அலுத்துக்கொள்ளும்.
ஒருத்தியாவது படிச்சிருக்கலாம் என்று. படிப்பு ஏற வில்லையென அவர்கள் ஒதுங்கிய பிறகு தன்னோடு கூலிக்கு அழைத்து சென்று. ஒவ்வொரு அக்காவையும் சுயமாய் உழைத்து வாழும் மனுஷியாய் ஆக்கியது. இன்னும் கல்யாணமாகத தங்கையும் தனது சிறுவாட்டு காசில் பவுன் எடுத்திருக்கிறதாம்.
பெரியம்மாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அசுரத்தனமானது. நல்ல சேலை உடுத்தாது... நகைகள் இருக்காது.... உழைக்கின்ற வயதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்தது.
இப்போது மகாராணியாட்டம் லேசாய் உழைப்பை போட்டு சந்தோஷமாய் தனக்கான வாழ்வை வாழ்கிறது.
ஆம்பிள்ளைக்கு ஆம்பள பொம்பளைக்கு பொம்பள.
என் தாய்மாமன்கள் நெல் கதிர்(அரி) கற்றையை பிடித்து அடித்து நெல்லை உதிர்ப்பார்கள் . அது ஆம்பளைகளின் வேலை. ஆம்பிளைகளின் லாவகத்தன்மை பொருந்தியது.ஆனால் என் மாமன்களோடு பெரியம்மாவும் வரிசையில் நின்று நெல்லடிக்கும். மண்வெட்டி பிடித்தால் ஆண்பிடியை போல சீறி பாயும்....
என்னதான் ரத்த சொந்தம் என்றிருந்தாலும்... என் அம்மா அப்பா ஆயா தாய்மாமன்கள் என்று எல்லோருக்கும் பெரியம்மாவின் வளர்ச்சி மீது பொறாமை இருக்கிறது. அது இயற்கைதான். சிலநேரம் வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.
"எவ்வளவு வேணும்னாலும் பெரியம்மாக்கிட்ட கேளுயா... உன் அப்பன் என்ன சொன்னாலும் தயங்காத... போடானு சொல்லிட்டு என்கிட்ட வா... உன்ன வெளிநாட்டுக்கு அனுப்ப எத்தினி லட்சம் ஆனாலும் நான் போட்றேன்யா. போய் சம்பாரிச்சி எப்ப முடியுமோ அப்ப திருப்பி குடு.. வட்டியெல்லாம் வேணாம்....."
மிடுக்கான பாசையில் சொல்லும்.
இப்பதான் கல்யாணம் ஆன புதுப்பொண்ணாட்டம் செய்ன், தோடு, தொங்கட்டான், பட்டுச்சேலை உடுத்தி சிலுப்புகிறாயே ... என ரெண்டாவது அக்கா கருமியது...
"
"அடியே இத்தனை ஓட்டமும் ஒயிலும்(உழைப்பு) இதுக்கோசரந்தாண்டி... போடி லவடா..... இது என் காசு .... நான் போடுவேன்டி... இன்னும் பத்துக் கிலோ கூட வாங்கி போட்டுப்பேன்.
உங்களுக்கு என்ன செய்யனுமோ செஞ்சாச்சி... இனி உங்க புருஷனுங்க பாடு ... உங்க பாடு...
இன்னும் சினிமாவுக்கு போவேன், காசி ராமேஷ்வரம்னு டூருக்கு கூட போவேன்.
"
நான் எனக்கான வாழ்க்கைய வாழ்ந்து பாத்துட்டு சாகப்போறேன். என்ற தோரணையில் பெரியம்மா பதிலடி கொடுத்தது.
தன்னை ஒரு வசதி மிகுந்தவளாக காட்டிக்கொள்ள கொஞ்சமும் தயக்கமின்றி இப்போது கெத்தாய் வாழ்கிறது பெரியம்மா.
பெரியப்பா அவர் குடிக்கு வேலைக்கு போவார் குடிப்பார். பெரியம்மா தலையெடுத்து பத்து பதினைந்து வருடங்களிருக்கும்.அதன்பின் பெரியப்பாவின் தலையீடு பெரியம்மாவை அவ்வளவாய் பாதித்ததில்லை. சும்மா கத்துவார் அவ்வளவுதான்.
ஊரே பெரியம்மாவின் உழைப்பை பார்த்து கண்வைக்குமாம்.
பேச்சில் கறாரான ஒரு தெளிவு இருக்கும். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பது போல.
என் தாய்வழியில் முக்கிய காரணகர்த்தா பெரியம்மாதன்.
என் திருமணம் மாமன் மகளோடு என்று முடிவானால். அதை நிராகரிக்க பெரியம்மாவை எப்படி எதிர்கொள்வேன் என்ற அச்சம் அவ்வப்போது என்னுள் எட்டி பார்க்கும். சமீபத்தில் ஒரு நாள் சூசகமாய் என் நிராகரிப்பை சொல்லியும் விட்டேன். சரி காலம் வரட்டும் என பெரியம்மா காத்திருக்கிறது.
மாடு ஓட்டி சென்ற பெரியப்பாவை
மாமா மாமா .... மாமோய்
என்று கூவி அழைத்ததாம்.
பெரியப்பா திரும்பவே இல்லையென
ஏய்.... கருப்பா ....... கருப்பா(கருப்பன்)
என்று அழைத்தவுடன் திரும்பினாராம்.
அதை கவனித்த ஊர் பெரியவர் ஒருவர்
மெச்சி வியந்தாராம்.
ஒரு கிராமத்தில் 45 வயது பெண் தன் 60 வயது கணவனை பேர் சொல்லி பொதுவிடத்தில் கூவியழைப்பது எவ்வளவு சாத்தியம்? ?
பெரியம்மாவின் அந்த தைரியமும் நெஞ்சு தேட்டையும் தெனாவட்டும்தான் இங்கு சிலர் பேசும் பெண்ணியமும் புடலங்காயும்.
தனக்கான சுதந்திரத்தை தனக்கு கொடுத்த பரப்பிலேயே விஸ்தரிக்க தெரிந்த யட்சி என் பெரியம்மாள்.
உனக்கென்னடி உறுத்துது?
இது என் பணம்.... என் ஒயிலு...
உன் புருசன் சம்பாதிச்சதா இல்ல உன் அண்ணன் தம்பி சம்பாதிச்சதா?
என்று தன் மகளிடம் மருமகனின் முன்னாலேயே பேசும் கர்வம் பேச்சில் இருக்கிறது பெண்ணிய மசுரு.
இந்த வருட அன்னையர் தினம் என் பெரியம்மாவுக்கு சமர்ப்பணம்.
---------------
சென்ற வருடம் மிகக் குறுகிய வட்டம் என்பதால் எளிதில் டேக் செய்ய முடிந்தது.
இந்த வருடம் தயக்கமாக இருக்கிறது.
இருந்தும் இவர்களை வாழ்த்தாமல் செல்ல மனசு கேக்கவில்லை.
க்ருஷ்ணா அக்கா, சசி அம்மா, சக்தி அம்மா, ஷோபனா அக்கா, மோகனா அம்மா, கலைவானி அக்கா, இந்துமா ,திருமதி அனு க்கா,தாயளினி அக்கா, உமா செந்தில்,சுப்ரியா, வித்யா அக்கா, யாமினி சத்தியா க்கா, நங்கை மதி அம்மா, ரம்யா அக்கா,
சில மாதங்களாய் என்னை கொண்டாடி வரும் ப்ரிய தர்ஷினி அக்கா, ஜெய ஷீலி ம்மா,, ரதி ராஜ், உதய லக்ஷ்மி அம்மா, ஸ்ரீதேவி அம்மா, சுனேகா லதா, விஜி செல்வ ரத்னம், மீரா டோல் ஆச்சி.
புக்கு போடு என்று மிரட்டல் விடுக்கிற டார்லிங்க் மோகனா செல்வராஜ்.
அப்பரம் க்ரேஸி இம்மானுவேல், மணிமேகலை, புதிய அகராதி, அமிர்தா ம்மா, புஸ்பலதா ஸ்ரீ, தமிழ்ச்செல்வி பாலமுருகன் . இரண்டு நாட்களுக்கு முன்என் டைம்லைனை நோண்டி தூர்வாறிய யாழினி நிலா.. ஸ்ரீமதி மேம்...
தங்க துரை அரசி,.......
சிலரை குறிப்பிடுவோமென தொடங்கிய பட்டியல் இப்படி நீண்டு போய்.....
என் குறும்புத்தனங்களை சகஜமாக கடந்து போகும் உங்களை உண்மையாகவே பாராட்டியே ஆக வேண்டும் அதனால்தான்.
மற்றும் உள்டப்பியிலும் கமெண்டுகளிலும் என்னுடன் அளவளாவும் தாயுள்ளம் கொண்ட தோழிகள் காதலிகள் என அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...!

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.