நம்முடைய ஆண்டுக்கணக்கில் அறுபது ஆண்டுகள் கணக்கில் உள்ளன என்பதை அறிவோம். 
ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள்
பிடிக்கின்றது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நக்ஷத்திரத்தில், எந்த
திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்குப்
பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒரு
பெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து
வருகிறது. இது சமூகத்தில் எந்தப் பிரிவினராய் இருந்தாலும் பொருந்தும். சிலர்
வீடுகளிலேயும், சிலர் சத்திரங்கள் வாடகைக்கு எடுத்துப் பெரிய அளவிலேயும் செய்து
கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அனைவரும் சென்று அறுபதாம் கல்யாணம்
நடத்திக்கொள்ளும் இடம் பழைய தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ
தூரத்தில் உள்ள திருக்கடையூர் என்னும் ஸ்தலம் தான். வேறு இடங்களில் நடத்த
நேர்ந்தாலும் இந்த ஊர் ஸ்வாமியையும், அம்மனையும் நினைத்தே செய்யவேண்டும்
என்பதும் மரபு.
இது அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று. அட்ட வீரட்டானம் என்பது சிவனின் எட்டு
வீரத் திருவிளையாடல்களைக் குறிக்கும் இடங்கள் கோயில்களாக அமைந்தவையைக்
குறிக்கும். இந்தத் திருக்கடையூர்
மட்டுமில்லாது, தஞ்சை மாவட்டத்திலேயே திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு,
திருவைகாவூர் போன்ற தலங்களும் எம பயத்தை நீக்க வல்ல தலங்கள் ஆகும். என்றாலும்
திருக்கடையூர் சிறப்புப் பெற்றது மார்க்கண்டேயனால். இந்த ஊரின் தல வரலாறும்,
புராண வரலாறும் பின் வருமாறு கூறப் படுகின்றது.
பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவனை வழிபட, சிவனால் அளிக்கப் பட்ட
வில்வ விதையைப் பெற்றுக் கொள்கின்றார். அந்த வில்வ விதையை நடப்பட்ட ஒரு
முஹூர்த்த காலத்திற்குள் முளைவிடவேண்டும் எனவும் சிவன் சொல்ல, முளைவிட்ட
இடத்தில் தன்னை வழிபடவேண்டும் என்றும் ஆணை இடுகின்றார். பிரம்மாவும் ஒவ்வொரு
இடமாய்ச் சோதித்துப் பார்த்துத் திருக்கடையூரில் முளைவிடக் கண்டார். இந்த ஊரில்
வில்வமரங்கள் நிறைந்திருந்ததாகவும், அதனால் இது வில்வவனம் என்ற பெயர்
பெற்றதாகவும் கூறப் படுகின்றது.
மூலஸ்தானத்தில் குடி இருக்கும் லிங்க ஸ்வரூப மூர்த்திக்கு அமிர்த கடேஸ்வரர்
எனப் பெயர். இந்தப் பெயர் வந்ததின் பின்னால் சொல்லப்படும் புராணக் கதை
என்னவெனில், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துக் கொண்டு சென்ற தேவர்கள் அதை
அசுரர்களிடமிருந்து ஒளித்து வைக்க எண்ணியும், நீராட வேண்டி இருந்ததாலும்,
இந்தத் தலத்தில் இறக்கி வைக்கின்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க
முயன்றபோது எடுக்கவராமல் குடம் லிங்கமாய் மாறி நிலைத்து நிற்க லிங்கேஸ்வரர்
அன்று முதல் அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் பெறுகின்றார். இந்த ஊர் அன்னையின்
பெயர் அபிராமி. அபிராமி அந்தாதி இவள் பெயரிலேயே அபிராமி பட்டர் பாடினார். இவர்
வீடு இருந்த இடம் இன்னமும் பாதுகாக்கப் படுகின்றது. இதைத் தவிரவும் இந்த
ஊருக்குப் பல சிறப்புக்கள் உண்டு. காலனைக் காலால் உதைத்த இடம் இது தான்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.