*இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (25) ஸால்மன் மீன்கள்*
*இயற்கை**யின் எழில் நமக்களிக்கும் பல விந்தைகளில் ஒன்று ஆங்கிலத்தில் **‘**
ஸால்மன்**’** (Salmon) **என்றழைக்கப் படும் மீன்கள்**.*
*இந்த** மீன்கள் வாழ்வது உப்பு நீர் கொண்ட அட்லா**ண்**டிக் மற்றும் பசிபிக்
சமுத்திரங்களில்**.** **ஆனால் இவை பிறப்பதோ வட அமெரிக்காவில் உள்ள கொலம்பியா *
*நதியிலும் அதன் உப நதிகளிலும் மற்றும் அயர்லாந்து**, **இங்கிலாந்து**, **
ஸ்காட்லாந்து** ஆகிய இடங்களில் உள்ள நதிகளிலும் ஆகும.** *
*மீன்** குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்த பின் முழு வளர்ச்சி அடய சுமார்
ஒன்று முதல் மூன்றாண்டுகள் எடுத்துக் கொள்கின்றன**. **பின்னர் அவை கடலை
நோக்கித் தன் பிரயாணத்தைத் தொடங்கும்**. **அவ்வாறு பயணிக்கும் போது அவை சில
காலம் சற்றே உப்பு நீராலான இடங்களில் **(in brackish waters) **வசிக்கும்**. *
*அந்த நாட்களில் அவற்றின் உடலில் நல்ல தண்ணீரில் பிறந்த அவை உப்பு நீரில்
வாழ்வதற்கான மாற்றங்கள் ஏற்படுகின்றன**.** **கடலை அடைந்த ஸால்மன் மீன்க**ள்
சுமார் நன்கு ஐந்து ஆண்டுகள் பல ஆயிரம் மைல்கள் **கடலில் சுற்றித் தி**ரி**
கின்றன**.** *
*கடல் வாழ்க்கை முடிந்ததும்* *(**அலுத்ததும்**???)* *ஸால்மன் மீன் தான் பிறந்த
இடத்திற்கே திரும்புகிறது**.** **திரும்பியதும் ஆற்றில் தனது வால் செதிள்களால்
சிறு பள்ளம் தோண்டி பெண் மீன் அதில் சுமார் ஐயாயிரம் முட்டைகளை இடும்**. **கூடவே
நீந்திக் கொண்டு இருக்கும் ஆண் மீன் தனது விந்துக்களை அந்த முட்டைகளின் மீது
தெளிக்கும்**. **இது நடந்த பின் பெண் மீன் முட்டைகளை சிறு கற்களைக் கொண்டு
மூடிவிடும்**. **முட்டை இடும் வேலை நன்றே முடிந்த பின் சில நாட்களுள் தாயும்**தந்
**தை**யும் இறந்து விடும்**.*
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.