> ஐம்பூதமும் உன் தன் கட்டில் இயங்குமோ?
> அறிதலும் உணர்தலும் உன் தன் வசமோ?
> ஓடி ஒடி தேடும் என்னவன் நீயோ!
>
> என்னில் இயங்கும் நீ என்னை அறிவிப்பாயோ?
> என்னில் இயங்கும் ஆற்றல் எதுவென்று உரைப்பாயோ?
> என்தன் செயலும் சொல்லும் நீயோ!
> என்னை காண்பிப்பவனும் நீயோ!
> பண்பும் பணிவும் உன் தன் தெளிவோ?
> பற்றும் பாசமும் உன் தன் பிடியோ?
> இயக்கமும் அசைவும் நீயோ!
> நான் தேடும் என்னவன் நீயோ!
>
> துடிப்பும் துணிவும் உன் தன் வீரமோ?
> மகிழ்வும் துக்கமும் உன் தன் அலையோ?
> கோபமும் அமைதியும் உன் தன் வெளிப்பாடோ!
> வேகமும் விவேகமும் உன் தன் திரணோ?
>
> என்னுளே இவ்வளவும் நீயோ!
> இன்னும் சொல்லாமல் எத்தனையோ?
>
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.