//
*எங்க அக்கா சொல்லுவாங்க 'வீதியில் போகும் போது பெயர் சொல்லி கதைச்சுக்கொண்டு
போகக்கூடாது என்று". * //
அட சும்மா பேரை சொல்லக்கூட கூடாதான்னு தோணும்.
அப்படி பழகறதே நல்லது. பலருக்கும் வீட்டிலே கூப்பிடர பேர் ஒண்ணும் வெளியே
புழங்கற பேர் ஒண்ணும் இருக்கும். அதுவும் நல்லது.
இதை கற்பனை செஞ்சு பாருங்க!
ஒரு திருவிழாவுக்கு போறீங்க. அட, சாமி பாக்கத்தானே போறோம், ஏதேனும் பகவான் பேரை
சொல்லிகிட்டு இருக்கலாமே? ஆனா அப்படி நம்ம மனசிலே தோணாது. ஏதாவது விஷயம்
பேசிக்கிட்டுதான் இருப்போம். சிலர் இதை கவனிக்கிராங்க. ஓஹோ! இந்த அம்மா பேரு
இதுவா! எவ்வளோ நகை தேறும்? ரொக்கம்? அவங்க புதுசா ஒண்ணும் திட்டம் போட
தேவையில்லை. பழசுதான். நேரத்துக்கு தகுந்தப்போல கொஞ்சம் நடைமுறை மாறும்.
கோவில் நடை திறக்கிறாங்க, கேட் திறக்கறாங்க ... ஏதோ ஒண்ணு. கூட்டம் முண்டி
அடிச்சுகிட்டு முன்னே போகும். ரெண்டு பேரா போன நாமா பிரியலேனாலும் அதுக்காக
இருக்கிற நபர்- பெண்ணோ ஆணோ- நம்ம நடுவிலே வேணும்ன்னு பூந்து புறப்பட்டு
கலைச்சுடுவார். கூட்டமும் நம்மை தள்ளிக்கொண்டு போயிடும். ஒரு வழியா சுதாரிச்சு,
எங்கேப்பா நம்ம கூட வந்த அம்மா....அப்ப ஒத்தர் கூட்டத்தை பிளந்துகிட்டு
வருவார். "நீங்கதானே %%%%%? உங்க அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க."
"ஐயோ! கடவுளே!"
"பயப்படாதீங்க. மயக்கம் தெளிஞ்சுடுத்து. என் வண்டியிலேதான் உக்கார வெச்சு
இருக்கேன். அவங்கதான் உங்க பேரும் அடையாளமும் சொல்லி அழைச்சு வரச்சொன்னங்க!
இப்படி வாங்க"....தர தரன்னு இழுத்து போவார். நாமும் மறுக்காம கூடவே போறதாலே
கூட்டமும் ஒன்னும் சொல்லாது. இழுத்துப்போய் தெரு முனை திரும்பியதும்.....
(திகில் கதை எழுத்தாளர்கள் மீதியை நிரப்பிக்கலாம். ஏதாவது இழப்பது நிச்சயம்.)
இதுவே வீட்டிலே தங்கம்ன்னு கூப்பிடறாங்கன்னு வெச்சுக்கலாம். அடி தங்கம் ன்னு
பேசிகிட்டு போய் பிரிஞ்சு ஆசாமி வந்து நீங்கதானே தங்கம் ன்னு கேட்டா இல்லை நான்
வெள்ளி ச்சீ, வள்ளி ன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம். (வீட்டிலே கூப்பிடற பேரை
யாரும் சொல்லி அனுப்ப மாட்டாங்கதானே?!)
கணவன் மனைவியா போறப்ப "அடியே" ன்னு கூப்பிட்டு பேசினா இந்த பிரச்சினை வராது;
வீட்டுக்கு போனதும் வேற பிரச்சினைதான் வரும்! (அப்படி வந்தா அடியேன் அப்படின்னு
சொன்னேன் ன்னு சொல்லி தப்பிக்க பாருங்க தங்க மணிகளே!)
அடுத்து சொல்ல நினைக்கிறது
பிஷிங்.
திடீர்ன்னு ஒரு பாங்கிலேந்து ஒரு மெய்ல் வரும். ம்ம்ம் சும்ம ஒரு பேச்சுக்கு
ஐசிஐசிஐ ன்னு வெசுக்கலாம். எங்க டேடா பேஸை அப்டேட் பண்ணறோம். உங்க கணக்கை இங்கே
போய் சரி பாத்துக்கோங்கன்னு வரும். அடடா, என்ன கரிசனம்ன்னு நினைச்சுகிட்டு
அவங்க தர லிங்கை சொடுக்கி போய் பாத்தா நமக்கு பழக்கமான மாதிரி ஒரு பக்கத்திலே
உங்க பேர் பாஸ்வோர்ட் அப்பிடின்னு எல்லாம் வரும். சரின்னு நம்ம கணக்கு நம்பர்
க்ரெடிட் கார்ட் நம்பர் நம்ம பேர் பாஸ்வேர்ட் ன்னு கேட்டதெல்லாம் கர்ண மஹாராஜன்
மாதிரி கொடுத்ததும். ரொம்ப நன்னி உங்க பேர் கணக்கு எண் எல்லாம் சரியாவே
இருக்குன்னு செய்தி வரும். அப்பாடான்னு நாமும் அடுத்த வேலையை பாப்போம்.
அடுத்த நாள் பாத்தா நம்ம கணக்கிலேந்து எல்லா பணமும் போயிடும்.
வங்கியை கூப்பிட்டு கேட்டா நீங்கதான் எல்லா பணத்தையும் எடுத்துட்டீங்கன்னு
சொல்லும். அதுக்கு ஆதாரமும் காட்ட முடியும்.
என்ன ஆச்சு?
நீங்க சொடுக்கின தொடுப்பு உங்களை வங்கி தளத்துக்கு அழைச்சு போகலை. ஒரு பொய்யான
தளத்துக்கு போச்சு. [கொஞ்சம் விழிப்போட மேலே முகவரி பட்டியிலே என்ன அட்ரஸ்
சொல்லுதுன்னு பாத்து இருந்தா அப்பவே கண்டு பிடிச்சு இருக்கலாம். நாம் சாதாரணமா
அதை பாக்க மாட்டோம். வலைப்பக்கத்தை தான் பாப்போம். அதிலேதான் என்ன வேணுமானாலும்
போடலாமே!]
அங்கே நீங்க கொடுத்த விவரங்களை வெச்சு கொண்டு உங்க கணக்கை தீத்துட்டாங்க!
இதே போல "உங்க கணக்கிலே பிரச்சினை. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க"ன்னு கூட
செய்தி வரலாம். செஞ்சா இதே கதைதான். தகவல் எல்லாத்தையும் வாங்கிண்டு நமக்கு
இப்படி அசடா இருக்கிறதுக்கு ஒரு நன்னியும் சொல்லிடுவாங்க.
அட ராபணா! பின்னே என்ன செய்யறது?
முதல்லே உங்க வங்கி அந்த மாதிரி அஞ்சல் அனுப்பாது. ஏதாவது வேணும்ன்னா நேரடியா
வங்கிக்கு வரச்சொல்லுவாங்க.
இரண்டாவது அப்படி ஒரு வேளை கணக்கை செக் பண்ணனும்னா வங்கி எப்பவும் கொடுக்கிற
வலை முகவரியிலே போய் பாருங்க. அது "பாதுகாப்பான " ட்ரான்சாக்ஷன்.
வலையிலே உங்க கணக்கு நம்பர் கொடுக்கிறதா இருந்தா ஜாக்கிரதையா இருங்க. க்ரெடிட்
கார்ட் எண், பாஸ்வெர்டை எப்பவுமே கொடுக்காதீங்க!
பாரா உஷார்!

ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.