அம்ரிதா
பண்டைய காலத்தில், யமுனா ஆற்றங்கரையின் அருகே 'அம்ரிதா' என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். மற்றவர்களைப் போலவே, இவனுக்கும் மரணம் பற்றிய பயம் இருந்தது. இந்த மரணத்தில் இருந்து தப்பிப்பதற்கு, அம்ரிதா எமதர்மராஜனை வேண்டி கடுமையாக தவம் மேற்கொண்டான். இதனால் மனம் குளிர்ந்த இறப்பு கடவுளான எமதர்மராஜன், அம்ரிதாவின் முன் தோன்றினார்.
எமனின் கூற்று...
அம்ரிதாவின் முன் தோன்றிய எமன் அவனிடம், "பொதுவாக நான் இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது இறந்தவர்கள் முன் தான் தோன்றுவேன். முதல் முறையாக உனது தவத்தால் உயிருடன் உள்ள ஒரு மனிதனின் முன் தோன்றியுள்ளேன்" என்றார்.
அம்ரிதா கூற்று...
அதற்கு பதிலளித்த அம்ரிதா, "எனக்கு ஒரு வரம் வேண்டும். நீங்கள் எனக்கு மரணம் நிகழாது என வரம் தரமுடியாவிட்டால், என்னை மரணம் நெருங்கும் முன் குறைந்தது எனக்கு ஒரு கடிதத்தை அனுப்புங்கள். இதனால் நான் என் குடும்பத்தை சரியான நிலையில் வைத்து, அடுத்த ஜென்மம் எடுப்பதற்காக கடவுளைத் தொழுது என்னை நானே தயார் செய்து கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டான்.
எமனின் பதில்...
அம்ரிதா கேட்ட வரத்திற்கு எமதர்மராஜனும் ஒப்புக் கொண்டு, உன்னை மரணம் நெருங்கும் முன் நான் சில கடிதங்களை அனுப்புகிறேன், நீ தயாராகிக் கொள் என்றார்.
சில வருடங்கள் கழித்து...
சில வருடங்களுக்குப் பின், அம்ரிதா மரணத்தின் மீதுள்ள பயத்தை மறந்துவிட்டு, எமனிடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு, அனைத்து வகையான பாவ செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இப்படியே நாட்கள் செல்ல, அம்ரிதாவிற்கு வயதாகிவிட்டது. ஒருநாள் அவனது தலைமுடியும் நரைத்துவிட்டது. அம்ரிதா இன்னும் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை, ஆகவே நாம் இன்னும் பல நாட்கள் உயிருடன் தான் இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
மேலும் சில வருடங்களுக்கு பின்...
இன்னும் சில வருடங்கள் கழித்து, அம்ரிதா தன் பெரும்பாலான பற்களை இழந்தான். அப்போது பலரும் அவனிடம் மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்தனர். ஆனால், அதைப் பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல், இன்னும் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அடுத்து..
சில நாட்கள் கழித்து, அம்ரிதாவால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனது. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல், பாவ செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் நடக்க முடியாமல் போனது மற்றும் உடல் முடங்கி போனது. அனைவருமே அம்ரிதா இறக்கப் போகிறான் என்று நினைத்தனர். ஆனால் அப்போதும், அம்ரிதா தனக்கு மரணம் நெருங்க காலம் இருப்பதாக எண்ணி, சந்தோஷமாகவே இருந்தான்.
எமனின் வருகை
ஒருநாள் எமன் அம்ரிதாவை அழித்துச் செல்ல வந்தார். அப்போது அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், மரணம் என்னை நெருங்கும் முன் கடிதம் அனுப்புவேன் என்று எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினான்.
எமனின் கூற்று...
அப்போது எமன் அம்ரிதாவிடம், "நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவ செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்துவிட்டாய். பின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய்? நான் இதுவரை உனக்கு 4 கடிதங்களை அனுப்பினேன். அவை அனைத்தையும் நீ நிராகரித்துவிட்டாய்" என்றார். "நான்கு கடிதங்களா? ஆனால் என்னிடம் ஒன்று கூட வந்து சேரவில்லை" என்று அம்ரிதா கூறினான்.
எமனின் விளக்கம்
பின் எமதர்மராஜன் அந்த நான்கு கடிதங்கள் எப்படி அவனை அடைந்தது என்று கூறினார். மேலும் கடிதம் என்பது அவனது உடல் என்றும், மாற்றங்கள் தான் பேனா மை என்றும், காலம் தான் தபால்காரர் என்றும் கூறினார். எமனின் கூற்றுப்படி, அம்ரிதாவை மரணம் நெருங்கும் முன் 4 மாற்றங்கள் அம்ரிதாவின் உடலினுள் ஏற்பட்டுள்ளது. அவை:
* தலைமுடி நரைத்தது, எமன் அனுப்பிய முதல் கடிதம்.
* பற்கள் முழுவதையும் இழந்தது, எமன் அனுப்பிய 2 ஆவது கடிதம்.
* மூன்றாவது கடிதம், அம்ரிதா எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனது.
* நான்காவது கடிதம், உடல் முடங்கி போனது.
விளக்கமளித்துவிட்டு, அம்ரிதாவை எமலோகத்திற்கு எமதர்மராஜன் அழைத்து சென்று விட்டார்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.