காலையில வெல்லன எந்திரிக்கலனு அம்மா கரிச்சுகொட்ட...
நெட்டி முறிச்சு நீட்டி முனங்கி நான் எந்திரிச்சு...
பரபரனு கைய தேச்சு உள்ளங்கைய பாத்தேன்...
எம்மாடி நாளிக்கு போற எடத்துல இப்படி தூங்குனா
உங்கப்பனல வச பாடுவாவனு அய்யா சொன்னாவ...
இருக்குற வர எம்மவ நிம்மதியா தூங்கட்டும்னு அப்பா சொல்ல...
நாடிய தோள்பட்டையில இடுச்சுக்கிட்டு
பொல்லாத மவ..ஊர்ல இல்லாத புள்ளைய பெத்திருக்காருனு
அம்மா கொறைபட்டுக்கிட்டா...
இத்தனையும் கேட்டும் கேக்காத மாறி புறத்தால போய் மூஞ்சி கழுவியாந்தேன்...
ஏட்டி அவளுக்கு காபி ஆத்தி குடுடினு ஆச்சி அம்மாவ அதட்ட...
நொட்டுனு காபி டம்ளர முன்னாடி வச்சிட்டு சரசரனு சடைய கழட்டி
எண்ண வைக்குறேங்குற பேர்ல,
இருந்த ஆத்திரத்தலாம் சேத்து
நங்குனு மண்டைல ஒரு கொட்டு வைச்சா ...
வாய பிதுக்கி
கண்ணீர வர வச்சு
கத்தி அழ வாயெடுக்குறப்போ...
ஆத்தி எம்பேத்தியால கொட்டு வைச்சுட்டாலேனு ஆச்சி ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிருச்சு....
அய்யாவும் அப்பாவும் ஓடி வந்தவக
ஏட்டி!! நீ பெத்த புள்ளனா
கொட்ட மனசு வந்திருக்குமானு மொறைக்க...
கண்ணுல தண்ணியோட,
எம்புள்ளைய நான் அடிக்காம பொறவு யாரு அடிப்பாகனு
அம்மா அழவே ஆரம்பிச்சுடா...
அன்னிக்கு என்ன குப்பையில
தொப்புள் கொடியோட வீசி எறிஞ்சவளுக்கு
மனசார நன்றி சொல்லிகிட்டு,
தலைய தேச்சுவிட்டுகிட்டே
ஏம்மா சீகைகாய்லாம் தேய்க்க முடியாது,
வேணும்னா சாம்பு போட்டு தலையலசுறேனு சொல்ல,
மறுக்கா ஒருக்க நங்குனு கொட்டு வைச்சுட்டா...
அடுத்தசென்மத்துல இவுக எனக்கு பொறக்கனும்னு,
மாரியாத்தாகிட்ட மனசார வேண்டிகிட்டு, ஓடிபோய் அவள இறுக்க கட்டிபிடுச்சுகிட்டேன்...
(இப்டி ஒரு தமிழ் கேட்டு எவளோ நாள் ஆகுது)

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.