மனிதராகப் பிறந்தவர் எல்லாம்
மனிதராக வாழ்வதில்லை
இயற்கையோடு இணைந்திருப்பவர் எல்லாம்
அதனோடு ஒன்றி உவகை கொள்வதில்லை
போதி மரத்தின்கீழ் கீழ் இருப்பவர் எல்லாம் புத்தரும் இல்லை
தத்துவம் பேசுபவர் எல்லாம் ஞானியும் இல்லை
யாரொருவர் தன்னை உணர்ந்து,
தன சுயத்தை உணர்ந்து
"நானை" உதிர்த்து
தேகம் விடுத்தது
மனம் கடந்து
உயிரில் ஒன்றி
உணர்வில் திளைத்து
இறையோடு உறைந்து இருக்கிறார்களோ
அவரே மனிதர்
இதனோடு உறைந்து உவகையுடன் எந்நாளும் வாழ்த் தெரிந்தவர்களே மா மனிதர்
தனக்கு உண்டான அனுபவத்தை வார்த்தையால் வகுக்காமல் உணர்வாலே உணர வைக்கிறாரோ அவரே மாகான்
உணர வைக்கிறோம் என்ற உணர்வையும் கடந்து நிற்கும் நிலையில் இருப்பவர் ஞானி
உருவம் கடந்து அரூபத்தில் என்றும் நிலை கொண்டிருப்பவர் தெய்வம்
இதில் நாம் எந்த வகையில் இருக்கிறோம் என்று தன்னைத்தானே அலசுபவர் இறைப் பயணத்தின் வழிகாட்டி
தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் அர்த்தமில்லை
தன்னிடம் இருக்கும் தெய்வீகத்தை வியாபாரம் செய்வது ஞாயமும் இல்லை
உள்ளதை உணர்வதற்கு விளம்பர ஊடகங்கள் தேவை இல்லை
தன்னில் நிலைகொண்டால் தானாய் நடக்கும் தன்மாற்றம்
உள்ளிருப்பின் உவகையில்,
உள் முக பயணம்
உணர்ந்து தெளிவோம்
உன்னத வாழ்க்கை வாழ்வோம்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.