வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, ஊர் மக்கள் அவரவர் பங்காக மணலை கொட்டி உடையும் கரையை அடைக்கின்றனர், மாநகர் மதுரையில் பிடடு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை, அவர் தினமும் வழிபடும் சொக்கநாத பெருமானை நினைந்து வருந்தினார்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவன் தானே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்கிறது திருவிளையாடல் புராணம்.
வந்திக் கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூத கணங்களில் ஒன்றை அனுப்பினால் போதுமே அப்பெருமானே கூலிஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதியை சிந்திப்போம்,
திருவிளையாடற் புராணத்தை அருளி பரஞ்சோதி முனிவர் "திங்கள் ஆயிரம் தொழுதாள்" என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்
பிறை பார்த்து வணங்குவது அவ்வளவு மேலான சிவபுண்ணியம்ஆகும், பிறை சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையைத் தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா தரிசிக்கின்றோம், சம்பந்த பெருமானாரும் "மாசரு திங்கள் கங்கை முடிமேல் அணிந்த " என்கிறார், எனவே பிறையைக்காண்டால் அய்யன் சிவனைக் கண்டதற்கு ஒப்பல்லவா?.
அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம், பிறையைத் தொடர்ந்து வணங்குவதால் இன்று முதல்சைவப் பெருமக்கள் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக.
பிறைபார்க்கும் பலன்°
மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்
நான்கு பிறை தொடர்நது தரிசித்தால் நம் வினை நாசமாகும்
ஐந்து பிறை தொடர்நது தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்
ஆறு பிறை தொடர்நது தரிசித்தால் திருமணத் தடை நீங்கும்
ஏழு பிறை தொடர்நது தரிசித்தால் ஏறப்ட்ட கடன் தீரும்
பத்து பிறை தொடர்நது தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்
வருடம் பிறை தொடர்நது தரிசித்தால் வம்ச விருத்தியாகும்
நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் / முக்தி தரும்

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.