பாரதப்போர் ஒருவழியாக முடிந்தது. தர்மர் சக்கரவர்த்தியாக முடி சூடியபின் குருஷேத்திரத்தில்,அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மரிடம் ஆசி வாங்க தனது தம்பிகள் மற்றும் திரௌபதியோடு சென்றார்.பீஷ்மரும் தர்மருக்கு தர்மோபதேசம் செய்து கொண்டிருந்த போது,இடையில் திடீரென்று திரௌபதி
' க்ளுக்' என்று சிரித்து விட்டாள்.
ஏனம்மா சிரித்தாய் என பீஷ்மர் கேட்க,தலையைத் தாழ்த்திக் கொண்ட திரௌபதி,என்னை மன்னிக்கவேண்டும் பிதாமகரே,ஏதோ என்னையறியாமல் நகைத்து,தவறு செய்துவிட்டேன் என கை கூப்பினாள்.
திருப்தியடையாத பீஷ்மர், குழந்தாய் பெரியவர்கள் கூடிய இவ்விடத்தில் எந்த குலப்பெண்மணியும் இப்படி சிரிக்க மாட்டார்கள், நீயோ உத்தமி,சிறந்த குணவதி காரணமின்றி நீ சிரித்திருக்க மாட்டாய்,எதுவாய் இருந்தாலும் தயங்காமல் சொல் என வற்புறுத்தினார்.
கைகளைக் கூப்பியவாறு கண்ணீர் திரையிட திரௌபதி, சுவாமி தங்கள் கட்டளையை மீறுவதற்கில்லை. இன்று இவ்வளவு தர்மம் பேசும் தாங்கள் அன்று,கௌரவர் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கப்படுத்தும் போது வாய்மூடி மௌனம் காத்தீர்களே அன்று இந்த ஞானமெல்லாம் எங்கே போய்விட்டது என எண்ணிப்பார்த்தேன் சிரித்துவிட்டேன்.செய்த பிழையை மன்னியுங்கள் என்றாள்.
சிறிதுநேரம் மௌனம் காத்த பீஷ்மர் பேசலானார்
குழந்தாய் உன் கேள்வி நியாயமானது.நீ சிரித்ததில் தவறேதுமில்லை. அன்று துஷ்டன் துரியோதன்னின்
உணவைச் சாப்பிட்டு வந்தேன். அதனால் என் அறிவு மழுங்கியே இருந்தது . தீயவர்களின் உணவைச் சாப்பிட்டால் சாப்பிடுபவரின் மனமும் உடலும் கெட்டுப்போய்விடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்போது அர்ஜூனன் போரில் என்மீது எய்த அம்புகளால் என் உடலிலிருந்த எல்லா ரத்தமும் வெளியேறிவிட்டது. அந்த உணவைச் சாப்பிட்டதால் உண்டான ரத்தம் ஒரு சொட்டு விடாமல் உடலைவிட்டு வெளியேறியதனால் என் புத்தி தெளிந்து தர்மத்தின்
தத்துவங்களைச் சரியாக எடுத்துச் சொல்லமுடிகிறது,என்றார்.
தீயவர்களின் உணவு எவ்வளவு தீங்கானது !

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.