அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் ! காரணம்... ?
அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது!
அதை அவரிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல்,
'' ஐயா ... எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ... உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் ! நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !'' என்றார்;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி, தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ...... சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே, சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவரின் கண்களில்...
அந்த பாழடைந்த சிவன் கோயில் தென்பட...... ஓடோடிச்சென்ற அவர், கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினார்; ..
மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினார்...
'தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன்' என்று மானசீகமாக நினைத்துக் கொண்டதோடு நில்லாது .....
அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....
கோபுரம் ...
ராஜகோபுரம் ...
உட்பிராகாரங்கள் மற்றும் .. மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து .... வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ..........
இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவரின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில்...
அவரை கொத்த தயாராக இருந்தது !! சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவர் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் , மண்டபம் ' கிடுகிடுவென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது !
இப்போது மழையும் நின்று விட்டிருக்க .... விவசாயியும் வீடு போய் சேர்ந்தார்:
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவரை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறி விட்டோமோ ' என்று
பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் விவசாயி ஜாதகத்தை அவர் ஆராய ..
அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில் அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
'இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும்'
என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது !
' ஒரு ஏழைக்கு , சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவரிம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க அவரோ, வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தார் !!.
கேட்டுக் கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!!!!!!!
இறைப்பணி பற்றிய கற்பனை கூட விதியை வெல்லும்.
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.