பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தர்மனுக்கு கர்வம் தலைதூக்கியது - உலகத்திலேயே அதிக அளவில் தர்மம் செய்தது தான்தான் என்பதினால். தன் அளவுக்கு வேறு யாரும் தர்மம் செய்திருக்க இயலாது என்பதால் ஏற்பட்ட இறுமாப்பினால் விளைந்தது கர்வம். இதை அறிந்து அதிருப்தியுற்ற கண்ணன் கவலையும் கொண்டான்.
ஒரு நாள் தர்மனை அழைத்துக்கொண்டு மலை நாட்டுக்குச் சென்றான் கண்ணன். வழியில் தாக சாந்திக்காக ஒரு வீட்டை அணுகினர். அந்த வீட்டுக்காரி தங்கச் சொம்பில் நீரைக் கொடுத்தாள். வியந்த தர்மன் நீரருந்திய பின் சொம்பைத் திரும்பக் கொடுத்தான். அதை வாங்கிய உடனே தூர வீசி எறிந்தாள் அவள்.
திகைப்பும் வியப்புமாக அவளைப் பார்த்த தர்மன், அற்கான காரணத்தைக் கேட்டான். ஒரு முறை பயன்படுத்திய எந்தப் பொருளையும் தாங்கள் மீண்டும் பயன்படுத்துவதில்லை அதற்கு அவசியமும் இல்லை என்றாள் அலட்சியமாக. அந்த நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்த தர்மன் அங்கிருந்து கண்ணனுடன் அகன்றான்.
அந்த நாட்டின் மன்னன் மகாபலியின் அரண்மனையை இருவரும் அடைந்தனர். அகம் மகிழ கண்ணனை வரவேற்று உபசரித்தான் மகாபலி. தன்னுடன் வந்திருப்பது, உலகிலேயே அதிக அளவில் தர்மம் செய்த தர்மன் எனக் கண்ணன் அறிமுகம் செய்ததை மகாபலி ரசிக்கவோ பொருட்படுத்தவோ அவனை நோக்கவோ இல்லை. மாறாகக்
கண்ணனைப் பார்த்துக் கூறினான்.
தனது நாட்டில் உழைப்புக்குப் பஞ்சமில்லை, உழைப்பதற்கு அஞ்சுவாருமில்லை. உழைப்பினால் உயர்வு கண்டவர்கள் மக்கள் அனைவரும். அதனால் எல்லோரிடமும் செல்வம் குவிந்துள்ளது. ஏற்றத் தாழ்வு ஏதுமின்றி எல்லோரும் சமமாகக் கருதப்படுகிறா்கள். பிச்சை எடுப்பதும் தர்மம் கொடுப்பதும் இங்கு கிடையாது. எனவே யாரும் தர்மம் பெற வேண்டிய அவசியம் ஏதும் இங்கு இல்லை.
உம்முடன் வந்தவர் நாட்டில் ஏழைகள் அதிகம் போலும். அதனால்தான் தானம் கேட்டு இவரை மக்கள் அணுகுகிறார்கள் போலும். இவ்வளவு ஏழைகளைத் தன் நாட்டில் வைத்திருக்கும் இவரது முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது என்றான்.
இதைக் கேட்டகண்ணன் அர்த்தபுஷ்டியுடன் தர்மனைப் பார்க்க, அவனோ விக்கித்துப் போனதுடன் வெட்கித் தலையும் குனிந்தான்.
தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளைப் பெருகச் செய்யும் எந்தவொரு நாடும் தலைகுனியத்தான் வேண்டும்!

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.