அம்முவும் நானும் அடிக்கடி விளையாடும் சுவாரஸ்யமான விளையாட்டு ஒன்று உண்டு. “அம்மா - பொண்ணு விளையாட்டு” - இதில் அவள் தான் அம்மா. நான் தான் அமுதினி. இந்த விளையாட்டைப் பற்றி எழுதுகையில் எனக்கோ, வாசிக்கையில் உங்களுக்கோ திடீரென யார் அம்மா, யார் பொண்ணு என்ற குழப்பம் தோன்றலாம். ஆனால், அவள் துல்லியமாக, தெளிவாக விளையாடுவாள்.
விளையாட்டின் போது என்னை, “செல்லம், தங்கம், குட்டி என்றும் வாடி, போடி..” என்றும் பேசுவாள். நான் மறந்தும் கூட ஒருமையில் பேசி விடக் கூடாது. “அம்மாவை யாராச்சும் நீ நீன்னு பேசுவாங்களா?” என்று கோபமாய் வந்து தலையில் கொட்டுவாள்.
மறக்காமல் என் அம்மாவை “அம்மா, அம்மா..” என்று அழைத்து.. ”இந்த அமுதினிக்குட்டி ரொம்ப குறும்பு பண்றாம்மா.. என்னால சமாளிக்கவே முடியல” என்று சலித்துக் கொள்வாள். சித்துவை, “சித்துப்பாஆ..” என்று நான் அழைக்கும் தொனியிலேயே அழைத்து “உங்க பொண்ணு பண்ற வேலையப் பாருங்க” என்பாள்.
இந்த விளையாட்டில் எப்படியாவது அவளை பதில் சொல்ல முடியாமல் மடக்கிவிட முயற்சிப்பேன். ஆனால், ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாய் அவள் சொல்லும் பதில்கள் சிரிப்பாகவும் திகைப்பாகவும் இருக்கும். அவளைப் போலவே,
“அம்மா என்னைய தூக்குங்க.. எனக்கு கால் வலிக்குது”
என்று நான் அடம்பிடித்தால்,
”நீ பெரிய பொண்ணாய்ட்ட டா செல்லம்.. இப்டில்லாம் தூக்க சொல்லி அடம்பிடிக்கக் கூடாது. அம்மாவால உன்னை தூக்க முடியாதேடா”
என்பாள். ஒருமுறை வந்து,
“எனக்கு பசிக்குதுடா.. அம்மாவுக்கு புவா ஊட்டறியா?” என்றாள்.
“பாப்பா எங்கயாச்சும் அம்மாக்கு புவா ஊட்டுமா? நீங்க தானம்மா புவா செஞ்சு எனக்கு ஊட்டனும்?”
என்று நான் கேட்டதும் கொஞ்சமும் அசராமல்,
“அம்மா ரொம்ப குட்டியா இருக்கேண்டா தங்கம். நான் உனக்கு புவா குடுத்து புவா குடுத்து உன்னை பெரிசா வளர்த்திட்டேன். எங்கம்மா என்னைய வளர்த்தாம சின்னதாவே விட்டுட்டாங்க”
என்று சொல்லி திகைக்க வைத்தாள். போதாதற்கு என் அம்மாவைப் பார்த்து,
“அம்மா, என்னை ஏன் வளர்த்தாம இப்டி குட்டியாவே விட்டுட்டீங்க? நான் அமுதினிய எவ்ளோ பெரிசா வளர்த்தியிருக்கேன் பாருங்க”
என்று கேட்டு அவர்களை ‘ஙே’ வென்று விழிக்க வைத்தாள்.
எத்தனை சாமர்த்தியமாய் பேசும் போதும் அவளையறியாமலேயே அவளுடைய குழந்தைமை அவ்வப்போது வெளிப்பட்டு, நம்மை ரசித்துச் சிரிக்க வைக்கும். இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாய் நீடித்த இந்த விளையாட்டில் இப்படியான கவிதைத் தருணங்கள் நிறையவே இருந்தன. :)
இப்படி விளையாடிக் கொண்டே வாஷிங்மெஷினிலிருந்து துணிகளை அள்ளிக் கொண்டு பால்கனிக்குச் சென்று உலர்த்த ஆரம்பித்தேன். மும்முரமாய் பேசிக் கொண்டே என் பின்னால் வந்தவள் அப்படியே பின்வாங்கி தயங்கி நின்றாள். பின்,
“பாப்பா.. பால்கனிக்கு போகாத... ’பால்கனி பூச்சாண்டி’ பிடிச்சிக்குவான்”
என்றாள் கண்களில் பயத்தோடு. (பால்கனி தடுப்புச் சுவரின் உயரம் மிகக் குறைவாக இருப்பதால் நாங்கள் கவனிக்காத போது அவள் அங்கு போய் விடக் கூடாதே என்பதற்காக உருவாக்கிய கேரக்டர் அது) :)
“நீங்க தான் கூட இருக்கீங்களேம்மா? பெரியவங்க கூட இருக்கப்ப பூச்சாண்டி ஒன்னும் பண்ண மாட்டான்ன்னு நீங்க தான சொல்லிருக்கீங்க?”
என்றேன். உடனே ஒரு எட்டு தைரியமாய் முன்னெடுத்து வைத்தவள், திடீரென,
“அய்யோ, அம்மா ரொம்ப குட்டியா இருக்கேனே? என்னைய புடிச்சிட்டு போய்டப் போறான். அப்றம் உனக்கு அம்மாவே இருக்காது”
என்று சொல்லிவிட்டு பதறியடித்து வீட்டிற்குள் ஓடிவிட்டாள். :)))))
நானும் வீட்டிற்குள் வந்த பிறகு விளையாட்டு தொடர்ந்தது.. பேசிக் கொண்டே இருந்தவள், கப்போர்டின் மேல் உயரத்தில் இருந்த சோப்புநுரை டப்பாவைப் பார்த்ததும் ஆசையில் கண்கள் விரிய,
“குட்டிச் செல்லம்.. அம்மாக்கு அந்த பபிள் டப்பாவை எடுத்துத் தர்றாயாடா? அம்மா கொஞ்ச நேரம் பபிள் ஊதி விளையாடிட்டு உங்கிட்டயே திருப்பிக் குடுத்துடறேன்.. ப்ளீஸ்டா.. என் கண்ணுல்ல?”
என்று கெஞ்ச ஆரம்பித்தாள். :))))))))))))))) நான் சிரித்து,
“அம்மா போய் எங்காச்சும் பபிள் ஊதி விளையாடுவாங்களாம்மா? நான் தான் அதை வெச்சு விளையாடனும்.. அது என்னோடது”
என்றேன். அப்போதும் சளைக்காமல்,
“அது உன்னுது தான் குட்டி.. அம்மா உனக்கு எப்டி ஊதனும்னு சொல்லித் தர்றதுக்கு தான் கேக்கறேன்.. எடுத்துக் குடேன் ப்ளீஸ்.. நானே ஸ்டூல் போட்டு ஏறி எடுத்து கீழ விழுந்துட்டேன்னா எனக்கு அடிபட்டுடுமில்லடா? அப்றம் அம்மாக்கு அடிபட்டுடுச்சேன்னு நீ கஷ்டப்பட்டு அழுவ தான.. என் செல்லமில்ல? எடுத்துக் குடுத்துடு பார்க்கலாம்.. “
என்றாள். அம்மா ஆச்சரியம் தாளாமல், ”அம்மாடி என்னமா வாய் பேசுது இது..” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள். :))
ஒரு சிகப்பு பலூனை ஊதி எடுத்து வந்து
“அம்மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்... இங்க பார்த்தியா?”
என்று காண்பித்தாள். நானும் மகிழ்ச்சியில் துள்ளுவது போல பாவனை செய்து,
“ஹைய்ய்ய்ய்.. பலூன்ன்.. ரொம்ப தேங்க்ஸ்மா..” என்றபடி கையில் வாங்கிக் கொண்டு,
“My red balloon flies up.. up to the sky.." என்று அவள் எப்போதும் பாடிக் கொண்டே இருக்கும் ரைம்ஸை பாட ஆரம்பித்து, “எங்க மிஸ் எனக்கு ஸ்கூல்ல சொல்லிக் குடுத்தாங்கம்மா..” என்றேன்.
உடனே அவசரப்பட்டு, “எனக்கும் தான் ஸ்கூல்ல சொல்லிக் குடுத்தாங்க” என்றவள், நான் சிரிக்கத் தொடங்கியதும் சுதாரித்து, “நான் சின்னதா இருக்கப்ப ஸ்கூல் போனேனில்ல? அப்ப சொல்லிக் குடுத்தாங்க” என்று சமாளித்தாள். :)
இரவு 9 மணியை நெருங்குகையில், “எனக்கு பசிக்குதுடா கண்ணு.. உனக்கு எப்டி புவா செய்யனும்னு அம்மா சொல்லிக் குடுத்திருக்கேனில்ல? போய் எனக்கு செஞ்சு கொண்டு வாயேன்?” என்றாள்.
நானும் சரியென்று சம்மதித்து, சப்பாத்திக்கு மாவு திரட்ட ஆரம்பித்தேன். மாவு தேய்த்துக் கொண்டிருக்கையில் வந்து பச்சையாகவே மாவை வாங்கித் தின்பது அவள் வழக்கம். “போதும், வயிறு வலிக்கும்” என்று தர மறுத்தால் தேய்த்துக் கொண்டிருக்கும் சப்பாத்தியை கைக்கெட்டிய அளவில் பிய்த்துக் கொண்டு ஓடி, கடுப்பேற்றுவாள்.
இன்று சப்பாத்தி தேய்க்கையிலும் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்ததால்,
“அம்மா, வேண்டாங்மா.. பச்சை மாவு திங்காதீங்க.. போதும்.. “ என்றே பணிவாய் சொல்லிக் கொண்டிருந்தேன். அவள் கேட்காமல் தேய்த்துக் கொண்டிருந்ததை திடீரென வாரிக் கொண்டு ஓடவும் கோபம் எல்லை மீறி விளையாட்டைக் கைவிட்டு திட்ட ஆரம்பித்தேன்.
“அம்மாவை மரியாதை இல்லாம பேசறியா..” என்று தொடங்கியவள், நான் நிஜமாகவே கோபத்திலிருப்பதை உணர்ந்ததும் பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். அதைப் பார்த்ததும் சட்டென்று கோபம் இறங்கி, முகம் கனிந்தது எனக்கு. நானாகவே மீண்டும்,
“உங்க நல்லதுக்கு தானங்மா பாப்பா சொல்றேன்..” என்றேன். விளையாட்டு மீண்டும் தொடங்கிவிட்டது புரிந்ததும் சட்டென்று முகம் பூவாய் மலர, சோஃபாவிலிருந்து இறங்கி அருகே வந்தவள்,
“குட்டிப்பாப்பா.. இப்பல்லாம் நீ அம்மாவை ரொம்ம்ம்ப திட்ற குட்டிப்பாப்பா. இதெல்லாம் ரொம்ப தப்பு.. அம்மாகிட்ட மரியாதையா தான் பேசனும்.. எதுக்கு நீ என்னை திட்டின.. போ.. “
என்றாள். பேசப் பேச கண்களில் நீர் கோர்த்து குரல் கம்ம ஆரம்பித்தது. வார்த்தைகளில் அதட்டலும் குரலில் அழுகையுமாக விநோத கலவையில் அவள் பேசுவதைக் கண்டு சிரிப்பும் நெகிழ்வுமாக வாரி அணைத்துக் கொண்டேன்.
என்றைக்காவது இந்த விளையாட்டை வீடியோ எடுத்து வைக்க வேண்டும். நானும் ஒரு கதாபாத்திரமாக இருப்பதால் அந்தச் சந்தர்ப்பம் வாய்ப்பதேயில்லை. எதற்கும் இருக்கட்டுமேயென்று இங்கு எழுத்தில் பதிந்து வைக்கிறேன். அவள் நிஜமான அம்மாவாய் அவள் பிள்ளைகளை கொஞ்சி, அதட்டி, மிரட்டிக் கொண்டிருக்கையில் இதை அவளிடம் காண்பிக்க வேண்டும். அப்போதும், இதே போல முகம் பூவாய் மலர குறுஞ்சிரிப்பு சிரிப்பாள் என்று நினைக்கிறேன். ஆனால், இப்போதும் அப்போதும் எப்போதும், அவள் சிரிப்பு என்னுள் உருவாக்கும் மலர்ச்சியை, நாளங்களில் ஊடுருவிப் பரவும் குளிர்ச்சியை என் மனம் தவிர்த்து வேறெங்கும் எதிலும் எம்மொழியிலும் பதிந்து வைக்கவோ எவரிடமும் பகிர்ந்து கொள்ளவோ இயலாதென்றே தோன்றுகிறது. :)

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.