"மாப்ள என்ன நீ கட்ட வண்டி ஒட்றாப்பல
ஓட்ற ... கொஞ்சம் வேகமா ஓட்டுயா ...
இந்த நைட் நேரத்துல இந்த ரோட்டை பாத்தாவே ஒரு மார்க்கமா இருக்கு...
வடிவேலு "கேட்டை பாத்தாலே பயமா இருக்கே "னு சொல்ற மாதிரி எனக்கு இந்த ரோட்டை பார்த்தாவே பயமா இருக்கு ."
"டேய் ரகு சத்தம் போடாம வா... இதுக்கு மேல வேகமா போனா நைட் ல செப்டி இல்ல... "
"அப்ப நீ கார் வாங்கியே இருக்க கூடாது மாப்ள ...
டேய் கொஞ்சம் சுத்தி பாரேன் ... இந்த உலகத்திலேயே இப்ப நாம ரெண்டு பேர் தான் தனியா இருக்கோங்கர மாதிரி இல்ல....."
" ரகு ...கொஞ்சம் பேசாம வா ...சும்மா எதுக்கு தொன தொனங்கற....."
"அதுகில்ல மாப்ள இந்த இடம் ஓவர் குளிரா இருக்கு கொஞ்சம் ஓரமா நிப்பாடனினா ஒரு தம்மை போட்டுட்டு போலாம் "
சூர்யா காரை நிறுத்தினான் . அத்துவானத்தில் ஒரு அமானுஷ்யம் இருந்தது .நண்பன் ரகு சொன்னது போல கொஞ்சம் குளிர் ... அப்புறம்
சுற்றி இருள் இருள் இருள் மட்டுமே...
ரகு கார் கதவை திறந்தவன் அதை பார்த்தான்.. கண்ணுக்கு எதிரே ஒரு கல்லறை ..அந்த கல்லறையின் மேலே ஒரு பெரிய சைஸ் ஆந்தை அமர்ந்து இருந்தது . இவனை முறைத்து பார்த்தது ...
" மாப்ள..... கல்லறை எரியாவா இது..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..... சீக்கிரம் வண்டிய எடுயா யோவ் "
"நீ ரகுவா இல்ல ஜோஸ்யத்துல வர ராகுவாடா... என்ன இந்த பாடு படுத்தர.. நைட்ல உயிரை எடுத்துக்கிட்டு ச்சை... "
"மாப்ள நீ கெட்ட வார்தைல கூட திட்டிக்க நோ அப்ஜக்சன் ... எதையும் கண்டுக்க மாட்டான் இந்த ரகு.... இனி மூச்சாவே முட்டிட்டு வந்தாலும் நிறுத்த சொல்ல மாட்டான் இந்த ரகு.... எம்மாடி எம்மாம் பெரிய கண்ணு...."
"யாருக்கு டா ....."
"அந்த ஆந்தைக்கு தான் ....என்னையே குறுகுறுகுறு னு வேற பாத்திச்சி மாப்ள.... ஏன் மாப்ள தெரியாம தான் கேக்கறேன் உனக்கே பயமாவே இல்லையா...."
சூர்யா சிரித்தான்...
"பயமா எனக்கா ....ஹா ஹா ஹா.... "
"பெரிய கபாலி.... கேட்டா ஒழுங்கா பதிலை சொல்லுயா... "
"ஆக்சுவலி.... என்னனா அது வந்து ...இயற்கையாவே கொஞ்சம் எனக்கு தைரியம் அதிகம்.... நாங்க பேமிலியே அப்படி ..."
"மாப்ள சிரிப்பே வரல....தைரியம்னா என்ன தெரியுமா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது "
"அப்படினு யார் சொன்னது "
"ரொம்ப நாளுக்கு முன்னாடி குருதி புனல் ல கமல் சொன்னாரு இப்ப நான் சொல்றேன்..."
கார் அந்த ஆள் அரவமற்ற வழியை கடந்து கொண்டிருந்தது...ரகு மீண்டும் வாயை திறந்தான்.
"மச்சி ஒன்னு சொல்லட்டா இந்த மாதிரி ஆள் இல்லாத இடத்துல கார் ஓட்டி போகும் போது எல்லாம் எனக்கு ஒரு கற்பனை வரும்.... ஒரு அழகான பொண்ணு வழி மறித்து லிப்ட் கேக்கற மாதிரி...."
"அப்புறம் என்ன ஆகும் " என்றான் சூர்யா சுவாரஷ்யமாக...
"நாம அதை ஒரு பொன்னுனு நினைச்சி லிப்ட் கொடுக்குறோம் ..வழி முழுக்க நல்லா தான் பேசிக்கிட்டே வர்றா... ஆனா இறங்க போற நேரத்துல தான் தெரியுது அது ஒரு ஆவி... நாம் சுதாரிக்கறதுக்குள்ள அப்படியே பாய்ஞ்சி உன் குரல் வளையை கடிக்கிறா... தட்டு தடுமாறி நான் மட்டும் கார் எடுத்து தப்பிச்சி போறேன் ......"
" இப்போ உன் குரல்வளையை நானே கடிக்க போறேன் பாரு....இனிமே நீ வாய திறந்த உன்ன இங்கயே இறக்கி விட்டுட்டு போயிடுவேன்.... டேய் பேசிக்கலி நாம ரெண்டு பேருமே பேய் நம்பிக்கையும் பேய் பயமும் அதிகம் கொண்டவர்கள் னு நாம ரெண்டு பேருக்குமே தெரியும் இல்ல. கொஞ்சம் சும்மா வாடா.... ஒழுங்கா கார் ஓட்ட முடில என்னால...."
ரகு வாயில் விரலை வைத்து கொண்டான்... சூர்யா சிரித்து விட்டு காரை கொஞ்சம் வேகம் எடுத்தான்...
✴ ✴ ✴ ✴
சில நிமிடங்கள் கழித்து .......
சூர்யா முகத்தில் தெரிந்த திடீர் திடுகிடலை கவனித்தான் ரகு...
"என்னாச்சு மாப்ள "
"அங்க பாருடா..."
முன்னால் ரோட்டில் ஒரு பெண் நின்று இருந்தாள் லிப்ட் கேட்ட படி...
"ஐயோ ...மாப்ள உனக்கு புண்ணியமா போகும் காரை கீர நிறுத்திடாத.... இது "அது "வே தான்... ஐயோ ஒரு பேச்சுக்கு சொன்னேன் நிஜமாவே வந்துடிச்சா... "
"ச்ச அப்படி பயபட வேண்டிய தேவை இல்லை பாவம் அவளுக்கு என்ன பிரச்னையோ... நாம பேய் கதை பேசிட்டு வந்ததால் இவளை பேய் னு நினைக்க தோணுது அவ்ளோ தான் இதுக்கு பேரு தான் ஹாலுஸ்னேஷன்...
இல்லாததை கற்பனை செய்றது....."
"ஹாலுசினேஷன்...". இதை பத்தி கூட கமல் சொல்லி இருக்காரு மாப்ள பிக் பாஸ்ல.... ஜூலி கிட்ட...."
சூர்யா மெதுவாக காரை நிறுத்தினான்.
அந்த இளம் பெண் கண்ணுக்கு தெரிந்தாள்... புடவை கட்டி இருந்தாள். தீர்க்கமான பார்வை.
"ரொம்ப தேங்க்ஸ்.... என்னோடய ஸ்கூட்டி வழிலேயே ரிப்பேர் ஆயிடுச்சி...அதான் விட்டுட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்...
கொஞ்சம் இந்த ஏரியா தாண்டி டிராப் பண்ணிங்கனா நல்லா இருக்கும் "
மிக மென்மையாக பேசினாள்.
சூர்யா கொஞ்சம் யோசித்து விட்டு "சரி ஏறுங்க" என்றான்.
அவள் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
ரகு கிசு கிசுதான்...
"அந்த மாதிரி ஸ்கூட்டி ஏதும் கண்ணுக்கு தெரிலேயே....மாப்ள நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல "
" டேய் ஒன்னும் ஆகாது கம்முன்னு வாடா "
பிறகு கொஞ்ச நேரம் இருவரும் ஏதும் பேச வில்லை...
5 நிமிடம் கழித்து...
ரகு அவள் என்ன செயகிறாள் என்பதை அறிய ரியர்வியூ மிர்ரர் இல் பார்த்தான் ...அதிர்ந்தான்.
அந்த பெண்ணின் உருவம் கண்ணாடியில் தெரிய வில்லை.
கண்ணாடி கோணம் சரி இல்ல என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு கொஞ்சம் கண்ணாடியை திருப்பி பார்த்தான் அதிர்ச்சி அதிகம் ஆகியது... அவள் சுத்தமாக தெரியவில்லை காலி சீட் தான் தெரிந்தது.
அவனுக்கு இதய துடிப்பு திடீர் ரேஸ் கூடியது....
மெல்ல சூர்யாவிடம் விஷயத்தை சொன்னான்.
சூர்யா .."டேய் ரகு லூசு மாதிரி உளராத " என்று சொல்லி கொண்டு கண்ணாடி பார்த்தவன் அதிர்ச்சியை அடைந்தான் உண்மையில் அவள் உருவம் கண்ணாடியில் துளி கூட தெரிய வில்லை.. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள் ...
சூர்யாவால் கவனம் செலுத்தி கார் ஓட்ட முடியவில்லை...உடல் வியர்த்தது .
மெல்ல திரும்பி அவளை பார்த்தான். ஜன்னல் வழியே ஒரு வெறித்த பார்வை பார்த்து கொண்டு வந்தாள் அவள்.
மஹ்ஹ்ஹம்.... என்று கனைத்து கொண்டான் சூர்யா ..
"நீங்க.....நீங்க.....எ ...எங்க போகணும் "
"எல்லோரும் எங்க இருந்து வந்தோமோ அங்க தான் ஒரு நாள் எல்லோரும் போகணும் " என்றாள் மெதுவான குரலில்..
"வாட்... என்ன சொல்றிங்க புரில..."
"சாரி ஒன்னும்...இல்ல... இந்த இடத்தை தாண்டி எங்க ஊர் இருக்கு இன்னும் சில கிலோ மீட்டர் தாண்டி விட்டுடுங்க போதும் "
சூரியா மறு பேச்சு ஏதும் பேசாமல் வண்டியை வேகம் எடுத்தான்..
இம்முறை ரியர்வியு மிர்ரர் இல் பார்த்தவன் மீண்டும் அதிர்ந்தான் இப்போது அவள் உருவம் நன்றாக தெரிந்தது. " இது என்ன விசித்திரம்...ஹாலுஸ்னேஷன் இரண்டு நபருக்கு ஒரே நேரத்தில் வர வாய்ப்பு உண்டா ??
பக்கத்தில் ரகுவை பார்த்தான் அவன் எச்சிலை விழுங்கி கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்ததும் இந்த திகில் சூழலிலும் சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை...
அவள் தொடர்ந்து ஜன்னலில் வேடிக்கை பார்த்து வந்தவள் ...
"எத்தனை பேரு தூங்காரங்க இல்ல... " என்றாள் அவள் காட்டிய இடத்தில வரிசையாக கல்லறைகள் கடந்து சென்றன.
யார் இந்த பெண்... இருவருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை....
" அவங்களுக்கு எல்லாம் இனி நம்ம மாதிரி எந்த கவலையும் மன அழுத்தமும் ...இல்ல இல்லையா ரகு " என்றாள்..
"ஹலோ என் பேரு எப்படிங்க தெரியும் உங்களுக்கு..."
"நான் மனதை படிக்கும் ஆற்றல் கொண்டவள் ...."
ரகு அதிர்ந்து "என்னது " என்றான்
"அது வந்து ...உங்க நண்பர் சொல்லும் போது உங்க பேரை கேட்டேன் .... "
"மாப்ள தயவு செய்து உன் ஆக்சிளேட்டரை கொஞ்சம் வேகமா அமுக்கு மாப்ள ...." கிசுசுதான்...
"நைட்ல ரொம்ப வேகம் போனா செப்டி இல்ல மச்சி...."
"அடேய்..... சேப்டிக்கு பொறந்தவனே.... இப்போ நீ ஸ்லோவா போனா தாண்டா நமக்கு சேப்டி இல்ல.... "
சிறிது நேரம் கழித்து பின்னாடி இருந்து ஏதோ சப்தம் வந்தது.... பச்சக் பச்சக் என்று....
திரும்பி பார்த்த ரகு பயத்தில் உரைந்தான் அவள் தனது கையை வாயில் கொண்டு போய் எதையோ சப்பி கொண்டிருந்தாள் உற்று பார்த்த போது கையில் ரத்தம் இருந்தது தெரிந்தது...
"எனக்கு ரொம்ப பிடிக்கும்..." என்று சொன்னவள் "அதனால் தான் பாக்கெட்டை எப்போவும் கூடவே வைத்து இருப்பேன்..."
என்று சொல்லி விட்டு வாட்டர் பாக்கெட் போல ஒன்றை எடுத்து கடித்து உறிஞ்சி குடிக்க தொடங்கினாள்......ஆனால் பாக்கெட்டில் வாட்டருக்கு பதில் கரும்சிவப்பில்.......... "
"ரத்தம் ... மாப்ள ரத்தம். ... என்றான் ரகு... "
சூர்யா பயத்தில் காரை அதன் உச்ச பட்ச வேகத்தில் செலுத்தினான்...
"ரகு உங்க நண்பரை கொஞ்சம் மெதுவா போக சொல்லுங்க.... இல்லனா எங்கயாவது ஆக்சிடெண்ட் ஆகி இங்கேயே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண்டி வரும் " குரலில் ஒரு கடுமை இருந்தது.
"அது என்ன எங்க ரெண்டு பேருக்கு... அப்போ உங்களுக்கு ... ??"
"நான் ஏற்கனவே இந்த எரியால தானே இருக்கேன்.. ..."
பேய் கிட்ட பேச்சு கொடுத்தால் நமக்கு தான் ஆபத்து என்று உணர்நதது போல இருவரும் அடுத்த 10நிமிடம் பேசவே இல்லை எந்த நிமிடம் தனது குரல் வளை கடிக்க படுமோ என்ற பயத்தில் மிர்ரரை பார்த்து கொண்டே வண்டி ஓட்டினான் சூர்யா.. அந்த ஏரியாவை கடந்த நிலையில்...
" நீ....நீங்க எ...எங்க இறங்கனும் " என்றான்
"அதோ அங்க புளிய மரம் ஓரமா நிறுத்திகொங்க அது பஸ் ஸ்டாப் தான்.. அங்க இருந்து நான் போய்க்குவேன்" என்றாள்...
இருவருக்கும் ஹப்படா என்று இருந்தது... ஒரு வழியாக இறக்கி விட்டுடலாம் இந்த சந்தேக கேசை...
அவள் சொன்ன இடத்தில காரை நிறுத்தினான்...
ரகு அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி கிசு கிசுதான்...
" நம்மள இந்த காரை விட்டு உயிரோடு இறங்க விடாது னு நினைச்சன் மாப்ள நல்ல வேலை அப்படி ஏதும் நடகல "
அவள் மெதுவாக இறங்கி...தேங்க்ஸ் என்றாள்...
"ஹி ஹி இருக்கட்டுங்க இருக்கட்டுங்க.... என்றான் ரகு.... "
அவள் மெதுவாக நடந்து செல்ல சூர்யா குழ்பத்துடன் காரை எடுத்தான்.
"இவள் நம்ம கிட்ட எதையோ மறைக்கிறாள் ரகு..... அது என்ன அது... "
அப்போது அந்த பெண் வேகமாக திரும்பு வருவது தெரிந்தது.
இருவரும் அதிர்ச்சியும் குழப்பமும் சூழ அவளை பார்த்தார்கள்
அவள் அருகே வந்து இருவரையும் பார்த்து சிரித்தாள்...
" ரொம்ப தேங்க்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்.... பயபடாதீங்க நான் பேய் இல்ல பொண்ணு தான்... என் ஸ்கூட்டி நிஜமாவே ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆகி பள்ளதுல விழுந்துடிச்சி.... இந்த நேரத்துல யார் கிட்ட லிப்ட் கேட்கறதுன்னு புரியாம இருந்த அப்போ தான் நீங்க வந்தீங்க... இரண்டு ஆண்கள் என்பதால் எனக்கு கொஞ்சம் பயம்.... அதான் கொஞ்சம் பேய் போல நடிச்சேன்... பேய் கிட்ட யாரும் தப்பா நடந்துக்க மாட்டாங்க பாருங்க. ஹா ஹா...
ஏனோடய கையில் வந்தது நிஜ ரத்தம் தான் அந்த சின்ன ஆக்சிடெண்ட்ல வந்தது. உங்களை பார்த்தால் பேசிக்கா நீங்க பேய் பயம் கொண்டவங்க மாதிரி தெரிஞ்சிது அதான் அடுத்ததா நான் வச்சிருந்த க்ரேப் ஜூஸ் பாக்கெட்டை வைத்து ஒரு சீன் போட்டேன்...
ஆனா அதுல பெரிய காமெடியே என்ன தெரியுமா.... நான் என்னோடய செருப்பை அட்ஜஸ்ட் பண்றதுக்காக கீழ குனிஞ்சப்ப நீங்க ரியர்வியு மிர்ரர் ல பார்த்துட்டு கண்ணாடில நான் தெரில னு சொன்னிங்க பாருங்க அதான்.
அதுக்கு அப்புறம் தான் பேய் டிராமா ஐடியாவே வந்தது.
ஆனா நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க... அதான் உங்களை குழப்பத்தில் விட்டு போக மனசு வரல . அதான் கிரும்பி வந்து உண்மையை சொல்லிட்டேன். இப்படி தெரிந்து இருந்தா நான் ஒழுங்கா பேசிகிட்டே உங்க கூட வந்து இருப்பேன்...
அதிலும் ரகு இருக்காரே.... பின்னாடி இருக்கிறவங்களுக்கு கேக்காத மாதிரி கூட பேச தெரியாத ஒரு அப்பாவி....
ஆமாம்...உங்க பேர் என்ன பிரண்ட்....
கேட்கவே இல்லை நான். வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க ரெண்டு பேரும் நான் வீட்டுக்கு சேப்பா போய்ட்டு மெசேஜ் பண்றேன்...
"அடி பாவி.... அப்போ எங்களை வச்சி காமெடி பண்ணிட்டியா.... " இருவரும் சத்தம் போட்டு சிரித்தார்கள்...
"எங்க ரத்தத்தை குடிக்காம விட மாடீங்க னு இல்ல நினைச்சுட்டேன். " என்றான் சூர்யா .
"ஹலோ... நீங்க நல்லவங்ன்றதால் தான் நான் சும்மா விட்டேன். தப்பா நடக்க பார்த்து இருந்தா உங்க ரத்தத்தை நிஜமா உரிஞ்சிட்டு இருப்பேன்.." என்று சொல்லி சிரித்தாள்
"அட போங்கங்க. எங்களை காமெடியன் ஆகிட்டீங்க. " என்றான் ரகு
சூர்யா சொல்ல தொடங்கினான்.
"பேரு சூர்யா... நம்பர் 9841............."
✴ ✴ ✴ ✴
அந்த கார் கிளம்பி சென்ற பின் ...அந்த பெண் உருவம் அமானுஷ்யமாக பறந்து சென்று புளிய மரத்தில் தொங்கியது அவர்கள் இருவருக்கும் தெரியாது.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.