Wednesday, September 13, 2017

இது இன்னொரு புதன்கிழமை

இது இன்னொரு புதன்கிழமை அவ்வளவுதான் !
        - மாரிசெல்வராஜ்
 
         இப்படி நடக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவும் காட்டுபேச்சிக்கு பெரும் அதிர்ச்சி. அவள் இதுவரை பெண்கள் மட்டும்தான் தற்கொலை செய்துகொண்டு சாவார்கள்  என்றே நினைத்திருந்தாள். அவள் நினைத்ததில் தவறு இல்லைதான் அவர்கள் இந்த ஊருக்கு வந்தே இரண்டு வருடங்கள்தானே ஆகிறது. இந்த இரண்டு வருடத்தில் அந்த மேட்டுத்தெரு லெட்சுமணசாமி மக கடக்குட்டிபுள்ள விஜி பத்தாப்பு பரிட்சையில் பெயிலானதற்கும், அந்த கிழவி பொயிலால்மாமி-மருமகள் சண்டையில் தன் மகன் கண்ணெதிரே தன் கொண்டை  பண்ணரிவாளால் அறுபட்ட அவமானம் தாங்க முடியாமல்  நடு ராத்திரி அம்மன் கோவில் கிணற்றில் விழுந்து செத்தாள். அதற்குப்பிறகு வேறு யாரும் இதுவரை தற்கொலை செய்து சாகவில்லை. மேலும் அவள் இதற்கு முன் இருந்த ஊரிலும் ”பய, நிறமாத சூலின்னு கூட பார்க்காம கழுத்தை நெரிச்சு கொன்னுருக்கானே விளங்குவானா அவன் ?”, நல்ல காரியம் பண்ணினா நாச்சா, அந்த நாறப்பய கூட வாழ்றதுக்கு பதிலா அவா அந்த தண்டவாளத்துல போய் படுத்ததுதான் சரி அதுதான் அவளுக்கு விடிவு ஆனா போன ராசாத்தி அந்த பச்சைப்புள்ளையையும் கையோட கூட்டிக்கொண்டு போயிருக்கலாம் இப்படி அநாதையா விட்டுட்டு போய்ட்டாளே சண்டாளத்தி”, “பன்னி மேய்க்கிற சக்கிலிச்சிக்கு பனையேறி இறங்குற நாடார் கேக்குதோ அதுதான் கூட்டிட்டுப்போய் சொக்கப்பனை வைச்சுட்டானுவ” இப்படியெல்லாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறாள். “பாவம் அந்தப் பய இப்படி வம்பாங்கொலையா செத்துப்போவானாக்கும்” என்று சொல்லி கேள்விபட்டதே இல்லை.

அப்படியென்றால் ஆண்களும் தற்கொலை செய்வார்களா அதுவும் ஒரு பொம்பளைக்காக????
 Photo
காட்டுப்பேச்சிக்கு துயரத்தைவிட தனக்கு சந்தேகம் வலுத்துகொண்டே போவது போலிருந்தது அந்த நேரத்தில் தான் பன்றி குச்சிலுக்குள் சத்தம் அதிகமாக கேட்டது. “இந்த மனுசன் என்ன இன்னும் எந்திரிக்காம இப்படி கிடக்கார் முழு ராத்திரியும் தூங்கல. காலையிலிருந்து பச்சத்தண்ணி பல்லுல படல என்ன செய்யிறது என்ன கொடுக்கிறது என்ன பேசுறது இவர்கிட்ட, பாவம் ரொம்பத்தான் உடைஞ்சி போயிருப்பார். நாம தண்ணீ குடிச்சாலே அந்த கதிரேசன் கண்ணுக்கு முன்னாடி வந்து நின்னு ஏலேய் துருவா உங்க அம்மைகிட்ட கொஞ்சம் குடிக்க தண்ணீ வாங்கிட்டுவாலேன்னு கேக்குற மாதிரிலா தொண்டைய அடைக்குது அப்படின்னா அந்த மனுசனுக்கு எப்படி இருக்கும். எங்க தூங்கிருக்க போராரு உடம்புதான் இங்க கிடக்கும் மனசு எந்த கருவேலமுள் செடிக்குள்ள கிடந்து கிழிபடுதோ” மூக்கைச் சிந்தி  கூரை ஓலையில் துடைத்தபடியே வெளியே வந்தாள் காட்டுப்பேச்சி.

அவள் நினைத்தது அத்தனையும் உண்மை முண்டன் கயித்து கட்டிலில் மல்லாக்க படுத்தபடி வெற்று வானத்தையே வெறித்து பார்த்தபடி கிடந்தான். கைகூடி வராத தூக்கமும் கையைவிட்டுப் போன ஒரு உயிரும் அவன் கண் வழியே கண்ணீராய் வடிந்து கொண்டிருந்தது. இன்னும் அவன் வெற்று வானத்தை வெறித்துப் பார்த்தபடிதான் இருந்தான். அவனை மாதிரி ஊர் மாறி ஊர் மாறி போய் பன்றி மேய்க்கும் சக்கிலியர்களுக்கு வானம் என்பது வெறும் வானம் மட்டும்தானா என்ன?. மேகங்கள் அற்ற ஏதுமற்ற அந்த வெண்ணிற வானம் அவனை இன்னும் சூன்யமாக்கி அவன் துயரத்தை அதிகபடுத்தும் போல இருந்தாலும் அவன் வெற்று வானத்தை வெறித்துப் பார்த்தபடியே கிடந்தான்.

இந்நேரம் கதிரேசன் மட்டும் வந்திருந்தால் “என்ன முண்டண்ணே வானத்தயே பார்த்துகிட்டு இருக்கிய வீட்ல ஏதும் சண்டையா அக்கா என்ன எங்கயாவது போய் தொலைன்னு சொல்லிடுச்சா” என்றபடிதான் வருவான். எப்படி பையன் எப்படி இப்படி பொறந்தான் ஏன் அப்படி செத்தான். பொறந்ததிலிருந்து எவனாவது என்னிய அண்ணன்னு கூப்பிட்டுருப்பானா எத்தனை ஊரு எத்தனை மனிதர்கள் எத்தனை சிறுவர்கள் “முண்டா எங்கப்பன் செருப்பு அந்து போச்சி கொஞ்சம் சீக்கிரம் தைச்சுக்கொடு” “ “ஆமா முண்டா உன் பன்னி மட்டும்தான் பீய திங்குமா அல்லது நீயும் திம்பையா” இப்படி எத்தனை வார்த்தை பச்சைபுள்ளங்க கேட்கும் போதெல்லாம் மனசு வலிச்சு வலிச்சு சிரிச்சிருக்கிறேன். ”ஏண்டி பேச்சிமுண்ட புள்ளங்க பள்ளிக்கூடம் போகும்போது எதுக்க வராதன்னு எத்தனை தடவை சொல்றது அதுகள என்ன பன்னி மேய்க்கவா நாங்க அனுப்புறோம்” என்று ஊரார் ஒதுக்கும் காட்டுப்பேச்சியை அவன் மட்டும் எப்படி அக்கா என்று கூப்பிட்டான்.

முண்டனுக்கு கதிரேசன் நினைவு கதிர் அறுக்கும் அரிவாள் போல அறுக்க தொடங்கியது.
“என்னக்கா இன்னைக்கு என்ன ஊத்திக் கொழம்பா வாசனை வடக்கு தெரு வரைக்கும் அடிக்கு அதுதான் ஓடி வந்தேன்”
”சாமி எங்க ஊட்ல நீங்க சாப்பிடுறத பார்த்தா உங்க அப்பாசாமியும் அம்மாசாமியும் எங்கள உட்டு வைக்காது சொன்னா கேளுங்க”
“சரி சரி பயப்படாதீங்க முண்டன்ன பன்னி மேய்க்க கிளம்பும் போது சட்டியில போட்டு கொடுத்து விடுங்க நான் அங்க சாப்பிட்டுக்கிறேன் என்ன”
எப்படி ருசித்து ருசித்து சாப்பிட்டான் பாவி, புளிச்ச கஞ்சியையும் ஊத்திக்கொழம்பையும் அவன் புரட்டி சாப்பிட்டதும் கடைசியில் கூழாக்கி குடித்ததும் முண்டனுக்கு நெஞ்சு அப்படியொரு வலியெடுத்து விம்மியது.
Photo
நாலரை ரயில் கிழக்கு பார்த்து போகும் போதே எங்கிருந்தாலும் புத்தகமும் கையுமா குளக்கரைக்கு வந்துவிடுவான் கதிரேசன்.
“என்ன முண்டன்ன எப்பாவாது ரயில்ல போயிருக்கியா”
“நீங்க வேற பன்னி மேய்க்கிற பயலுக்கு எப்படி ரயில் படியேற தெரியும்”
“வாங்க ஒருநாள் நான் ஏத்திவிடுதேன் திருச்செந்தூருக்கு போய் கடல் மண்ணை அள்ளிட்டு வந்து கட்டிலுக்கு கீழ போட்டு தூங்குங்க என்ன ?”
“அது சரி என்னியல்லாம் ஏற விடுவாங்களா அப்படியே சம்மதிச்சாலும் என் பன்னிகுட்டிகள அவங்க ஏத்துவாங்காளா அதுக இல்லாம நான் எங்கே போயி என்ன தாலிய அறுத்துறுக்கேன்.”
“ஏத்துவானுங்க முண்டன்னே ஏத்துவானுங்க வெள்ளைக்கார வம்சம் காந்திய ஏத்தமாட்டேன்னு சொல்லிச்சு, காந்தி வம்சம் அம்பேத்கரை ஏத்தமாட்டேன்னு சொல்லிச்சு அம்பேத்கர் வம்சம் உன்னிய ஏத்தமாட்டேன்னு சொல்லுது., கண்டிப்பா ஒருநாள் ஒன்னையும் ஏத்தும் உன் பன்னிகுட்டிகளையும் ஏத்தும் அதுக்குத்தான ஆளே இல்லாம இந்த ரயில் அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடிட்டு இருக்கு. நீ பன்னிகுட்டிங்ககிட்ட சொல்லி வை ஒருநாள் ஏத்திருவோம் இல்லன்னா அந்த ரயிலை கவுத்துப்போட்டு நாம அதுமேல ஏறிடுவோம் என்னா ?”
“ஒரு எழவும் புரியலீங்க”
“நீ என்னை மாதிரி சின்னப்பயைன்கிட்டல்லாம் இப்படியே ஒரு எழவும் புரியலைங்கன்னு மரியாதையா பயந்துகிட்டு சொன்னா உனக்கு அது புரியவே புரியாது, அவனுங்களும் அதை மறுபடி சொல்லவும் மாட்டானுவ, டேய் நீ சொன்னது ஒரு எழவும் புரியலடா என்னடா சொன்ன மறுபடி ஒருதடவை சொல்லுன்னு அதட்டிக் கேளு அப்பந்தான் “அதுவந்துன்னு” பேசவே ஆரம்பிப்பாங்க” எப்படி ஒரு அரவணைக்கும் பேச்சு அவனுக்கு இந்த வயதில் ! இது எப்படி வாய்த்தது. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தானே இருப்பான். அதில்தான் இவை எல்லாம் எழுதிருக்குமா. முண்டனுக்கு இன்னும் வானத்தில் ஒரு மேகம் கூட தெரியாமல் இருப்பது கழுத்தை நெரிப்பது போலிருக்க படாரென்று குப்புற படுத்துக்கொண்டான்.துணி விரிக்காத அந்த கட்டிலின் கயிறும் அவன் நெஞ்சை இன்னும் கொஞ்சம் சேர்த்து அலுத்தியது.

“முண்டன்ன வேம்படியாவைத்தான் படிக்க வைக்கல அந்த பய துருவனுக்குதான் எட்டு வயசு இருக்கும்ல அவனையாவது பள்ளிக்கூடத்துல சேர்த்துவிடுன்ன”
“நீங்க வேற இங்க தெருவுலயோ அல்லது யார் வீட்டுக்கு முன்னாடியோ ஒரு பன்னிவிட்டை கெடந்தாலும் என் குடிசையை கொளுத்தத்தான் அத்தனை பேர் வீட்டு அடுப்பிலேயும் தீ எறிஞ்சுகிட்டு இருக்கு இவன அங்க அனுப்பிட்டா என் குச்சி விளங்கின மாதிரிதான்”
தலையை நிமிர்த்தி வேகமாக துருவன் இருக்கும் இடத்தை விழியால் தேடினான் முண்டன். துருவன் அங்கு கடைசியாக ஈனிய பத்து பன்னிக்குட்டிகளோடு விளையாடி கொண்டிருந்தான்.
“ஏல துருவா இங்க வா” என்று அவன் கூப்பிட்டதும் துருவன் கையில் வைத்திருந்த தேங்காய் சிரட்டையை தூக்கி எறிந்து விட்டு அப்பாவை பார்த்து ஓடி வந்தான்.அவன் பின்னால் அத்தனை குட்டிகளும் ஓடி வந்தன.
“அம்மகிட்ட அந்த கருப்பு கேனை வாங்கிட்டு போய் முனியசாமி கோவில் ஆலமரம் இருக்குல்லா அங்க அப்பா கேட்டுச்சின்னு அரை லிட்டர் சாராயம் வாங்கிட்டு வா. போ ஓடு” என்றதும் அவன் குடிசைக்குள் ஓடினான். அவன் பின்னால்  ஓடிய பன்னிகுட்டிகளை பார்த்தபடியே இருந்த முண்டன் அவைகளின் தாய் பன்னியை குடிசை நோக்கி திரும்பி பார்த்தான். வீங்கிய முலைகாம்புகளை காட்டியப்படி அப்படி ஒரு சாய்த்து படுத்துகிடந்தது.ராஜி.
Photo
“என்னன்ன பத்து குட்டிப்போல”
“ஆமாம்பா இதுதான் முத ஈத்து, இந்த மாதிரி நாலு ஈத்து ஈத்துச்சுன்ன போதும் வேம்படியாவுக்கு கல்யாணம் வைச்சிருவேன்”
எல்லாருமே சிரித்தார்கள்.
“ஆமா இதுக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்க” என்று அவன் கேட்டதும் துருவன் “பெரியபன்னி” என்றான் வேகமாக.
“பெரிய பன்னியா ச்சீ வேற பேரு வைக்கலையா”
“இல்ல வேணும்னா நீங்களே வையுங்களேன்”
“இனிமேல் இது பேர் இராஜி, என்று சொன்னபடியே அவன் இராஜி இராஜி என்று கொஞ்சியதும் எல்லாரும் சிரித்ததும் கயிறு இப்போது முண்டனின் அடிவயிறு வரை அழுத்தத் தொடங்கியிருந்தது.
“ஆமா அது என்னன்ன இராஜி” என்று துருவன் கேட்காமல் இருந்திருந்தால் முண்டனுக்கு அந்த விஷயமே தெரியாமல் போயிருக்கும்.
“அது அது எனக்கு வர்ற பொண்டாட்டி பேருல, அவ இப்படியே தான் பொது பொதுன்னு இருப்பா இதேபோல எனக்கு பத்து குட்டி பெத்துப் போடுவா”
“பன்னிகுட்டியவா பெப்பாங்க” என்று துருவன் கேட்டதும் எல்லாரும் சிரித்துவிட்டார்கள்.‘பன்னிகுட்டில்லல பத்து புள்ளகுட்டி” என்று வேம்படியாளும் சொல்லி சிரித்தது அன்றுதானே.

இராஜி, கதிரேசனின் மாமன் மகள். ஒரே சாதி , ஒரே மதம் , ஒரே குடும்பம் , ஒரே இரத்தம் அப்புறமென்ன பத்துகுட்டி என்ன பதினைந்து குட்டி அவனுக்கு கொடுப்பாள்; கொடுத்திருப்பாள்; அதற்குள் கதிரேசன் ஏன் அவசரப்பட்டான் என்று முண்டன் முனங்கிய போது முண்டனின் புட்டத்தில் கை வைத்து அழுத்தி உலுப்பினாள் காட்டுப்பேச்சி.
“என்ன இப்படியே படுத்துகிட்டு, எந்திரிங்க துருவன் சாராயம் வாங்கிட்டு வந்துட்டான் வாங்க வேலைய பார்ப்போம் அப்புறம் பொணம் வந்ததற்கு அப்புறம் தொங்கு தொங்குன்னு ஓடுவயளா” என்று அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம் அவள் புடதியில் வெறிகொண்டு அடித்தான் முண்டன். அதோடு விடாமல் கீழ விழுந்த அவள் புட்டத்தில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.
“சக்கிலிச்சு முண்ட யாரடி பொணம்ங்கிற நேத்து உன் வீட்டு ஊத்திக் குழம்பு நக்கி சாப்பிட்ட அந்த பள்ளபய உனக்கு இன்னைக்கு பொணமா ஆங்’ என்று மறுபடியும் அடிக்கபோனான்.அதற்குள் வேம்படியாள் வந்து தடுத்தாள்.காட்டுப்பேச்சியின் ஈரக்குலை ஒரு முறை சுடுகாட்டுக்கு போய் திரும்பி வந்தது போல இருந்தது.

வேம்படியாள் ஒரு செம்பில் வந்து முண்டனுக்கு தண்ணீர் கொடுத்தபடி அம்மாவை தூக்கிகொண்டு உள்ளே போனாள்.தண்ணீரை முகத்தில் வேகமாய் ஓங்கி ஓங்கி அடித்தப்படி வேம்படியாவையே பார்த்தான். “நிசமாலுமே அவன்கூட அந்த மகராசன்கூட நீ ஒரு முறை படுத்து எந்திரிச்சுக்க கூடாதா தாய் “ என்று நினைத்தபோது நிஜமாகவே அழுதுவிட்டான் முண்டன்.
Photo
வேலை கிடைக்கிறது வரை பொறுக்க முடியாது அது கிடைக்கும் போது கிடைக்கட்டும் நாம கல்யாணத்தை முடிச்சி வைச்சிடலாம் எத்தனநாள் தான் அவனும் படிக்கிறேன் படிக்கிறேன்னு புத்தகத்தை தூக்கிட்டு குளம் குட்டைன்னு சுத்துவான். என்று கதிரேசனின் அம்மாதான் அவன் அப்பாவை கூட்டிக்கொண்டு இராஜி வீட்டிற்கு பெண் கேட்டுப் போனாள்.
“யாரு உம்மவனுக்கா என் பொண்ண தர சொல்ற விளங்கும் என் குடி, வேலைக்கு படிக்கிறேன்னு சொல்லிகிட்டு குளம் குட்டைன்னு சக்கிலியன் பின்னாடி சுத்திகிட்டு சக்கிலிச்சு வீடே கெதி அந்த பச்சமுண்ட வேம்படியாவோட நாத்தம்புடிச்ச கவட்டையே கெதின்னு கிடக்குறவனுக்கா என் புள்ளய கொடுப்பேன், அதுதான் ஊரே சொல்லுதே அங்க பாருடா பள்ளபய பன்னி மேய்க்கிறான்னு எம் மவளும் போய் பன்னி மேய்க்கனுமா போயிடு இங்க இருந்து ஆமா, எம்மவள ஆத்தாபள்ளன் அம்மாபள்ளனுக்கு கூட கட்டிகொடுக்க கூடாது ஒரு செவந்தி பள்ளனுக்கு தான் கட்டிகொடுக்கலாம்னு இருக்கேன் ஆனால் சக்கிலிச்சி சீல பேன் அப்பி இருக்கும் உன் மவன் இல்ல அந்த சிவந்தி பள்ளன்.
இராஜி அப்பா இப்படி சொன்னதற்காகவா அவன் செத்துப்போனான் ?

“எங்கண்ணன் சொல்றதுல என்ன தப்பிருக்கு வேலைக்கு போக துப்பில்லன்னா சும்மாவாவது வீட்ல இருக்கனும்லா அதவுட்டுட்டு நாந்தான் எளவட்டன்னு எழுப்பிகிட்டு சக்கிலிச்சு வீட்டுக்குள்ள போனா எந்த பய மதிப்பான். இராஜிபுள்ளைக்கு இவனை கல்யாணம் பண்ணி வைச்சு அந்த சக்கிலிச்சு முண்ட இவன் புள்ளைய பெத்துப் போட்டான்னா எங்க போயி தொங்கிறதாம் நானும் எங்க அண்ணனும்.அவளுக மேட்டுத்தெருவுக்கு வந்தாலே கீழத்தெருவுக்கு நாத்தம் அடிக்கும் அவளுவ சீலைக்குள்ள போய் எப்படிதான் போய் படுப்பானுவளோ. எங்க அண்ணனாவது எங்கிட்ட நாசூக்கா சொன்னான். அவன்கிட்ட மறுபடியும் பொண்ணு கேட்டு ஊருபுள்ளா சொல்ல சொல்றீயா உம்மவன் சக்கிலியச்சிய வைச்சிருக்கிறது உண்மைதான் போலன்னு” இப்படி அவன் அம்மா அவன் அப்பாவிடம் சண்டை போட்டதற்காகவா கதிரேசன் செத்துப்போனான் ?

முண்டன் வெற்று உடம்பில் துண்டைப் போட்டுக்கொண்டு கட்டதளத்துக்கு தேவையான எல்லா பொருளையும் அப்படியே சாராய கேனையும் எடுத்துக்கொண்டு கூடவே துருவனையும் கூட்டிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி கிளம்பினான். அகால மரணம் என்பதால் ஊருக்குள் கொண்டு வராமல் மருத்துவமனையிலிருந்து சுடுகாட்டுக்கே கொண்டு வந்து எரித்து விடுவார்கள். “பன்னி மேய்க்கிற பய பாடை கெட்டமாட்டானோ அப்படியே வந்து எரிச்சுகொடுத்துட்டு போகமாட்டானோ “ என்று பொயிலால் கிழவி செத்த போது ஊரில் கேட்டதிலிருந்து அவந்தான் அந்த ஊருக்கு வெட்டியானும் கூட.

கதிரேசனை கொண்டுவந்து அந்த ஆம்புலன்ஸ், சுடுகாட்டில் இறக்கியதும் அழுகைசத்தம் தொடங்கியது.முண்டன் அழக்கூடாது என்று வைராக்கியமாய் இருந்தான் ஆனால் துருவனுக்கு அவ்வப்போது அவனுக்கே தெரியாமல் கசிந்தது. முண்டன் எந்த வேலையையும் செய்யவில்லை அவனால் செய்யவும் முடியவில்லை, அவன் சொல்ல சொல்ல துருவன் தான் எல்லா வேலைகளையும் செய்தான் கொள்ளிகுடம் உடைத்தல், எள்ளும் பெரண்டையும் வீசுதல் இப்படி எல்லாம் வேலையும் செய்த அவனோடு முண்டன் கட்டைகளை மட்டும் அடுக்கினான். கடைசியாக முண்டன் சொல்லிகொடுத்ததை போல இதுவரை யாருக்கும் யாருமே சொல்லாத மாதிரி அந்த சுடுகாட்டில் அந்த ஊர்காரர்கள் முன்னாடி அவன்’ ”யப்பா சாமி நம்ம கதிரேசன் அண்ணன் முகத்தை மூடப்போறேன் கடைசியா பாக்கிறவங்க பார்த்துக்கோங்க பூத்தண்ணி ஊத்தனும்னா ஊத்திக்கோங்க” என்று சொன்னவாறு அவன் கண் கலங்கிபோது ஊரே எல்லாம் உண்மைதான் என்பது போல அந்த சிறுவனை பார்த்தது.
Photo
எந்த நேரத்திலும் பிணம் என்று சொல்லப்படாத கதிரேசனின் மீது அடுக்கப்பட்ட கட்டைகளின் மீது பெட்ரோல் ஊற்றி அவர்கள் நெருப்பு மூட்டிய போது துருவன் கண்களை சிக்கென்று மூடி கொண்டான். முண்டனோ உற்றுப்பார்த்தான் அந்த தீ அவன் கண்களுக்கும் பற்றி எரிந்தது.நெருப்பு எரிய சுடுகாடே காலியாகிவிட்டது.முண்டனும் துருவனும் மட்டுமே இருந்தார்கள்.அழுதுகொண்டே இருந்த முண்டனுக்கு துருவன் சாராயத்தை கிளாஸில் ஊற்றி ஊற்றி கொடுத்தப்படியே தன் விரலால் நக்கியும் பார்த்தான் ச்சீப்பா என்றிருந்தது.

”டேய் துருவா கதிரேசன் எதுக்காக செத்துப்போனான் தெரியுமா அவன் மாமா அப்படி பேசுனானே அதுக்கா ? இல்லேன்னா அந்த முண்ட அவங்க அம்மா அப்படி ஏசுனாளே அதுக்கா ? கண்டிப்பா இருக்காதுடா கண்டிப்பா இருக்காதுடா சத்தியமா இருக்காதுடா போதை ஏற ஏற முண்டன் சத்தமாவே கத்த தொடங்கினான்.
“நம்ம சக்கிலி கருப்பன் மேல சத்தியமா சொல்றேண்டா துருவா அவன் அந்த ஊமக்கத்தாள அந்த புள்ள இராஜிக்காக சாகலடாஅப்புறம் அய்ய அம்ம அந்த முண்டச்சிக்காகவும் சாகலடா, நம்ம அக்க வேம்படியா முகத்திலயும் நம்ம அம்ம காட்டுப்பேச்சி முகத்திலையும் இனி முழிக்கவே  முடியாதுன்னுட்டுதாண்டா அவன் போய் தொங்கிருக்கான். என்று அவன் கத்தி கதறி அழுதுகொண்டிருக்கும்போதே துருவன் “ஐயோ அப்பா ஐயோ அப்பா என்று நெருப்பை பார்த்து கத்தி அலறி கூப்பாடு போட்டான்.அவ்வளவுதான் முண்டன் ஓடி போய் ஒரு பெரிய கட்டைய எடுத்து கதிரேசனை ஓங்கி சத் சத் என்று பலம் கொண்ட மட்டும் அடித்து சாய்த்து படுக்க வைத்தான்.

“டேய் டேய் அது ஒன்னுமில்லடா பொணம் எரிய எரிய நரம்பெல்லாம் நட்டுகிட்டு விடைச்சிக்கிட்டு எந்திரிக்கும் இப்படி ஒரு பெரிய கட்டய எடுத்து ஓங்கி ஒரு போடு போட்டு ஒடிச்சி வைச்சாதான் நின்னு எறியும் இதுக்குபோய் பயப்படலாமா” என்றான்.
அப்போதுதான் கதிரேசன் பிணமாய் எரிய தொடங்கியிருந்தான்.
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)