Wednesday, May 24, 2017

நம் தமிழ் மன்னன் ''சூர்யவர்மன்'' கட்டிய அங்கோர் வாட் - பழம்பெரும் கோவில்



angkor-wat-sky-view
6831883-ancient-buddhist-khmer-temple-in-angkor-wat-cambodia
‘அங்கோர் வாட்’ சூரியவர்மன் அரசனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுமான பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்றிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 
‘அங்கோர்’ என்பதற்கு தலைநகரம் அல்லது புனித நகரம் என்று பொருள்படும். கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை முக்கியமானதொரு நகராக இது விளங்கியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் புகழ்பெறும் அங்கோர் வாட் ஆலயம் குறித்த வரலாற்றுத் தகவலைப் பார்ப்போம். இந்த ஆலயம் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் சூர்யவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது.
இரண்டாம் சூர்யவர்மன் இந்து மதத்தைப் பின்பற்றிய அரசனாவான். எனவே இந்த ஆலயம் ஒரு இந்து ஆலயமாகவே அதாவது விஷ்ணுக்கடவுளுக்காக அவனால் அமைக்கப்பட்டதாகும். பொதுவாகவே இந்திய நாட்டின் கோயில்களின் கட்டிடக்கலையையும் கிரேக்கக் கட்டிடக்கலையையும் கலந்த ஒரு அமைப்பிலேயே இவ்வாலயம் இருக்கின்றது. அங்கோர் வாட்டின் கட்டிட அமைப்புக்கு சலவைக்கல்லே பயன்பட்டிருக்கின்றது.
angor-wat
அங்கோர் வாட் ஆலயத்தின் பிரமாண்டமும் அதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் பார்ப்போர் கண்களை வியப்பில் ஆழ்த்தும். பிரமிட் வடிவினை ஒத்த மூன்று அடுக்குகளையும், தாமரை வடிவினதான ஐந்து கோபுரங்களையும் தாங்கிய அமைப்பில் இவ்வாலயம் நிர்மாணிக்கப்படிருக்கின்றது. இந்தக் கோபுரங்கள் நிலமட்டத்தில் இருந்து 65 மீட்டர் நீளமானவையாகும்.
AngkorWat
ஆலயத்தைச் சுற்றி அகழியும், பெருமதிலுமாக 1300 மீட்டர் X 1300 மீட்டர் அளவில் அரணாக அமைந்திருக்கின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆலயத்தின் முழுப்பகுதியும் அமைந்திருக்கின்றது. ஆலய உட்பரப்பில் நுழைந்ததுமே வலதும் இடதுமாக இருபக்கமும் உடைந்து போன இரு நூலகங்கள் இருக்கின்றன.
Ta-Prohm-sunlight1
shutterstock_110917883
அங்கோர் சகாப்பதத்தினைப் பறைசாற்றும் சிற்பக்கலைக்கும் தனித்துவமான உதாரணமாக மதிற்சுவர்களிலும், கோயில் உட்புறப்பரப்புகளிலும் விதவிதமான சிற்பவேலைகள் விளங்குகின்றன. 36 வடிவில் 2000 வகையான அப்சரா என்னும் தேவதைகளின் சிற்பவடிவங்கள் இந்த ஆலயத்தில் மட்டுமே இருக்கின்றன.
sdsdsdd
Battle of Kurukshetra
asdasd
அத்தோடு இந்து புராணக்கதைகளின் முழுமையான வரலாற்றை கோயிலின் உட்புறச்சுவர்களில் சிற்பமாகவே வடித்திருக்கின்றார்கள். உதாரணமாக தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வரலாற்றின் ஆரம்பம் முதல் முடிவு வரை நீண்டதூரப்பரப்பில் சிற்பச் செதுக்காகக் காட்டப்ப்பட்டிருக்கின்றது.
inside-view-ta-som-temple-angkor-wat-8515827
_MG_0667_large
இவ்வாறு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள் என்பதையும் இச்சுவரில் பதிந்திருக்கும் சிற்பவேலைகள் காட்டுகின்றன.
nd
அத்தோடு மகாபாரதப் போரில் பாண்டவர்களின் அணி, கெளரவர்களின் அணி என்று அத்தனை பேரையுமே சிற்பங்களாக வடித்து, குருஷோத்திரப்போரின் உச்சமும் காட்டப்படுகின்றது.
6104241036
ss
சிற்பங்கள் சிலவற்றில் செயற்கையாக சிவப்பு போன்ற வர்ணங்கள் மேற்பூச்சாக அமைந்திருந்தன. இது தாய்லாந்து நாட்டில் இருந்து படையெடுத்த சியாம் அரசின் கைங்கர்யம். தாய்லாந்துக்காரர்களுக்கு சிற்ப அமைப்புக்களை இயற்கையாக விடாமல் அவற்றுக்கு வர்ணம் தீட்டிப் பார்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அதையே இங்கும் காட்டியிருக்கிறார்கள்.
angkor-wat-temple-cloister1
இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.
இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது ,
விஷ்ணு” கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே ” பெரியது “! !.
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் .
இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது.
இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .
இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .
பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.
இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது ,
அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.
பின்னர் 1586 ஆம் ஆண்டு ” António da Madalena “ என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் ” is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot’ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .
அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged.” என்று குறிப்பிட்டுள்ளார் !! .
பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.
ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக” பொறிக்கப்பட்டுள்ளது !.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2013 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !!
குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது


AngkorWat

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)