* மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
* மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
* மண்டையுள்ள வரை சளி போகாது.
* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
* மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
* மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
* மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
* மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
* மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்
* மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.