தமிழ் மரபில் ஆண்கள் அணிகிற மாலைக்கு தார் என்று பெயர். பெண்கள் அணியும் மாலை தான் மாலை எனப்படும். மாலையின் இரு முனைகளும் சேர்த்து கட்டப்பட்டு மத்தியில் ஓரு குஞ்சம் இருக்கும். ஆண்களின் தாரோ இணைத்து கட்டப்படாது (ஆண்டாள் மாலை போல்) இரு முனைகளும் அப்படியும் இப்படியுமாக எதிர் எதிராக இருக்கும். இதற்கு என்ன பொருள்? ஆண்கள் கட்டுப்பாடு அற்றவர்கள். கொஞ்சம் அப்படி இப்படி என்று காலம் காலமாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்பதா?
🌼சீதைக்காவது ராமாயணத்தில் ஓருமுறை தான் அக்கினிப் பிரவேசம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அலுவலகம் போகும் சீதைகளுக்கு ஓவ்வொரு நாளும் அக்னிப்பிரவேசம் தான். அந்த ராமனாவது சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டு விட்டான். இந்த ராமர்கள் கேட்கவும் தயக்கம், நம்பிக்கையும் இல்லை. இறுதியில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுகிறார்கள். உண்மையில் ஆண்மை என்பது ஹார்மோன் சம்பந்தப்பட்ட அடையாளம் அல்ல, தன்னையே நம்பி வந்த மனைவியை உள்ளன்போடு நேசித்து மதிக்கக்கூடியது.
🌻தன் மனைவியை தவிர இன்னொருவரோடு அந்த ரங்கம் இல்லாத ஆண்களின் குடும்ப வாழ்வில் பெரும்பாலும் எந்த சிக்கலும் குழப்பமும் வருவது இல்லை.
இருந்தும், மனைவிக்கு துரோகம் செய்யாத இந்த ஆண்களின் குடும்பத்திலும் பிரச்னைகள் வருகிறதே? என்றால் பெரும்பாலும் அவை தீர்க்க கூடியவைகளாகவே இருக்கும்.
இப்படி எல்லாம் சொல்வதால் ஆண்கள் அனைவருமே அயோக்கியர்கள் என நிறுவுவது என் எண்ணம் அல்ல, நான் முட்டாளும் அல்ல. பெருவாரியான ஆண்கள் சந்தர்ப்பத்திற்கு ஏங்கும் சைவப்பூனைகள்...
என்பதே என் கருத்து.
🌼சங்க இலக்கிய பாடல்🌼
🌸திருமணமாகி வந்த பெண் சமைக்க தெரியாமல் சிரமத்தோடு, கணவனுக்காக அன்போடு தயிரை பிசைந்து, அடுப்பூதி கண் சிவக்க குழம்பு வைக்க
" ஆஹா இதுவல்லவா குழம்பு" என பாராட்டி உண்டபோது, அவனது மகிழ்ச்சி அவளது மகிழ்ச்சியானது!
" முளிதயிர் பிசைந்த காந்தள் மென்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅது டீஇக்
குவளை உண்கண் குய்ப் புகை கழுமத்
தான் துழந்தட்ட தீம்புளிப் பாகர்
இனி தெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றெண்ணுதல் முகனே "

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.