என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,
Follow me on Twitter
Add to:







