Friday, December 4, 2009

White Lake Celebrations

ஏய் இதோ பாரு பீட்ட‌ரு
கையில‌ இருக்குது குவாட்ட‌ரு
நீ அடிச்சா அது மேட்ட‌ரு.

வான‌த்துல‌ இருக்குது மாரி
வீட்டுல‌ வ‌ள‌ருது சோமாரி.

தெருவில‌ போற‌ நீ வ‌ள்ளி
முதுகில‌ ஏற‌வா நான் துள்ளி.

என‌க்கு உன் மேல‌ விருப்பு
என் மேல‌ காட்டாத‌ நீ வெறுப்பு.

உன் காலில‌ இருக்குது செருப்பு
சாம்பார்ல‌ நீ போடுற‌து ப‌ருப்பு
ஆனா உன‌க்கு பிடிச்ச‌ க‌ல‌ரோ க‌றுப்பு.

நாக‌ லிங்க‌ம் தீப‌னுக்க‌ கிளாசுமேட்டு
அவ‌ன் அடிக்க‌டி போடுறான் பார்மேட்டு.

த‌லை சீவ‌ பார்க்க‌னும் மிர‌ரு
த‌லை சீவாட்டி நீயோ டெர‌ரு.

பெர்லின் அனுப்புவாரு SMS
அவ‌னுக்கு தேவையான‌து ஹாட் கிஸ்சு.

எல்வின் கையில‌ எப்ப‌வும் செல்லு
போடுவாறு பொன்னுங்க‌ கிட்ட‌ எப்ப‌வுமே ஜொள்ளு.

என்ன‌ தான் நினைச்சிருக்க‌ நீ சொல்லு
தில்லிருந்தா என் எதிர்ல‌ வ‌ந்து நில்லு.

யாரெல்லாமோ தொட‌ங்குறாங்க‌ புதுக்க‌ட்சி
ஆனா எல்வினுக்கோ ஊரெல்லாம் த‌ங்க‌ச்சி.

அடிக்க‌டி போடுறான் ஸ்பீக்க‌ர்ல‌ பாட்டு
த‌றிகெட்டு ஓடுறாங்க‌ எல்லோரும் அத‌ கேட்டு.

த‌யிருல‌ கிடைக்குது மோரு
வ‌ழக்க‌மா அடிக்கிற‌து பீரு.
எங்கிட்ட‌ வைக்காத‌ டீலு
உன்ன‌ ஆக்கிடுவேன் நூலு.

ர‌ஜினி ந‌டிக்கிற‌ பட‌ம் "ரோபோ"
ஸ்டாலினுக்கு என்ன‌ "ரோப்போ".

கிரிக்கெட்டுக்கு வேணும் ஹெல்மெட்டு
ஆனா வ‌த‌ன் அடிக்க‌டி ஆவான் ட‌க்கவுட்டு.

அர‌விந்த் போடுவாரு கொறி
அப்பப்ப‌ சாப்பிடுவாரு ம‌ட்ட‌ன் க‌றி
ஆனா தீப‌ன் அச‌ராம‌ அடிப்பாரு செஞ்சுரி.

எதிர் டீம் பேரு ஹாட் ஷாட்டு
ஆனா இப்ப‌ இருக்க‌ இட‌த்த‌ நீ காட்டு.

வ‌த‌னுக்கு பிடிச்ச‌து முறுக்கு
ஜெய்குமார்கிட்ட‌ வ‌ச்சிக்கிட்டா அடி நொறுக்கு.

தூத்து வாரி போட்டு அடிப்பாரு அசோக்கு
கூட்டி க‌ழிச்சு பாரு ச‌ரியா வ‌ரும் கண‌க்கு.

Bookmark and Share

Monday, November 9, 2009

மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...

> மகப்பேறு மருத்துவமனை
> அவசரச் சிகிச்சைப் பிரிவு
> அறுவை மருத்துவப் பகுதி
>
> கண்கள் உறக்கம்கேட்டு கெஞ்சிநிற்க
> உடல் சோர்ந்துபோய் ஓய்வுகேட்க
> உள்ளம் ஏங்கிப்போய் செய்திக்காக
> அரங்கவாசலில் வாசலில் தவமிருக்கிறது
>
> பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
> படபடப்போடு அதிர அழைத்து
> அவசரமாய் ஏதோ பெயரெழுதி
> அவன் கையில் திணிக்கிறார்
>
> **
> *"காலம் கடந்து விட்டது; ஆனாலும்
> கடைசியாய் ஒரு முயற்சி ..
> கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
> கருணை அவன் வைத்துவிட்டால்
> இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்" *
>
> மருத்துவமனையில் இல்லாத
> மிக முக்கியமான மருந்தாம் !
> தொலைவில் தான் கிடைக்குமாம் !!
> தலை தெறிக்க ஓடுகிறான் ....
>
> இருச்சக்கர வாகனம் எடுத்து
> நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
> நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
> நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது
>
> பத்து வருடக் கனவு
> பாதியிலேயே கலைந்து விடுமா?
> கூடும் இடத்தில் ஏளனம்...
> குடும்பத்திற்குள்ளும் அவமானம்...
> *மலடி* என்ற மறைமுகப் பேச்சையும்;
> *முடியாதவன்* என்ற மனம் வேகும் ஏச்சையும்;
> மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...*
> முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?
>
> திடீர் குறுக்கீட்டால்
> தொடர்பு தடைபட்டு
> தடாலென நிறுத்துகிறான்..
> நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
> நடுங்கிப்போய் நிற்கிறான்..
>
> மிரண்ட பார்வையோடு
> மேலும் தொடர வழி தெரியாமல்
> குட்டிப் பூனை ஒன்று
> குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது
>
> ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
> இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது..
>
> *"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
> "சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
> "உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
> "பெரிய கடவுள்னுதான் நெனப்பு!" *
>
> ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
> எதுவும் அவன் காதில் விழவில்லை
> **
> *'அங்கீகரிக்க அவசியமில்லை
> ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
> அவமானப்படுத்தாமல் இருக்கலாமே' *
>
> வேதனையைத் தாங்கிக்கொண்டு
> பூனையையும் தூக்கிக்கொண்டு
> மன வருத்தத்தோடு அங்கிருந்து
> மருந்து வாங்கக் கிளம்புகிறான்
>
> அதே நேரம் *அங்கீகாரம் *
> அவனுக்கு *அங்கே* கிடைத்துவிட்டது !
> **
> *தலை தப்பிய சுகப்பிரசவம் ..
> தாயும் சேயும் நலம்....*
>Bookmark and Share

Thursday, November 5, 2009

ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல்

ஒட்டு மொத்த குடும்பமும்
ஒரு தோளின் மேல்
தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
தலைமகன் நான்.

சன்னல் கதவுக்கு ஒன்று
வாசல் காலுக்கு இரண்டென
வீட்டுக்கே மூச்சுத் திணறும்
கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்

மணம் முடித்த அவளுடன்
மனம் விடுத்துப் பேசவே...
வந்தவளுடன் தனிமையில்
தொந்தரவின்றிப் பேசவே...
வாரம் ஒன்று முழுதாய் ஆனது

மண வாழ்வைத் தெடங்கவே
மாதம் மூன்றுக்கும் மேலானது

இயந்திர உலகில் கரையேற
இயந்திரம் போல் இயக்கம்..........

தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
திருமணம் , புகுந்தவீடு பயணம்........

தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........

பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
பராமரிப்பு , கடைசிப் பயணம்...........

குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
திருமணம் ,வெளிநாடுப் பயணம்........................


பயணம்,பயணம்,பயணம்............
பயணத்தைத் தொடர்ந்து
பயணிக்க வைக்க எனக்கும்
சயனம் இல்லாத பயணம்.........

எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
வந்துசேர்ந்தது பணி ஓய்வும்

இதோ.....

சுற்றியிருந்த உறவெல்லாம்
விட்டுச் சென்ற பிறகு நான்...
தலையணை தேடும் மனதுடன் !
தனிமையில் தொடரும் அவளுடன் !!

கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..

அடடா,,,, !!!!!!!!!!

உண்மையது எனக்கு அப்போதுதான்
உறைக்கத் தொடங்கியது .....!

உதறிச் சென்றொருக்கெல்லாம்
விரட்டித் தேடி செய்தேனே !
எனை நம்பி வந்தவளை
நினைக்க மறந்தே போனேனே !!

என்னவளின் எண்ணங்களை
எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
கடமையின் நெரிசலில் அவளின்
ஆசைகள் எதையும் அறியவியில்லையே

குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
குனிந்த படியே இருக்கிறேன்....
நேருக்கு நேராக அவளை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....

என்முகத்தை தனக்குள் அணைத்து
தன்மூச்சை எனக்குள் அழுத்தி

இச்சென முத்தம் ஒன்றை
உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
மெதுவாய் கையிலிருந்த உணவை
ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,

மெல்லத் திரும்பி நடக்கிறாள்
மெளனமாய் சிரித்து விட்டு !
*’ நானிருக்கிறேன் ‘* என்ற சேதியை
நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!

ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !

என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
எங்கோ முடியப் போகும் தருணத்தில்
இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
எங்களின் *மன* வாழ்க்கை புதிதாய் !!Bookmark and Share

நான் தேசபக்தன் அல்ல பாமரன்

“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.

அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.

இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”

அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று

தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி...?”

“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”

“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.

எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...

தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்

வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...

நிலங்களை இழந்து...

வாழ்க்கையை இழந்து...

விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக

வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...

சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...

பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...

இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...

நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...

இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற

ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.

அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்

வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?

இந்துஸ்தானோ...

பாகிஸ்தானோ...

இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.

அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...

விவசாயக் கூலியோ...

மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.

கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.

எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.

அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று

கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....

அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக...

சாதிச் சண்டையாக ...

மதச் சண்டையாக...

மாநிலச் சண்டையாக...

உருவெடுத்து தற்காலிகமாக

இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...

ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.

என்னே தேசபக்தி...?

பாவம்...

இவர்கள் விளையாட்டை

போராகப் பார்க்கிறார்கள்

போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்

தண்டனை நம்மைப் போன்ற

‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?
Bookmark and Share

Monday, November 2, 2009

உணர்வாய் மனிதா உண்மையை

முகவரியில்லாத அநாதி இறைவன் படைத்த
அனாதைக் குழந்தை இந்த உலகம் ......
முதலும் முடிவும் இல்லாதவன்
எனினும் எங்கும் முழுமையாய் நிறைந்திருப்பவன்

வெறும்பையன் (nothingness) படைத்ததினால்
கிடைத்த பெரும் பயன் உலகில் உயிர்கள் ....
அவனே ஒன்றுமில்லாதபோது
மனிதன் எம்மாத்திரம் .....
இதை அறியாத சில மனிதர்கள்
பணம், பதவ,ி அதிகார ஆணவத்தால்
தன்னை உயர்வாக (somebody)
எண்ணிக்கொள்கிறான் ...

எல்லா உயிர்களுக்கும் பிரதானமாயிருக்கும்
பிராண வாயு தன்னை விளம்பரம் செய்வதில்லை ...
நீர் நிலைகள் நிறைந்திருக்க நிலைத்திருக்கும்
உலகம், இருந்தாலும் இது தனக்கு
வீதிக்கொரு விளம்பரப் பலகை வைப்பதில்லை ...
பெரும் நெருப்பில் பிறந்த உலகம்
சிறு நெருப்பாய் இருக்கும் உயிர்களுக்குள்
இருந்தாலும் இவை
தனைக்கொரு கட்சி அமைப்பதில்லை ...
நிலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க
வாடகை வசூலிப்பதில்லை பூமி ...
விரிந்து பரந்த ஆகாயம் தன்னை
பெரிதாக எண்ணுவதில்லை ....

ஒன்றுமில்லாமல் வெடித்துப் பிறந்த உலகம்
ஓர் நாள் வெடித்து மறையும் ஒன்றுமில்லாமல் ....

உணர்வாய் மனிதா உண்மையை - உணர்ந்து
உயர்வாய் வாழ்ந்திடு ........TO READ *"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது
" * CLICK HERE..
Bookmark and Share

Wednesday, October 28, 2009

ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்

>
> ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
> ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
> ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
> ஆழ்மனதுள் உன்நினைப் பு
>
> கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
> ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
> ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
> வார்த்தையிலென் மூச்சிருக் கு
>
> ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
> ஊருணிப் பாறையில் ஒருத்தியாத் தானிருக்கேன்
> ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
> யாரென் நிலைசொல்வா ருனக்கு
>
> சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
> செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
> சொத்தைப்போல் எடுத்தெனது சட்டையில் சுத்தியே
> மெத்தைக்குள் வச்சிருக் கேன்
>
> ஊருவந்து தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
> யாருவந்து பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
> உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
> கன்னியிருப் பாளிங்கேக் காத்து
>
> என்றும் மறையாத என்மனச் சூரியனே
> இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
> காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
> காத்திருப்பேன் நான்கரையா மல்
>
> கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
> துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கு
> காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
> காத்திருப்பேன் உன்னைநான் இங்கு
>
> [ அமைப்பு : வெண்பா - இன்னிசை
> நன்றி : ILLAM GROUP ]
>
>Bookmark and Share

உண்மையின் நெருடல்

> ஒட்டு மொத்த குடும்பமும்
> ஒரு தோளின் மேல் தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
> தலைமகன் நான்.
>
> சன்னல் கதவுக்கு ஒன்று
> வாசல் காலுக்கு இரண்டென
> வீட்டுக்கே மூச்சுத் திணறும்
> கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்
>
> மணம் முடித்த அவளுடன்
> மனம் விடுத்துப் பேசவே...
> வந்தவளுடன் தனிமையில்
> தொந்தரவின்றிப் பேசவே...
> வாரம் ஒன்று முழுதாய் ஆனது
>
> மண வாழ்வைத் தெடங்கவே
> மாதம் மூன்றுக்கும் மேலானது
>
> இயந்திர உலகில் கரையேற
> இயந்திரம் போல் இயக்கம்..........
>
> தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
> திருமணம் , புகுந்தவீடு பயணம்........
>
> தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
> தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........
>
> பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
> பராமரிப்பு , கடைசிப் பயணம்...........
>
> குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
> திருமணம் ,வெளிநாடுப் பயணம்........................
>
>
> பயணம்,பயணம்,பயணம்............
> பயணத்தைத் தொடர்ந்து
> பயணிக்க வைக்க எனக்கும்
> சயனம் இல்லாத பயணம்.........
>
> எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
> வந்துசேர்ந்தது பணி ஓய்வும்
>
> இதோ.....
>
> சுற்றியிருந்த உறவெல்லாம்
> விட்டுச் சென்ற பிறகு நான்...
> தலையணை தேடும் மனதுடன் !
> தனிமையில் தொடரும் அவளுடன் !!
>
> கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
> நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
> அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
> அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..
>
> அடடா,,,, !!!!!!!!!!
>
> உண்மையது எனக்கு அப்போதுதான்
> உறைக்கத் தொடங்கியது .....!
>
> உதறிச் சென்றொருக்கெல்லாம்
> விரட்டித் தேடி செய்தேனே !
> எனை நம்பி வந்தவளை
> நினைக்க மறந்தே போனேனே !!
>
> என்னவளின் எண்ணங்களை
> எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
> கடமையின் நெரிசலில் அவளின்
> ஆசைகள் எதையும் அறியவியில்லையே
>
> குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
> குனிந்த படியே இருக்கிறேன்....
> நேருக்கு நேராக அவளை
> நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....
>
> என்முகத்தை தனக்குள் அணைத்து
> தன்மூச்சை எனக்குள் அழுத்தி
>
> இச்சென முத்தம் ஒன்றை
> உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
> மெதுவாய் கையிலிருந்த உணவை
> ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,
>
> மெல்லத் திரும்பி நடக்கிறாள்
> மெளனமாய் சிரித்து விட்டு !
> *’ நானிருக்கிறேன் ‘* என்ற சேதியை
> நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!
>
> ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
> அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !
>
> என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
> எங்கோ முடியப் போகும் தருணத்தில்
> இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
> எங்களின் *மன* வாழ்க்கை புதிதாய் !!
>
>Bookmark and Share

என்ன செய்தாய் என்னை...

"நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி"

"உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி "

"சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி "

"நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்"

"உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன"

"கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!Bookmark and Share

Wednesday, October 7, 2009

உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்
**
*ஆம்........*

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

*ஆனாலும்......*

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

*அது..........*

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

--Bookmark and Share

முயற்சித் திருவினையாக்கும்

>> *தோல்வியின் விளிம்பில்
>> தொட்டதெல்லாம்
>> துளிரவில்லையென
>> **துவளுகின்றாயே *
>> *முகமெல்லாம் வாட்டம்
>> முடிவில்லாப் பயணம்
>> முடியுமாவென
>> கலங்குகின்றாயே
>> முகவாட்டம் களை
>> எறும்பைப் பார்
>> எங்கிருந்து வந்தது
>> எதையும் தாண்டும்
>> எதிர்ப்பாற்றலதற்கு
>> சிறிய தோல்விக்கே
>> சிதறிவிடாதே
>> சிறிய நம்பிக்கைப் பூவினை
>> சித்தத்தில் சேர்த்துவிடு
>> திரும்பிப் பார்
>> உனக்கு ஒப்பார்
>> ஒருவர் இருப்பார்
>> எனத் தெரியவில்லை
>> எனதருமை நண்பா
>> முன்னே பார்
>> முடியாதது ஏதுமில்லை
>> முடியும் உன்னால் மட்டுமே
>> முடிவுடன் தொடங்கிவிடு
>> முதலிடு நம்பிக்கையை
>> முழு உழைப்பையும் சிந்திவிடு
>> முடிவில் அறுவடை செய்வாய்
>> முதல் வெற்றியை
>> முன்னேறும் வழிதனை
>> முக்கிய செய்தியாய்
>> முழங்கிட்டேன்
>> முயன்றுப் பார்
>> முயற்சித் திருவினையாக்கும் *
Bookmark and Share

Tuesday, September 15, 2009

ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரலம்பன் இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கம்சன் இந்த மூன்று
நாட்களும் தூங்கவே இல்லை. பகலும், இரவும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றாகவே
இருந்தது. தன்னந்தனியாகத் தன் அறையில் அமர்ந்து யாருடனும் பேசாமல்
யோசித்தவண்ணமே பொழுதைக் கழித்தான். யோசனை என்றால் சாமானியமான யோசனையா அது?
வசுதேவனின் மகன் அதுவும் எட்டாவது மகன் உயிருடன் இருக்கின்றானா? அதுவும்
அப்படியா? அவனைச் சும்மாவிடுவதா? விடுவதா?? ஹாஹ்ஹாஹா! வாசுதேவ கிருஷ்ணா, நீ
எனக்கு எமனா? நான் உனக்கு எமனா? பார்த்துவிடுவோம். அவன் அழிந்தே ஆகவேண்டும்.
இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்றாராமே வேத வியாசமுனி?? யார் உய்விக்கப்
போகின்றார்கள் பார்க்கலாம். உயிருடன் இருந்தால் தானே உலகை உய்விக்க முடியும்?
என்னால் இறக்கப் போகின்றான், அவனை மட்டுமின்றி அவனுடன் சேர்த்து இந்த யாதவத்
தலைவர்கள் அனைவரையும் கூட அழித்தால் நல்லதுதான். அனைவருக்கும் பனிரண்டு
ஆண்டுகள் நான் இல்லாமல் துளிர்த்துவிட்டது. கம்சன் ஒரு முடிவுக்கு
வந்துவிட்டான்.

CONTINUE ... READING....
Bookmark and Share

Monday, September 14, 2009

இடிவந்து தாக்கியது போல....

கோவில்முரட்டுக் காளைபோல நான்
காதல் சொல்ல வந்துநிற்கிறேன்

*’’மறுத்துவிடாதே என்கண்ணே !*
*மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!*

மற்றவன் பார்வைக்கு எப்போதும்நீ
அரைக்கிழவியாய் இருந்தாலும்

உற்றவன் எனக்கு இப்போதும்நீ
பேரழகியாகத்தான் தெரிகிறாய் !

*மறுத்துவிடாதே என்கண்ணே !*
*மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!*

ஏதோ ஒருகணத்தில் மட்டும்நீ
ராட்சசியாகத் தெரிந்தாலும்

Continue .. Reading Here..
Bookmark and Share

Thursday, August 27, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு!

“பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”


“உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை

“மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன்நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.”

நிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும்.
காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான்.
ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும்,
மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும்,
ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய
கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம்.

“பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.”

பந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன்
அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப்
பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப்
புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி
நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும்
கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம்.

“இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்றுதினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரஞ்செயினும்
சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுகம் பெறும் எண்
தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்”

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

அமரர்கள் தொழுதெழ அலைகடல்

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி

திருக்குருகூர்தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான்
உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில்
தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு
இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி
கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத்
தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார்
ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும்
இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற
பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே
முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை
பற்றிப் பார்ப்போமா??

ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும்
இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில்
போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும்
பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்???
விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை
வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்!
கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை
உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்!
அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே

வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடியாடி வேலை செய்து களைத்த உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரவென்றே சிறந்த பல சுற்றுலாத் தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இத்த்தலத்தில் சித்தாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. இங்கே இருக்கும் அருவிகளில் குளிக்கையில் அருவி நீரில் கலந்துள்ள பலவிதமான மூலிகைகளின் சிறப்பால் உடலுக்கு ஏற்படும் மகிழ்வும் தெம்பும் அளவிடற்கரியவை என்று இங்கே வந்து அருவிக் குளியலை அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

ஒருநாள் நானாவேன்..

நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

*உன்னைப்போல நானல்ல !*

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

Wednesday, August 26, 2009

சன்னல் நடுவே உன் முகம்

இதோ சன்னல் வழியே உன் முகம் .
புன் சிரிப்புடன் எட்டிப்பார்க்கிறாய். .
கலகலவென்று சிரிக்கிறாய்.
அச்சிரிப்பில் நான் மயங்கிப்போகிறேன்.
வெளிவேலையும் மறக்கிறேன் .
இதயத்தில் ஒரு துடிதுடிப்பு
உன்னை அள்ளத் தவிக்கிறேன் .
உன் வீடு வரத்துடிக்கிறேன்


நடுவில் பாதி முகம் காட்டுவது ஏன் ?
சன்னல்திரையில் மறைவது ஏன் ?
ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பது ஏன் ?
தெருவில் போகும் கார்கள் மட்டும்
உன்னை மிகவும் கவர்வது ஏன் ?
திடீரென்று நிலவு போல்
முகம் மலர்ந்து கைக்கொட்டுவதேன்?
உன் தந்தை வருவதைப்பார்த்துத்தானோ......
இந்தக்குதி குதிப்பது ஏனோ?

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

விநாயகர் பிறந்தநாள்

“மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு.
அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும்,
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த்
திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே
வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

Tuesday, August 25, 2009

ஒரு குழந்தை ஆவணி மாதத்தில் மாதக்கடைசியில் பிறந்தால்

சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் இருப்பார் பின் வைகாசியில்
ரிஷபம் ,ஆனியில் மிதுனம் ஆடியில் கடகம்
ஆவணியில் சிம்மம் என்று போய் பங்குனி மாதத்தில் மீன ராசியில் வந்துவிடுவார்

ஒரு குழந்தை ஆவணி மாதத்தில் மாதக்கடைசியில் பிறந்தால்
அந்தக்குழந்தை சிம்ம லகன்மாக இருக்கும் பஞ்சாங்கத்தில் முழு
விவரம் எழுதப்பட்டிருக்கும் ஆகையால் எத்தனாவது பாகையில்
இருக்கிறது என்பதைக்கண்டுப்பிடித்தால் என்ன பாதம் என்றும் தெரிய வரும்
.அதாவது ஒரு இராசியை முப்பதாகப்பிரித்தால்
அதன் ஒவ்வொரு பாகமும் ஒரு பாகை என்கிறோம் அந்த ராசியை
ஒன்பதாகப்பகுத்தால் ஒவ்வொரு பகுதியும் ஒரு நட்சத்திர பாதம் என்கிறோம்
பஞ்சாங்கத்தில் இந்த table கொடுத்திருப்பதால் நாம் மிக எளிதாக இதை
எழுதிவிடலாம்

TO CONTINUE READING...CLICK HERE
Bookmark and Share

Saturday, August 22, 2009

என் சொத்து ,,,,,

என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில் ,
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்,
பல முறை கக்கல் .
அம்மாவின் புடவையில் .
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை

இரண்டு வயது பாலகன் ,
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்,
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து .

கடும் சுரம் வந்தது ,
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன் ,
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை

கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன் ,
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன் ,
ஒத்தி எடுத்தாள்,
தன் முந்தானையால் .
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்,
தன் பேரனுக்குச் செய்தாள் ,,
அவள் முகம் சுளுக்காமல் .

இன்று அவள் இல்லை .
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன் .
என்ன தியாகம் ! என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா ?Bookmark and Share

பொங்கி வரும் பெரு நிலவு

"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!

என்று பாவேந்தர் பாரதிதாசன் வியந்து போற்றி மகிழ்ந்து பாடிய வெண்ணிலா விண்ணில் நிலவும் இரவுப் பொழுதினை ரசித்து மகிழாத கவிகளுமில்லை காதலர்களுமில்லை. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் மனதுக்கினிய வஸ்து ஒன்றுண்டென்னில் அது வானத்தில் மிதந்து வரும் நிலவன்றி வேறில்லை.

குறிப்பாகக் காதல் வயப்பட்ட இளைஞன் ஒருவன் அக்குளிர் நிலவை விண்ணில் மட்டுமன்றி நேரில் தங்கள் காதலியின் முகத்திலும் கண்டு மகிழ்கிறான்.

"பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்"

என்று இக்கருத்தை ஏற்றிச் சொல்கிறார் மஹாகவி பாரதி.

வானிலே வரும் வெண்ணிலவு தன் காதலி வடிவில் வாழ்வில் தன்னுடன் வந்தால் ஒருவனுக்கு அதனை விடவும் வேறேது சொர்க்கம்?
Bookmark and Share

Wednesday, August 19, 2009

"வெஸ்டர்ன் கல்சர்"

"வெஸ்டர்ன் கல்சர்" எனப்படும் அயல் நாட்டு நாகரிகத்தின் மேல் நம் நாட்டவருக்குள்ள மோகம் என்பது இன்று புதிதாய் ஏற்பட்டதல்ல. இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் அடியெடுத்து வைத்த நாளிலேயே துவங்கி வளர்ந்து படிப்படியாக நமது நாட்டையே அவர்களது கையில் தூக்கிக் கொடுக்கும் அபாயகரமான நிலையை உருவாக்கியது இத்தகைய மோகமே என விவரமறிந்த மூத்தவர்கள் கூறுவர்.

ஆங்கிலேயர்கள் ஊற்றிக் கொடுத்த சீமைச் சாராயத்திற்கும், பிற உல்லாச, சால்லாப விளையாட்டுக்களுக்கும் அடிமையான அந்தக் கால இந்தியப் பகுதிகளின் குறுநில மன்னர்கள் பலர் இத்தகைய ஆடம்பர நடவடிக்கைகளால் வெள்ளையருக்குப் பெரும் பணம் கடன்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீளும் நோக்கில் தமது நாட்டின் சில பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்கு அளித்தனர். இத்தகைய அபாயகரமான நடவடிக்கைகள் வளர்ந்து "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல" ஆங்கிலேயர்கள் நமது நாட்டிலிருந்த பல குறுநில மன்னர்களைத் தந்திரமாக ஒழித்துக் கட்டி சிறுகச் சிறுக நாட்டையே கைப்பற்றினர்.

நமது நாட்டிற்கு உலகளாவிய அளவில் மிகுந்த மரியாதை இன்றும் தொடர்ந்து கிடைப்பதற்கான முக்கியக் காரணம் நமது குடும்ப அமைப்பும், சமுதாயக் கட்டுப்பாடும், உயர்ந்த கலாச்சாரமுமே ஆகும். நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க தொன்மை வாய்ந்த கலைகள், குறிப்பாக, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலாய கலைகள் உலக அளவில் மிகவும் மேன்மை பெற்று விளங்குவதற்குக் காரணமும் அவற்றின் அடிப்படையான நமது கலாச்சாரமே ஆகும்.Bookmark and Share

Monday, August 17, 2009

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்
பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்

என்றார் மஹாகவி பாரதி.

சொர்க்கம், நரகம் என்று தனியாக ஏதும் கிடையாது. இவ்வுலகே சொர்க்கமும் நரகமும் ஆகும் என்பது கண்கூடு. வெயிலில் வாடும் உயிர்களுக்கு நிழல் தந்து, காற்றில் மிகுந்திருக்கும் கரியமில வாயுவை உண்டு பிராண வாயுவை உமிழ்ந்து, உயிர்கள் அனைத்தும் வாழ வழி செய்து, வான் மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைத்து, பூமியைக் குளிரச் செய்து, பயிர்கள் வளர ஏதுவாகி உலகிலுள்ளோர்க்கெல்லாம் உணவளித்துக் காக்கும் மரங்களையும் மரங்கள் மிகுந்த வனங்களையும் அழித்து, கல்லும் மண்ணும் கலந்து கட்டடங்கள் எனும் பெயரில் தம்மைத் தாமே உயிரோடு சமாதி வைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மரங்களின் அழிவினால் அதிகமாகும் உஷ்ணத்தைக் குளிர்விக்கவென்று ரெஃப்ரிஜிரேடர், ஏர் கண்டிஷனர் எனும் பெயர்களில் கண்டறிந்து பயன்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளில் பயன்படும் ரெஃப்ரிஜிரண்ட் எனும் திரவம் ஆவியாகி மேலே சென்று ஆகாயத்தில் படர்ந்து நின்று உலகை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் காத்து ரக்ஷிக்கும் ஓசோன் படலத்தை அழிப்பதனால் உலகின் வெப்பம் மேலும் அதிகரித்து, துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் அதிகரித்து, ஜல சமாதியாகும் வழியையும் தேடிக்கொண்ட மனிதனுக்கு இவ்வுலகம் நரகமே.

ஆறுகளில் ஆலைக்கழிவுகளை அபரிமிதமாகக் கலப்பதால் ஆற்று நீரை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் கொடும் விஷமாக மாற்றுவதோடு, குடிநீர் வடிகால் வாரியங்களின் மூலம் பூமிக்கடியில் நிறுவப்படும் குழாய்கள் ஓட்டையாவதால் சாக்கடை நீர் குடி நீருடன் கலந்து வர எமனை வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மானுடா, உனக்கு இவ்வுலகமே சொர்க்கமாக அமைய வழி தேடு, இயற்கையை அழிக்காமல் காப்பாற்று, இயற்கை உன்னை என்றென்றும் காப்பாற்றும்.Bookmark and Share

சுக முனிவர்

சுக முனிவர் ஒரு சமயம் "கடவுளே, கடவுளே யோ!" என்று கூவிக்கொண்டு போகையில் அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, மலர், பறவை, விலங்கு அனைத்தும் "ஏன்? ஏன்?" என்று கேட்டனவாம். இதைத் தாயுமானவர், "அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்றதென்னே பராபரமே" என்று சொல்கிறார்.

"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
'சொல்'லென்று ஹரண்யன் தான் உறுமிக்கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் 'தூணி லுள்ளான்,
நாராயணன் துரும்பினுள்ளா' னென்றான்,
வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை,
அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?"

என்று மஹாகவி பாரதியார் சொல்கிறார்.

பக்தர்களுக்குள் நான் பிரஹலாதன் எனக் கண்ணன் தனது கீதையில் உரைக்கிறான். பிரஹலாதன் அன்பு வடிவானவன் என்பதை இரண்யன் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இறைவன் இல்லாத இடமில்லை. இறைவனைக் காண வேண்டின் அகக்கண்ணைத் திறந்து வைத்து அன்பு நெறியில் செல்ல வேண்டும். அப்பொழுது இயற்கையின் ரகசியம் புரியும். அனைத்து உயிரினங்களுடனும் உள்ளுணர்வால் தொடர்பு கொள்ள இயலும். இதனையே ஆத்ம சக்தி என்பர்.Bookmark and Share

Friday, August 14, 2009

“யார் அந்த மஹாபெரிய ரிஷி?”

நந்தனின் தந்தைக்கு சிராத்தம் நடத்தி வைக்கவேண்டி கர்காசாரியார் மதுராவில்
இருந்து வந்திருந்தார். உண்மையான காரணம் இதுவல்ல என்றாலும், வெளிப்படையாகத்
தெரிவிக்க முடியாதே? தன்னுடன் மூன்று சீடர்களையும், மரியாதைக்கும்,
பெருமதிப்புக்கும் உரிய மற்றொரு குருவான சாந்தீபனி என்பவரையும் அழைத்து
வந்திருந்தார். சாந்தீபனியோடு அவரின் மகன்களும், மற்றும் இரு சீடர்களும்
வந்திருந்தனர். நீத்தார் கடன் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் நந்தன்
கர்கரோடும், சாந்தீபனியோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு உடனேயே கிருஷ்ணனை அங்கே
அழைத்தான். கிருஷ்ணன் ஆசாரியர்களின் பாதம் பணிந்து நமஸ்கரித்துவிட்டுக் கூப்பிய
கரங்களோடு அங்கே நின்றான். கர்கர் கிருஷ்ணனை ஆசீர்வதித்துவிட்டுச் சொன்னார்:
“கண்ணா, ஆசாரியர் சாந்தீபனி இவர் தான். இவரை உனக்காகவே இங்கே வரவழைத்தேன். இனி
இவர் இங்கேயே தங்கி உனக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்களில் தேர்ச்சி பெறவும்
சொல்லிக் கொடுப்பார். “

“என் தந்தைக்கு என்ன விருப்பமோ அதே என் விருப்பமும். ஆனால் குருதேவா, நான் என்ன
யுத்தம் செய்யப் போகின்றேனா என்ன?? எனக்கு எதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம்?”
கிருஷ்ணன் கேட்டான்.

நந்தன் கர்காசாரியாரைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துவிட்டுச் சொன்னான்.
“யாருக்குத் தெரியும்? ஒரு நாள் நீ அரசனாய்க் கூட ஆகலாம்.”
“இல்லை தந்தையே, நான் உங்களுடனே இருக்கவே ஆசைப்படுகிறேன். உங்களையும் யசோதை
அம்மாவையும், இந்த பிருந்தாவனத்தையும், கோபர்கள், கோபிகள், மற்றும் நம்முடைய
பசுக்கள், கன்றுகள் இவற்றைத் துறந்து எங்கேயும் செல்ல விருப்பமில்லை எனக்கு.”

கர்கர் கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணனைப் பார்த்து, “நந்தகுமாரா,
மஹரிஷிகளுக்கெல்லாம் தலைவர் ஆனவர், முனிவர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவர்,
அவர் உன்னால் தான் தேசத்தில் அமைதியும், தர்மமும் கொண்டுவரப்படவேண்டும் என்றும்
நீ இருக்குமிடத்திலேயே அவை இருக்கும் என்றும் சொல்லுகின்றார்.” என்று சொன்னார்.

“யார் அந்த மஹாபெரிய ரிஷி?” கண்ணன் கேட்டான்.
“என்ன? நீ அவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லையா? மஹான் வியாசர் தான் அவர்.
வேதவியாசர் என்றும் சொல்லுவதுண்டே அவரை?’” சாந்தீபனி இப்போது பேசினார்.

“ஓ, அவரா, பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் அவரைப் பற்றி. குரு
கர்காசாரியார் சொல்லியுள்ளார். ஒருநாள் குருக்ஷேத்திரம் சென்று அவரை
வணங்கவேண்டும்.” கண்ணன் சொல்லுகின்றான்.

அப்போது நந்தன் குறுக்கிட்டு, “ கண்ணா, என் அருமை மகனே, உன் வேண்டுகோளை இப்போது
குரு கர்காசாரியாரும் சாந்தீபனியும் இருக்கும்போது சொல்லிவிடு. இனி நீயாச்சு,
ஆசாரியர்களாச்சு. உன்னுடைய விசித்திரமான வேண்டுகோளால் என்னால் இனி
அவதிப்படமுடியாதப்பா!” என்று பாதி கேலியாகவும், மீதி உண்மையாகவும் சொன்னான்
நந்தன். கண்ணன் ஒன்று கேட்டான், நந்தன் அதை மறுத்தான் என்பது இன்று வரை
கிடையாது. இனியும் அப்படி நேராமலிருக்குமா???

“என்ன கேட்கின்றான் கிருஷ்ணன்?” கர்கர் கேட்டார்.
“அவன் விருஷபாநுவின் மகள் ராதையை மணக்க விரும்புகிறான். உங்களுக்கு அவனைத்
தெரியும். அந்தப் பெண்ணும் கண்ணனைவிட வயதில் மூத்தவள். மேலும் அவள் ஐயனுக்கென
நிச்சயம் செய்யப் பட்டாவள். அதோடு கூட ஆசாரியரே, கண்ணன் எப்படி இருந்தாலும்
ராதையை மணக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.” நந்தன் நிறுத்தினான்.

“ஏன் குருதேவா, ஏன்?” கண்ணன் கேட்டான்.

“எனெனில் அது நடக்கமுடியாத ஒன்று” குருதேவர் பதில் சொன்னார்.

“தந்தைதான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே? ஆனால் அவள்
என்னை மணக்க விரும்புவதையும், நானும் அவளை மணக்க விரும்புகிறேன் என்பதையும்
இங்கே சொல்லுகின்றேன். என்னை மன்னியுங்கள். “

“ம்ம்ம்ம்ம்ம்?? குழந்தாய், திருமணம் என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல.
வெறும் விருப்பத்தின் பேரில் அது நடக்கவும் முடியாது. அது மாதிரி நடப்பது
என்பது தர்மத்தின் பாதையில் செல்பவர்களால் முற்றிலும் ஏற்கமுடியாத ஒன்று.
திருமணத்தில் வெறும் விருப்பத்தை மட்டும் பார்க்கமுடியாது மகனே. குடும்ப
கெளரவம், குடிப்பிறப்பு, வயது, மனோபாவம், வளர்ப்பு, எதிர்காலம் என்று எத்தனையோ
பார்க்கவேண்டும். இது சும்மா ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து இருக்கிறது மட்டும்
இல்லை. மிகவும் புனிதமான ஒன்று. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அறமும்,
தர்மமும் கடைப்பிடித்து அதன் வழி வாழவேண்டிய முக்கியமான நோக்கம் திருமணத்தில்
உள்ளது. இருவரும் ஒரு மனதோடு ஈருடல் ஓருயிராகிக் கடைப்பிடிக்க வேண்டிய
தர்மங்கள் திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுகிறது.”

“திருமணம் செய்து கொள்ளுபவர்கள் அனைவருமேயா தர்மத்தின் பாதையில் அறவழியில்
செல்லுகின்றனர்? நான் விருஷபாநுவின் மகளைத் திருமணம் முடித்தால் தர்மம் எங்கே
கெட்டுப் போகும்? இதில் அதர்மம் எங்கே வந்தது? நாங்கள் கோபர்கள் தானே?
எங்களுக்கு எதற்கு இதெல்லாம்?””
கர்காசாரியார் சற்றே கவலையுடனும், யோசனையுடனும் நந்தனைப் பார்த்தார்.
“கிருஷ்ணா, தர்மங்களுக்குள்ளே மிக உயர்ந்த தர்மத்தை உன்னால் தான் காக்க
முடியும். உனக்காக அது காத்திருக்கிறது.”

கிருஷ்ணன் வியப்போடு வயது முதிர்ந்த கர்காசாரியாரைப் பார்த்தான். குரு மேலும்
சொன்னார்:” குழந்தாய், நீ பிறந்ததில் இருந்தே நான் உன்னை ஒவ்வொரு கணமும்
அறிவேன். பார்த்தும் வருகிறேன். முனிவர்களில் சிறந்த வேதவியாசரே கூறியுள்ளார்,”
இந்தப் பிள்ளையால்தான் தர்மம் காக்கப்படவேண்டும். இவன் பிறந்திருக்கும் காரணமே
அதுதான். இது கடவுளரால் ஆணையிடப் பட்ட ஒன்று. என்று சொல்லியுள்ளார்.” இவ்விதம்
சொல்லிவிட்டு கர்காசாரியார் சாந்தீபனியைப் பார்த்தார். சாந்தீபனியும் அதை
ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிவிட்டு, அதன் காரணமாகவே தான் இங்கே
வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய மனிதர்களோடு தன்னுடைய விதி
பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. சாந்தீபனியிடம், “நான்
என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான். “உன்னுடைய
லட்சியத்தை அடைய நீ தயாராய் இரு!” என்றார் கர்காசாரியார். கண்ணன் புரியாமல்
குழம்ப, நந்தன் மீண்டும் கண்ணசைக்கிறான் குருவிடம். உடனேயே கர்கர் மேலும்
சொல்லுகின்றார். கண்ணனுக்கு இப்போது முழு உண்மையும் தெரியவேண்டிய தருணம்
வந்துவிட்டது. அவனைத் தயார் செய்யவேண்டும். கர்காசாரியார்
முடிவெடுத்துவிட்டார்.
Bookmark and Share

ஜயஸ்ரீ ராதே கிருஷணா

நாராயணீயத்தில் ஸ்ரீ நாராயண பட்டதிரி கிருஷ்ணாவதாரத்தைக்
கண்டு களிக்கிறார் அந்தப்பகுதி கீழே .......

ஆநந்த ரூபே பகவந்நயி தே{அ}வதேரே
ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமணை:
காந்திவிரஜைரிவ கநகநமண்டலைர்த்யா
மாவ்ருண்வதி விருருசெகில வர்ஷவேலா

ஆனந்தவடிவே பகவானே உன் அவதாரத்திற்கு உரிய காலம் நெருங்கியது பெரிய
மேகங்களின் கூட்டங்கள் உன் திரு மேனியினின்றும் வெளிக்கிளம்பிய
கதிர்களின் படலங்களைப்போலத் தோன்றின அவை வான வெளியைமறைத்துக்கொண்டிருந்தன

ஆசாஸூ சீதல தராசு பயோததோயை
ராசாஸிதாப்தி விவஷேஷுச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதயவிதௌநிசி மதய்மாயாம்
க்லேசாபஹஸ் த்ரிஜகதாம் த்வமிஹாவிராஸி

மேகங்களின் நீரினால் திசைகள் எல்லாம் நன்றாகக் குளிர்ச்சியை
அடைந்தன நல்லோர் விரும்பியது கைகூடியதால் பெரு மகிழ்ச்சியில் தம் வயம்
இழந்தனர் அப்போது நள்ளிரவில்
சந்திரன் தோன்றுவதற்கு உரிய வேளையில் மூவுலகத்தின்
துன்பங்களை அழைப்பவனாகிய நீ இவ்வுலகில் தோன்றினாய்

பால்யஸ்ப்ருசாபி வபுஷா ததுஷா விபூதி
ருத்யத் கிரீட கடகாங்கத ஹாரபாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸ்தேந பரிலேஸித ஸூதிகேஹே;;

இளம் பருவத்தின் நிலையை அடைந்திருந்தாலும் உன் திருமேனி மிகுந்த வல்லமை
வாய்ந்தது கிரீடம் கைவளை தோள்:வங்கி முத்துமாலை முதலியவற்றின் ஒளியோடு
திகழந்தது,
சங்கு சக்கரம் தாமரைமலர் கதாயுதம் ஆகியவற்றால் பெரிதும்
விளங்கியது கருமேகம் போல் நீல நிறத்தோடுதோன்றியது அத்தகைய அழகுடன் நீ
பிறந்தாய் ,,,,,,,,

கிருஷண ஜனனம் பாகத்தைப்படித்தால் அளவில்லாத பலன்கள் எழுதப்படிருக்கிறது

அவருடைய வர்ணனை

உன் கிரீடம் ஒளியில் சூரியனோடு போட்டியிடுகின்றது நெற்றிமேல் நோக்கி
இடப்பட்ட திலகத்தால் அழகு கூடுகிறது கண்கள் அருள் நிறைந்து நிற்கின்றன
வாயில் புன்னகை கனிந்து
தவிழ்கின்றது மூக்கு வெகு தீர்க்கமாக அழகாக உள்ளது மகர குண்டலங்கள்
காதுகளில் பிரகாசிக்கின்றன கௌஸ்துப,மணி கழுத்தில் ஒளி வீசுகிறது வனமாலை
முத்துமாலை ஸ்ரீவதஸம்
மார்பில் விளங்குகின்றன இவற்றுடன் கூடிய உன் உருவத்தை நான் தியானிக்கிறேன்
ஜயஸ்ரீ ராதே கிருஷணா ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்Bookmark and Share

துகாராம் தான் என் வாழ்க்கை

மஹாராஷ்ட்ராவில் ஸ்வாமி துக்காராம் சிவாஜி மஹாராஜின்
சமகாலத்துவர் . ஸ்ந்த் துகாராமுக்கு சில சிஷ்யர்கள் இருந்தனர் அவர்களில்
முக்கிய சிஷ்யர்கள் துகாராமின் தம்பி கான்ஹோபா
சாந்தாஜி தேலி கங்காஜி மாவல் ஷிவ்ஜி .இவர்கள் துகாராமுடன் பஜன்
கீர்த்தனுக்கு அவருடனே இருந்து பாடுவர்கள்
ஷிவ்ஜி வீட்டிலேயே இருக்காமல் அவருடனேயே சுற்றிக்கொண்டு
இருப்பது கண்டு அவள் மனவி வருந்தினாள்.
" ஏன் இப்படி வீட்டை மறந்து விட்டு அவருடன் சுற்றுகிறீர்கள் ? நம்
குடும்பம் இருப்பது தெரியவில்லையா ?' என்று ஒரு நாள் குரலை
எழுப்பிக்கேட்டாள் .
அவர் அதைப் பொருட்படுத்தவில்லை "துகாராம் தான் என் வாழ்க்கை ?என்று
சொல்லியபடியே போய்விட்டார் ஷிவ்ஜியின்
இப்போது கோபமும் வந்தது இந்தத்துகாராம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்
அவருக்கு எதாவது செய்யவேண்டும் என்று தன் கணவர் மூலமாக ஸ்ந்த துகாராமை
விருந்துக்கு அழைத்தாள் , அவரைக்காலையிலேயே அழைத்து அவரை
ஸ்னானம் செய்யச்சொல்லி அதற்கு வென்னீர் தயாரித்தாள்
அந்த வென்னீர் கொதிக்கும் நிலையில் இருந்தது .அதைவிட்டுக்
குளித்தால் அவ்வளவுதான் உடம்பெல்லாம் வெந்துவிடும்
ஆனால் அந்த விட்டல் ஜகத்ரக்ஷ்கனாயிற்றே துகாராமிற்கு இந்தக்
கஷ்டம் கொடுப்பானா ?அந்த வென்னீரைக்குளிர வைத்து விட்டான்
பார்த்தாள் ஷிவஜியின் மனவி ,,,,,சரி அடுத்ததாகச் சாப்பாடு ,,,
அதில் விஷத்தைக்கலக்கலாம் என்று விஷத்தைக்கலந்து
வைத்தாள் விட்டல் விஷத்தை எல்லாம் முறியடித்து நல்ல அறுசுவை சமையல்
ஆக்கினார் துகாராம் விடைப்பெற்றுக்கொண்டு போனவுடன் அவளுக்குக்குஷ்ட நோய்
வந்து அவளை அழவைத்தது
தன் தவறை உணர்ந்து கதறினாள் பின் ராமேஸ்வர் பட் என்ற
சிஷ்யரை அழைத்து ஷிவ்ஜி தன் மனைவியின் இந்த வியாதியைக் குணப்படுத்த
முடியுமா என்று கேடக அவர் சொன்னார் "துகாராம் மிதித்த மண்ணை எடுத்து
வந்து அவள்
மீது தேய்த்துவிடு நோய் நீங்கிவிடும் என்றார்
அதே போல் துகாராம் மிதித்த மண்ணை எடுத்து வந்து தினமும் தேய்க்க அவளது
குஷ்ட நோய் நீங்கியது.Bookmark and Share

சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்

சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் என்று சொல்லியிருந்தேன் மூலத்திரிக்கோண்
வீடும் சிம்மம் தான் இந்த நிலைமையில் அதை ஆட்சி என்று வைத்துக்கொள்வதா
?அல்லது திரிக்கோணம் என்று வைத்துக்கொள்வதா ? இதைப்பற்றி இப்போது நாம்
பர்ர்ப்போம் .ஒவ்வொரு ராசியிலும் 30 டிகிரி இருக்கின்ற்ன சிம்மத்தில்
முதல் 20 டிகிரி சூரியனின் ஆட்சி பின் வரும் பத்து டிகிரி
மூலத்திரிக்கோணம

இதே போல் சந்திரனுக்கு ரிஷப ராசியில் முதல் மூன்று டிகிரி உச்சம் மற்ற
27 டிகிரி மூலத்திரிக்கோணம்

செவ்வாய்க்கு மேஷராசியில் முதல் 12 டிகிரிமூலத்திரிக்கோணம்
பின் வரும் 18 டிகிரி ஆட்சி

புதனுக்கு கன்னிராசியில் முதல் 10 டிகிரி ஆட்சி அடுத்து வரும் 5
டிகிரி மூலத்ரிக்கோணம் மீதி உள்ள 15 டிகிரி உச்சம்

குருவுக்கு தனுசு ராசியில் முதல் 10 டிகிரி மூலத்திரிக்கோணம்
பாக்கி இருக்கும் 20 டிகிரி ஆட்சி

சுக்கிரனுக்கு துலா ராசியில் முதல் 27 டிகிரி ஆட்சி கடைசி
3 டிகிரி மூலத்திரிக்கோணம்

சனிக்கு கும்பராசியில் முதல் 20 டிகிரி மூலத்திரிக்கோணம்
பாக்கி பத்து டிகிரி ஆட்சி

கிரஹங்கள் சில ராசிகளில் மிகுந்த நட்பாகவும் சில ராசிகளில் சம்மாகவும்
சில ராசிகளில் பகையாகும் இருப்பது போல்
கிரகங்களுக்குள்ளேயும் நட்பு சமம் பகை என்பது உண்டு

சூரியனுக்கு நட்பு கிரகங்கள் சந்திரன் செவ்வாய் குரு

ப்கை கிரகங்கள் சுக்கிரன் சனி இராகு கேது

சம கிரகங்கள்,,,,,,,,,,,புதன் மட்டும்தான்

சந்திரனுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் புதன்

பகை கிரகங்கள் இராகு கேது

சம கிரகங்கள் செவ்வாய் சுக்கிரன் குரு சனி

செவ்வாய்க்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன் குரு

பகை கிரகஙகள் புதன் இராகு கேது

சம கிரகங்கள் சுக்கிரன் சனி

புதனுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன்

பகை கிரகங்கள் சந்திரன் மட்டுமே

சம கிரகங்கள் செவ்வாய் குரு சனி ராகு கேது

குருவுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

பகை கிரகங்கள் புதன் சுக்கிரன்

சம கிரகங்கள் சனி ராகு கேது

சுக்கிரனுக்கு நட்பு கிரகங்கள் புதன் சனி ராகு கேது

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன்

சம கிரகங்கள் செவ்வாய் குரு

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன் சுக்கிரன் ராகு கேது

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

சம கிரகங்கள் குரு மட்டுமே

ராகு கேது நட்பு கிரகங்கள் சுக்கிரன் சனி

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

சம கிரகங்கள் புதன் குருBookmark and Share

பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு

பொதுவான செயல்பாடுகளில் பொறுமையைக் கடைபிடிக்கும் ஆண்கள் காதல் விஷயத்தில் பெரும்பாலும் அவசரக்காரர்களாக இருக்கிறார்கள். தன் மனம் கவர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தன் காதலை வெளியிட்டதும் உடனே அவள் தானும் அவனைக் காதலிப்பதாகக் கூற வேண்டுமென எதிர்பார்ப்பது ஒரு ஆணின் இயல்பு. இதற்கு நேர்மாறாக, பொதுவான செயல்பாடுகளில் அவசரத்தைக் காட்டும் பெண்கள் காதல் விவகாரம் என வந்துவிட்டால் வாய்மூடி மௌனிகளாகவே இருப்பது அவர்களது இயல்பு. இதற்குக் காரணம் இயற்கையாகவே பெண்களிடமுள்ள நாணம், அவர்கள் உள்ளத்தில் உண்மையிலேயே காதல் உணர்வு எழுந்தாலும் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் தன்மையைத் தருவதாகும்.

இயல்பாக நாண உணர்வு அதிகம் இல்லாதிருந்தபோதிலும், தன்னிடம் காதலைச் சொன்ன ஆணின் மனதை அலைபாய வைத்து வாட்டுதல் சில பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு. எங்கே அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று எண்ணி தன்மேல் காதல் கொண்ட ஆண்கள் தவிக்கும் தவிப்பைக் கண்டு அளவிலா சந்தோஷமடைவார்கள் இத்தகைய பெண்கள்.Bookmark and Share

Wednesday, August 12, 2009

* அவர்கள் அறிவதில்லை..........!!!!!*

*அவர்கள் அறிவதில்லை.......**
*
*கழுத்தில் ஜம்பமாய்....புதிதாய்... பதவியேறிய..*
*பத்துப் பவுன் தாலிக்கொடி.....!!!*
*நெஞ்சமெல்லாம்...... தான்....*
* இன்னாரின் மனைவி என்ற*
*யௌவன கர்வம்....கனக்க...*
*கிடைத்த பதவிக்குப் சான்றாய் ....*
*பலவிதத்தில்.....சொர்ணம்......*
*அவளை அணிந்திருக்க....*
*கூடிய எடையோடு.....*
*இடை பிடித்து.... அவரின் தோளில்..*
*முகம் புதைத்து....எதையோ பேசி....*
*எதற்கோ சிரித்து....மகிழ்ச்சியை...பகிரங்கமாக்கி ....... *
*காற்றுக்கு ...கிண்கிணிகளை ,,,,வாரி இறைத்து....*
*கூத்தாடும் மனசோடு......பத்து மைல் தள்ளிப் போய்.....*
*பாடாவதி சினிமா பார்க்க...கருப்பில் நுழைவுச்சீட்டு வாங்கி......*
*உலக உருண்டையை எட்டி மிதித்து விளையாடும் ...*
*பாவனையில் அவர்கள்.....!!!*
*
*
*புது மணத்தம்பதிகளை......*
*திரைப்படத்திற்கு அனுப்பிவிட்டு...*
*அரற்றும் மனசுக்குள் ஆறுதலாய்.....*
*மீண்டும்......மீண்டும்......தலைக்கு மீதேறிப் போன*
*கடன் கணக்கை.....மாசத் தவணை கழுத்தை நெறிக்கும்..*
*கனாக் கண்டு......நெஞ்சம் கலங்கி....*
*அடகுக்குப் போன தன் வீட்டின் சுவரை வாஞ்சையோடு....*
*தடவித் தந்தவரின்......மனசின் தவிப்பை.......*
*'என் மகளை மணமகளாக்கி எனை மீட்டாய்...... நானும்...*
*உனை மீட்கும் காலம் என்று வருமோ...?".....*
*அவர்கள் அறிவதில்லை..........!!!!!*Bookmark and Share

அப்படியே ஒரு ஷாக் ....

அந்த அம்மன் போன பிறகு வீடே வெறிச்சென்று இருந்தது
வீட்டுப்பெண்ணைப் புகுந்தவீட்டில் கொண்டுவிட்டது போல் என் மனம் இருந்தது
,கண்களை மூடிக்கொண்டால் அவள் உருவமே வந்தது . . ரத்னத்தின் புகழ் பரவியது
பலவியாபாரிகள் ஹிந்தி பேசுபவர்கள் அவளிடம் குறி கேட்க வந்து அமர்ந்து விட
அந்த மொட்டைமாடியே நிரம்பி
வழிய ஆரம்பித்தது ,அவள் சொல்வதும் நடந்ததால் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டு
பலர் அவளுக்கு உதவவும் ஆரம்பித்தனர் .ஒரு நாள் ஒரு காதலன் வந்தான்
அவனுடன்
காதிலியும் இருந்தாள் , "எங்கள் காதல் நிறைவேறுமா தேவி?' என்று அவன்
கேட்க அவளுக்கு வந்ததே கோபம் ,
'இன்னும் எத்தனைப்பேரை இப்படிக்காதலிப்பாய் ? இந்தப்பெண்ணிற்கும் மோசம்
செய்யப்போகிறாயே எழுந்து
போய்விடு "என்று கத்த அவன் எழுந்துபோய்விட்டான்
பின் அந்தப்பெண்ணிற்கு நல்ல புத்திமதி சொல்லி வேறு நல்ல இடத்தில்
கல்யாணம் ஆகிவிடும் "என்று நம்பிக்கையும் தெரிவித்தாள்,
ஒருமாதம் கழிந்தது ரத்னத்தைப்பார்த்து வரலாம் என்று கிளம்பிப்போனேன்
அவள் அறை பூட்டப்பட்டிருந்தது ,
கீழே வீட்டுக்காரர் அவள் ஸ்கூட்டரில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில்
இருப்பதாகச்சொன்னார் .நான் மிக வேதனை அடைந்தேன் ,அவள் அறையில் விடாமல்
பூஜை நடக்க ஏற்பாடு செய்ய்யப்பட்டது ,அந்த விபத்தில் அவள் கால்
சரியில்லாமல் போய் முன்பளவு அதிகமாக அவளுக்குச் செய்யமுடியவில்லை ஆனால்
கரோல்பாக்கில் இருக்கும் அத்தனை வியாபாரிகளும் அவளுக்கு உதவி செய்து அவள்
பூஜையை மிகவிமரிசையாக நடத்தி வந்தனர் அன்பு என்பதை நான் அங்குக்கண்டேன்
பதிலுக்கு ஒன்றும் எதிர்ப்பாராமல் அன்பை எல்லோரும் வழங்கினர் ஜனமாஷ்டமி
மிகப்பிரமாதமாக நடக்கும்
கிருஷ்ணருக்கு ஊஞ்சல் கட்டி அதில் பூக்களால அலங்காரம் செய்து பலர்
ஹிந்தியில் பாலகனையாவின் பாடல்களைப் பாடுவார்கள் ,சிலர் அதற்கு நடனமும்
ஆடுவார்கள் , ரத்னத்தின் ஆஸ்பத்திரி சிலவு மருந்து சிலவு என்று பலர்
.அவளுக்கு பணம் கட்டினர் .அவளும் நன்கு தேறி வீடு வந்தாள் . பரீடசை நேரம்
,,,,,,,பல
மாணவர்கள் தங்கள் பேனாக்களை அவளிடம் கொடுத்து ஆசிகள் பெற்றுச்சென்றனர்
அதன் பின் அவள் தன் குலதெய்வத்தைப்பார்க்கச் சென்றாள்.
நானும் தில்லி விட்டு வந்து விட்டேன் ,
மறு வருடம் நான் தில்லிப்போனபோது அவள் கறிகாய் விற்கும் இடம் காலியாக
இருந்தது நேராக ரத்னம் வீட்டிற்க்குச் சென்றேன் ஆனால்அவள் அறையில் அவள்
கோயில் அவள் பராசக்தி எல்லாம் இருந்தன ஆனால் அவள் இல்லை அவள் எங்கே
போயிருக்கிறாள் இன்னும் வரவில்லையா ? என்று கேட்டேன் அந்த விட்டுக்காரர்
என்னை உள்ளே கூப்பிட்டார் அங்கு ரத்னத்தின் போட்டொ மாட்டப்பட்டு
அதற்குச்சந்தனமாலை போடப்பட்டிருந்தது
அப்படியே ஒரு ஷாக் ....என் கண்களில் நீர் நிறைந்தது
அவரும் கண்ணீரைதுடைத்துக்கொண்டார் ,
ஒரு திருமங்கை தெய்வத்தின் இடத்தையே நிரப்பி இருக்கிறாள் என்பதைப்பார்க்க
என் மனம் பெருமை அடைகிறது ,Bookmark and Share

*விதை தராத விருட்சம் .*

*விருட்சம் ஒன்று....*
*விறகுக்காக...வெட்டப்பட்டு..*
*அடுப்பில் எரிந்து சாம்பலானது..!*
*விதை ஒன்று...*
*சிதையில் விழுந்து...*
*விருட்சமாகாமலேயே...*
*சாம்பலானது...!*
*பயனாகி மடிந்தது ஒன்று....*
*பயனின்றி முடிந்தது ஒன்று......*
*இருப்பினும்....*
*சாம்பலின் பயன் ஒன்று தான்.....*
Bookmark and Share

*கிணற்று மனசு......*

*யாருமேஇல்லாத இதயவீடுக்குள்ளே.....*
*இறைவன் இருக்கக் கண்டேன்.....*
*இறைவனை இருத்திய இதயத்துள்ளே....*
*யாதொரு நினைவும் நழுவக் கண்டேன்.....*
*நித்தம் நித்தம் நான் மட்டும் நுழைந்து....*
*நுழைந்ததும் தொலையும் என்னை நானே...*
*அங்கே...... அடிக்கடி..... தேடக் கண்டேன்......*
*ஜென்ம ஜென்மமாய்.....ஒட்டடை படிந்த ஆன்மா....*
*தேடுதலில்......நிர்மலமாய்..........விஸ்தாரமாய்....*
*நான்முகனிடம் நான் வாங்கிய வரம்....*
*நான்கும்.......அருள்....பொருள்....இன்பம்...வீடென.....*
*இறைவனே...உன்னோடு வாழும் போது தான் தெரிகிறது...*
*வெளியுகம்...எத்தனை சிறிதென்று....!!!!*
*பொதி சுமக்கும் கழுதை மனசை.......*
*கழட்டி வைக்கத் தெரியாத மனிதனுக்கு.....*
*கண்டுகொள்ளக் கற்றுக்கொடு.......*
*அவர் தமக்குள் ஊறும்...*
*கிணற்று மனசை......!!!!*Bookmark and Share

Tuesday, August 11, 2009

கிரகங்களின் உச்ச வீடுகள்

நமக்கு சிலர் "ஹலோ" என்று மட்டும் சொல்லி ஒரு புன்னகைப்புரிந்து
விட்டுப்போவார்கள் அவர்களிடம் பகையும் இல்லை அத்ற்காக மிகவும்
ஒட்டிப்பழுகும் நட்பும் இல்லை
இது போல் தான் நம் கிரகங்களுக்கும் நட்பும் இல்லாமல்
பகையுமில்லாமல் ஒரு நிலைமை ஏற்படுகிறது இவைகளுக்கு
"சமவீடுகள் "என்று பெயர்
சூரியனுக்கு புதனின் வீடுகள் அதாவது மிதுனம் கன்னி சம்வீடுகள்

சந்திரனுக்கு பல கிரஹங்கள் சமநிலையாகிறது
அவைகள் மேஷ்ம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம்

புதனுக்கு சம்வீடுகள் மேஷம் விருச்சிகம் தனுசு மகரம் குமபம் ,

குருவுக்கு சம்வீடு குமபம் ஒன்றுதான்

சுக்கிரனுக்கு சம்வீடுகள் மேஷம் விருச்சிகம் , தனுசு

சனிக்கு சம வீடுகள் தனுசு மீனம்

இராகுவுக்கும் கேதுவிற்கும் சம்வீடு என்று ஒன்றும் கிடையாத் அது
எந்தகிரஹத்துடன் எந்த இடத்தில் சேருகிற்தோ அதன்
படி பலனைக்கொடுக்கும்

மூலத்திரிகோண வீடுகள்

எல்லாவற்றைவிட அதிக பலம் கொடுப்பது மூலத்திருகோணவிடுகள் தான்

இதை வரிசைப்படித்தினால் முதலில் ப்கைவீடு ,பின் வருவது
சமவீடு அங்கு பலம் பகைவிட்டைவிட சற்று அதிகம் அதன் பின்
வருவது நட்பு வீடு .இங்கு பலம் கூடுகிறது
அதன் பின் வருவது ஆட்சி வீடு அதாவது சொந்த வீடு
அந்தவிட்டில் அதிக அளவு பலம் தான் அதையும் விட அதிக
பலம் மூலத்திரிகோண வீட்டில் ஏற்படுகிறது
இப்போது எந்தந்த் கிரகத்திற்கு எந்த இடம் மூலத்திரிகோண்மாகிறது
என்பதைப்பார்க்கலாம்

சூரியனுக்கு அதிக பலம் தரும் மூலத்திரிகோண வீடு சிம்மம்

சந்திரனுக்கு மூலத்திரிகோணவீடு ரிஷபம்

செவ்வாய்க்கு மூலத்திரிகோணவீடு மேஷம்

புதனுக்கு மூலத்திரிகோண வீடு கன்னி

குருவுக்கு மூலத்திரிகோண வீடு தனுசு

சுக்கிரனுக்கு மூலத்திரிகோணவீடு துலாம்

சனிக்கு மூலத்திரிகோண வீடு கும்பம்

அடுத்து வருவது உச்ச வீடுகள்
இந்த உச்சவீடுகளுக்கு பவர் அல்லது சக்தி அதிகம்
இந்த உச்ச வீடுகள் மூலத்திரிகோண்ததைக்காட்டிலும் அதிக சக்தியை அல்லது
பலனை அளிக்க வல்லது

இனி கிரகங்களின் உச்ச வீடுகள் என்னென்ன என்பதைப்
பார்க்கலாம்

சூரியனுக்கு உச்சவீடு மேஷம்
சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷபம்
செவ்வாய்க்கு உச்சவீடு மகரம்
புதனுக்கு உச்ச வீடு கன்னி
குருவுக்கு உச்சவீடு கடகம்
சுக்கிரனுக்கு உச்சவீடு மீனம்
சனிக்கு உச்ச வீடு துலாம்
இராகுவுக்கு உச்ச வீடு விருச்சிகம்
கேஎதுவுக்கும் உச்சவீடு விருச்சிகம்

பகைவிட்டைக்காட்டிலும் பலம் குறையும் வீடுகளை நீச வீடு
என்பார்கள் இந்த நீச வீடு உச்ச வீட்டிற்கு ஏழாவது இடத்தில் இருக்கும்
சூரியன் மேஷத்தில் உச்சவீடானதால் அதனின் ஏழாவது ஸ்தானம்
துலாம் ஆகையால் துலாம் சூரியனுக்கு நீச வீடு

இதே போல் சந்திரனுக்கு நீச வீடு விருச்சிகம்
செவ்வாய்க்கு நீச வீடு கடகம்
புதனுக்கு நீச வீடு மீனம்
குருவுக்கு நீச வீடு மீனம்
சுக்கிரனுக்கு நீச வீடு கன்னி
சனிக்கு நீச வீடு மேஷம்
இராகுவுக்கு நீச வீடு ரிஷபம்
கேதுவுக்கு நீசவீடு ரிஷபம்Bookmark and Share

நீ ராதையை மணக்கவே முடியாது

கண்ணனுக்குத் திருமணம்! என் மகன்! விருஷபாநுவின் மகளைத் திருமணம் செய்யப் போகின்றானா?? நடக்காது, நடக்கவே நடக்காது! மேலும் அவள் உன்னைவிடப் பெரியவள் வேறே! “ யசோதை கிட்டத் தட்டக் கத்தினாள். ஒருவேளை, ஒருவேளை, இந்தப் பையன் தன் வழக்கமான பாணியில் நம்மை ஏதாவது ஏமாற்றி விளையாட இப்படிச் சொல்லுகிறானோ?? ஆம் அப்படித் தான் இருக்கணும். கண்ணன்
இந்தத் திருமணத்தில் நாட்டத்துடனும், ஆவலுடனும் இருக்கிறான் என்பதை யசோதை
உணரவில்லை. ஆனால் கண்ணனோ, “ அம்மா, ஏன் விருஷபாநுவின் மகளை நான் மணந்தால் என்ன ஆகும்? பிரளயமா ஏற்படும்? பல ஆண்கள் தங்களைவிட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுவதை நீ அறிய மாட்டாயா?” என்று கேட்டான். “இல்லை, மகனே, இல்லை, உன்னைவிட வயதில் பெரிய ஒரு மறுமகளை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
என்னால் அப்படி நினைக்கக் கூட முடியவில்லை. அதை நான் வெறுக்கிறேன்.” யசோதை
கண்கள் குளமாகக் கண்ணனைக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“இல்லை, அம்மா, ராதை உன்னை அருமையாகக் கவனித்துக் கொள்வாள். “

“கண்ணா, நீ எப்போதுமே இப்படித் தான் ஏதாவது பிடிவாதம் பிடிக்கிறாய். இவ்வளவு
நாட்களாய் நீ குழந்தையாய் இருந்ததால் நான் உன்னுடைய பிடிவாதங்களுக்கு இடம்
கொடுத்து வந்தேன். ஆனால் இந்த விஷயத்தில் நான் சற்றும் வளைந்து கொடுக்க
மாட்டேன். மேலும் நீ இந்த ஆயர்பாடியின் தலைவனின் மகன். ராதை நம்மிடம் வேலை
செய்யும் ஒருவனின் பெண். உனக்கு ஏற்ற ஒரு தலைவனின் மகளை நான் உனக்குத்
தேர்ந்தெடுக்கிறேன். நீ ராதையை மணக்கவே முடியாது.” யசோதை முடித்துவிட்டாள்.
கோபமும், துக்கமும் அவள் நெஞ்சை அடைத்தது.

அம்மா, ஒரு அருமையான மறுமகளை நீ இழந்துவிடுவாயே?” கண்ணன் கண்களில் குறும்பு
கூத்தாடியது.

“அப்பா, கண்ணா, வேண்டாம், இந்த ராதையின் முற்போக்கான நடவடிக்கைகள் எதுவுமே
எனக்குப் பிடிக்கவில்லை. அவள் எதற்கும், யாருக்கும், கவலைப்படுவதும் இல்லை. எதை
நினைத்தும் யாரையும் நினைத்தும் பயப்படுவதும் இல்லை. எனக்கு வேண்டாம் அப்பா,
இத்தகைய முற்போக்கான குணமும் நடத்தையும் கொண்ட மறுமகள். இந்த விருந்தாவனமே
அவளின் இந்த நடவடிக்கை பற்றித் தான் பேசிப் பேசி அலுத்துப் போய்விட்டது. அவள்
ஒரு நல்ல மறுமகளாய் இருக்கத் தகுதி வாய்ந்தவளாய் எனக்குத் தெரியவில்லை.”

“ம்ம்ம்??? அம்மா?? அப்போது நீ உன் மகனை இழக்க நேரிடுமே?” கூடியவரையிலும்
கண்ணன் இதை ஒரு புதிர்போலவே அம்மாவுக்குச் சொல்ல நினைத்தாலும் அவனையும்
அறியாமல் உள் மனது இதை ஒரு மிரட்டலாகவே காட்டியதோ? யசோதையின் முகம் அப்படித்
தான் காட்டியது.

யோசனையுடனும், அதிர்ச்சியுடனும் மகனைப் பார்த்தாள் யசோதை. இதை அவள்
எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும் கண்ணனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,
“கண்ணா, கண்ணா, என்னை ஏனப்பா தொந்திரவு செய்கிறாய்?? நீ இப்படியெல்லாம் திடீரென
நடக்கக் காரணம் என்ன?? போய் உன் தந்தையிடம் இது பற்றிப் பேசு! எனக்கு
அலுத்துவிட்டது உனக்குப் புரியவைக்க என்னால் முடியவில்லை.”

“அம்மா, யசோதா அம்மா, என்ன இது?? என்னிடம் உனக்கு அலுப்போ, களைப்போ, ஏற்படாதே?
அதேபோல் எனக்கு வரப் போகும் மனைவியிடமும் ஏற்படக் கூடாது. விருஷபாநுவின் மகள்
ராதை தினமும் காலையும், மாலையும் உன்னிடம் ஆசி வேண்டி உன் பாதம் தொட்டு
வணங்குவாள். இது உறுதி!”

“அதிகப் பிரசங்கி!” தன்னையுமறியாமல் யசோதை சிரித்தாள். கண்ணன் சொல்வது
உண்மைதான். ரொம்ப நேரம் அவனிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லையே? கண்ணனை
நந்தனிடம் போய்ப் பேசச் சொல்லி அனுப்பினாள் யசோதை. கண்ணனும் நந்தனிடம் சென்று
தன் விருப்பத்தைச் சொன்னான். நந்தனோ மொத்த விஷயத்தையும் கேட்டுவிட்டு ஏதோ பெரிய
நகைச்சுவைக் காட்சியைப் பற்றிக் கேட்டாற்போல் ரசித்துச் சிரித்தான் . சிரிப்பை
அடக்காமலேயே, “நீ என்ன இன்னிக்குப் புதுசாய் பெண்கள் பின்னால் போகிறாயா கண்ணா?
எனக்கு ஒண்ணும் அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படலை இந்தப் பெண்களில் ஒருத்தியை நீ
மனைவியாக்கிக் கொள்ள ஆசைப் படுவாய் என்று நினைத்தேன்.”

“அப்பா, அப்போது உங்களுக்குச் சம்மதமா? அம்மாவைப் போய் ராதையைப் பெண் கேட்கச்
சொல்லலாமா?”

“இல்லை, குழந்தாய்! உன் தகுதிக்கு நீ ஒரு இளவரசியை அன்றோ மணக்கவேண்டும்.”
புன்னகை மாறாமலேயே நந்தன் சொன்னான்.

“ராதையின் அறிவுக்கும் அழகுக்கும் ஈடு சொல்லும்படியான இளவரசி யார்
இருக்கிறார்கள்”

நீ எத்தனை இளவரசிகளைப் பார்த்திருக்கிறாய் கண்ணா?”

‘கோபியர் அனைவருமே இளவரசிகள் தானே! சொல்லப் போனால் இளவரசிகளை விடவும் இவர்களே
தேவலை. மேலும் நாமெல்லாருமே இடையர்கள் தானே? இடைக்குலத்துப் பெண்ணை நான்
மணந்தால் என்ன? என் தகுதிக்கு அதுதானே சரி?”

நந்தன் பேச்சை மாற்ற விரும்பினான். இன்னும் காலம் கனியவில்லை. கண்ணனைப் பற்றிய
உண்மையான தகவலை இப்போது சொல்லலாமா தெரியவில்லை. ஆகவே கண்ணனிடம் நந்தன்
சொல்கின்றான். “ ஐயனைப் பற்றி என்ன நினைத்தாய்? அவன் வேறொரு பெண்ணைத் திருமணம்
செய்து கொள்வான் என்றா?”

“அவனுக்கு இந்த விரஜபூமியில் உள்ள அனைத்து இளம்பெண்களும் இன்னும் மதுராவிலும்
இளம்பெண்கள் உள்ளனர். அதை விடுங்கள் தந்தையே. அம்மாவைப் போய் விருஷபாநுவிடம்
ராதையைப் பெண்கேட்கச் சொல்லி அனுப்புங்கள்.”

நந்தன் இப்போது கொஞ்சம் கலவரம் அடைந்தான். “என்னால் முடியாது, முடியவே
முடியாது.” திட்டவட்டமாய் நந்தன் சொல்லக் கண்ணன் ஆச்சரியம் அடைந்தாலும்
பணிவாகவே, “ஏன் தந்தையே?” என்று கேட்டான். கண்ணனுக்கும் இதில் ஏதோ இருக்கிறது
என்ற சம்சயம் வந்துவிட்டதோ? ஆனால் நந்தன் அசரவில்லை. “நான் உன்னை ராதையை
மட்டுமல்ல மற்ற எந்த கோபியர் பெண்ணையும் மணக்கவிட மாட்டேன். நீ கேட்பது எதையும்
நான் மறுக்க மாட்டேன் என்பது தெரிந்து நீ உன் திருமணத்திற்கு என்னிடம் சம்மதம்
கேட்கின்றாய். இந்த விஷயத்தில் நீ என்னிடம் சம்மதம் கேட்பதை விட குரு
கர்காசாரியார் வரும்போது அவரிடம் கேட்டுக் கொள்.” நந்தன் பதில் முடிவாக
இருந்தது.

“அவர் சரி என்று சொல்லிவிட்டால்”

“நிச்சயம் மாட்டார்.” நந்தன் இதில் மிகவும் திடமாக இருந்தான்.

ஒருவேளை சம்மதித்துவிட்டாரெனில்?”

“அப்போ நான் என் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனால் கர்காசாரியார் ஒத்துக்
கொள்ளமாட்டார் என்பது நிச்சயம்.”

“சரி, நானே குருவிடம் பேசுகிறேன்.” கண்ணன் குரு வரும் நாளை எதிர்பார்த்துக்
காத்திருந்தான். குருவும் வந்தார், கூடவே இன்னொருத்தரும் வந்தார். அவர் பெயர்
சாந்தீபனியாம்.Bookmark and Share

Friday, August 7, 2009

மாடக் கொடி மதில் தென்குளந்தை

பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக
வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை!
குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப்
போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு
மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:
“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!” (2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச்
சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும்
மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து
கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம்
இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை
இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி
என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக்
கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்

“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!”

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக்
காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை
அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும்
மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப்
பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில்
வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல்
உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும்
பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே
பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை
என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான
பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது.
பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு
பின்வரும்படி அமைந்துள்ளது.

விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை
வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி
என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும்
அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த
மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி
வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள்.
அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.

அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து
வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே
சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து
சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை
வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி
அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி
குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது
பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.

மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம்
வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான்.
விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும்
பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான்
பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின்
மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக்
கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக்
கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.

சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க
இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக்
கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட,
அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான்.
அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர,
சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின்
பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ
துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி
அருளினார்.

ஆணவன் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே
எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய
வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின்
ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய
பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக
விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம்
நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக்
கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம்
பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி
வழியனுப்புவதும் நடந்து வருகிறது.

பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே
சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க
முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி
ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை
சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும்
கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல்
பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர்
என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான்
என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும்,
மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார்.
கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ
நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும்
சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய
நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச்
சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர்
அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில்
சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.
Bookmark and Share

மாடக் கொடி மதில் தென்குளந்தை

பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக
வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை!
குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப்
போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு
மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:
“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!” (2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச்
சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும்
மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து
கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம்
இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை
இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி
என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக்
கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்

“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!”

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக்
காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை
அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும்
மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப்
பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில்
வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல்
உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும்
பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே
பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை
என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான
பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது.
பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு
பின்வரும்படி அமைந்துள்ளது.

விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை
வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி
என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும்
அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த
மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி
வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள்.
அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.

அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து
வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே
சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து
சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை
வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி
அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி
குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது
பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.

மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம்
வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான்.
விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும்
பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான்
பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின்
மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக்
கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக்
கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.

சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க
இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக்
கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட,
அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான்.
அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர,
சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின்
பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ
துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி
அருளினார்.

ஆணவன் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே
எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய
வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின்
ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய
பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக
விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம்
நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக்
கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம்
பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி
வழியனுப்புவதும் நடந்து வருகிறது.

பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே
சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க
முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி
ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை
சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும்
கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல்
பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர்
என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான்
என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும்,
மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார்.
கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ
நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும்
சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய
நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச்
சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர்
அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில்
சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.
Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)