Monday, June 29, 2009

கண் திறந்து பார்த்தாள் ராதை

கண் திறந்து பார்த்தாள் ராதை. கண்ணன் அந்தப் பாம்பை
அடக்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் "கானா, என் கானா! ஏன் இப்படி உன் உயிரை நீயே
போக்கிக் கொள்கின்றாய்? உன் உயிர் எனதன்றோ? அதை நீ அறிய மாட்டாயா?" எனக்
கேட்டுவிட்டு மீண்டும் மூர்ச்சையானாள் ராதை. யசோதைக்கும், நந்தனுக்கும்
ராதையின் இந்தக் கோலம் சற்றும் சகிக்க முடியாத ஒன்றாய் இருந்தது. ஒரு இளம்பெண்
அதுவும் வேறு ஒருவனுக்கென நிச்சயிக்கப் பட்டவள் தங்கள் பையனோடு சிநேகமாய்
இருப்பதோடு, இவ்வாறு பொது இடத்தில் தன்னை மறந்து நடக்கின்றாளே? அதிலும் இவள்
திருமணம் நிச்சயிக்கப் பட்டும் இன்னும் அவனுடன் திருமணம் நடக்காமல்
இருப்பதையும் அவர்களால் சகிக்க முடியவில்லை. அனைவரிலும் ராதையின் சிற்றன்னையான
கபிலாவிற்கு இன்னமும் ராதையின் மேல் கோபம் இருந்து வந்தது. இப்போது ராதையின்
இந்த வெளிப்படையான நடத்தையால் அவள் பக்கம் இன்னும் நியாயம் கூடிவிட்டதாய்
உணர்ந்தாள். ஏற்கெனவே இந்தப் பெண் ராதை பெற்றெடுத்த தாய் இல்லை எனத்
தந்தையாலும், தாய்வழிப்பாட்டியாலும் மிகவும் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்
பட்டிருக்கிறாள். இவளோட இந்த நடத்தை நம் குடும்பத்திற்கே அவமானம். இன்றைக்கு
இரண்டில் ஒன்று பார்த்துடணும். இதுதான் கபிலாவின்
எண்ணம்.<http://4.bp.blogspot.com/_g9Ssbl03NHs/Sd2lK5WhFEI/AAAAAAAACSc/SSMuWm77DrU/s1600-h/images.jpgkrishnawith+radha.jpg>ஏற்கெனவேயே
இந்தப் பெண் நந்தனின் மகன் கண்ணனோடு சேர்ந்து "ராஸ்"விளையாடுவதாய்க் கூறிக்
கொண்டு கண்ட நேரத்திலும் ஆடுவதும், பாடுவதுமாய் இருப்பதோடு அல்லாமல், இந்த
நந்தனின் பிள்ளையை என்னமோ கண்காணாத தெய்வம் போலப் பூஜிக்கின்றாளே? இது
அடுக்குமா?? இப்போ நல்ல சமயம் வாய்ச்சிருக்கு. கம்சன் திரும்பிவிட்டதாயும்,
அவனோடு ஐயனும் வேலையில் ஒருபடி முன்னேறிக் கம்சனின் மெய்க்காப்பாளனாக ஆகி
வந்திருப்பதாகவும் மதுராவில் இருந்து செய்தி வந்திருக்கிறது. இந்தப் பெண்ணை
ஐயனிடம் எவ்வாறேனும் ஒப்படைத்துவிடவேண்டும். ராதையின் சகோதரர்கள் அரை மயக்க
நிலையில் இன்னும் கண் திறந்து பார்க்காத ராதையைத் தூக்கிச் சென்றார்கள்.
அவர்கலும் உள்ளூரக் கோபத்துடனேயே இருந்ததாய் அவர்கள் முகத்தில் இருந்து
தெரிந்தது. ராதையின் சிற்றன்னையோ, ராதையை வீட்டில் கொண்டு சேர்த்ததுமே, அவள்
உடல்நிலையைக் கூடக் கவனிக்காமல், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
எழுந்திருக்கக் கூடச் சக்தியற்ற நிலையில் இருந்த ராதை, கண்களில் கண்ணீரோடு
அரைக்கண் திறந்து சிற்றன்னையைப் பார்த்துவிட்டு ஏதும் செய்யமுடியாத நிலையில்
மீண்டும் மயக்கம்
அடைந்தாள்.<http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/Sd2lHubVlTI/AAAAAAAACSU/TjGOKZxISeE/s1600-h/Radha_Krishna_Playing_Chess.jpg>இன்
று
இத்தனை நாள் இல்லாமல் ராதையின் தந்தை விருஷபானுவிற்கும் கோபம் தலைக்கு மேல் ஏறி
இருந்தது. அனைவர் கண் முன்னாலும் இப்படி அவமானப் பட வைத்துவிட்டாளே இந்த ராதை?
இனி இந்தக் கோபர்கள் முன்பாகத் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியாதே? ஐயன்
வந்துவிட்டான். ஆனால் இப்போது உடனே திருமணம் நடத்தமுடியாது. அதற்கான நேரம்
இப்போது இல்லை. இப்போ கடவுளரின் இரவு முடியும் மாதங்களில் இருக்கின்றோமே??
கல்யாணங்கள் செய்யமுடியாதே? இருக்கட்டும், ம்ம்ம்ம்ம்?? இன்னும் எத்தனை நாட்கள்
உத்தராயணத்திற்கு??? உத்தராயணம் வந்ததும், முதல் முஹூர்த்த நாளிலேயே ஐயனிடம்
இவளை ஒப்படைக்கவேண்டும். ஐயன் இன்னும் சில நாட்களில் விருந்தாவனம் வருவதாய்ச்
சொல்லி இருக்கின்றான். அதுவரையிலும் இந்தப் பெண்ணைப் பாதுகாக்கவேண்டும்.
யாரங்கே, இனி இந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அதோ, அந்த
அறையில் இவளை உள்ளே விட்டுப் பூட்டுங்கள். வெளியே, யாராவது ஒருவர் மாற்றி
ஒருவர் காவல் இருங்கள். என்ன?? கையை எல்லாம் கட்டவேண்டாம். பூட்டினாலே போதும்,
இவளால் என்னை மீறி வெளியே வரமுடியாது. கானாவாம், கானா! இந்தப் பெண்ணிற்கு
இருபது வயது ஆரம்பிக்கப் போகின்றது. இன்னமும் சிறுபெண் போல தன்னைவிடச்
சிறுமிகளோடும், சிறுவர்களோடும் விளையாடுகின்றாள். ஆடுகிறாள். பாடுகிறாள்.

இனி இவள் கானாவைப் பார்க்கவே கூடாது. ஆயிற்று, அவனுக்கும் பதினைந்து
முடிந்துவிட்டதே? அதோடு அல்லாமல் அவன் நம் தலைவன் நந்தனின் ஒரே மகன். அவர்களைப்
போல் பணக்காரர்களின் ஒரே மகன் நம் பெண்ணைப் போல் சாதாரண நிலையில் உள்ள பெண்ணை
மறுமகளாய் ஏற்பார்களா?? இவளை உள்ளேயே பூட்டி வையுங்கள். வெளியே விடவே கூடாது.
ராதை அறையில் அடைக்கப் பட்டாள். கண் திறந்து தன் நிலையைக் கவனித்த ராதைக்குக்
கண்ணீர் பொங்கிப் பிரவாஹமாய் ஓடியது. தன் முழங்காலில் முகத்தைப் புதைத்துக்
கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். விருஷபானுவும், கபிலாவும் அவளைப் பார்த்து,
"குடும்ப கெளரவத்திற்கே உலை வைத்த உன்னை வெளியே விடமுடியாது. உனக்குச்
சாப்பாடும் கொடுக்கப் போவதில்லை. இந்த அறையிலேயே அடைந்து கிட?" என்று
சொல்லிவிட்டுக் கோபமாய் வெளியே சென்று அறையை நன்கு அழுந்தப் பூட்டினார்கள்.
வெளியே காவலும் போடப் பட்டது.

ராதையின் நெஞ்சமோ கண்ணனிடம் சென்றுவிட்டது. அவனை முதன்முதல் பார்த்தது, உரலோடு
சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது, இரு மரங்களை அவன் வீழ்த்தியது, தன்னிடம்
விருந்தாவனம் வந்து சேருவேன் எனச் சத்தியம் செய்தது. அதே போல் விருந்தாவனம்
வந்தது. விருந்தாவனத்தில் அவனோடு சுற்றியது. காட்டில் கானாவோடு அலைந்தது, கானா
தன்னிடம் பேசிய பேச்சுக்கள், விளையாடிய விளையாட்டுக்கள், ஹஸ்தின் முதுகில்
தன்னையும் ஏற்றிக் கொண்டு கானாவும், தானும் மட்டும் காட்டை நோக்கிச் சென்றது.
ஆஹா, ஹஸ்தினுக்கு மட்டும் இரு இறக்கைகள் இருந்திருந்தால்?? எவ்வளவு ஆனந்தமாய்
இருக்கும்? தானும், கானாவும் ஹஸ்தின் முதுகின் மேலேயே பறந்து கொண்டே அலைந்து
திரிந்து இந்தப் பூவுலகின் அனைத்து இடங்களையும் பார்த்து யாரும் வர முடியாத ஓர்
இடத்தைக் கண்டு பிடித்து அங்கு கானாவும், தானும் மட்டும் சந்தோஷமாய்
இருந்திருக்கலாமே?? யார் இந்த ஐயன்?? யார் வரச் சொன்னது இவனை? ஏன் நிச்சயம்
செய்தனர் இவனோடு நம் திருமணத்தை? இந்த ஐயனை இன்னும் பார்த்தது கூட இல்லையே?

மனம் என்னமோ அவன் மனைவி தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கின்றதே. இல்லை, இல்லை,
நான் ஐயனுக்காகப் பிறக்கவில்லை. என் உயிர் கானா, என் ஜீவன், கானா, என் பார்வை
கானா, என் மூச்சு கானா. அவன் கோபர்களின் தலைவனின் ஒரே மகனாய் இருந்தால் எனக்கு
என்ன? என்னுள்ளே உறைந்து என் ஜீவசக்தியாய் இருக்கும், என் உடலில் ஓடும் ஒவ்வொரு
நரம்பிலும் அவனுடைய சக்தியே பொங்கிப் பிரவாஹமாய் ஓடுவதை யார் அறிவார்கள்.
இல்லை, இல்லை, கானா அறிவான், அவனுக்குத் தெரியும், அவனே நான், நானே அவன்,
நானில்லாமல் அவனில்லை. அவனில்லாமல் நானில்லை. கானா பெரும் பணக்காரர்களான
ஷூரர்களுக்குத் தலைவனாகிவிட்டால்?? யசோதா அம்மா என்னைத் தன் மறுமகளாய்
ஏற்பாளா?? மாட்டாள், மாட்டாள், நான் கானாவை மணக்கவே முடியாது. ஆனால் கானா
இல்லாமல் வேறொருவனை என் கணவனாய் நினைக்கக் கூட முடியவில்லையே? கானா, கானா,
ராதைக்கு அன்றிரவு பூராத் தூக்கமே வரவில்லை. அன்று உணவும் கொடுக்கப் படவில்லை
அவளுக்கு.

மறுநாள், பெளர்ணமி. ஒவ்வொரு பெளர்ணமிக்கும் யமுனை நதிக்கரையில் "ராஸ்"
நடக்கும். அனைத்துக் கோபஸ்த்ரீகளும், கோபர்களும், சிறுவர், சிறுமிகளோடு
கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு வந்து ராஸில் கலந்து கொள்ளுவார்கள். கண்ணன் இனிய
புல்லாங்குழல் இசைப்பான். அந்த அமுதகீதம் என் காதிலும் விழுமா?? பூட்டிய இந்தக்
கதவைத் தாண்டி வந்து விழுமா?? இந்த வீட்டு மனிதர்களின் பூட்டிய இதயம்
திறக்குமா??? அன்று ராதைக்கு மிகக் கொஞ்சமாய் உணவு அளிக்கப் பட்டது. ஏதோ நினைவு
பளிச்சிட ராதை அந்த உணவை மறுக்காமல் உண்டாள். இரவும் வந்தது. யமுனை நதிக்கரை
வெண்ணிலவின் ஒளியில் ஜாஜ்வல்யமாய்ப் பிரகாசித்தது. இயற்கையாகவெண்மணல் பரப்பிய
கரையில் வித, விதமாக உடை அணிந்த பெண்களும், ஆண்களும் அன்றிரவு
கொண்டாட்டத்திற்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். ராதை தவித்துக்
கொண்டிருந்தாள்.
"கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி, சகியே,
கன்னி நான் அவன் மேல் கொண்ட காதலை" என்று மனம் தவிக்க ராதை எதையோ
எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அப்போது கண்ணனின் புல்லாங்குழலின் இனிய கீதம்
ஆரம்பித்தது. மெல்ல, மெல்ல யமுனைக் கரையைத் தாண்டி, விருந்தாவனத்
தெருக்களுக்குள் நுழைந்து, ராதையின் வீட்டிற்கும் வந்து, அனைவரையும் தாண்டி,
காவல் இருப்பவர்களை எல்லாம் தூங்க வைத்து ராதை பூட்டி இருக்கும் அறைக்குள்ளாக
நுழைந்தது. ராதையின் இதயமோ திக், திக் என அடித்துக் கொண்டது. ஏதோ நடக்கப்
போகிறது. இது என்ன கண்ணனின் புல்லாங்குழல் இசை இவ்வளவு அருகில்?? இசை அந்தப்
பிராந்தியத்தையே நிரப்பியது. அனைவரும் மயங்கினர். ராதைக்கு எதிரே அந்த அறை,
அவள் படுத்திருந்த கட்டில், மற்றும் அந்த வீடு எல்லாம் சுழல்வது போல் இருந்தது.
அந்த இசையைக் கேட்ட அவள் மனம் பித்துப் பிடித்தது போல் அலைந்தது. சுவற்றில்
தலையை முட்டிக் கொண்டு அழலாம் போலத் தவித்தாள் ராதை. "கானா, என் கானா, உன்னை
நான் மீண்டும் காண்பேனா?? உன் அருகில் இருக்கும் பேறு பெறுவேனா? உன் இனிய
கானத்தைக் கேட்பேனா?" என வாய்விட்டுப் புலம்பினாள்.

உடனேயே புல்லாங்குழல் இசை நின்றது. ஒரே மெளனம் சூழ்ந்தது. ராதைக்கு அந்தப்
பிராந்தியமே இருட்டாகிவிட்டாற்போன்ற உணர்வு.

Bookmark and Share


ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

சிந்தனைகள்

  • இளைஞர்களிடம் இனிமையாகவும், முதியவர்களிடம் பிரியமாகவும், துன்பப்படுகிறவர்களிடம் இரக்கமாகவும், எளியவர்களிடம் பொறுமையாகவும் இரு. சில சமயங்களில் இவர்களிடம் ஒருவராக நாம் இருக்கக் கூடும்.
  • கடுமையான பனிக்காலத்தில் தான் மலர்கள் குளிர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கின்றன. கருணையுள்ள இதயம் கண்ணீரால் நனைக்கப்படும் போதும் மென்மையாகவே இருக்கும்.
  • வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் அவன் குடும்பம் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் விழுந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்கும் இடமும், இருக்கும் நிலையும் தாழ்ந்தால் எல்லாரும் மிதிப்பார்கள்.

Bookmark and Share


ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Friday, June 26, 2009

வாக்கினால் பிறந்த வேதவதி

பல்லாண்டுகளுக்கு முன் தவவலிமை மிக்க ரிஷிகள் ,முனிவர்கள் இருந்தனர் ,அவர்கள் தங்கள் தவ வலிமையினால் செய்யமுடியாததையும் மிக எளிதாகச் செய்துக்காட்டினர் .
அவர்களால் சங்கல்பத்தினால் தர்சனத்தினால் ,ஸ்பர்சத்தினால் சிருஷ்டி
உண்டாயிற்று .
பின்பு உடல் சேர்க்கையினால் சிருஷ்டி உண்டாயிற்று , தெய்வீக வலிமைப்பெற்ற மக்ரிஷிகள் தேவர்கள் , ஈசனின் அருளையும் பெற்றதால் சிருஷ்டியைச்செய்ய முடிந்தது ,

ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66வது சர்க்கம் ,,,,,இதில் புஞ்ஜிகஸ்தலை என்ற அப்சரஸ் அஞ்சனை என்ற பெயரில் ஒரு வானரப்பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குப் பல ரூபங்கள் எடுக்கும் சக்தி இருந்தது ஒரு நாள் ஒரு பெண்ணாக ரூபம் எடுத்து மலை உச்சியில் உல்லாசமாக இயற்கையை ரசித்தபடி உலாவினாள் அப்போது வாயுபகவான்
அவளைத்தழுவிச்சென்றார் , உடனே தழுவிய்தை அந்தப்பெண் உணர்ந்து "யார் என்னைத் தழுவிச்செல்வது?" என் வினவ "நான் தான் வாயு ,நான் உன்னைத்தழவ உனக்கு ஒரு விதமானப்பிரச்சனையும் இல்லை, நான் தழுவிச்சென்றதின் பலனாக ஒரு வீர சூர புத்திரன் பிறப்பான் அவனால் புகழுண்டாகும் " என்றார் ,,,,,,,இது சங்கல்பத்தினால் ஏற்பட்டது

வாக்கினால் பிறந்த வேதவதி ,,,

ராவணன் பல இடங்களுக்குச்சென்று ஜயித்து வெற்றி பெற்று வந்தான் பின்
திக்விஜயத்திற்கு கிளம்பினான் ,அப்போது ஒரு பேரழகி கண்களை மூடியபடி தன்னை மறந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள் ராவணன் அவள் அழகில் மயங்கிபோனான் ,
"நீ யார் ? உன் அழகில் நான் என்னை மறந்தேன் ."என்றான்

"நான் வேதவதி "

"உன் தந்தை யார் ?"

"என் தந்தை பிரஹஸ்பதியின் புத்திரர் சத்வஜர் என்னும் பிரும்மரிஷி , அவர்
வேதாப்பியாசம் செய்ய ஆரம்பித்தவுடனே அவர் வாக்கிலிருந்து நான் தோன்றினேன்"
வரும் போதே நான் கன்னியாகத்தான் வந்தேன் இதனால்தான் என் பெயர் வேதவதி "

பின்னால் இவள்தான் கர்ப்பம் இல்லாமலே மீண்டும் சீதையாக பூமியில் வந்தபோது ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள்,
வேத்வதியின் மேல் வைத்த ஆசையை இராவணன் மற்க்கவில்லை அவள்தான் சீதை எனக்கண்டுக்கொண்டு அவள் மேல் திரும்பவும் ஆசைப்பட்டான் ,,
இதுவும் இராமயணத்தில் உத்தர காண்டத்தில் வருகிறது ,,

விசுவாமித்தரருடன் ஸ்ரீராமர் செல்லும் போது விசுவாமித்திர ரிஷி தன் குலத்தைப் பற்றிச்சொல்கிறார் ,ஒரு முனிவர் தவம் செய்தபோது ஒரு கந்தர்வப்பெண் அவருக்குப் பணிவிடைச்செய்தாள்.அவள் பணிவிடையில் மனம் மகிழ்ந்து முனிவர் அவளிடம் வேண்டியதை கேள் என்று கூறுகிறார் ,
அவளும் தனக்கு மிகச்சிறந்த தர்மப்பிரபுவாக ஒரு மகன் வேண்டும் என்கிறாள்,,,
அவர் மனம் அறிந்து முனிவர் தன் மனதிலேயே அதே மாதிரி மகனைப்படைத்து பிரும்ம்தத் என்ற பெயரும் அளித்தார் .அந்தப்பிரம்மதத்தின் பரம்பரையில் வந்தவர்தான் விசுவமித்திரர்
இராமயணத்தில் பாலகாண்டம் 33ம் சர்க்கம்

இப்போது சிருஷ்டியில் வாக்கினால் வந்தவள் வேதவதி மனசினால் வந்தவர் பிரும்மதத்தர் ஸ்ப்ர்சத்தினால் வந்தவர் ஆஞ்சநேயர்


Bookmark and Share


சுவையான கட்டை விரல் சூப்

சைவமோ, அசைவமோ, வைணவமோ சாக்தமோ,,பௌத்தமோ

சமணமோ, கிரித்தவமோ இஸ்லாமியமோ அனைத்து மாந்தருக்கும் பிடித்த மிகவும் சுவையான

கட்டை விரல் சூப்பு இது



கேட்போருக்கு இல்லையெனாது ஈந்தளித்த மன்னன் தர்மம் செய்தே வாழ்ந்து தர்மத்தின்
பலனையும் கிருஷ்ணனுக்கே தாரைவார்த்து தரணியே புகழும் நல் வினை செய்த குந்தியின்
மூத்த மகன் கர்ணன் தாங்கவொணாப் பசியின் கொடுமையால் துடித்தான் ,அவனறியாப்
பசியின் கொடுமை தாளாது தவித்தான், தேடினான் பசிபோக்கும் அரு மருந்து

அப்போது ஆங்கே வந்த தர்மதேவதை ஆயிரம் தர்மங்கள் செய்தாய் ஆனாலும் அன்னதானம்
செய்வதையே நீ மறந்தாய் ,



ஏதோ ஒருநாள் யாரோ கேள்வி கேட்டார் ஐயா –பசியாயிருக்கிறது, எங்கோ அன்னதானம்
அளிக்கிறார்களாமே எங்கே என்று,அதோ அங்கே என்று அன்னதானம் அளிக்குமிடம் நோக்கி
கட்டைவிரலால் காட்டினாய் நீ



உன் கட்டை விரலால் அன்னதானம் அளிக்குமிடம் நோக்கி சுட்டினாயே பசித்தோர்க்கு
பாதை காட்டினாயே அதனால் உன் கட்டை விரலை உன் வாயிலிட்டாலே உன் பசி பறந்து
போகும் என்றாளாம் தர்மதேவதை,

அன்று அறிந்தான் கர்ணன் உலகில் எது உயர்ந்த தருமமென்று

ஒருவேளை குழந்தைகளுக்கு கர்ணன் கதை தெரியுமோ

வாயில் வைத்து கட்டை விரல் சூப்பினால் வயிற்றுப் பசி அடங்குமென்று..

Bookmark and Share


ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Sunday, June 21, 2009

கப்பல் பயணம்

சினிமா ஹால்க்கு செல்ல அந்த திசையில் நடந்து கொண்டு இருந்தோம்.

வழியில் எதிர்பட்ட முதியவர் நாங்கள் செல்லும் காரியம் தெரிந்து கொண்டு
வாருங்கள் செல்வோம்
என்றார்.
பைலட் ஹவுஸ் சென்றோம். அங்கு காம்பஸ், ஸ்டீரிங் வீல், டெலிகிராப்
போன்றவற்றை விவரித்தார்.
"இதை வடிவமைத்தவர் யார் அந்த தாடிக்காரரா?" என்றோம்.
"நான் சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு நமக்கு தேவையானதை
மட்டும் பார்ப்போம்" என்றார்.

எந்த சூழ்நிலையிலும் தாடிக்காரர் மற்றும் கேப்டனின் பேச்சுகளை மட்டும்
தவிர்த்தார்.
அவர் பயந்தே அப்பேச்சுக்களை நிராகரித்தார் என்று எங்களுக்கு புரிந்தது.
அது முடிந்து கேல்லி அதாங்க சமையலறை போலாம்னு திரும்பினோம்.

மேல் தளத்திலிருந்து ஓடி வந்த சிலர் அனைவரும் மேலே வருமாறு கூறினார்.
கேமரா வாலாய் பின் தொடர
குரங்குகளைப்போல் ஓடினோம்.

அங்கு 'சாம் வேகால்' என்ற பயனியை ஒரு பாய்மர படகிற்கு இறக்கிக்
கொண்டிருந்தனர்.
என்ன வென்று கேட்டால் நம்க்கு என்னவாகுமோ என்று அனைவரும் பயந்து
சும்மாயிருந்தனர்
கேப்டனின் அருகில் இருந்த ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.
"....அதனால், இனி யாரும்,
இந்த உலகில் _____________ அவரைப்பற்றி பேசக்கூடாது. பேசினால் எங்கள்
கலத்தையே இழந்தாவது
பேசியவரை அழிக்காமல் விடமாட்டோம். எங்களுக்கு இருக்கும் பலத்தை ...."
நீண்டு கொண்டே சென்றது அவர்
பேச்சு. அவ்வப்போது கேப்டன் அடியெடுத்துக் கொடுத்தார். பேசாமல்
இறங்கிவிடுவது என்று முடிவெடுத்து
கீழே வந்து விட்டோம். எங்களுக்கு முன் வேகமாக ஓடிய நடுத்தர வயதுக்காரர்
எங்கள்
வரவுக்காக கீழே காத்திருந்தார். "எங்கள் தலைவர் __________ தனி கம்பெனி
அமைக்கும் வரை ஓயாது எங்கள் முழ.."
மைக்காரரின் குரல் எங்களைத்துரத்தியது.

வந்ததும் என்னையும் 'ச' வின் சட்டையையும் பிடித்து இழுக்காத குறையாக ஒரு
அறைக்குள் நுழைந்து
அனைவரும் வந்தபின் சாத்திக்கொண்டார். சன்னமான குரலில் "எதுவும் கேள்வி
கேட்காமல் நான் சொல்வதை
கேட்டுக் கொள்ளுங்கள். என் பெயர் ரே" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"இந்த கப்பல் ஒரு மதத்துக்காரருக்குத்தான் சொந்தம். அதன் தலைவன் தான்
இந்த கேப்டன்.
இந்த மதத்துக்காரர்கள்தான் இங்கு பணிபுரிபவர்கள். இந்த மதத்துக்
காரர்களைத்தான் முதலில் பிரயானம் செய்ய விடுவார்கள்.
எஞ்சிய இடங்கள்தான் மற்றவருக்கு. இங்கு அந்த தாடிக்காரரின்
அடிவருடிகள்தான் எல்லாம்"
"அவர் என்ன ஓனரா" என்றோம்.
"கேப்டன் தான் ஓனர். முதலில் குன்னூர் ரோஜர்தான் கப்பல் வாங்கினார். அவர்
ஆதிக்கம் குறைந்தபோது இந்த கேப்டன்
இதைக் கைப்பற்றினார். கேப்டனுக்கு எல்லாம் அந்த தாடிக்காரரே. 'தா' புகழ்
பாடினால் முக்கிய பதவி கொடுப்பார்.
இல்லையென்றால் வெட்டிவிடுவார்."
"மேலே, மீட்டிங்கில் ஏன் கேப்டன் பேசாமல் வேறு ஒருவரை பேசச்
சொல்லியிருந்தார்?"
"அவர்(கேப்டன்) எளிதில் உணர்ச்சிவசப்படுவார். மேலும் சிறிது பயம் வேறு.
அதனால் தான் அப்படி".
"மைக்கில் பேசியவர் பேர் என்ன?"
"இங்கர் காமர்"
"நாமும் பேசலாமா?" என்றேன்
"பேசலாம். ஆனால்... அந்த 'தா' வின் தொழிற்சங்கத்தை எதிர்த்தோ அல்லது
நடுநிலையோடோ பேசினால் மைக்கை ஆப் செய்து விடுவார்கள்"
"நாங்களும் அதே மதம் தானே. பின்னே ஏன் எங்களை முதல் நாள் 'தா'
ஆதரவாளர்கள் மிரட்டினார்கள்?"
"நீங்கள் இந்த மதம் என்பதால்தான் உங்க பெர்த் கன்பர்ம் ஆச்சு. உங்களை
மிரட்டியது 'தா' வின்
வல்லமையைக் காட்டத்தான்"...
'சரி எங்கள் அறைக்கு செல்கிறோம்' என்று கிளம்ப எத்தனித்தோம்.


Bookmark and Share


ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

முதல் நாளிலேயே ஞானோதயம்?

தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!


ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Thursday, June 18, 2009

சிதம்பர ரகசியம் - ஒண்ணும் ரகசியமே இல்லை!

நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும்
தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து
பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன்
கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம், 'வாதவூரான் சொல்ல
சிற்றம்பலத்தான் எழுதியது' என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட
தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும்போது உனக்கு ஏற்படும்
உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால
பூசைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும்போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும்
அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க!
(நீதான் எப்போதுமே கால்கடுக்க, அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே..
நான் 'நிற்க' என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்...)

பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு
வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும், அதன்
உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன்.
அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர்,
நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம்
முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ்
வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை
போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான்.
ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி!

என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேதபாஷை புரிவதில்லை என்றுதானே முனிவர்கள்
மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்... முத்தமிழின்
முதல்சங்கத்தின் முதல்வனாய் இருந்து 'இறையனார்' என்று பெயர் கொண்டு முதற்கவிதை
படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய
கூத்து?

யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். 'தில்லைவாழ் அந்தணர்தம்
அடியார்க்கும் அடியேன்' என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம்
தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது
அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய், அதே தில்லைவாழ் அந்தணர்தம்
பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த
நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம்
அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!.

ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்டபோது, அந்த மூவர் வந்தால் மட்டுமே
பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம்
மூவர் விக்கிரகங்களை செய்வித்து, பிராணாதிஷ்டையும் செய்வித்து, அவர்களையும்
தெய்வமாக்கியதோடு, தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால்
அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம்
செய்தபோது, காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. 'பிடிவாதம் பிடிப்போர்க்கு
தெய்வம் துணை போகாது' என்று நீ சொல்வது போலத்தான் பட்டது.

ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இதுநாள் வரை (ஏன்,
இனியும்!) ஆதரித்து, அரவணைத்து அவர்களின் ஒழுங்கான, இதுவரை தவறாத, ஆறுகால
பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது
போல நடந்து வருகின்றாய்..

மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச்
செல்லக் குழந்தையாக, வாராது வந்த மாமணி போல, அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள்.
தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள்.
பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட
அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப்
படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்..
அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ..
அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே ,
எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத, அவர் கையாலேயே
தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான்.

சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக்
கேட்கவேண்டுமோ அதைக் கேட்டுவிட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால்,
என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன்.

எனக்கு, எனக்கென்றில்லை, எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள்
வேண்டும்
உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும்
உன் பக்தர்களிடத்தே, அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் போக்கினை
எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும்
பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும்

உனக்குப் பிடித்த 'சிவபோகசாகரம்' பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்

'ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து'

ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை
வேண்டும்
அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)