Friday, August 18, 2017

மனைவிகளே காதல் துணைவிகளே

தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார்
பெத்த மகள்களே.. !

கடவுளின் துகள்களே !,

தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை
எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே !

கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க...

ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க …

சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை …

அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை.
Photo
கொஞ்சிப் பேசிய குரல் எங்கே ?

கிள்ளி விளையாடிய விரல் எங்கே ?

எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டு எங்கே ?

ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே... ?

ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே ? !

உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச்
சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு...

கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம்
ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு.

நட்புனா என்ன தெரியுமா ? !

சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா...

சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ …

காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்...

ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா ?

ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் ஃப்ரிட்ஜ் என்ற
மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க.

டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க. !

ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட்
ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க...

மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா...

வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா …. !

போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான்,

ஆனா, பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், கூடாரம் கவிழ்ந்து
சேதாரமாகிப் போனதாதான் பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது.

பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல போன பல பேரு,
'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு ஊரு முழுக்க நிறையவே
இருக்கு.

அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே உதறவைக்கிற அளவு,
புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல
கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் போடுவீங்க
பாருங்க ஒரு சத்தம்....
Photo
அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய்
வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம் .!

ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே ?

நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். ஆனா, என்னைக்காவது
அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா ?

எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல கொஞ்சம் வெண்ணையைத் தடவுன மாதிரி, லைட்டா
தொப்பை வந்தாலே, 'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு, காவடி சிந்து முதல்
கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க.

இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... ?

இது என்னம்மா நியாயம் ?

டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா ?

ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய்.

இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா … ?

நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா,
நாங்க பதிலா சொல்லுவோம்.. ?

பொய்தான் சொல்லுவோம் !

வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம் விட்டாக்கூட பீர் ஏப்பம்னு நினைச்சு
மோப்பம் புடிக்கிறது,

'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும், ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது,

வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது.

வேண்டாம் பேபிம்மா கோவம்,

ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம் …. !
Photo
கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ என்னைக்காவது சீக்கிரமா
கிளம்பி இருக்கீங்களா ?

எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, அசோக் லேலண்டு லாரிக்கே
பாடி கட்டிடலாம். !

நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த
நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.

கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு ?

மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு ?

தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்...

தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக் ?

நீங்கள்லாம் தங்கம்மா... தங்கம்.

ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க.

அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க...

சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க,

டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே... ?

முடியலைம்மா …..!

எதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா ?
Photo
'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா,
லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு
அர்த்தம். !

'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா?’னு நீங்க கேட்டா, 'பாத்திரம் நிறைய
சேர்ந்திடுச்சு... கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா?’னு அர்த்தம்.

'தலை வலிக்குது’னு சொன்னா, ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்...

இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும் .

கல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும், தொணதொணப்பும்தான்
இருக்கே தவிர, என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா ?

வருஷத்துல 365 நாள் இருக்கு...

அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு.

அதை மறந்தா என்னமோ, அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ -
வை கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க.

சரி பொறந்த நாளுகூட ஓ.கே...

சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம். !

ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் நினைவு நாளா நினைக்கிற கல்யாண நாளை,
நினைவிலேயே வைக்கசொன்னா எப்படிம்மா ?

வீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது’னு சொல்றீங்க.

அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு’னு சொல்றீங்க. !

இதைத்தான் 'எகனைக்கு மொகனை’னு சொல்வாங்க.

எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம் ?

மனைவிகளே... மனைவிகளே, !

நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு
வாசலில் செருப்பாகக் கிடப்போம்.
Photo
துணைவிகளே, துணைவிகளே, !

நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில்
பருப்பாகக் கொதிப்போம் ..

'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு’னு கேட்கிறப்பவே, அதுல
பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா ?

பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்...

ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை
அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே ….! ?

ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக்
ஐடினு வர்றீங்க.

ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு கணிச்சுச் சொல்ற
நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா
மாட்டோம் ? ?

ஆல் மனைவீஸ்,

நல்லா கேட்டுக்கங்க...

நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது,

ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது .

பக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை
எங்களை 'அண்ணா’னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே... அதுதான்
வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை.

ஒரு புருஷனோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கணும்னா, ஒரு மாசம், வேணாம், ஒரு
வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க...

ஓ, சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா ?

அப்போ, ஆண்டவனாப் பார்த்து பொண்டாட்டிங்களுக்கு ஒரு பொண்டாட்டி
அனுப்பிவெச்சாதான், பொண்டாட்டிங்களுக்கு, பொண்டாட்டிங்க பண்ற டார்ச்சர்
புரியும்.
Bookmark and Share

வண்டல் மண் கதைகள்‬

காட்டாத்துப் பாலத்துக்கிட்ட விறகுக்கு கருவக்குச்சிகள வெட்டி வச்சிகிட்டு, ரொம்ப கனமா இருக்கவும், சொம தூக்கிவிட யாராச்சும் ஆளு வருதான்னு இலுப்பமர நெழலுல ஒக்காந்து பாத்துகிட்டிருந்தா மல்லிகா.

மல்லிகாவுக்கு நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கெச்சலா,பாதிக்கு மேல நரச்ச தலையோட இருக்கிறவள பாத்தா இன்னும் ஒரு நாலஞ்சு வயசு சேத்து சொல்லலாங்கிற மாதிரி இருப்பா. பாட்டாளி பொம்பள, ஒரு நிமிஷம் சும்மா ஒக்காந்து பாக்க முடியாது. எதையாவது பரபரன்னு செஞ்சுகிட்டு இருப்பா. இப்போக்கூட மனசுக்குள்ள அடுத்த வேலைய யோசிச்சுகிட்டுதான் இருப்பா.

தூரமா எங்கயோ ட்ராக்டர் உழுற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சேத் தவிர ஆளுக வரதுக்கான அறிகுறியக் காணும்.
Photo
மரத்த அடச்சு நின்ன நெழல வச்சு மணி பண்ணெண்டு ஆச்சுன்னு தனக்குத்தானே முனகியபடி, தாலிக்கொடியில இருந்த ஊக்குல ஒண்ணக் கழட்டி காலுல குத்தியிருந்த முள்ளை எடுக்க ஆரம்பிச்சா. ஒரு காலை நீட்டி, முள்ளு குத்துன காலை, நீட்டுன காலின் தொடையில வச்சு, முள்ளு அறுவுதான்னு மெல்லமா தடவினாள். முள்ளு அறுவவும் ஊறுகாய தொட்டு நக்குற மாதிரி ஆக்காட்டி வெரலால எச்சியத்தொட்டு, அறுவுன எடத்தில தடவிப் பாக்கவும் பாதத்துக்குள்ள மச்சம் கெடக்குற மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சிச்சு முள்ளு. ஊக்கால மெல்லமா குத்தி, அப்படியும் இப்படியுமா நெம்பினாள். முள்ளு கொஞ்சம் தளந்து வரமாதிரி இருக்கவும் கட்ட வெரலுக ரெண்டையும் முள்ளுகுத்துன எடத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டுமா வச்சு வலட்ட ஆரம்பிச்சா. கட்டுக்கேணி செங்கல்லு இடுக்கிலிருந்து, பாம்பு தலையை நீட்டுற மாதிரி, கதக்குன்னு வெளில எட்டிப் பார்த்த முள்ளை, வெடுக்குன்னு புடுங்கி,” எத்தத்தண்டி குத்தியிருக்குன்னு பாத்தியன்ன; மொவரையும் தன்னான”ன்னு முணுமுணுத்துகிட்டே, முள்ள வீசி எறிஞ்சிட்டு மறுபடியும் ரோட்டுல ஆளு வருதான்னு பாத்தா. யாரும் வர்ற மாதிரித் தெரியல. கையி தன்னாப்புல கால்ல இன்னும் முள்ளு தச்சிருக்கான்னு தடவிக்கிட்டிருந்துச்சு.

முள்ளுத்தச்சக் காலில் இன்னும் நாலஞ்சு முள்ளு இருந்தா களஞ்சு எடுக்கலாம்னு தோணும். அப்படி ஒரு சொகமாவும் எதையோ சாதிச்சிகிட்டு இருக்குற மாதிரியும் இருக்கும். முள்ள எடுத்தப் பிறகு முந்திரிக்கொட்டைய அனல்லக் காட்டி, எளஞ்சூடானதும் வலியிருக்குற எடத்துல வச்சு வச்சு எடுத்தா வலி அப்படியே மரத்துபோவும். மரத்துப்போறது ரெண்டாம்பச்சம்தான், சுடும்போது சுருக் சுருக்குன்னு இருக்கிற அந்த சொகத்துக்கே நெதேய்க்கும் முள்ளக் குத்திக்கலாம்னு இருக்கும்.

ஆளுக அன்னாரத்தையேக் காங்கல, என்ன பண்ணலாம்னு சுத்தி முத்திப் பார்த்தா , பக்கத்துல இருந்த இண்டம்புதர்ல படர்ந்து கெடந்தக் குறிஞ்சாக்கீரை கண்ணுல படவும் எந்திரிச்சு, லேசா கெந்தி கெந்தி நடந்துபோயி கீரையப் பறிச்சு மடியிலக் கட்ட ஆரம்பிச்சா. பாதி மடி ரொம்பியிருக்கையில யாரோ வர மாதிரித் தெரியவும், சட்டுன்னு புதரவிட்டு வெளில வந்து ரோட்டைப் பார்த்தா.

மாடிவீட்டு ரெங்கராசு தன்னோட பல்சர, காட்டாத்துக் கரையோரமா இருக்கிற கருவ மரத்தடில நிப்பாட்டிட்டு, அதுல சாஞ்ச மேனிக்கே ஒரு கையில புகையிற சிகரெட்டும், இன்னொரு கையில செல்போன வச்சி நோண்டிகிட்டும் நின்னான். மட மடன்னு சலவ மடிப்புக் கலையாம, வெள்ளையுஞ் சொள்ளையுமா கரவேட்டி கட்டிகிட்டு, கைசெயினு , மோதிரம்னு நிக்கிற அவன பாத்தாலேத் தெரியும். பெரும் பணக்காரன்னு. மல்லிகா வீட்டுக்கு ஒண்ணுவிட்ட பங்காளிதான் ரெங்கராசு.
ரெங்கராச பார்த்த மல்லிகா புதரவிட்டு ரெண்டு எட்டு எடுத்துவச்சிட்டு ஏதோ யோசனையா தலைய சொறிஞ்சிகிட்டே மறுபடியும் புதருக்கேத் திரும்பி கீரைய பறிக்க ஆரம்பிச்சிட்டா.
Photo
சிகரெட்ட இழுத்து முடிச்சிட்டு ரெங்கராசு வண்டிய ஸ்டார்ட் பன்ற சத்தம் கேட்டதும் , மல்லிகா அவன் கண்ணுல படுற மாதிரி விறுவிறுன்னு வெறவுக்கட்டுக்கு பக்கத்துல போயி நின்னுகிட்டு அவனப் பாத்து, ”சொமய கொஞ்சம் தூக்கிவிடுறியா?”ங்கிற மாதிரி சிரிச்சா, பதிலுக்கு ரெங்கராசும் வேண்டா வெறுப்பா லேசா சிரிச்சு தலைய ஆட்டிட்டு, அவளோட சிரிப்பின் அர்த்தம் வெளங்காதவன் போலவே , வண்டிய கிளப்பிகிட்டு அவம் பாட்டுக்கு போயிகிட்டிருந்தான்.

மூஞ்சில அடிச்ச மாதிரி போச்சு மல்லிகாவுக்கு, ”பெரசண்டு எலக்சன் வரட்டும், சித்தி நொத்தின்னுட்டு இளிச்சிகிட்டு வரயில இருக்கு” என்று தனது ஆற்றாமைய வாயவிட்டு புலம்பிகிட்டே மறுபடியும் மரத்தடிக்கேத் திரும்பி, கீரைகள ஆஞ்சபடி ஒக்காந்துட்டா.

நேரம் ஆக ஆக, பசி மயக்கத்துல ”உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”ன்னு பெலகீனமா மூச்சுவிட்டவ, இங்கின ஒக்காந்திருக்க நேரத்துக்கு வீட்டுக்கே போயி ஆள அழைச்சிகிட்டு வந்திரலாம்னு யோசிச்சு,ஆஞ்சக்கீரைய அப்படியே முடிஞ்சிகிட்டு எந்திரிக்கையிலே, ”என்ன அத்தாச்சி இங்கின குந்தியிருக்க, சொம தூக்கிவிடனுமா” என்றபடியே தோள்ல மம்பட்டிய வச்சிகிட்டு வந்துகிட்டிருந்தான் அர்ச்சுனன்.

”யப்பா,நல்ல வேள நீ வந்த, வெறவு வெட்டி கட்டி வச்சிட்டு ஒரு நாழியா குந்தியிருக்கேன் ஒரு புள்ள பொடுசக் காணும்”ன்னு சொல்லியபடியே சும்மாடுக்கு கொண்டு வந்திருந்தத் துண்ட சும்மாடு கோலவும்,

”அத்தாச்சி, இந்த மம்பட்டிய நீ எடுத்துக்க, நான் தூக்கிட்டு வறேன்"னு அர்ச்சுனன் சொல்லிகிட்டே வெறவுக்கட்ட குனிஞ்சு தூக்கப் போனான்.

”அட நீயே வேல செஞ்சுக் களச்சுப் போயி வற, ஒனக்கு எதுக்கு செரமம், சும்மா தூக்கிவிடு, நான் தூக்கிட்டு வறேன்"னு சொன்ன மல்லிகாவ எடமறிச்சு,
”ஆமா நீ தூக்குன, கால வேற கெந்துற , சும்மா இரு அத்தாச்சி, நான் தூக்கி கொண்டாந்து போட்டுட்டு போறேன்"னு சொல்லியபடியே ”ஒரு கைபோடு ” என்று மல்லிகாவிடம் வெறவுக்கட்ட தூக்கிவிடச் சொல்லி குமிஞ்சான்.

”இரு இரு இந்தா இந்த சும்மாட தலைக்கு வச்சிக்க” என்று துண்டை நீட்டினா மல்லிகா.
Photo
”துண்ட எந்தலையில வச்சிகிட்டு வந்தா அப்புறம் தீட்டுன்னு தொடமாட்டிக, நீயே வச்சிக்க ,புதுத்துண்டாட்டமா வேற இருக்கு, நான் ஓணாங்கொடிய பறிச்சு சுத்திக்கிறேன்”னான் அர்ச்சுனன்.

”ம்க்கும், தீட்டாம்ல, காசு பணம் இல்லீன்னா எல்லாந் தீட்டுதான்”ன்னு சொல்லிகிட்டே,கோலுன சும்மாட அர்ச்சுன தலையில வச்சிவிட்டு, வெறவுக்கட்ட தூக்கிவிட்ட மல்லிகா, ”நட போவோம்”னு சொல்லி அர்ச்சுனனின் மம்பட்டிய தூக்கிக்கிட்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பிச்சா...!

Bookmark and Share

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம்.
சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.

சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக
சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்
கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும்.
சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும்.
சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும்.
Photo
ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல்

"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

சிரிப்பைபற்றி மேலும்,

சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.
வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும் மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை அவதானிக்கமுடிகிறது.
சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர் ( தமிழ் திரைப்படம்- "வசூல் ராஜா MBBS" இல் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது)
சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகவும்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும்.
இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது சிரிப்பு.
அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்
Photo
சிரிப்பின் வகைகள்
அசட்டு சிரிப்பு
ஆணவ சிரிப்பு
ஏளனச் சிரிப்பு
சாககச் சிரிப்பு
நையாண்டி சிரிப்பு
புன் சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
மழலை சிரிப்பு
நகைச்சுவை சிரிப்பு
அச்சிதல் சிரிப்பு
தெய்வீகச் சிரிப்பு
புருவச் சிரிப்பு
காதல் சிரிப்பு
வில்லங்க சிரிப்பு
ஏழையின் சிரிப்பு

சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்
உதட்டின் மூலமாக சிரித்தல்
பற்கள் தெரியும்படியாக சிரித்தல்
பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமாக சிரித்தல்
சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்
அன்பு
மகிழ்ச்சி
அகம்பாவம்
செருக்கு
இறுமாப்பு
தற்பெருமை
அவமதிப்பு
புறக்கனிப்பு
வெறுப்பு

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
விளையாமல் சிரிப்பவன் வீணன்.
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
காதலால் சிரிப்பவள் மனைவி.
அன்பால் சிரிப்பவள் அன்னை.
Photo
சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்,
மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.
எனவே சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும் விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

சிரிப்பைப்பற்றி தமிழ் அறிஞ்ஞர்களின் கருத்து
திருவள்ளுவர்- துன்பம் வரும் வேளையிலே சிரிங்க.
பொதுவுடைமைக் கவிஞர்-சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி
கவியரசு கண்ணதாசன்-சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

சிரிப்பு பொன்மொழிகள்,பழமொழிகள்
சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்! -சேப்டஸ்பரி
ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும். இதற்கீடான பொருள் உலகத்தின் எந்தச் சந்தையிலும் இல்லை. -லேம்ப்
சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள். -லீஹண்ட்
வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நகைச்சுவையல்ல. உள்ளம் கிழ்விக்கும் புன்முறுவல் ஒரு கோடி தடவை சிரிப்பதைவிட உயர்ந்ததாகும். - ஸ்டர்னே
மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான் -கார்லைல்
மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும் வரை அவன் ஏழையாக மாட்டான்.
Always laugh when you can.Its cheap medicine - Lord Byron
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
" நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால், நான் நீண்ட நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" -மகாத்மா காந்தி

உலக சிரிப்பு தினம்
ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் சிரிப்புக்கென்றே ஒரு தினம் இருப்பதுதான்.'உலக சிரிப்பு தினம்' ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம்.

அதை விட உலகளவில் 65 நாடுகளல் சுமார் 6000 சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன.

ஏழையின் சிரிப்பு

சிரிப்பு
சிரித்து வாழவேண்டும் (சிரிப்பு) பாடல்
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Photo
====================================================
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
====================================================
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.....!
Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)