Tuesday, April 25, 2017

சுடுகாட்டுக் கடவுள்

காது உடைந்து போன ஊசி கூட நாம் இறந்து போனால் துணைவராது என்பார் பட்டினத்து அடிகள். வாழ்நாள் முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து சேர்த்து வைக்கும் பொருட்செல்வம் உடலோடு நின்றுவிடும். இறை உலக வாழ்விற்குத் துணையாக வரும் செல்வம் அருட்செல்வமே என்பதை, “ அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்றும் “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்றும் கூறுவார் திருவள்ளுவப் பெருந்தகை. உலகப் பொருட்களாகிய நிலையற்ற செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளன. அவை உடலோடு நின்றுவிடும். உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள நிலைத்த அருள் செல்வம் இறந்த பின்னரும் உயிரோடு தொடர்ந்து வருவது. இதனாலேயே “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று திருஞானசம்பந்தர் கோயில் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார். தில்லைச் சிதம்பரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்ற, உலகச் செல்வங்களையும் அருட் செல்வத்தையும் அருள்கின்ற அப்பெருமானை வழிபடுவதே உண்மையான செல்வம் என்பார்.  சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவத்தில் முழுமுதற்பொருளாகக் கொண்டு வழிபடுகின்ற சிவபெருமான் இரப்பவர் அல்லது பிச்சை ஏற்கின்ற பிச்சாடனராகக் கோலங்கொண்டு அருள் புரிவதனால் அவரை ஏழ்மையில் வாழும் கடவுள் என்று நம்மில் பலர் எண்ணுகின்றனர். ஏழ்மையான சிவபெருமானை வழிபடுகின்றவர் ஏழைகளாகிப் போவர் என்று அஞ்சுகின்றனர். பெருமான் கொள்கின்ற வேக, போக, யோக வடிவங்களில் இரப்புக்கோலம் (பிச்சாடனர் கோலம்) யோக வடிவங்களில் ஒன்று என்பதனைப் பலரும் அறிவதில்லை. மறக்கருணை கொண்டு தீயவர்களை ஒடுக்கும் வடிவம் வேக வடிவம். இதற்குப் பெருமான் எலும்பு மாலையையும், மண்டை ஓட்டு மாலையையும் அணிந்துள்ள கங்காள வடிவத்தினைக் குறிப்பிடலாம். உமை அம்மையோடும் முருகனுடனும் இருக்கும் அம்மை அப்பர் பிள்ளை வடிவு (சோமாசுகந்தர்) போக வடிவம் ஆகும். எல்லாவற்றையும் துறந்து வெறும் கீழ் உடையுடன் இரப்புக்கலனுடன் இருக்கின்ற கோலம் (பிச்சாடனர்) யோக வடிவாகும்.
தவிர, எல்லோருடைய வாழ்வினையும் முடிக்கின்ற கடவுள் என்பதனால் பெருமான் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கின்றான் என்பர். அவன் தீயாகி நின்று இறந்த உடலைச் சாம்பல் அல்லது நீறு ஆக்குவதோடு உயிர்களின் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் சுட்டு எரித்து நீறு ஆக்குவதனால் அவனைச் சுடுகாட்டில் உடைய சாம்பலை உடலில் பூசி நள்ளிருளில் நட்டம் ஆடுகின்றவன் என்பர். இவ்வரியக்கருத்தினைச் சரிவர புரிந்துக்கொள்ளாதவர் சிவபெருமானை ஏழைமையான சுடுகாட்டுக் கடவுள் என்றும் இறந்து போனவர்களுக்காக வழிபாடு செய்வதற்கு மட்டுமே உரிய கடவுள் என்றும் எண்ணுகின்றனர். சுருங்கக் கூறின் உயிர் அமைதி பெறுவதற்கு (மோட்ச விளக்கு) வழிபாடு செய்யும் கடவுள் சிவ பெருமான் என்று எண்ணுகின்றனர். உலக வாழ்க்கைக்குத் தேவையான பணத்தினைப் பெற வேண்டுமானால் குபேர பூசனை செய்ய வேண்டும், இலட்சுமி பூசனை செய்ய வேண்டும் திருவேங்கிடமலையாரை வழிபட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
சிவபெருமான் இட்ட பணிகளைச் செய்யும் வானவர்களில் ஒருவன் குபேரன். இக்குபேரன் பெருமானின் எல்லையற்ற நிதியத்தினைக் கட்டிக் காக்கும் தலைமைக் கணக்கர் பொறுப்பினை பெற்றுள்ளான். தவிர பெருமானின் அளவிலாத பொருளை உரிய அடியவர்களுக்கு உரிய வேளையில் அளிக்கும் பணியைப் பெருமான் குபேரனுக்குத் தந்துள்ளான் என்பதனை “அதிபதி செய்து அள்கை வேந்தனை, நிதி செய்த நிறைதவ யோகி, அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின், இறுபதிகொள் என்ற பெருமானே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
திருவேங்கட மலைக்குத்தலைவனாகிய திருவேங்கிடமலையானுக்கு (வெங்கடாசலபதி) செல்வம் அவனின் ஆற்றலாகிய இலக்குமி என்ற திருமகளின் வழியாகவே வருகிறது என்பதனால் தான் வாணிக மையங்களில் இந்துக்கள் திருமகள் திருவுருவப் படத்தினை வைப்பதையும் திருமகள் பூசனையை வீட்டில் வைப்பதனையும் பார்க்கின்றோம். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது சிவபெருமானின் அருள் விளைவால் பல அரிய பொருள்கள் அக்கடலில் இருந்து தோன்றின. அவற்றில் ஒன்று திருமகள் ஆகும். இதனாலேயே திருமகளை அலைமகள் என்று குறிப்பிடுகின்றனர் என்று கச்சியப்பரின் கந்த புராணம் குறிப்பிடும். பொருட்செல்வத்தினை வாறி வழங்கும் ஆற்றலாக விளங்கிய திருமகளைச் சிவபெருமான் திருமாலின் சத்தியாக ஆக்கினார் என்பது கந்தபுராணச் செய்தி. எனவே எல்லாவிடத்தும் எப்போதும் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் வழங்குகின்றவன் சிவபெருமான் என்று தெளிவாகின்றது.
தன் தந்தை சிவபாத இருதையர் வேள்வி செய்வதற்குப் பொருள் கேட்டபோது திருவாவடுதுறை சிவபெருமானை “இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்” எனும் தமிழ்மந்திரம் பாடித் திருவாவடுதுறையில் திருஞானசம்பந்தர் பொருள் பெற்றதும் அடியார்களின் பசியைப் போக்கத் திருவீழிமிழலையில் தமிழ் மந்திரம் பாடி திருநாவுக்கரசு பெருமான் பொருள் பெற்றதும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்குப் பொருள் வேண்டிப் புகலூரில் செங்கல்லைத் தலைக்கு வைத்து உறங்கிய சுந்தரருக்கு அவற்றைப் பொன்னாக்கி பெருமான் தந்ததும் இன்னும் அடியார்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ள பல பொருள் பெற்ற நிகழ்ச்சிகளும் அவன் பொருளையும் வழங்குபவன் என்பதனை உறுதி செய்கின்றன.
சீனர்கள் நன்னோக்குப் பொம்மை (அதிர்ஷ்டபொம்மை) என்று வைத்திருந்த ஒரு சீனப் பொம்மைக்கு முடி அமைத்து (கிரீடம்) அதன் அருகில் கலைமகளையும் திருமகளையும் அமர்த்தி, அதனைக் குபேரன் என்று வழிபடும் பலர் திருமூலர் கூறும் அரிய உண்மைகளைத் தெளிய வேண்டும். குபேரன் பேரைச் சொல்லிப் பல்வேறு வழிபாட்டு முறைகளைச் சொல்லிக் கொடுக்கின்றவர்களும், அவ்வழிபாட்டினை நடத்துகின்றவர்களும் சிவபெருமானே குபேரனுக்கு அருள்புரிந்தார் என்று திருமூலர் கூறும் அரிய செய்தியினையும் மறவாது கூறி அவர்களை முழுமுதல் பொருளான சிவத்தை வழிபடுவதற்கு ஆட்படுத்தவும் வழிகாட்டவும் வேண்டும். உண்மைச் சமயத்தை உணர்ந்து உலகில் பொருளும் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோமாக!

Bookmark and Share

தேவை இல்லாத இடத்தில மூக்கை நுழைத்தால்

PhotoBookmark and Share

நெஞ்சு முழுக்க நஞ்சு

50 வருடங்களுக்கு முன்னர் நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கனிலும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனிலும் பல வேறுபாடுகள் உள்ளன.

பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். ஆனால், அது இன்று உயிரைக் கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.


01) ஆன்டி-பயாடிக்ஸ்!

சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் உட்செலுத்துகின்றனர். இது கோழியின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.. அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.

02) பெரிதாக இருக்க!

1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நன்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது. மேலும், ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலம் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது.

03) ட்ரக்ஸ்!

ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்-ல் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கின்றது. இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர்.

04) ஆர்சனிக்!

ஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம். இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர். இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனித உடலுக்கும், ஆரோக்கியதிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

05) நெஞ்சு முழுக்க நஞ்சு!

சிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பு உண்ணும் பாகம். ஆனால், இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான்.Bookmark and Share

அஜீரண கோளாறுகள்

நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

👉விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை , வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .


👉 ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .


👉 தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .


👉 சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும்.

Bookmark and Share

தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம்

மனுநீதிச் சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்த ஒரு மன்னன் சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.நீதி வழுவாது ஆட்சி செய்து வந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மனுநீதிச் சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மக்களும் மனம் மிக மகிழ்ந்தனர்.' வீதி விடங்கன்' என்னும் பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். வீதிவிடங்கன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.குறித்த வயதில் மன்னர் அவனுக்கு யானை ஏற்றம் குதிரைஎற்றம் தேர் ஓட்டுதல் வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் வீதிவிடங்கன்.
நீதி தவறாத மன்னன் மனுநீதிச் சோழன். நாட்டு மக்கள் மன்னனான தன்னை எந்தவிதத் தடையும் இன்றி நேரில் காணவேண்டும் என்று சிந்தித்தான்.
அதற்காக சபை கூட்டி ஆலோசனை செய்தான். மக்கள் அனைவரும் மகிழும்படி ஒரு காரியம் செய்தான். தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான். மன்னனைக் காண விரும்பி வருபவர் யாராயினும் அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினால் மன்னன் நேரிலே வந்து குறைகளைக் கேட்பார். நேரில் கேட்டுக் குறைகளைக் களைவார்.என்று பறையறைவித்தார். மக்கள் தங்கள் மன்னனின் எளிமை கண்டு மகிழ்ந்ததோடு அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். காட்சிக்கு எளியனாக உள்ள மன்னனை யார்தான் விரும்பமாட்டார்கள்.
ஆண்டுகள் கடந்தன. மனுநீதிச் சோழனால் கட்டப் பட்ட அந்த ஆராய்ச்சி மணியை யாரும் அடிக்கவேயில்லை. மக்கள் எந்தக் குறையும் இன்றி நாட்டில் வாழ்ந்து வந்தனர். காலம் ஒரே மாதிரி செல்லுமா. சோதனை மன்னன் மகன் வீதிவிடங்கன் உருவில் வந்தது.
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.
மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.

அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.
"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும்.
என்று முடிவு செய்தான்.

உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .
.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.
என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.

Bookmark and Share

சுவைகளும் - பாம்பு வகைகளும்

விஷப் பாம்பு, தேள் கடித்தால், உடனே இதை செய்தால் விஷம் ஏறாமல் தடுக்க முடியும் - இயற்கை மருத்துவம்

நகர் புறங்களை காட்டிலும், கிராம புறங்களில் தான் விஷப் பூச்சி கடி அதிகம் காணப்படும் என கூறுவதுண்டு. ஆனால், மழை காலத்தில் நகர் புறங்களில் கூட விஷப் பூச்சிகள் அதிகரித்து காணப்படும். முக்கியமாக பாம்பி, தேள், வெறிநாய் போன்றவை கடித்தால் நமது ஆரோக்கியத்தில் தீய தாக்கம் பலவன ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, விஷப் பூச்சி கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்....

பாம்பு கடிதத்தை எப்படி கண்டறிவது?

ஒருவேளை ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் அல்லது வயல் காட்டில் நடந்துக் கொண்டிருக்கும் நமக்கே தெரியாமல் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த வகையிலான பாம்பு என்பதையும் நாம் ஒரு சிறு வழிமுறை மூலம் கண்டுப்பிடிக்கலாம்.

பாம்பு கடித்தவர்களுக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியுடைய வேரினை கொடுத்து சுவைக்க சொன்னால் போதும்...

சுவைகளும் - பாம்பு வகைகளும்!

இனிப்பு சுவையாக இருந்தால் - நல்ல பாம்பு
புளிப்புச் சுவையாக இருந்தால் - விரியன் பாம்பு
வாய் வழவழப்பாக இருந்தால் - வழலைப்பாம்பு, நீர் பிரட்டை
கசப்புச் சுவையாக இருந்தால் - வேறு பூச்சிகள்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு நபரை பாம்பு கடித்துவிட்டால் உடனே வாழைப்பட்டை உரித்து அதில் பாதிக்கப்பட்ட அந்த நபரை படுக்க வைக்க வேண்டும். பிறகு வாழைப்பட்டை சாற்றை ஒரு லிட்டர் அளவு பிழிந்து வாயில் ஊற்ற வேண்டும். அதை முழுவதுமாக பாம்பு கடித்த நபரை குடிக்க செய்ய வேண்டும்.

தேள் கடி மருந்து - #1

எலுமிச்சை பழத்தின் விதைகளை உப்புடன் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் தேள் கடித்த விஷம் இறங்கி விடும்.

தேள் கடி மருந்து - #2

எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேள் கடி மருந்து - #3

ஒரு கல்லில் சில துளி நீர் தெளித்து அதில் புளியங்கொட்டை தேய்த்து அதன் சூட்டுடன் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் அதன் விஷயம் இறங்கியதும் புளியங்கொட்டை கீழே விழுந்துவிடும் என இயற்கை மருத்துவ குறிப்புகளில் கூறப்படுகிறது.

தேள் கடி மருந்து - #4

கொஞ்சம் நாட்டு வெல்லத்துடன், கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலை சேர்த்து நன்றாக கலந்து பிசைத்து தேள் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் குறையும்.

தேள் கடி மருந்து - #5

குப்பை மேனி இலையை நீரில் கழுவி, கசக்கி சாறு எடுத்து, அந்த இலையுடன் சேர்த்து தேள் கடித்த இடத்தில் தடவி, இறுக்கி கடிவாயில் கட்டினால் தேள் விஷம் இறங்கும்.

Bookmark and Share

அதிகம் எதிர்பாராதே... அடிமையாகவும் ஆகாதே...

*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*👇👇👇

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....
திருத்தமிழ்: வள்ளலார் வழி ...
இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்-
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!
ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)