Friday, March 19, 2010

எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……




Bookmark and Share

ஆன்மீகப் புனிதம் காப்போம்

உண்மையான ஆன்மீகம்

இயற்கைக்கு மாறாக எது செய்தாலும்
இழிவு தான் கிடைக்கும் முடிவில் ...
துறவறம் இயற்கைக்கு மாறானது
பசி எடுக்கும் வயிற்றைப் பட்டிணி போடுவது
உடல் வருத்தி உயர்தவம் செய்வது
உண்மை நிலைதவறாத உத்தமராய் நடிப்பது
வேண்டாம் இந்த போலி வேஷம் ...

அவதாரப்புருஷன் மனிதனாய் அவதரித்தாலும்
இயற்கையோடுதான் வாழ்ந்தாகவேண்டும்
உண்பதும் காலைக்கடன் முடிப்பதும்
உலகில் வாழும் உயிர்களின் நியதி ...

வேண்டாம் இந்த போலி வேஷம் ...
வேண்டாம் இந்த நம்பிக்கை (மகான் - எதிர்பார்ப்பு)
சில பாதிரியார்களின் லீலைகள் பார்த்திருந்தபோதிலும்
பல போலிச்சாமியார்களின் சாயம் வெளுத்தபோதிலும்
காசாப்புக்காரனை நம்பும் நம் ஆட்டு ம(னிதர்) ந்தை கூட்டம்
என்றுமே மாறிவிடப்போவதில்லை ...

வழி தெரிந்தவர்கள் (குரு) வழிகாட்டலாம் - ஆனால்
அவரையே வழியென்று நினைப்பது நம் தவறு ...
மகான்கள் இயற்கைக்கு மாறாக இருக்கவேண்டும்
என்று நினைப்பது நம் தவறு ...
அவர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணும்போது
தவறாய்த் தெரியாது எதுவும் ...
சக மனிதர்களை மகான் என்று புகழவும் வேண்டாம் - பின்பு
மதிகெட்டவன் என்று இகழவும் வேண்டாம் ...
புரிந்துகொள்வோம் ... ஆன்மீகப் புனிதம் காப்போம் ...






Bookmark and Share

Saturday, March 13, 2010

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை

அத்தை மகனும் மாமன் மகளும், அல்லது அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்து அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் இருவர் இவ்வாறு ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகையில் பிறக்கும் பிள்ளைகள் குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் எனும் ஒரு கருத்து மருத்துவர்களிடையே நிலவி வந்தாலும் இத்திருமண முறையைப் பெரும்பாலும் நமது சமூகத்திலுள்ள அனைவரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஒருவரையொருவர் தம் மனதிற்குள்ளேயே காதலிக்கும் அத்தை மகனும் மாமன் மகளும் அவர்களின் திருமண நாள் குறிக்கும் நாளில் அத்தை மகன் விளையாட்டாகத் தான் வேறொரு பெண்ணை மணக்கக்கூடும் எனும் பொருள்பட மாமன் மகளிடம் புதிராகப் பேசிவிட்டு, இறுதியில் தான் அவளையே மணக்கப்போவதாக அவள் உணரவைத்து அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவேண்டுமென விரும்பி, அதன்படியே அவள் குழம்பிய மன நிலையில் தவிக்கையில் தங்கள் திருமணத்திற்கென மாலைகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காணும் காட்சி அவனை நிலைகுலையச் செய்கிறது. அவன் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண் மனதில் பெரும் சோகத்தையும் அதனால் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த, தன் மனம் உடைந்து போன அப்பெண் விஷமருந்தி உயிர்நீக்கிறாள்.

தன்னுடைய தவறினால் தன் காதலி மாண்டதாலும் அவளை விரும்பிய மனதில் வேறு ஏதும் விரும்பாத கொள்கையாலும் ஆட்கொள்ளப்பட்ட அவன் அவள் நினைவாகவே தனது வாழ்நாளைக் கழிக்கையில், மனம் போனபடி தன் ஊரை விட்டு எங்கோ சென்றவன் வேறொரு ஊரில் உள்ள ஆலயம் ஒன்றில் தண்ணீர் சுமந்து தருவது போன்ற பணிகளைச் செய்து கொண்டு அங்கேயே தனியாக வாழத் தலைபடுகையில் அவ்வூரில் வசிக்கும் வேறொரு இளம் விதவைப் பெண்ணின் பெயர் இவனது காதலியின் பெயராக அமைந்து விடுவதால், இவன் தனது காதலியின் பெயரை அவ்வூரிலுள்ள சில சுவர்களில் எழுதியதால் சிறு குழப்பம் ஏற்படுகிறது. பின்னர் அக்குழப்பம் தெளிந்து அவ்விதவைப் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்வானோ எனும் ஒரு எதிர்பார்ப்பைப் பிறர் மனதில் ஏற்படுத்துவது போன்றதொரு நிலையில் அவனும் அவ்விதவைப் பெண்ணும் ஒன்று சேர்ந்து அவ்வூரிலிருக்கு வேறொரு இளம் காதல் ஜோடியை ஒன்று சேர்க்கப் பாடுபட்டு வெற்றியும் காண்கின்றனர். இம்முயற்சியில் நம் கதாநாயகன் தன் உயிரையே விட்ட பின்னரும் அவனது பிணத்தின் கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து அவன் உயிருடன் நிற்பது போன்றதொரு தோற்றத்தினை ஏற்படுத்தி அவ்விதவைப் பெண், அவ்விளம் ஜோடியின் திருமணத்திற்குத் தடையாக நிற்கும் ஒருவரை ஏமாற்றி, தங்களது முயற்சியான காதலர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி காண்கிறாள்.

இக்கதை வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதையாகும்.

தன் தவறுதலால் மாண்ட தன் காதலியை மனதில் எண்ணீயபடி கதாநாயகன் பாடுவதாக அமைந்தது இவ்வினிய பாடல். ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது




Bookmark and Share

Friday, March 12, 2010

தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?




Bookmark and Share

Sunday, March 7, 2010

திருக்கண்ணபுரத்து திருவருள்

திருக்கண்ணபுரத்து திருமாலே - உந்தன்
திருவடி சரணமப்பா ...
திருமங்கள நாத இசைகேட்க - எந்தன்
இருகரம் குவித்து வணங்குகின்றேன்

தூய தமிழ்ச்சொல்லெடுத்து, துயர் துடைக்கும்
தூ(மா)யவனை துதிக்கின்றேன்... துணையிருப்பாய் ...
ஆயிரமாயிரம் பாடல்கள் நான் பாடினாலும்
ஆழ்வார்தம் திருப்பாவையில் அணுவும் ஆகாதெனினும்- என்
ஆழ்மனதிலிருந்து வரும் இத்துளிக்கவிதையை
துளசிமாலையாய்த் தொடுக்கின்றேன் .. துணையிருப்பாய் ...

பொன் பொருள் வேண்டி உந்தன் பொற்பாதம்
பிடித்திடுவார் பல கோடி ...
பெருஞ்செல்வம் வேண்டி உந்தன் பேரருளைப்
போற்றிடுவார் பல கோடி ...
நான் வந்த காரணம் நீ அறிவாய்
தேனினிய திருவடியில் இடம் தருவாய் ...

பாலும் பழமும் கொண்டுவந்து படைத்து
பரந்தாமன் அருள் பெறுவார் பலர் ..
பூவும் (துளசி) மாலையும் கொண்டுவந்து சூட்டி
புருஷோத்தமன் அருள் பெறுவார் பலர் ...
நானோ ...
வெறுங்கையோடு வந்திருக்கிறேன் ... திறந்த மனதோடு...
உன்னிடமிருந்து பிரிந்துவந்து மனிதனாய்ப் பிறக்கையிலும்
பின் வந்து உன்னிடத்தில் சேர்கையிலும் (வைகுண்டம்)
வெறுங்கையோடு வரும் நினைப்பில்
பரம்பொருளின் அருள்பெற வந்திருக்கிறேன் ..
தூ(மா)யவனே... துதிக்கின்றேன்.. துணையிருப்பாய் ...
ம்.
ம்.ம்..
ம்.ம்..ம்...
யாவருக்கும் கிடைத்திடாத பேரருளைப்பெற்றுக்கொண்டேன்
பெருமாலே ... பெருமாலே... போற்றி... போற்றி ..




Bookmark and Share

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)