Monday, July 22, 2013

ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!

பருப்புத் தேங்காய் பற்றிச் சொல்கையில் ஒரு விஷயத்தை விட்டுட்டேன். திருநெல்வேலிக்காரர்கள் பருப்புத் தேங்காயைக் கூட்டில் அடைக்க மாட்டார்கள். பருப்புத் தேங்காய் செய்முறையும் தனியாக இருக்கும். அரிசி மாவு, உளுத்தமாவு, கடலைமாவு சேர்த்துக் கொஞ்சம் கனமான இழைகள் கொண்ட தேன்குழல்கள் செய்து, அதை வெல்லப் பாகில் சேர்ப்பார்கள். இது ஒரு பித்தளையில் ஆன அரை அடுக்கு நிறையச் செய்து வைத்து அதன் நடுவில் சின்னதாகக் கூம்பு போல் பருப்புத் தேங்காய் 2 பிடித்து வைப்பார்கள். முழு அடுக்கில் கிட்டத்தட்ட அப்போதைய ஒரு மூட்டை அரிசியை வடிக்கலாம் எனில் அரை அடுக்கில் அதில் பாதி வடிக்கலாம். அப்போ பருப்புத் தேங்காய் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன். முன்னெல்லாம் ஒரு மூட்டை அரிசிக்கு பக்காப்படி ஐம்பது படி இருக்கும். இப்போ மூட்டைனு தருவது பத்து கிலோ, பதினைந்து கிலோ, இருபது, இருபத்தைந்து கிலோ பைகள். ஆகவே உங்கள் கணக்குப் பழைய முறையில் போடும் கணக்காக இருக்க வேண்டும். :)))) அதோடு பருப்புத் தேங்காய் வகைகளில் பூந்திப் பருப்புத் தேங்காயை மறந்துட்டேன். :)))) ஆச்சு, பக்ஷண வேலை முடிஞ்சாச்சு; வடாம், வற்றல் போட்டாச்சு, துணி, மணி எடுத்துத் தைக்கக் கொடுத்தாச்சு. எல்லாம் செய்த நாம் முக்கியமானதை விட்டுட்டோமோ? இல்லை; அதெல்லாம் விடலை. என்னனு கேட்கறீங்களா? அதான் சமையலுக்கு ஆள் போடுவது! கல்யாணம் நிச்சயம் ஆனதுமே இப்போல்லாம் காடரிங் கான்ட்ராக்டரைப் பார்த்தாகணும். பல பெரிய கான்ட்ராக்டர்கள் சத்திரங்களில் திருமண முஹூர்த்தத் தேதிகளுக்கு முன் பதிவு செய்து வைத்துக் கொள்ளுகின்றனர். நாம் கூப்பிடும் கான்ட்ராக்டர் அப்படிச் சத்திரங்களில் முன் பதிவு செய்தவராக இருந்தால் அவரே சத்திரத்துக்கும் சேர்த்து நம்மிடம் பேசிவிடுவார். இல்லை எனில் சத்திரக்காரர்களை நம்மைச் சந்தித்துப் பேசச் சொல்லுவார். கல்யாணத் தேதி உறுதி செய்துவிட்டுச் சத்திரத்துக்கு அலையும் மக்கள் இப்படி ஒரு வசதியா என நினைத்துக் கொண்டு ஒத்துக்கொள்வார்கள். 1996-ஆம் வருடம் நடந்த எங்கள் உறவினர் கல்யாணத்தில் அம்மாதிரி நடந்தது. நல்லவேளையாகச் சத்திரம் நிறைய அறைகளோடு இருந்தாலும், சமையல், சாப்பாடு சோபிக்கவில்லை என்பதோடு சரியாகக் கவனிக்கவும் இல்லை. ஜூலை மாதம் கல்யாணம் நிச்சயம் செய்த பின்னர் செப்டம்பர் மாதத் தேதிகளில் சத்திரம் கிடைக்காமல், அக்டோபரில் சத்திரம் கிடைத்த முஹூர்த்தத் தேதிக்குக் கல்யாணம் மாற்றப் பட்டது. பார்க்க இது வசதியாகத் தோன்றினாலும் சத்திரத்து நிர்வாகிகளுக்கும், சமையல் கான்ட்ராக்டர்களுக்கும் இடையில் எழுதப் படாத ஒப்பந்தம் இருக்கிறது. இப்போதெல்லாம் சத்திரங்கள் அடுத்த ஜனவரி 2014 முஹூர்த்தங்களையும் தாண்டி முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அதோடு வாடகையும் அதிகம். மதுரையில் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் மங்கள நிவாஸில் திருமணம் நடத்த முதலில் பணம் வாங்கவில்லை. வாங்க ஆரம்பித்த பின்னரும் குறைந்த தொகையே வாங்கினார்ர்கள். ஆனாலும் யாரும் அங்கே கல்யாணம் செய்ய முன்பதிவு செய்யமாட்டார்கள். அக்கம்பக்கத்து வீடுகளை இணைத்து வாசலில் பெரிய பந்தல் போட்டு மணல் பரப்பி மேடை அமைத்துக் கல்யாணம் செய்துவிடுவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் மனிதர்கள் அந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள். இப்போதும் சமையல் காடரிங் ஆட்களிடம் விடாமல் சொந்தமாக சாமான்களை வாங்கிக் கொடுத்துச் சில கல்யாணங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சாமான்களை நாமே சமையல்காரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கெனத் தனியாகப் பொறுப்பான ஒருத்தரை நியமிப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் இந்த அறையை உக்கிராணம் என்றே அழைப்பார்கள். பல கல்யாணங்களிலும் இந்த உக்கிராணம் பார்க்க சமையல்காரர்களே தங்களுள் ஒருத்தரை நியமிக்கச் சொல்வார்கள். இதை ஏற்காமல் வீட்டு மனிதரில் நெருங்கிய ஒருவரைச் சொல்வதும் உண்டு. இம்முறையில் பின்னால் மிஞ்சும் மளிகை சாமான்களில் பிரிக்காதவற்றை நாம் வாங்கிய கடையிலேயே கொடுத்துவிடலாம். வீணாகும் பொருட்களான காய்கள், பழங்கள், வாழை இலை போன்றவை அக்கம்பக்கம் பகிர்ந்து கொடுத்தும் சில நாட்களுக்கு வரும். பிரித்த மளிகை சாமான்கள் வீட்டு உபயோகத்துக்கு வந்துவிடும். அவை குறைந்தது இரண்டு மாதங்களாவது ஓட்டும்படியாகவே இருக்கும். கல்யாணச் செலவில் தடுமாறி இருக்கும் குடும்பங்கள் இம்முறையில் ஓரிரு மாதங்களுக்கான செலவை ஈடுகட்ட முடியும். விறகிலிருந்து வாங்கிப்போடுவார்கள். இப்போது சாதாரணமாக ஒரு இனிப்பு, வடை, பாயசம், வறுவல், அப்பளம், ஒரு கறி, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், மோர்,சாதம், பருப்பு, ஊறுகாய் என்ற குறைந்த பக்ஷத் திட்டத்துக்கே ஒரு இலைக்கு நூற்றைம்பதில் இருந்து இருநூறு வரை, நாம் அழைக்கும் கான்ட்ராக்டரின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்திருக்கின்றனர். நாம் சாமான் வாங்கிச் செய்தால் இதில் பாதிப் பணம் கூட ஆகாது. ஆனால் மேற்பார்வைக்குச் சரியான ஆட்கள் இருக்க வேண்டும். கல்யாணத்தன்றோ அல்லது முதல்நாளோ வைக்கும் ரிசப்ஷனில் போடப் படும் ஸ்பெஷல் சாப்பாடு, நாம் தேர்ந்தெடுக்கும் மெனுவைப் பொறுத்துக் குறைந்த பக்ஷம் முன்னூறு ரூபாயிலிருந்து இன்னும் மேலே தான் போகிறது. அதோடு சில குறிப்பிட்ட சமையல் கான்ட்ராக்டர்கள் ரிசப்ஷனுக்கு வருபவர்களுக்கு உபசாரம் செய்ய எனத் தனியாகச் சில பெண்களை அழைத்து வருவார்கள். அவர்கள் மருதாணி எனப்படும் மெஹந்தி இடுவது, வளையல் கொடுப்பது போன்றவற்றைப் பார்க்கின்றனர். இன்னொரு பக்கம் பழங்களைப் பிழிந்து எடுக்கும் ஜூஸ் ஸ்டால்கள் இவர்களின் கவனிப்பில் இருக்கும். குழந்தைகளைக் கவர பஃபூன்கள், அல்லது டெடி, மிக்கி மவுஸ் முகமூடியில் ஆட்கள், பஞ்சு மிட்டாய், பீடா ஸ்டால், இது தவிர காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஸ்டால், இன்னொரு பக்கம் சாட் ஐட்டங்கள் உள்ள ஸ்டால், சமோசா அல்லது புதினா வடை, பாதாம், முந்திரிப் பருப்பு வகைகள் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வருவார்கள். பின்னாலேயே வரிசையாக ஒவ்வொரு ஐடமாக வரும். இந்த வட இந்தியக் கலாசாரம் எப்போ தமிழ்நாட்டுக்கு வந்ததுனு புரியலை. கிட்டத்தட்டப் பத்துவருடங்கள் வட இந்தியாவில் இருந்துட்டுப் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்ததும் கல்யாணங்களில் கலந்து கொள்ளும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது எங்களுக்கு. அதோடு பெண், பிள்ளை உடை அணியும் முறையும் வட இந்தியக் கலாசாரத்தில் தான். ஆனால் ஹிந்தியை மட்டும் வெறுப்போம். ஹிந்தி அரக்கினு பட்டமெல்லாம் கொடுப்போம். சாப்பாட்டில் வட இந்திய சாட் உணவு வகைகளும், மேல்நாட்டு பிட்சாவும், பர்கரும் தான் முதலிடம் பெறுகிறது. இப்படியான சாட் வகைகளுக்கு என்றும் ஒரு ஸ்டால் இருக்கும். அங்கே பேல் பூரி, பானி பூரி, வகைகள் இடம் பெறும். இது எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு அதுக்கப்புறமா வரிசையிலே நின்னு பெண், மாப்பிள்ளைக்குப் பரிசு கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போனால் சாப்பாடே இறங்காது. ஏற்கெனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்கும்.
Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)