Sunday, July 21, 2013

தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ?

தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ. அல்லது வேறு வேறு பழக்க வழக்கங்கள் உறவு நாடிச் சென்றாலோ கன்ஃப்யூஷன் ஏற்படாதா. ? எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும். இது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அல்ல. மற்ற நடைமுறைகளுக்காக என்று கொள்ளும்போது யார்காம்ப்ரமைஸ் செய்வது.? எனக்கும் இது எல்லாம் தேவையா என்று கேள்வி உண்டு.// ஜிஎம்பி சார் கேட்டிருக்கும் கேள்வி இது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திலே திருமணம் செய்து கொண்டாலே குழப்பம் ஏற்படுமே என்று சந்தேகம் கொள்கிறார். முன்னெல்லாம் அருகிலுள்ள கிராமங்களிலேயே சம்பந்தம் செய்து கொள்வார்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் மிக அபூர்வமாக வேறு மாவட்டங்களிலும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. என்னோட பெரியம்மா (அம்மாவின் அக்கா) தஞ்சை ஜில்லாக்காரர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதற்கும் முன்னரே திருநெல்வேலிக்காரர்கள் பெண்ணை என்னோட பெரியப்பா ஒருத்தர் (அப்பாவின் அண்ணா) திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதிலே எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும் என்பதற்கான கேள்வியே எழாது. பெண் எந்த ஊர்க்காரர்களின் மருமகளாகப் போகின்றாளோ அந்த ஊரின் , அந்த வீட்டின் வழக்கங்களும், நடைமுறைகளுமே அவள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும்; கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம். தப்பில்லை. ஆனால் முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம் போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அது தான் முறை. நான் பிறந்தது, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரை. திருமணம் ஆகிப் போனதோ பழைய தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் அருகிலுள்ள கிராமம். பட்டிக்காடு என்றால் பட்டிக்காடு. மின்சாரமே வரலை அப்போது. கை விளக்குகள் தான். விறகு அடுப்பு தான். அதுவும் தென்னை ஓலை, மட்டைகளைப் போட்டு எரிப்பார்கள். ஏனெனில் அது தான் சுலபமாகக் கிடைக்கும். விறகுகள் இருந்தாலும் அதிகம் தென்னை மட்டைகள் தான். இதுதான் இப்படி என்றால் பேச்சிலும் நிறையவே மாறுதல். பள்ளிக்கூடத்தை, "பள்டம்" என்று சொல்வார்கள். கற்றுக்கொள்கிறேன், என்பதை, "கத்திக்கறேன்" என்பார்கள். இதெல்லாம் என்னனு புரியவே எனக்கு ஆறு மாசமாச்சு. ஆனால் இதெல்லாத்தையும் விடப் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதுக்காகவெல்லாம் பயந்தால் முடியுமா? முக்கியமான சமயங்களில் புக்ககத்துப் பழக்கத்தையே கடைப்பிடிப்பேன். கடைப்பிடிக்கிறேன். இப்போது எனக்குப் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டு பக்கத்துப் பழக்கமும் நன்றாகவே தெரியும். ஆனால் இரண்டுக்கும் எக்கச்சக்கமாக வித்தியாசம். இதுக்காக யார் சமரசம் பண்ணிக்கிறது என்ற போட்டியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. முக்கியமான நேரங்களில் புக்ககத்து வழக்கப்படி செய்துவிட்டால் அப்புறம் நான் இருக்கிறபடியே இருக்கலாம் என்பதே என் கருத்து. குல தெய்வ ஆராதனை, சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவற்றில் என் பிறந்த வீட்டு வழக்கத்தைக் கொண்டுவர மாட்டேன். இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் என்றெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் காலமாகி விட்டது. உலகம் மிகக் குறுகி வருகிறது. கொஞ்சம் ஈகோவைக் கைவிட்டால் போதும். எல்லாம் நம் வசமே. மற்றபடி சுமங்கலிப் பிரார்த்தனை தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை. எத்தனையோ தலைவர்களின் நினைவு நாட்கள், மதத் தலைவர்கள் நினைவு தினங்கள், அரசியல்வாதிகளின் நினைவு தினங்கள், சினிமா நக்ஷத்திரங்களின் நினைவு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுதும். அப்படி இருக்கையில் நம் குடும்பத்தில் பிறந்து மறைந்த அல்லது நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு கூர்தல் எந்த விதத்திலும் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம். நமக்கு இஷ்டமில்லை எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக் கொடுக்கலாம். துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள். சுமங்கலிப் பிரார்த்தனையில் புடைவை வைக்கும் கலத்தில் வீட்டில் உள்ள அனைவரின் நகைகளும் போட்டு அலங்கரிப்பதோடு திருமணப் பெண் வீட்டில் என்றால் பெண்ணின் நகைகளும், பிள்ளை வீட்டில் என்றால் கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கி இருந்தால் அதுவும், கூறைப்புடைவையும் வழிபாட்டில் வைக்கப்படும். இது எல்லாருக்கும் வழக்கம் இல்லை. மிகச் சிலர் வீடுகளில் மட்டுமே வழக்கமாக இருக்கிறது. ஆனால் வீட்டினரின் நகைகளைப் போட்டு அலங்கரிப்பது உண்டு. மேலும் தஞ்சை ஜில்லாவில் அத்தைக்குப் புடைவை கொடுத்த பின்னர் அந்தப் புடைவையை அவர் கட்டிக் கொண்டு வந்து அனைவரும் நமஸ்கரித்த பின்னர் புடைவையை அவரிடம் அன்றே கொடுப்பதில்லை. அவர் புடைவையை மாற்றிய பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனையில் வழிபட்ட புடைவையைக் கொடியில் போடுவார்கள். அன்றிரவு முழுதும் அந்தப் புடைவை கொடியில் இருக்கும். குடும்பத்துச் சுமங்கலிகள் அனைவரும் அன்றிரவு வந்து அந்தப் புடைவையை எடுத்துக் கட்டிக்கொள்வதாக ஐதீகம். அடுத்து சமாராதனை. பொதுவாக வெங்கடாசலபதி சமாராதனையே நடைபெறும். என்றாலும் மிகச் சிலர் வீடுகளில் அவரவர் குல தெய்வ ஆராதனையையே சமாராதனையாக நடத்துவார்கள். இது சனிக்கிழமைகளிலேயே நடைபெறும். என்றாலும் பல சமயங்களிலும் கல்யாணம் நடைபெறப் போகும் கிழமையைப் பொறுத்து திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் வைப்பார்கள். சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்பவர்கள் கல்யாணத்திற்குச் சில நாட்கள் முன்னர் வரும் சனிக்கிழமையில் செய்துவிடுவார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வீட்டுக்கு வீடு சமாராதனை நடைபெறும். சாப்பாடு வருபவர் எல்லாருக்கும் போடுவார்கள். சமாராதனைச் சாப்பாடு என்றே விசேஷமாகச் சொல்லப் படும். சாப்பாடு மெனு: சர்க்கரைப் பொங்கல்(இது தான் மிக முக்கியம்) தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ் அல்லது பொடி போட்ட கறி, அவரைக்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்களில் தேங்காய் போட்ட கறி ஒன்று, பருப்பு உசிலி பீன்ஸ் அல்லது கொத்தவரையில். அவியல். அவியல் இல்லை எனில் கத்தரிக்காய்ப் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும். ஒரு கலந்த சாதம், சனிக்கிழமை எனில் எள்ளுச் சாதம் தான் இருக்கும். அப்பளம் வீட்டில் செய்தது எனில் சேர்ப்பார்கள். சேனை அல்லது உருளை வறுவல், உளுந்து வடை, ஊறுகாய் அன்று புதிதாய்ப் போட்டது, அவியல் என்றால் சாம்பார். பிட்லை என்றால் மோர்க்குழம்பு எனச் செய்வார்கள். ரசம், மோர். அன்று காலையே வழிபாடு நடைபெறும் இடத்தில் அல்லது பூஜை அறையில் என்றால் அங்கே மாக்கோலம் போட்டு படங்களைத் துடைத்துப்புஷ்பங்கள் சார்த்தி அலங்காரம் செய்வார்கள். பூஜைக்கு வேண்டிய மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி, சந்தனம், உதிரிப் பூக்கள், மாலை, துளசி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவை தயார் செய்வார்கள். சில வீடுகளில் வெங்கடாசலபதிக்கும் மாவிளக்குப் போடுவதுண்டு. அவர்கள் மாவு இடித்து, வெல்லம், ஏலக்காய் கலந்து தயார் செய்து வைப்பார்கள். சாஸ்திரிகள் தான் வந்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தது. அதிலும் முன்னெல்லாம் நான்கு அல்லது ஐந்து வைதீகர்கள் வந்து சங்கல்பம் சொல்லி, வீட்டினரின் கோத்திரம், பெயர், நக்ஷத்திரங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு அனைவரின் பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்து வைத்து, சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம் சொல்லிப் பூக்களாலும், துளசியாலும் அர்ச்சனை செய்வார்கள். இப்போது யாரும் வருவதில்லை. வந்தாலும் வீட்டிலேயே சமைத்தாலும் வைதீகர்கள் சாப்பிடுவதில்லை. ஆகவே வீட்டு எஜமானரே சஹஸ்ரநாமம் படித்துப்பூஜை செய்து, அக்கம்பக்கத்து நண்பர்கள், உறவினர்கள் இவர்களில் ஐந்து ஆண்களை அல்லது நான்கு ஆண்களை வைதீகர்களாக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டு முதல் பந்தியில் அமர வைப்பார்கள். இதற்கும் பொண்டுகள் முன்னாடி வைதீகர்களோடு சேர்ந்து சாப்பிட அமர வைப்பது உண்டு. அதற்கு அலர்மேலு மங்காப் பொண்டுகள் என்று பெயர். சுமங்கலியை எண்ணெய்தேய்த்துக் குளிக்கச் செய்து, மடிசார் கட்டும் வழக்கம் இருந்தால் மடிசாருடன் பூஜை செய்து கொண்டிருக்கும் சுவாமி படம் இருக்கும் இடம்/அல்லது பூஜை அறையில் வலப்பக்கமாகக் கோலம் போட்டு இலை போடுவார்கள். அன்று அந்தப் பெண்மணி அலர்மேல் மங்கையாக அவதாரம் எடுத்திருப்பார். வைதீகர்களோடு சேர்ந்து அந்தப் பெண்மணிக்கும் சாப்பாடு போடுவார்கள். சாப்பாடு முடிந்து வைதீகர்கள் ஆசீர்வாதம் பண்ணி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தக்ஷணை கொடுத்து முடிந்ததுமே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். கூடவே அலர்மேல் மங்காவுக்கும் அதே போல் வெற்றிலை, பாக்கு, தக்ஷணை உண்டு. இது எல்லாம் முடிஞ்சு அநேகமாய் மறுநாளே சத்திரத்துக்கு அல்லது கல்யாணம் நடக்கும் வீட்டுக்குப்போகிறாப் போல் அமையும். ஆகவே நாமும் அடுத்துப் போகப் போவது கல்யாணச் சத்திரத்துக்கே.
Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)