Monday, July 22, 2013

கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்

கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகளை மொழி பெயர்த்து வந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் நம நமவென இருந்தது. எல்லாம் காப்பிரைட் குறித்தே. ஏப்ரலில் வந்த சம்பந்தியும் அதையே சொல்ல, அதுக்கப்புறமா மேற்கொண்டு மொழி பெயர்ப்பையே நிறுத்தி வைத்துவிட்டு திரு திவாகரின் ஆலோசனையின் பேரில் பாரதீய வித்யா பவன் மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன். அவங்க தற்சமயம் முன்ஷிஜியின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும், சென்னை அலுவலகம் தான் தமிழ் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்கணும் என்றும் சொல்லிச் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன். காப்பிரைட் பிரச்னை பப்ளிகேஷன்ஸ் மூலமாகத் தான் வரும்னு சொன்னதோடு, மொழிபெயர்க்கத் தடை இல்லைனும் சொல்லிட்டார். தமிழில் பப்ளிஷ் பண்ணினால் மார்கெட்டில் விற்பனை ஆகுமானு தெரியலையேனு டைரக்டர் திரு ராமசாமி சொல்கிறார். அதே சமயம் சொந்தமாக என்னை பப்ளிஷ் பண்ணிக்கோ அதுக்கு அநுமதி தரோம்னு சொல்றார். மொத்தத்தில் மொழிபெயர்ப்புத் தொடரலாம் என்பதே எனக்கு சந்தோஷமான விஷயம். மற்றவை போகப் போக. மொழி பெயர்த்ததை அவங்களுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கார். அதுக்குக் கொஞ்சம் நகாசு வேலை இருக்கு. செய்துட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறேன். நேரிலேயும் வந்து பார்க்கச் சொல்கிறார். போகணும். கண்ணன் தொடர்ந்து உதவுவான் என்ற நம்பிக்கையுடன் இனி தொடர்ந்து கண்ணன் வந்து அனைவரையும் மகிழ்விப்பான் என்றும் சொல்லிக்கிறேன். அதன் பின்னர் பத்து/பதினைந்து நாட்கள் முன்னர் கடுமையான உழைப்பு. :))) கண்ணன் கதையின் முதல் பாகத்தை எடிட் செய்து தொகுத்துக் கொண்டு அவற்றைப் பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன். பாரதீய வித்யா பவன் சென்னை அலுவலகத்தில் 22 ஜூன் சனிக்கிழமை மதியம் டைரக்டர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். ஆகவே குறைந்த கால அவகாசத்தில் முடிக்கணும். பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு எதுக்குத் தொந்திரவு? பென்டிரைவிலோ சிடியோ போடலாம்னு சொல்றவங்களுக்கு! போடலாம் தான். அது தெரியும். ஆனால் அதைக் கணினியில் தான் போட்டுப் பார்க்க முடியும். சிலர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைனும் சொன்னாங்க. அதைப் பார்ப்பாங்களா உடனடியாகனு சந்தேகம். ஆகவே நம் கையே நமக்கு உதவினு வீட்டிலேயே பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன். எடிட்டிங் வேலை முடியவே மூணுநாள் ஆச்சு. அப்படியும் வேர்ட் நிறைய ஸ்பெல்லிங் தப்புப் பண்ணி இருக்கேனு திட்டிட்டும் இருந்தது. கூடியவரை எல்லாத்தையும் சரி பண்ணினேன். பிரின்ட் அவுட் எடுக்கிறச்சே இரண்டு முறை இங்க் தீர்ந்து போய், ஒரு தரம் இங்க் திரும்ப நிரப்பினது சரியா வராமல் போய், அதுக்குள்ளே சென்னை கிளம்பும் நாளும் வந்துவிட்டது. சனிக்கிழமை சென்னை கிளம்பணும். வியாழனன்று பிரின்டர் வேலை நிறுத்தம் மெகானிக்கைக் கூப்பிடவும் என் அவசரம் தெரிந்ததால் அவரும் வந்து கிட்டேயே இருந்து வேலையை முடிக்கிற வரை பிரின்டரைத் தட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார். பின்னர் அன்னிக்கே சாயந்திரமாப் போய் பைன்டிங் செய்யக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஈரம் காயும் முன்னே வாங்கி வந்து கொண்டு போகும் பையில் அடியில் வைத்து மேலே அழுத்தம் கொடுத்துவிட்டோம். சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பினோம். அன்னிக்குனு வண்டி தாமதம். அரை மணி நேரம். ஒரு மணிக்குள்ளாக வித்யாபவனில் இருக்கணும். ஒரு வழியா மாம்பலத்தில் இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு வித்யாபவன் போகையிலே பனிரண்டே முக்கால். டைரக்டர் மீட்டிங்கில் இருந்தார் எனினும் நான் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டுக் காத்திருக்கச் சொன்னார். பின்னர் அவரே வெளியே வந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வழி அனுப்பிட்டு, மற்றவர்களைக் கவனித்துவிட்டு எங்களை அழைத்தார். கொண்டு போன புத்தகத்தைக் கொடுத்தோம். படித்ததில் அவருக்குத் திருப்தி என்பது முகத்திலேயே தெரிந்தாலும் அவர் வாய் மூலம் சொல்லணும்னு இருந்தோம். பப்ளிஷிங் பத்திப் பேசிவிட்டுப் பின்னர் என்னிடம் உங்கள் ஆர்வமும், எழுதி இருக்கும் நடையும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தைப் போல் இருக்குனு பாராட்டிவிட்டு எங்களுக்கு நேரேயே பவன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா, அல்லது நாங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு பவன் மூலம் வெளியீடு பண்ணலாமானு இரண்டு கருத்தையும் மும்பை அலுவலகத்துக்கு அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் பவன் மூலம் வெளியீடு செய்வதில் அவருக்கு ஆக்ஷேபணை இல்லைனு தெரிந்தது. மேலும் இப்போது முன்ஷிஜி அவர்களின் 125 ஆவது பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களுக்கான வேலைகள் வேறு செய்வதால் அதை ஒட்டி வெளியிடலாம் என்றும் கூறி உள்ளார். இனி எல்லாம் கண்ணன் கையில். அடுத்து இரண்டாம் பாகம் எடிட்டிங் செய்து அதைப் பென்டிரைவ் அல்லது, சிடியில் எடுத்துடலாம்னு எண்ணம். அதோடு டைரக்டர் அறையிலோ ரிசப்ஷனிலோ கணினியோ, மடிக்கணினியோ இல்லை. ப்ரின்டிங் செக்‌ஷனில் மட்டும் இருக்குமோ என்னமோ! நல்லவேளையா பென் டிரைவ் கொண்டு போகலை. போட்டுப் பார்க்கிறேன்னு சொல்லி இருப்பாரே! :)))) போகப் போகத் தெரியும். கண்ணன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இதன் முழுப் பலனும் திவாகரையே சேர்ந்தது. அவருடைய தூண்டுதல் இல்லை எனில் இந்த மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகமே. அதே போல் இப்போது வித்யாபவனை நாடுவதற்கும் பெருமளவு உதவிகள் செய்தார். மொத்தத்தில் இந்த மொழிபெயர்ப்பே அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒன்று. திரு தேவ் அவர்களும் பலமுறை இது புத்தகமாக வெளியாகவேண்டும் என்பதைச் சொல்லி வந்திருக்கிறார். அவருக்கும் என் தனிப்பட்ட நன்றி. வித்யாபவனின் டைரக்டரிடம் முதலில் பேசியது திரு தேவ் அவர்களே. இந்த மொழிபெயர்ப்பில் காணப்படும், குற்றம், குறைகளின் முழுப் பொறுப்பும் என்னைச் சார்ந்தது. தற்சமயம் மூன்றாம் பாகம் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்று வித்யாபவனில் இருந்து பப்ளிஷிங் எப்படிச் செய்வது என்பது குறித்துக் கேட்டுக் கடிதம் வந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்னால் இயலும் என்பது புரியவில்லை. யோசிக்கிறோம். இனி போகப் போகத் தெரியும். நான் இவற்றைத் தனியானதொரு வலையிலேயே பகிர்ந்து வருகிறேன். வேறெங்கும் பகிர்வதில்லை. அதற்குக் காப்பி ரைட் பிரச்னை மட்டும் காரணம் இல்லை. தேர்ந்த, திறமையான பல எழுத்தாளர்களுக்கிடையே என்னுடைய சாதாரணமானதொரு எழுத்தை வெளியிடத் தயக்கம் என்பதும் காரணம். சும்மாவே உளறிக் கொட்டிக் கிளறி மூடுவேன் என்பதை அனைவரும் அறிவார்களே![?][?][?][?][?][?] இனி அனைத்தும் அந்தக் கண்ணன் செயல்.
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)