Monday, August 14, 2017

காதலியை நினைத்துக்கொண்டு மனைவியுடன் வாழும் ஆண்கள்

“கல்யாணமாகி ஐந்து மாதமாச்சு. என் மகனும், மருமகளும் சிரிச்சி பேசினதை நான் ஒருநாள் கூட பார்க்கலை. எப்பவும் சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிற்கிறாங்க! ‘ஏன்டா.. அந்த பெண்ணுக்கிட்டே எப்பவும் மோதிக்கிட்டே இருக்கிறேன்னு?’கேட்டால் ‘உன் வேலையை பாருன்னு’ எடுத்தெறிந்து பேசுறான்.

எனக்கு இவனை பத்தி கவலை இல்லை. பாவம் அந்த பெண். என்னை நம்பி இவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளை நினைச்சிதான் கவலையாக இருக்கிறது’’ என்று மகனை அருகில் வைத்துக்கொண்டு கோபத்தைக் கொட்டிய தாயார், அதே வேகத்தில் வெளியே இருந்த மருமகளை உள்ளே அனுப்பிவிட்டு, அவர் வெளியே உட்கார்ந்து கொண்டார். அந்த பெண்ணிடம் நிறையவே கிராமிய மணம் வீசியது, உடல் சற்று பருத்து காணப்பட்டது. வயது 22 தான்! ‘கணவருக்கு உன் மீது ஏன் கோபம் வருகிறது?’ என்று நான் கேட்டதும், கணவர் எப்படி எல்லாம் தன்னை குறை சொல்கிறாரோ அதை ஒவ்வொன்றாக சொன்னாள்.
Photo
அதாவது உடையில் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களில் அவர், மனைவியிடம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கிறார். அதை பல்வேறு சம்பவங்கள் மூலம் அவள் விளக்கினாள். அவள் சொல்லி முடித்ததும், கணவர் பேசத் தொடங்கினார்.. “நான் இவளிடம் நல்லா உடுத்த சொல்றேன். புதுசா கம்ப்யூட்டர் கல்வியில் சேர்ந்து படிக்க சொல் கிறேன். எல்லோரிடமும் சிரித்து பேசி சகஜமாக பழகு என்கிறேன். ஆனால் இவள் நான் சொல்ற எதையுமே கேட்பதில்லை…’’ என்று அவர் குறைபட்டதும், அவள் முகத்தில் ஒரு இறுக்கம் ஏற்பட்டது.

“அவர் சுயமாக சொன்னால் நான் கேட்டிருப்பேன். ஆனால் ஒரு பெண்ணை விதவிதமாக வீடியோ எடுத்து வைச்சிருக்கார். அவள் நைட்டியில் நடந்து வருகிறாள், அதைப் போல் நீயும் நைட்டி அணிந்துகொள் என்கிறார். அவள் சுடிதார் போட்டிருக்கிறது மாதிரி நானும் போட்டுக் கணுமாம். அவள் ஹேண்ட் பேக்கை தொங்கபோட்டுக்கொண்டு எங்கோ நடந்துபோகிறாள். அதைப்போல் நானும் தொங்க போட்டுக்கொண்டு போகணுமாம். அவளை மாதிரி மேக்–அப் போட்டுக்கணுமாம். அவா யாரு? அவளை மாதிரி நான் ஏன் மாறணும்?’’ என்று சூடாக கேட்டாலும் நிதானமாகவே இருந்தாள்.

கணவர் எதிர்பார்க்கும் மேலும் சில விஷயங்களை அவள் மறைப்பதும் தெரிந்தது. ‘இன்னொரு பெண்ணின் வீடியோவை காட்டி அவளைப்போல் நடக்க சொல்கிறார்’ என்று அவள் சொன்னதும், கணவர் முகத்தில் லேசான அதிர்ச்சி தெரிந்தது. அதிர்ச்சி அகலாமல் ‘அந்த வீடியோ பெண் யார்?’ என்று விளக்கம் கொடுத்தார். “வீடியோவில் காட்டிய பெண்ணை நான் காதலித்தேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துகொண்டாள்.


அவளைவிட நாகரிகமான பெண்ணை, அழகான பெண்ணை, படித்த பெண்ணை நான் கல்யாணம் செய்திருக்கிறேன் என்று அவளிடம் நிரூபிக்க நான் ஆசைப்பட்டேன். அதற்காக இவளை பலவிதங்களில் தயாராக்க முயற்சித்தேன். ஆனால் நான் சொல்றதை இவள் கேட்கவில்லை. அதனால்தான் வீடியோவை காட்டினேன். வீடியோவில் இருக்கிற பெண்ணை பார்த்ததும் இவள் என்னை தப்பாக புரிந்துகொண்டாள். அதனால்தான் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது’’ என்று அவர் முடிப்பதற்குள், மனைவி குறுக்கிட்டாள். “நான் ஒண்ணும் உங்களை தப்பா புரிஞ்சுக்கலை.
Photo
உங்க அம்மாதான் ‘கண்ட பெண்களை படம் பிடிச்சி காட்டி ‘அப்படி பண்ணு இப்படி பண்ணுன்னு… சொல்வான். அதுக்கெல்லாம் இடம் கொடுக்காதே! தட்டிக் கேளுன்னு’ சொன்னாங்க! நான் அதனாலதான் அந்த மாதிரி எல்லாம் பண்ண முடியாதுன்னு அடம் பிடிச்சேன்!’’ என்றவள், கணவரின் முகத்தை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டு.. “நீங்க உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுச்சுன்னு எங்கிட்டே சொல்லவே இல்லையே! அந்த பெண்ணால உங்களுக்கு மனக் காயம் ஏற்பட்டிருக்கிறது தெரிஞ்சிருந்தா, உங்க சந்தோஷத்துக்காக நீங்க சொல்றதை எல்லாம் நான் அப்போதே கேட்டிருப்பேனே..’’ என்று நெகிழ்ச்சியாக சொன்னாள்.

அதைக் கேட்டதும் கணவர் இன்ப அதிர்ச்சி அடைந்ததை உணர முடிந்தது. ‘உங்களுக்கு எவ்வளவு அன்பான மனைவி கிடைத் திருக்கிறாள். இவளை புரிந்துகொண்டால் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழலாம்’ என்றேன். இருவர் முகத்திலும் பிரகாசம் தென்பட்டது. அவரது அம்மாவையும் அழைத்து மூவருக்கும் ‘பேம்லி கவுன்சலிங்’ வழங்கினேன். அவர்களுக்குள் இருந்த சந்தேகங்களும், பிரச்சினைகளும் அகன்றன. இப்போது பெரும்பாலான ஆண்கள் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவளோடு காதலி நினைவிலே வாழ்க்கை நடத்த முயற்சிக்கிறார்கள். காதலியை போல் மனைவியை மாற்ற முயற்சித்தாலும், அவளையே நினைத்துக்கொண்டு வாழ முயற்சித்தாலும், மண வாழ்க்கை தோல்வி அடைந்துவிடும். ஆண்கள் காதலில் தோல்வி அடைந்து, இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததும் மனதில் இருந்தும், போட்டோ வீடியோ போன்றவைகளில் இருந்தும் காதலியின் பதிவுகள் அனைத்தையும் அழித்துவிட்டு தெளிவான மனதோடு புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கவேண்டும்..!. 
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)