Wednesday, August 2, 2017

சித்தர் அறிவியல் Wisdom of Siththars

குரு போகர் பெருமானை பற்றியும் அவரின் தனித்துவத்தை பற்றியும் உள்ள அபூர்வ ரகசியம் இதோ.....

சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் மற்றும் அதிசயம் அங்கு நிறுவப்பட்டிருக்கும் சிலையே.

அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 200 வருடங்கள் அந்த மாபெரும் தவத்தை செய்து நிறைவேற்றினார்.ஒரு துளியும் அளவு தப்பாத துல்லியம் என்பது அந்த சிலையின் நிர்மாணத்தில் இருந்தது.பதினெட்டு சித்தர்களின் திறன்களும் அதில் அடங்கி இருந்தது.இந்த உலகின் பெரும்பகுதி அழிவு என்பது இந்த சிலையினால் காப்பாற்றும் அளவிற்கு அந்த சிலையானது அமைக்கப்பட்டது.
Photo
இந்த சிலை என்ன செய்யும் என்று கேட்டால் ஆச்சரியம் கொள்வீர்கள்.

நாம் சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு சென்றோமேயானால் கவனித்திருப்போம் ஒரு பொருளை வாங்கியவுடன் அதை பணம் செலுத்தும் இடத்திற்கு கொண்டு சென்று அதை காட்டினால் அதில் உள்ள மின்னணு குறியீட்டை அந்த சிஸ்டம் படித்து பார்த்த உடனே அது தொடர்பான அனைத்துவிதமான தகவல்களையும் வெளியே கொண்டு வந்துவிடும்.அந்த நுணுக்கம் தான் இந்த சிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த சிலையின் முன்பாக யார் சென்றாலும் அது உடனே அவர்களின் எண்ணஅலைகளை படித்துவிடும்.அதை அப்படியே திருப்பி பல மடங்காக தந்துவிடும்.அதை தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது.நாம் அந்த சிலையின் முன்பாக சென்று கடந்துவிட்ட அந்த நொடியே நாம் மாறியிருப்போம்.அந்த மாற்றத்தை மட்டும் நாம் புரிந்திருக்கவே மாட்டோம்.

இன்னும் சொல்வதானால் அதை நாம் தான் புரிந்துகொள்ளாமல் அதை பயன்படுத்த தெரியாமல் விழிப்புணர்வுத்தன்மை இல்லாத காரணத்தால் வாழ்வில் உடல் மற்றும் மனநோயால் அவதிப்பட்டு வருகிறோம்.செவ்வாயின் கதிரை உள்வாங்கும் மைக்ரோ ரிஸீவரான இந்த சிலை மட்டும் இந்த பூமியில் நிறுவப்படவில்லை எனில் நாமெல்லாம் இப்படி பேசிக்கொண்டிருக்க இந்த பூமி இருந்திருக்காது. இந்த அளவுக்கு உலகம் குறித்து சிந்தனை செய்த குழந்தை உள்ளம் கொண்ட ஒருவரை இந்த பூமியில் இருந்தால் காட்டுங்களேன்.

உலகமெங்கும் தன்னுடைய ஆன்மீக ஆய்வுகள் அனைத்திலும் வெற்றி கண்ட நம் போகர் பெருமான்மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி பூமி மற்றும் ரத்தம் சம்பந்தபட்ட கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சு இந்த பூமிக்கு சீராக கிடைத்தால் இந்த பூமிக்கு சுபிட்சம் கிடைக்கும் என்று எண்ணினார் என்றும் அதன் விளைவாகத்தான் தண்டாயுதபாணி சிலை நிர்மாணம் என்று சொன்னோம்.ஏனெனில் இந்த பூமியில் நடக்கும் இயற்கை மாற்றங்கள், போர் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது செவ்வாயின் கதிர்வீச்சை பொறுத்தே தான் அமைகிறது.ஏனெனில் செவ்வாய் தான் அதற்கு அதிகாரி போல்.அதனால் தான் அதனை சீர் செய்வதன் மூலம் பூமிக்கு நன்மைகள் செய்ய முடியும் என எண்ணினார்.

உலகம் எங்கும் சுற்றி ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாயின் கதிர்வீச்சு பூமியில் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழனி தலத்தில் மட்டுமே அதிகமாக விழுகிறது என்பதை கண்டறிந்தார்.இந்த இரண்டு தலத்திலும் பழனி மலையின் மேல் பகுதியில் மட்டும் சுமார் 95 சதவீதற்கும் மேலாக விழுவதை கண்டுணர்ந்தார்.அதன் பின்னர் தான் அணைத்து சித்தர் பெருமக்களையும் கூட்டி செவ்வாயின் கதிர்வீச்சை செம்மை படுத்த என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் தான் இந்த யோசனை அவர்களுக்கு உதித்தது.பாஷாணங்கள் மொத்தம் 64 . இதில் இயற்கையாக 32 ம் செயற்கையாக 32 பூமியில் கிடைக்கிறது. அதில் அவர்கள் எடுத்ததோ வெறும் ஒன்பதை மட்டுமே. அந்த ஒன்பதிலும் 4448 மூலிகைகளின் சாரம் அடங்கியுள்ளது.81 வகை உபரேஷன்களின் தன்மை அதில் அடங்கி உள்ளது.
Photo
இந்த ஒன்பது வகையான பாஷாணங்கள் தனித்தன்மைகள் ஆராயப்பட்டன.ஒவ்வொரு பாசனத்தில் அளவுகள் தீர்மானிக்கப்பட்டன.செய்யப்போகும் முறைகள் தீர்மானிக்கப்பட்டன. இத்தனைவிதமான மாபெரும் ஆய்வுகளுக்கு பின்னரே அந்த சிலை நிர்மாணம் செய்யப்பட்டது.

. ஒன்பது பாஷாணங்களும் அதன் விகிதாச்சாரப்படி கலக்கும்போது அது செவ்வாயின் கதிர்வீச்சை அப்படியே உள்வாங்கும் திறனை பெரும் அளவிற்கு செய்யப்பட்டது. சிலை மொத்தம் மூன்று அடுக்குகளை கொண்டு செய்யப்பட்டுள்ளது.மேலடுக்கு செவ்வாயின் கதிர்வீச்சை ஈர்க்கும் விதமாகவும் அதன் அடுத்த அடுக்கு அதை கடத்தி உள்ளே கொண்டு செல்லும் விதமாகவும் உள் அடுக்கானது அதை சேமிக்கும் விதமாகவும் உருவாக்கினார்கள். மேலும் அதிசயமாக அது கதிர்வீச்சின் தன்மையை சீர்படுத்தி வெளியற்றவும் செய்தது.

இதன் அடிப்படை தத்துவம் எளிதாக சொல்வதானால் செல்போன் டவர்.அது எவ்வாறு வெளியில் இருந்து அலைகளை பெற்று நமக்கு கிடைக்க செய்கிறதோ அந்த சூத்திரம் தான்.

தான் கற்றுணர்ந்த வித்தைகளை மொத்தம் தன் குருவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சிலை செய்வதற்காக போகர் பயன்படுத்தினார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.

சிலை செய்து முடித்தபின்னர் தன்னுடைய ஜீவசக்தியை கொண்டு பிராண பிரதிஷ்டையும் செய்தார். தற்போது அந்த சிலை நூறு சதவீதம் செவ்வாயின் கதிர்வீச்சை உள்வாங்கும் receiver ஆகவே மாறிவிட்டது. ஒழுங்கில்லாமல் வரும் கதிரலைகளை ஒழுங்கு படுத்தி வெளியேற்ற ஆரம்பித்தது.போகர் சாதனையும் நிறைவேறியது.
Photo
ஒரு ஆச்சரியமான உண்மை என்னவெனில் இந்த தண்டாயுதபாணி சிலை ஒன்று தான் இந்த உலகிற்கே பாதுகாவல் என்று சொன்னால் நம்பமுடியுமா? ஆனால் அதுதான் உண்மை. ஒருவேளை இந்த சிலை அமையாமல் போயிருந்தால் இந்த பூமி என்றோ தன்னுடைய அழிவை சந்தித்திருக்கும்.இயற்கை பேரழிவுகள் போர்கள் என்று இந்த பூமி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சொல்கிறோமோ ஒருவேளை இந்த சிலை பிரதிஷ்டை ஆகவில்லை எனில் அப்போது இந்த பூமியின் நிலையை நம்மால் யோசிக்க கூட முடியாது !!!


Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)