Thursday, August 3, 2017

படித்ததில் பிடித்தது

"வீட்டில் வெட்டியா சும்மா உட்கார்ந்திருந்தேன்.

டிவி யை ஆன் பண்ணி சேனலை மாற்றி கொண்டு வந்தேன்.

விஜய் டிவி யில் பிக் பாஸ்.

பெரும்பாலும் பார்த்ததில்லை. அப்படி பார்த்தாலும் ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். ஆனா இன்னைக்கு இதில் என்ன தான் அப்படி சுவாரஸ்யம் இருக்கு என்று பார்க்க ஆரமித்தேன்.
பெருசா அதில் மனம் லயிக்க வில்லை.
Photo
நடுவே ஓவியாவை காப்பாற்ற இந்த நம்பருக்கு மிஸ்ஸ்ட் கால் கொடுங்க என்று ஒரு ஸ்கோரோலிங் வந்தது.

நம்மால நயன்தாராவுக்கு தான் வாழ்க்கை கொடுக்க முடியல.... அட்லீஸ்ட் ஓவியாவையாவது காப்பத்துவோம் என்று திரையில் தெரிந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்தேன் என்னோட நல்ல நேரம் மிஸ் ஆக போவதும், சனி பகவானின் கால் வைட்டிங்கில் இருப்பதும் தெரியாமல்.
அந்த நேரம் பாத்து என் மனைவி என்னை கிராஸ் பண்ணி போனாள்.

எதுக்கு வம்பு.... சட்டென்று சேனல் மாத்தினேன்.

எந்திரனில் வரும் சிட்டி ரோபோவை போல் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பொன்னியின் செல்வன் நாவலையை ஸ்கேன் செய்து விடும் கூர்மையான பார்வை கொண்டவள்.
கொஞ்ச நேரம் கழித்து என் அருகில் வந்தவள்... " யாருக்குங்க கால் பண்ணீங்க..? "
அவள் கேட்ட தொனியே பிரச்சனை ஃபிரெஷ்ஷா ப்ரெசென்ட் ஆகுற மாதிரி இருந்தது.

இப்போ பாகிஸ்தானிடம் சரண்டர் ஆன கோலி போல சரண்டர் ஆவதா... இல்லை 2011 world cup ஃபைனலில் தோனி அடி மாதிரி எதிர்த்து நின்னு பேசுவதா என்று ஒரு சிறு குழப்பம்.

சரி... டிபன் கூட சாப்பிட்டாச்சு... காபி கேட்டோம்... அதையும் போட்டு கொடுத்துட்டா ... இன்றைய நாளுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை..
சரி இப்போ கோலி பாதையா... இல்லை தோனி பாதையா என்ற முடிவில் தோனி பாதையை தேர்தெடுத்தேன்.

" ஆஃபீஸ் கால்டி " என்றேன் செம கெத்தாக.

சட்டென்று என் மொபைலை எடுத்து பார்த்தவள் ...

" இது தான் அந்த ஆஃபீஸ் காலா.. " ன்னு கேட்டாள்.

கண் முன்னே கோலி வந்து நக்கல் சிரிப்பு சிரிப்பது தெரிந்தது.
இல்லடி.... சும்மா தான்... மிஸ்ட் கால் தானே... அதான்.... நீ இந்த காலுக்கு முன்னாடி பண்ண கால் பத்தி தான் கேக்குறேன்னு நெனைச்ச்சு ஆஃபீஸ் கால் ன்னு சொன்னேன்.

உருண்டு வர பாலில் கூட ரன் அடிக்க முடியாமல் லொட்டு வைத்து ஆடினேன்.

என்ன பிரயோஜனம்... போடுறது பொண்டாட்டி... சிங்கிள் ரன் அடிச்சாலே எனக்கு ஆப்பு தான் .... போல்ட் ஆவது தான் உத்தமம்.
" அது சும்மாமா... விளையாட்டுக்கு... " என்று சிரிப்பை வர வழித்து கொண்டே சொன்னேன்.
Photo
"என்ன விளையாட்டு.... எவளோ ஒருத்திய காப்பாத்த மிஸ்ஸ்ட் கால் கொடுக்குறீங்க.... நேத்து தலை வலிக்குது... அந்த செல்பில் இருந்து மாத்திரை எடுத்து கொடுங்கன்னா... கொஞ்சம் இரு முக்கியமான ஆஃபீஸ் மெயில் பாக்குறேன்....ன்னு கடைசி வரைக்கும் எடுத்தே கொடுக்கல... இன்னைக்கு ... யாரு அவ ஓவியாவா... கண்டவளுக்கு ... மிஸ்ஸ்ட் கால் கொடுக்குறீங்க.... "
நான் அவளுக்கு கொடுக்கலமா... அவங்க சொன்ன நம்பருக்கு தான் கொடுத்தேன்....

ஓ... அவளுக்கு வேற கால் பண்ணி பேசுவீங்களா.... அந்த நெனப்பு வேற இருக்கா...

அது இல்லடி.... ஒரு மிஸ்ஸ்ட் கால் தானே கொடுத்தேன்... அதுக்கு போய் இப்படி தேவ இல்லாம ஏன் பிரச்சனை பண்ணுற....
ஓ.... அப்போ நான் தான் பிரச்சனை... உங்களுக்கு... ஒரு போன் கால் பத்தி கூட எனக்கு கேக்க உரிமை இல்லையா..
நான் அப்படி சொல்லலடி... ஒரு சின்ன விஷயம் அதை போய்... இப்படி பெரிசு படுத்தாதேன்னு... சொல்லுறேன்.

எது சின்ன விஷயம்.... நீங்க கண்டவளுக்குகெல்லாம் மிஸ்ஸ்ட் கால் கொடுக்குறதா....

சரி விடுடி.... சத்தியமா இனி எவளுக்கும் கால் பண்ண மாட்டேன் ... போதுமா ?

எவளுக்கும் ...அப்படீன்னா.... இன்னும் எத்தனை பேருக்கு கால் பண்ணுறீங்க....
இத பாருடி ...சும்மா தான் இருக்கேன்னு டிவில சொன்ன நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணேன் .... அவளோ தான் ...இது ஒரு குற்றமாடி ...

இன்னாது சும்மா இருந்தீங்களா.... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பசங்க சோபால தூங்கறாங்க ....கொஞ்சம் படுக்கை போடுங்கன்னா ... ஏதோ லேப்டாப்ல முக்கியமான் ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்க
அம்மா தாயே .... தப்பு தான்.... மன்னிச்சுக்க .... போதுமா.
ஆமாம்...பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் மன்னிச்சுக்கன்னு சொல்லிட வேண்டியது ...
சரிடி....இப்போ என்னை என்ன செய்ய சொல்லுற ....

மொதல்ல அந்த DTH கனெக்ஷனை கட் பண்ணுங்க.... 9 மணி ஆனா போதும் ஈ....ன்னு பல்ல காட்டிக்கிட்டு கண்டவளை பாத்து பல்லு இளிச்சிகிட்டு இருக்க வேண்டியது.
Photo
அடி பாவி இன்னைக்கு தாண்டி கொஞ்ச நேரம் பாத்தேன்.... டெய்லி பாக்குற மாதிரி பேசுற....
கொஞ்ச நேரமாதான்னு பாக்குறேன்னு சொலுறீங்க
ஆனா அந்த நம்பரை பாக்காமலேயே அடிக்குறீங்க ...
அது ஏதோ டக்குன்னு டைப் பண்ணிட்டேன் .... இது என்ன ஒரு உலக மகா குற்றமாடி

ஓ ...அந்த அளவுக்கு உங்களுக்கு ஞாபக சக்தியா..?சரி என்னோட ஜியோ நம்பரை சொல்லுங்க ....

வேகமாக ஓடி கொண்டிருக்கும் வண்டியில் பஸ்ட் ஆகி கழன்று போன டயர் மாதிரி ஆனேன்.

பௌலர் பால் போட்டு தான் நாம போல்ட் ஆகணும்ன்னு அவசியம் இல்லை ...
என்னை மாதிரி நாமலே பேட் டை வச்சி நடு ஸ்டம்பை நச்சுன்னு அடிச்சி போல்ட் ஆகலாம்.

சிகிரெட் புகைப்பதும், சரக்கு அடிப்பதும் மட்டுமல்ல உடல் நலத்திற்க்கு கேடு .... ஓவியாவுக்கு ஒட்டு போட்டாலும் தான் என்று தெரிந்துகொண்டேன் இன்று...

.

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)