Monday, August 7, 2017

குரங்கு பெடல்

தோட்டத்த பாத்திங்களா ? என்ற வளர்மதியின் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை எதிர்கேள்வியே கேட்டேன். ஏன் என்ன ஆச்சு ? பாருங்க அப்புறம் சொல்றேன். போடி காலை பாத்துக்கிறேன்... டயர்டா இருக்கு என என் அலுலக சோம்பலோடு ஷோபாவில் விழுந்தேன். சரி அப்படியே போய் குளிச்சிட்டு வந்துட்டா சூடா சப்பாத்தி ரெடியா இருக்கு.. என்ற குரல் என்னை பாத்ரூம் நோக்கி தள்ளியது.

இன்னைக்கு காலைல பத்து மணி இருக்கும்.. யாரோ கூப்டுறாங்கனு வாசப்பக்கம் போய் பார்த்தேன். ரெண்டு வயசானவங்க. ஏதும் வீட்டு வேலைஇருக்காமானு கேட்டாங்க... ? பார்க்க பாவமா இருந்துச்சு... இருங்கனு சொல்லிட்டு ரெண்டு ஆப்பிள் கொடுத்தேன். வாங்கி வச்சிட்டு... பழையது இல்லையாமனு கேட்டாங்க... நா எங்க போக பழசுக்கு... நாங்க நைட் எப்பவும் சப்பாத்தி இல்லாட்டி ஓட்ஸ்னு சொன்னேன். இந்த தோட்டத்தை சுத்தப்படுத்தி தரோம்னு சொன்னாங்க. வேண்டாம்னு சொல்லலாம்னு பார்த்தேன். அப்புறம் எப்படியும் தோட்ட வேலைக்கு ஆள் வரசொல்லுவிங்க ரூவா கொடுக்கணும்ல... அதான் சரினுட்டேன்.
Photo
ம்ம்ம் அப்புறம்

செமய சுத்தப்படுத்தி... நல்லா பாத்துகொடுத்துட்டாங்க. ரூ. கொடுத்தேன் வாங்கல.. மதியம் சோறு மட்டும் கேட்டாங்க. சாப்ட்டு போய்ட்டாங்க.

ம்ம். பார்த்து இரு.. இந்த மாதிரி பகல்ல வந்து வீட நோட்டம் பாத்துட்டு சொல்லுவாங்க.

உங்க வாய் இருக்கே என்னைக்கு நல்லத சொல்லியிருக்கு.

ஒய்.. உலகம் நடப்ப சொல்றேண்டி... சும்மா பாலிமர்ல சீரியல் பார்த்தா இதெல்லாம் எங்க தெரியும்...

நீங்க மூடுங்க. லேடிஸ் ரஸ்லிங் பாக்கிறதுக்கு சீரியல் தேவல. போய் படு போ

நான் சத்தமாய் சிரிக்க கூடுதல் கடுப்பில் சென்றாள். ஆனாலும் தோட்டத்தை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நேராக படுக்க சென்றுவிட்டேன். தூங்கி எழுவதற்குன் என்னைப்பற்றி.. நான் முத்துக்குமரன். சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். ஒரே மகன். இப்போது கோடை விடுமுறைக்கு என் அண்ணன் வீட்டுக்கு சென்று இருக்கிறான். என் மனைவி வளர்மதி. கம்யூட்டர் பட்டதாரி. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வெப் பேஜ் டிசைனிங் நிறுவனம் நடத்துகிறாள் நண்பர்களோடு சேர்ந்து. வீடு சோழிங்கநல்லூர் கடைசி.

ம்ம்ம்ம். நிசமமாவே காசு வாங்கலயா...

அவருக்கு காது கேட்காது போல. அந்தம்மா தான் பேசுது. சோறுபோட்டா போதும்னு சொல்லிட்டாங்க.

ஆம அந்த குழி எதுக்கு...

இங்க விழுற இலைகளை பெருக்கி அந்த குழிக்குள்ள தள்ளிடுங்கனு சொல்லிட்டு போனாங்க.

ம்ம்ம் . ஒகே. இதே மாதிரி மெயிண்டைன் பண்ணா நல்லா இருக்கும்.

நீ ஆபிஸ் கிளம்பலயா... பேச்சை நிறுத்த நாம் செய்ய வேண்டிய வேலையை சொல்வது மனைவிக்கு அழகு.

அடுத்த சில தினங்களில் இரவு என் அருகே மனைவி.

என்னங்க இன்னைக்கும் அவங்க வந்தாங்க.. நீங்க சொன்னது என் மைண்ட்ல ஒடிட்ட்டே இருந்துச்சு. தோட்டவேலை வேண்டாமா கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்குனு சொன்னேன். ஆன அதுக்கு அந்தம்மா.. இல்லைம்மா தோட்டத்தில் இவ்ளோ இடம் இருக்குல்ல.. கொஞ்சம் காய்கறி போட்ட..வீட்ல நல்ல காய்கறி கிடைக்கும்ல சொன்னாங்க. கூடவே தக்காளி கத்திரிக்கா,சின்ன வெங்காய விதையெல்லாம் காட்டுனாங்க.

சரி.. உடனே நீ சரி சொல்லிட்ட.
Photo
ம்ம்ம்.. பார்த்தா நல்லவங்க மாதிரி தெரியுது. அதான் கேமரால அவங்க உருவம் எல்லா இருக்கும்ல அப்புறம் ஏன் பயப்படுறீங்க...

சரி. உன் இஷ்டம்.

அப்புறம் நாளைக்கும் வராங்க.... நம்ம வீட்டு கிச்சன் இருந்து நாம பாத்திர கழுவுற தண்ணீய அப்படியே செடிகளுக்கு கொண்டு போய்ருவோம்னு சொல்றாங்க.

அதான் பாத்ரூம் குழாய் போதுல்ல..

அங்க சோப் எல்லாம் போடுரோமாம்...கெமிக்கல்னு சொல்றாங்க.

ஒரே ஒரு குழாய் மட்டும் போதும்னு சொல்றாங்க.. வாங்கிபோடச்சொல்லவா ? வீட்லயே நல்ல காய்கறி கிடைச்சா நல்லது தானே..

என்னமோ செய். காலைல ஏடிஎம்ல எடுத்துக்கோ... நம்ம கடையிலே வாங்க சொல்லு. என் மனைவி என்னைவிட சாமர்த்தியசாலி. லேசுக்குள் நம்ப மாட்டாள் அந்த நம்பிக்கையில்... காலம் ஓடியது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கி விட்டது.. கிட்டதட்ட மாதங்கள் கடந்திருந்தது.. இதற்கிடையே அவர்கள் வீட்டுக்குள் வரும் அளவிற்கு பழகி விட்டார்கள். ஆனாலும் தோட்டம் சுத்தமாய் இருந்தது. மரங்கள் எல்லாம் பசுமையாய் மாறிவிட்டன. அவை குளிர்ச்சியை கொடுத்தது. அதிலும் குறிப்பாய் வரண்டு போய் இருந்த முருங்கையும், செம்பருத்தியும் வனப்பாய் இருந்தது.

என்னடி இது...

அரிசி உப்புமா கத்திரிக்கா கிச்சடி.. கத்திரிக்கா நம்ம வீட்ல விளைஞ்சது.

ஞாயிற்றுகிழமை சாப்டுற சாப்பாடா இது..

மூச். சும்மா சாப்டு பாருங்க.. வாசனையே செமயா இருக்கு.

உண்மையில் அப்படித்தான் இருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு கத்திரிக்காய் கிச்சடி சாப்பிட்டது இல்லை. மதியம் என்ன தெரியுமா ? நெய் கத்திருக்காய் பொறியல்.

போச்சா.. இன்னும் ஒரு வாரம் இதானா..

இல்லபா நீ வீட்ல இருக்கும் போது தான் இத செய்ய முடியும். இன்னொரு நாள் சிக்கன் சமைப்போம்.

இவ்ளோ விதையோடவா கத்திரிக்கா இருக்கும். ஆச்சரியத்தின் ஊடாகவே சாப்பிட்டேன். எனக்கு என் வீட்டு தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய் என்பதே பெருமையாய் இருந்தது. என் மகனும் விரும்பி சாப்பிட்டான்.

இன்னைக்கு ஆபிஸ் கிடையாது போல...

ஏண்டி...

ம்ம்ம்ம் ஏதோ கலவரமாம். கட்சிக்காரன யாரோ வெட்டிகொண்ணுட்டாங்களாம். போன் பண்ணி கேட்டுகோங்க.. பக்கத்து விட்டு பசங்க காலேக் போகாம திரும்பி வந்துட்டாங்க. நான் அலைபேசியில் பேசினேன். நான் செல்லும் வழியில் தான் பிரச்சினை என்பதாலும்.. ஏற்கனவே சிலர் வந்துவிட்டதாலும்.. இருப்பவர்களை வைத்து கவனிக்கும் படி சொன்னேன். மதியத்திற்கு பிறகு வருகிறேன் என உத்திரவாதம் கொடுத்தேன். மிண்டும் பேப்பரில் மூழ்கினேன்.

யப்பா இங்க வாயேன் என்ற குரலுக்கு வாசலுக்கு வந்தேன். வந்ததும் தெரிந்தது.. இவர்கள் தான் அவர்கள் என்று. இதான் என் வீட்டுகாரரு. அவர்களை பார்த்தேன்... எப்படியும் இருவருக்கும் அறுபது வயதிற்க்கு மேல் இருக்கும்.
Photo
வணக்கம்யா. கத்திரிக்க நல்லா இருந்துச்சா.. அந்தம்மா பேசினார்.

நல்லா இருந்துச்சுமா

இன்னும் கொஞ்சநாள்ள சின்ன வெங்காயம் வந்துரும்.. அங்கிட்டு நாட்டுச் செம்பருத்தி வந்துரும். அது மூலிகை. இந்த மண்னுல் வேகம வளரும் அது. நான் பாப்பாட்ட சொல்லியிருக்கேன் அத எண்ணெய்ல போட்டு பயன் படுத்தலாம்.. நல்ல குளிர்ச்சி. முருங்கையும் அப்படித்தான். இப்ப காச்சிரும்.. பூ பூத்ததும் புள்ளைக்கு கொடுங்க.. வயிறு அப்படி சுத்தமாகும் சளியே வராது. இறங்கிடும். அந்த பெரியவர்.. இதில் எல்லாம் கலந்துகொள்ளாவில்லை. அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார். என் மனைவி வீட்டில் இருந்து காபி கொண்டு வந்தார். அதை வாங்கி குடித்துவிட்டு அவர்கள் வேலையை செய்ய தொடங்கினார்கள். என் மனைவி அவர்களோடு பேசத்தொடங்கிவிட்டார். நான் உள்ளே வந்துவிட்டேன்.

வேலை முடிந்து அவர்கள் கைகால் கழுவும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்தேன். திண்டில் அவர்களும் நான் ஊஞ்சல் சேரிலும் அமர்ந்தோம்.

ஏன் பணம் வாங்கமாட்டேன்கிறீங்க...

புள்ள சோறு கொடுக்குது. அதுக்கு தானே தம்பி உழைக்கிறோம்... அதுவே கிடைச்சுட்டா அப்புறம் எதுக்கு பணம்

மத்த தேவைக்கு...

பையன் இருக்கான் தம்பி. ஒரு கடையில சூப்பர் வைசர். நல்ல சம்பளம். அவன் பாத்துக்கிறான்.

அப்புறம் ஏன் இப்படி இந்த வயசுல வேலை பார்க்கணும்..

இது வேலை இல்ல தம்பி..ஒரு சந்தோசம். காலம் காலமா விவசாயம் பாத்தவங்க.. இப்ப நிலம் இல்லை... வித்துட்டோம்.. அதான்

இப்படி எத்தனை வீட்ல வேலை நடக்குது..
Photo
இந்த ஒரு வீட்ல தான்.

ஏன் ஏன்.. இந்த ஏரிய இத விட பெரியபெரிய வீடெல்லாம் இருக்கே..

அந்த அம்மா பதில் சொல்லவில்லை. பெரியவர் முகம் பார்த்தார்.

அவர் பேசினார். முதன் முறையாக... இதான் எங்க நிலம்.

எனக்கு சுருக்கென்றது. அங்கே ஒரு அமைதி நிலவியது. உங்க நிலமா... நான் பேங்க் லோன்ல வாங்கி இன்னும் லோன் கட்டிக்கிட்டு இருக்கேன். எப்படி உங்க நிலம்...

அவரே தொடர்ந்தார்.. இந்த நிலத்தில தான் நான் என் அய்யா எல்லாரும் விவசாயம் பார்த்தோம். சுத்திமுத்தி எல்லாரும் வித்துட்டாங்க.. சொல்லிப்பார்த்தேன் யாரும் கேட்கல... நான் நடுவில நிலத்த வச்சி என்ன செய்ய.. அதான் வித்தேன். வித்த காசுல பொண்ணுக்கு பையனுக்கும் பிரிச்சு கொடுத்தாச்சு. எங்களுக்கு கொஞ்சம் பேங்கல இருக்கு.

பெரியவரே நிலம் என்னோடது. நான் காசு போட்டு வாங்கியிருக்கேன். அவருக்கு காது கேட்காது என என் மனைவி சொன்னது நியாபகம் வந்தது.. இன்னும் சத்தமாய் சொன்னேன்.

நிலத்துக்கு மேல தான் நீங்க வாங்க முடியும். நிலத்துக்கி கீழ இல்ல ...கீழ என்ன நடக்குது விவசாயிக்கு தான் தெரியும் எப்பவும் எல்லா நிலமும் முதல்ல விவசாயிக்கு தான்.

எனக்கு கோபம் வந்தது. ஒ அதுனால தான் வந்து வேலை பாத்திங்களா.. நிலம் உங்கதுனு... கொஞ்சம் சத்தமாய் கேட்டேன்.

அய்யோ தம்பி கோபபடாதீங்க. நான் அந்த அர்த்ததில சொல்லல... என் பொண்ண நகை பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாரு என் மாப்பிள்ளை. அதனால் என் பொண்ணு இல்லனு ஆயிடுமா. இதே இந்த மகராசி.. என் மனைவியை கை காட்டினார்... அப்படித்தானே இங்கே வந்திருப்பாங்க. இவங்க மேல இருக்கிற நகை நட்டு இந்த வீடு எல்லாம் உங்களுக்கு சொந்தம் ஆனா உள்ள ஓடுற ரத்தம் இவங்க அப்பா அம்மாக்குள்ள சொந்தமில்லையா. இரண்டு பேர்க்கும் உரிமை இருக்குல்ல. இன்னைக்கும் ஒரு கல்யாணம் காட்சினு அம்மாவீட்டு போய் உக்கார மாட்டாங்களா.. இல்ல இவங்க அம்மா அப்பா எங்களுக்கு தொடர்பே இல்லைனு போய்டுவாங்களா... அது மாதிரி எங்களுக்கு இந்த நிலம். நீங்க வாங்கிட்டிங்க..ஆனாலும் இந்த மண் நாங்க புரண்ட மண் இல்லையா... இத உரிமைல சொல்லல.. உழைச்சிருக்கோம்ங்கிற நம்பிக்கையில சொல்றேன் தம்பி.

எனக்கு கோபம் கொஞ்சம் குறைந்தது.. ஒரு வித ஆற்றாமை பொங்கியது. என்ன சொல்வது என தெரியவில்லை. இந்த பக்க நிலமெல்லாம் காந்த பூமி தம்பி. எது போட்டலும் பூமியில அப்படி புடிச்சி நின்னுகும். மருந்து அடிக்காம இருந்தா கிடைக்கிற ஒவ்வொன்னும் ஒரு மருந்துக்கு சமம். எங்கே.. எல்லாம் போச்சு.. வெறும் வீடுதான். பாருங்க இத்துணூண்டு இடத்திலே இவ்ளோ கிடைக்குது. இனி நீங்க கடையில் கத்திரிக்கா பாத்த என்ன தோணும்.. வீட்டுக்காய் மாதிரி வருமானு தானே..
Photo
அதே மாதிரிதான் தம்பி.. என் நிலம்னு எனக்கு தோணும். எத்தனை பேர் கைமாறட்டும். இது என் நிலம் தாம் தம்பி. ஏற்கனவே நிலத்த வித்து காசு வாங்கிட்டேன்.. இப்ப பார்க்கிற வேலைக்கு காசுகு இல்லை.. ஒரு திருப்திக்கு. இதுல கொஞ்சம் வேலை பார்த்துட்டு படுத்த்தா.. அன்னைக்கு உறுத்தல் இல்லாம தூங்குவேன். ஏதோ அய்யன் கொடுத்த நிலத்தை வித்துட்டோமோனு ஒரு குற்ற உணர்ச்சி. என்னென்னமோ கெமிக்கல் போட்டு நிலத்தை கொன்னு.. செத்த போன நிலம் தண்ணிய வாங்கி வாங்கி குடிக்குது... இது தெரியாம விவசாயி சாகுறான். அவன் நிலம் சாகுது. என்ன செய்ய ..? சின்ன வயசுல சைக்கிள் கத்துக்கும் போது குரங்கு பெடல்னு ஒன்னு போடுவோமே டக்டக்னு ... அது மாதிரி தான் எங்க வாழ்க்கை... வண்டி என்னமோ முன்னாடித்தா போகுது.. ஆனா போற இடத்துக்குள்ள உசுரும் போய்டுது..

சோறு கொண்டா தாயி.. சாப்டு கிளம்புவோம்.. என குரல் கொடுத்தார் மனைவியை நோக்கி.

வாங்களேன் உள்ளே வச்சி சாப்பிடலாம்... அழைத்தேன்

அய்யோ நீங்க ஹோட்டல்காரங்க மாதிரி டேபிள்ள வைச்சி சாப்பிடுவிங்க. சரியா வராது . சாப்பிட்ட திருப்தியே வராது தம்பி.

என் மனைவி பறிமார அவர்கள் சாப்பிட்டார்கள். நான் உள்ளே இருந்தேன். ஆனால் மனம் முழுவதும் அவர்கள் பேச்சில் இருந்தது.

எப்ப வேணா நீங்க வீட்டுக்கு வரலாம்... இது உங்க வீடு மாதிரி.. என்ன வேணா போட்டு வளருங்க.. என்னால் முடிஞ்ச உதவி செய்றேன்.அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் போது முகம் பார்த்து சொன்னேன்.

ரொம்ப நன்றி தம்பி. ஏதும் பேசியிருந்தா மன்னிச்சுடுங்க... உசுரோடு இருக்கிற வரைக்கும் எங்க மண்ணுல வேலை பார்த்தோம்னு திருப்தி போதும். அத கொடுத்திட்டீங்க..நன்றி தம்பி ...என விடைபெற்றார். அப்போதுதான் உணர்ந்தேன்.. அவருக்கு காது கேட்கிறது. ஆனால் விவசாயம் தவிர்த்து எதுவும் பேசவேண்டாம் என அவர் காதுகளை மூடிவிட்டார் என தெரிந்தது. முதல்முறையாக வீட்டை விட தோட்டம் அழகாய் தெரிந்தது...!!!!
Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)