செல்லமாய்
செல்வமாய் வாழ்ந்து வந்தேன்.
செல்லாது என்ற ஒற்றைச்
சொல்லாலே என் உயிரை
கொல்லாமல் கொன்றாயே.
நல்லார் சிலர் மனக்குமுறலாய்
நில்லாமல் கைவிட்டுப் போனேனே.
பணப் பெட்டிகளில் ஓய்வெடுத்தேன்.
சவப்பெட்டியாய் நொடியில் மாற்றினாயே.
புதைத்து ஒளித்து வைத்து
புதைத்த இடத்திலேயே கைவிட்டாயே.
எண்ணி எண்ணி சேர்த்தவரெல்லாம்
எண்ணியதுண்டா வீணாய்
தண்ணியிலே போவேனென்று.
வங்கிகளில் கவுரவமாய்
தங்கி இருந்திருப்பேனே.
தாள், வெறும் தாள் என்று ஆனதும்
ஆள் என்று எவரும் சீண்ட இல்லையே.
இருக்கும் பல வண்ணங்கள் முகத்தில்
இருந்தும், இருந்த இடம் பொருத்து
கறுப்பு என்று உண்மை நிறம் இழந்தேனே.
வெள்ளையாய் வெளியிலே சுற்றாமல்
கொள்ளையர் கையிலே அகப்பட்டு
கொள்ளியை என் தலையில் வைத்தேனே.
மெத்தைகளில் மெத்தனமாய் இருந்தேன்.
அயல் நாட்டு வங்கிகளில் தஞ்சமானேன்.
பணக்காரன் வீடுகளில் குடி போனேன்.
பல தேர்தல் முடிவுகளை மாற்றினேன்.
அரசியல் வாழ்க்கையில் தலையானேன்.
போலீசார் நேர்மையை விலை பேசினேன்.
போலி வாழ்க்கையின் தலை தூக்கினேன்.
கட்டடத்தின் வலிமையைக் குறைத்தேன்.
சாலையின் தரத்தைத் தாழ்த்தினேன்.
தரமற்றவை அத்தனைக்கும் வாழ்வளித்தேன்.
இன்று
செல்லாது என்ற சொல்லாலே
கொல்லாமல் கொன்றாயே.
பொல்லாத உலகில் வழி தவறி
செல்லாமல் கையிலே இருந்திருப்பேன்.
செல்லாது இனி என்று குப்பையானேனே.
பல்லாயிரம் உயிர் பிழைக்க முதலானேன்,
அல்லாது என்ன தவறு செய்தேன்.
முக்கிய அரசியல் பிரமுகரிடம்
சிக்கியது என் தவறா?
கறுப்பு பணம் என்று என் தரத்தை
உருக்குலைத்தது நீதானே.
லஞ்சமாய் வாங்கிச் சேர்த்த பொழுது
கொஞ்சம் மனம் சிந்தித்திருந்தால்
நெஞ்சு வலி வந்திருக்குமா?
செல்லாது என்ற செய்தி வந்த போது.
குப்பைத்தொட்டியும் கேலி செய்யுது.
தப்பான வாழ்வினால் மூளி ஆனேனே.
நன்றாகத் தானே வாழ்ந்து வந்தேன்.
அன்றாட வாழ்வில் புழங்கி வந்தேன்.
என்றாவது நினைத்தேனா
சென்றாக வேண்டுமென.
மன்றாடிக் கேட்கிறேன்
இன்னொரு முறை இந்நிலை வேண்டாம்.
சரியாக ஈட்டியப் பணத்தை சிறிது
வரியாக நாட்டிலே கட்டியிருந்தால்
பிரியாமல் கைக்குள் இருந்திருப்பேன்.
தெரியாமல் தவறிழைத்து என்னை
உரியவர்களே பைக்குள் கொன்றனரே.
பதுக்கியவனே மதிப்பில்லையென்று
ஒதுக்கிய இழிநிலை கண்டேனே.
சுதந்திரமாய் நாட்டைச் சுற்றியிருப்பேன்.
தந்திரமாய் அரசு எடுத்த முடிவாலே
நிரந்திரமாய் நிர்கதியாய் ஆனேனே.
என் அவப்பெயரோ கறுப்பு.
பதுங்கிய இடமோ கறுப்பு.
பதுக்கியோர் உள்ளமோ கறுப்பு.
என்னை நீ மறப்பது உன் பொறுப்பு.
என் வாழ்வு எனக்கே அருவருப்பு.
என்னைக் கண்டாலே கொள் வெறுப்பு.
நல்ல பணத்தால் பையை நிரப்பு.
நான் இல்லாமல் நீ வாழ்வதே சிறப்பு.
செல்வமாய் வாழ்ந்து வந்தேன்.
செல்லாது என்ற ஒற்றைச்
சொல்லாலே என் உயிரை
கொல்லாமல் கொன்றாயே.
நல்லார் சிலர் மனக்குமுறலாய்
நில்லாமல் கைவிட்டுப் போனேனே.
பணப் பெட்டிகளில் ஓய்வெடுத்தேன்.
சவப்பெட்டியாய் நொடியில் மாற்றினாயே.
புதைத்து ஒளித்து வைத்து
புதைத்த இடத்திலேயே கைவிட்டாயே.
எண்ணி எண்ணி சேர்த்தவரெல்லாம்
எண்ணியதுண்டா வீணாய்
தண்ணியிலே போவேனென்று.
வங்கிகளில் கவுரவமாய்
தங்கி இருந்திருப்பேனே.
தாள், வெறும் தாள் என்று ஆனதும்
ஆள் என்று எவரும் சீண்ட இல்லையே.
இருக்கும் பல வண்ணங்கள் முகத்தில்
இருந்தும், இருந்த இடம் பொருத்து
கறுப்பு என்று உண்மை நிறம் இழந்தேனே.
வெள்ளையாய் வெளியிலே சுற்றாமல்
கொள்ளையர் கையிலே அகப்பட்டு
கொள்ளியை என் தலையில் வைத்தேனே.
மெத்தைகளில் மெத்தனமாய் இருந்தேன்.
அயல் நாட்டு வங்கிகளில் தஞ்சமானேன்.
பணக்காரன் வீடுகளில் குடி போனேன்.
பல தேர்தல் முடிவுகளை மாற்றினேன்.
அரசியல் வாழ்க்கையில் தலையானேன்.
போலீசார் நேர்மையை விலை பேசினேன்.
போலி வாழ்க்கையின் தலை தூக்கினேன்.
கட்டடத்தின் வலிமையைக் குறைத்தேன்.
சாலையின் தரத்தைத் தாழ்த்தினேன்.
தரமற்றவை அத்தனைக்கும் வாழ்வளித்தேன்.
இன்று
செல்லாது என்ற சொல்லாலே
கொல்லாமல் கொன்றாயே.
பொல்லாத உலகில் வழி தவறி
செல்லாமல் கையிலே இருந்திருப்பேன்.
செல்லாது இனி என்று குப்பையானேனே.
பல்லாயிரம் உயிர் பிழைக்க முதலானேன்,
அல்லாது என்ன தவறு செய்தேன்.
முக்கிய அரசியல் பிரமுகரிடம்
சிக்கியது என் தவறா?
கறுப்பு பணம் என்று என் தரத்தை
உருக்குலைத்தது நீதானே.
லஞ்சமாய் வாங்கிச் சேர்த்த பொழுது
கொஞ்சம் மனம் சிந்தித்திருந்தால்
நெஞ்சு வலி வந்திருக்குமா?
செல்லாது என்ற செய்தி வந்த போது.
குப்பைத்தொட்டியும் கேலி செய்யுது.
தப்பான வாழ்வினால் மூளி ஆனேனே.
நன்றாகத் தானே வாழ்ந்து வந்தேன்.
அன்றாட வாழ்வில் புழங்கி வந்தேன்.
என்றாவது நினைத்தேனா
சென்றாக வேண்டுமென.
மன்றாடிக் கேட்கிறேன்
இன்னொரு முறை இந்நிலை வேண்டாம்.
சரியாக ஈட்டியப் பணத்தை சிறிது
வரியாக நாட்டிலே கட்டியிருந்தால்
பிரியாமல் கைக்குள் இருந்திருப்பேன்.
தெரியாமல் தவறிழைத்து என்னை
உரியவர்களே பைக்குள் கொன்றனரே.
பதுக்கியவனே மதிப்பில்லையென்று
ஒதுக்கிய இழிநிலை கண்டேனே.
சுதந்திரமாய் நாட்டைச் சுற்றியிருப்பேன்.
தந்திரமாய் அரசு எடுத்த முடிவாலே
நிரந்திரமாய் நிர்கதியாய் ஆனேனே.
என் அவப்பெயரோ கறுப்பு.
பதுங்கிய இடமோ கறுப்பு.
பதுக்கியோர் உள்ளமோ கறுப்பு.
என்னை நீ மறப்பது உன் பொறுப்பு.
என் வாழ்வு எனக்கே அருவருப்பு.
என்னைக் கண்டாலே கொள் வெறுப்பு.
நல்ல பணத்தால் பையை நிரப்பு.
நான் இல்லாமல் நீ வாழ்வதே சிறப்பு.
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.