பறவைங்கசாப்பிடுறதுக்காக2ஏக்கர்லகம்புசோளம்போட்டிருக்கேன்சிவகங்கைராஜேஸ்வரியின்நேசம்.
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது' என்று வசனம் பேசமுடியாத மாவட்டம் சிவகங்கை. காரணம், இந்த மாவட்டம் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த ஆண்டு தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கிறது.''தன்னோட 2 ஏக்கர் நிலத்தை பறவைங்க சாப்பிடுறதுக்காக பயிர்விக்கிற அம்மா இங்க இருக்காங்க'' என்கிற செய்தி, ஆச்சரியமூட்டியது. நிச்சயம் அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்று கிளம்பினோம். பறவைகளின் க்ரீச் ஒலியால் நிரம்பி இருக்கிறது அந்த இடம்.
சிவகங்கையில் இருந்து பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மதகுபட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் இருந்து வலதுபுறமாக ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது அலவாக்கோட்டை கிராமம். இந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில், 'ராஜேஸ்வரி தோட்டம் எங்கே இருக்கு?' என யாரைக் கேட்டாலும் சட்டென்று வழி சொல்கிறார்கள். மரங்களாலே பின்னிபிணைந்த வேலி. தோட்டத்துக்குள் நுழைந்ததும் வேப்பமரம் காற்று கடும் வெப்பத்தைக் குளிர்ச்சியாக்கியது. தன் தோட்டத்து வேலை ஆட்களோடு வேலை செய்துகொண்டிருந்த ராஜேஸ்வரி வைரவன் நம்மைப் பார்த்ததும் எழுந்துவந்து வரவேற்றார். கோழிகள் தன் குஞ்சுகளோடு உலாவ, ஆடு மாடுகள் பூரிப்புடன் நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. இந்த வறண்ட பூமியில் இப்படியொரு செழிப்பை உருவாக்கியது எப்படி?
''இதுக்கெல்லாம் காரணம், என் மாமியார் அடைக்கலம்மாள்'' - பட்டென்று பதிலளிக்கிறார் ராஜேஸ்வரி வைரவன். ''என் மாமியார் காலத்தில் கஞ்சிக்கே கஷ்டம். என் புருஷனோடு பிறந்தவங்க மூணு பேரு. அப்போ, என் மாமியாருக்குக் காணி நிலம்கூட இல்லை. ஆனால், பறவைகளுக்குச் சாப்பாடு போடணும், அதுக்காக தனியா தோட்டம் போட்டு பயிர்களை வளர்க்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. நான் பிறந்தது மதுரைக்கு பக்கத்துல சருகுவலையபட்டிங்கிற கிராமம். எங்க வீட்டுலயும் விவசாயம். என் புருஷன் படிச்சது ஏழாம் வகுப்பு. நானோ அஞ்சாம் வகுப்பு. அப்போ அவர் குஜராத்துல மெக்கானிக் வேலைப் பார்த்தாங்க. அங்கிருந்து மலேசியா, மஸ்கட் என நாடு நாடாக போய் கடுமையா உழைச்சார். கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து, இன்னைக்கு 55 ஏக்கரில் வந்து நிக்குது. நீங்க பாக்கிற இந்தத் தோட்டம் அப்போ கட்டாந்தரை பாறை இருந்துச்சு. இன்னைக்கு விளைச்சல் நிலமாக மாற்றி இருக்கோம். 25 ஏக்கரில் மாமரங்களை வெச்சுருக்கேன். மீதமுள்ள நிலத்துல நெல்லு, தென்னை, கொய்யானு போட்டுருக்கேன். இதுல ஊடு பயிராக குதிரைவாலி போட்டுருக்கேன். மாமரங்கள் இருக்குற பகுதியில் சுமார் ரெண்டு ஏக்கர்ல பறவைகள் சாப்பிடுறதுக்காகவே கம்பு சோளம் போட்டு விளைஞ்சு நிக்குது பாருங்க'' என்றபடி அழைத்துச் சென்று பரவசத்துடன் காட்டினார் ராஜேஸ்வரி.
பச்சைக்கிளிக்கு கம்பு ரொம்ப பிடிக்கும் என்பதில் தொடங்கி, எந்தப் பறவைக்கு எந்த உணவு தருவது எனப் பார்த்து பார்த்து ஒரு தாயைப் போல உணவளித்து வருகிறார் ராஜேஸ்வரி. ''வருசத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாயைப் பறவைகளுக்காகவே செலவு செய்யறோம். தினமும் பறவைகள் நல்லாச் சாப்பிட்டு இருக்கானு பார்த்துட்டு திரும்பினாதான் தூக்கமே வரும். அந்தச் சந்தோசம் வேற எதுலேயும் கிடைக்காது. என் பிள்ளைகளின் படிப்புக்காக, காரைக்குடி போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுச்சு. காலையில் பிள்ளைகளுக்குச் சாப்பாடு செஞ்சு கொடுத்து ஸ்கூல்லுக்கு அனுப்பிட்டு பஸ் பிடிச்சு தோட்டத்துக்கு வந்துடுவேன். இப்படியே மூணு மாசம் பார்த்தேன். வேலைகளை ஒழுங்கா கவனிக்க முடியலை. மனசுக்குத் திருப்தியா இல்லை. பிள்ளைகளுக்குச் சமைச்சுப் போட வேலை ஆளை வெச்சுட்டு நான் முழுசா தோட்டத்துக்கு வந்துட்டேன்'' என திகைக்கவைக்கிறார்.
''என் புருஷன் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வெளிநாட்டுல இருந்து வந்துட்டுப் போவாரு. இப்போ பறவைகளுக்காகவே மாசத்துக்கு ஒரு தடவை வந்துடறாரு. பிள்ளைகள் ஒரு வழியா பள்ளி படிப்பை முடிச்சுட்டு காலேஜ் போனாங்க. நான் முழுசா விவசாயத்துல இறங்கிட்டேன். புறவைகளுக்காக போட்ட பயிரை நாங்க தொடமாட்டோம். மத்த பயிர்களைச் சாப்பிடவும் பறவைகள் வரும். நெல்லு சீசன்ல வெளிநாட்டுல இருந்தெல்லாம் பறவைகள் வரும். அதுக்காக, பறவைகள் வரப்புல நின்னு சாப்பிடுற மாதிரி நெல் நாத்தை டெக்னிக்கா ஊண்ட சொல்லுவேன். அப்போதான் பறவைகள் வயலுக்கு நடுவுல போகாது. நெல்லு ரெண்டு போகம் விளைச்சல் எடுப்போம். ஒரு போகத்துக்கு முப்பது லட்சம் ரூபாய் வருமானம் வரும். என்ன சார் ஆச்சர்யமா இருக்கா? நெல்லுன்னா உயர்ரகமான கர்நாடக பொன்னி, அட்சயா பொன்னி இப்படிதான் போடுவோம். மாமரங்களில் ஏழு வகைகள் இருக்கு கல்லாமை, சப்பட்டை, பாலாமணி, இம்மாம்பஸ் என மாமர ரகங்களால் மட்டும் வருசத்துக்கு பதினைஞ்சு லட்சம் வருமானம் வரும். குத்தகைக்கு எடுக்கிறவங்களையும் மருத்து அடிக்க விடமாட்டேன். நானேதான் இயற்கை மருந்து அடிப்பேன். அவுங்களை விட்டா கண்ட பூச்சி மருந்துகளை அடிச்சு மரங்களை விஷம் ஆக்கிருவாங்க. அஞ்சு ஏக்கர்ல தென்னைமரங்கள் இருக்கு'' என ராஜேஸ்வரி சொல்லும் ஒவ்வொரு வரியிலும் உழைப்புடன் இயற்கையின் மீதான நேசமும் வெளிப்படுகிறது.
விவசாய கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதில் இருக்கும் சவாலையும் இவரே சமாளிக்கிறார். ''ஊர்களில் இருந்து வேலைக்கு ஆளுகளை கார் வெச்சு கூட்டிட்டு வருவேன். உழுவுறதுக்கு டிராக்டர் ஓட்ட ஒருத்தர் உதவி தேவைபட்டுக்கிட்டே இருந்துச்சு. நானே கத்துக்கிட்டு இறங்கிட்டேன். இப்போ, நானே டிராக்டர் ஓட்டுவேன். ஆடு மாடு சாணம், வேப்பம்கொட்டை இதையெல்லாம் பயன்படுத்துறதுனால பூச்சி மருந்து செலவு கிடையாது. நெல் பயிருக்கான உரத்தையும் நானே தயாரிப்பேன். 45 நாள் தக்கைபூண்டுச் செடிகளை வளர்த்து, அதன் பிறகு டிராக்டர் வெச்சு, மடக்கி உழுதுடுவேன். இதுக்கு மேலே என்ன உரம் வேண்டி இருக்கு? நெல்லு அவ்வளவு செழிப்பா வளரும். ஆறு பம்புசெட் இருக்கு. வறட்சினால இப்போ தண்ணி ஆழத்துல போயிடுச்சு'' என்கிறார் வருத்தமான குரலில்.
''என் புருஷனின் அண்ணன், தம்பி பிள்ளைகளையும் படிக்க வெச்சு கல்யாணம் பண்ணி வெச்சோம். என் தோட்டத்தில் வேலை செய்யறவங்களின் பெண் பிள்ளைகள் பத்து பேருக்கும் கல்யாணம் செய்துவெச்சிருக்கோம். என் பிள்ளைகளுக்கு இந்த விவசாயம் பிடிக்கலை. எங்க காலத்துக்குப் பிறகு அவன் பார்த்துப்பாங்களானு தெரியலை. ஆனால், என் மாமியாரின் கனவை நிறைவேற்றி வெச்சுட்டேன். நான் இருக்கிற வரைக்கும் இந்தப் பூமியையும் இங்கே வரும் பறவைகளையும் என் பிள்ளைகளாகப் பார்த்துப்பேன்'' என்று நெகிழவைக்கிறார் இந்த இயற்கை அன்னை.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.