காதறுந்த ஊசியைக்கூட இந்த உலகத்தைவிட்டு போகும்போது எடுத்துக்கொண்டு போகமுடியாது என்ற பொருளில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட
" காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "' என்ற ஒரே ஒரு வார்த்தைதானே பெரும்பணக்காரராக வாழ்ந்த பட்டினத்தாரை, வெறும் கோவணம் மட்டுமே கட்டிய துறவியாக்கியது.
வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப் போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால் ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம்பொழுது
காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே.இதில் மூன்றாம் அடிதான் முக்கியம்.
சூரிய சந்திர வொளிபோல ஆத்மா ஒளிமயமாகிற பொழுது (இறங்குங்காலத்தில்) மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன் வாராது.எனவே நமது இந்த வாழ்கை கடவுள் கொடுத்த வரப்ரசாதம். எதுவும் நமது வாழ்கையில் நிலை ஆனது அல்ல .
உங்களால் முடியும் தான தர்மத்தை செய்து, இந்த மாயை என்னும் உலகவாழ்கையை புரிந்து கொண்டு, நம் உடல் பிரிவதற்கு முன் நம் பிறப்பின் அர்த்தத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை, இறக்கும் போது எதுவும் கொண்டு போவது இல்லை.
இறந்த பிறக்கும் அவன் உடல் கூட அவனுடன் கூட வரபோவது இல்லை. அவன் கூட வருவது எல்லாம் அவன் செய்த பாவ, புண்ணியங்கள் மட்டுமே. இதை உணர்தவன் தாமரை இலையில் இருக்கும் நீர் போல் அவன் வாழ்கையை இறை உணர்வோடு வாழுகின்றான். மற்றவன் வாழ்கையில் நிம்மதியை தேடி அலைகின்றான்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.